BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 16 January 2014

டெல்லியில் நடக்கும் பலாத்காரங்கள் தொடர்பாக, போலீஸாருக்கு கேஜ்ரிவால் எச்சரிக்கை

டெல்லியில் நேற்று முன் தினம், டென்மார்க் பெண் ஒருவர், சுற்றுலாவிற்கு வந்திருந்த போது, நகரின் மையபகுதியிலேயே, ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டார். இது போன்ற குற்றங்களை தடுக்க, புகார் அளிக்கும் படி மக்களிடம் ஆம் ஆத்மி அரசு கேட்டு கொண்டதன் பேரில், நகரின் மைய பகுதிகளிலேயே, விபச்சாரம் நடப்பதாகவும், போதை பொருட்கள் விற்க படுவதாகவும் மக்களிடம் இருந்து புகார்கள் வந்தது. இதை அடுத்து, டெல்லி சட்டத்துறை அமைச்சர் சோம்நாத் பார்தி நேற்று நள்ளிரவு அதிரடியாக நேரில் சென்று, போலீஸார் எவ்வாறு பணி புரிகின்றனர் என்று ஆய்வு செய்தார்.

இது பற்றி சோம்நாத் பார்தி பேசும் போது, டெல்லி போலீஸார் மத்திய அரசின் கட்டுபாட்டில் இருப்பதால், நான் சொல்வதையோ, மக்கள் கொடுக்கும் புகார்களையோ மதிப்பு கொடுத்து கேட்பதில்லை, என தெரிவித்தார்.

இந்நிலையில், டெல்லி போலீஸார் குற்றங்களுக்கு வளை கொடுத்து செல்கிறார்கள். அவர்கள் அதை ஒடுக்க கடுமையாக இருப்பதில்லை என்று கூறி, பலாத்கார சம்பவங்கள் நடக்க‌ பொறுப்பான போலீஸார்கள் மீது உரிய‌  நடவடிக்கை எடுக்கப்படும் என டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், டெல்லி போலீசாரை எச்சரித்திருக்கிறார்.







கேஜ்ரிவாலுக்கு எதிராக 27–ந்தேதி ஆர்ப்பாட்டம்

டெல்லி முதல் அமைச்சர் கேஜ்ரிவாலுக்கு எதிராக இம்மாதம் 27ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த போவதாக, ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி கூறியிருக்கிறார். இவர், கேஜ்ரிவால் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, அவர் ஒரு பொய்யர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.

ஆட்சி அமைப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் ஆதரவை பெற்றது கொள்கைக்கு எதிரானது. காங்கிரஸ் சொல்வதை கேட்டுதான் கெஜ்ரிவால் ஆட்சி நடத்துகிறார். டென்மார்க்கை சேர்ந்த பெண், டெல்லியில் கற்பழிக்கப்பட்டதை குறித்து கேஜ்ரிவால் வாயே திறக்கவில்லை. குடிநீர், மின்சாரம் தொடர்பாக கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் வேறு, நிறைவேற்றப்பட்டிருக்கும் திட்டங்கள் வேறு என்று கேஜ்ரிவால் மீது புகார்களை அடுக்குகிறார் வினோத்குமார் பின்னி.

கேஜ்ரிவால் பதவி விலக வேண்டும் என்றும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத ஆம் ஆத்மி கட்சியை கண்டித்து, வருகிற 27ம் தேதி மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும், என்று அக்கட்சி மீது கடும் அதிருப்தியுடன் பேசியிருக்கிறார், எம்.எல்.ஏ. வினோத்குமார் பின்னி.

தே.மு.தி.க வுடன் கூட்டணி அமைந்தால் மகிழ்ச்சி: ஸ்டாலின்



தே.மு.தி.க வுடன் கூட்டணி வைத்தால், தி.மு.க உருப்படாமல் போகும் என்று சமீபத்தில், தனியார் தொலைகாட்சிக்கு அளித்த பேட்டியில் அழகிர் கூறியிருந்தார். இதற்கு, எதிர் மாறாக, ஸ்டாலின், "எங்கள் கூட்டணியில் வந்து சேருமாறு தே.மு.தி.க.வுக்கு கலைஞர் வெளிப்படையாக அழைப்பு விடுத்துள்ளார். தே.மு.தி.க., எங்கள் பக்கம் வந்தால், நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவோம்." என்று கூறியுள்ளார்.

குலாம் நபி அசாத் சமீபத்தில் கருணாநிதியை வந்து சந்தித்தது, ஒரு மரியாதைக்காக  மட்டுமே. கட்சி கூட்டணி பற்றி எல்லாம் பேசவில்லை. காங்கிரஸ் கட்சியுடனோ, பா.ஜ.க வுடனோ எந்த கூட்டணியும் தி.மு.க‌ வைக்க போவதில்லை. தேசிய கட்சிகளுடன் கூட்டணி வைக்காமல், புதிய அணியை உருவாக்குவோம் என்று ஸ்டாலின் அறிவித்துள்ளார்.


ஹான்காங்கில் துன்புறுத்தப்படும் வெளிநாட்டு பணியாட்கள்



இன்டோனெஷ்யாவில் இருந்து, ஹான்காங்கிற்கு பணியாளாக வந்த எர்வியானா என்கிற‌ 23 வயது பெண், தொடர்ந்து எட்டு மாதங்களாக, தன் முதலாளியால் அடிக்கப் பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, இப்போது தன் உருவமே மாறி காட்சி அளிக்கிறார். அவரால் நடக்க கூட இயலாமல், தற்போது, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இன்டோனெஷ்யா, தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து, ஹான்காங்கிற்கு பணியாளாக ஏராளமானோர் வருகின்றனர். இவர்கள், தங்கள் முதலாளிகளால், மிகுந்த பாதிப்புக்குள்ளாகி அடிமைகள் போல் நடத்தப்பட்டு வருகின்றனர்.  கிட்டதட்ட மூன்று லட்சம் பணியாட்கள், வெளிநாட்டில் இருந்து வந்து, ஹான்காங்கில் வீட்டு வேலை செய்து வருகின்றனர். இதில் 18 சதவிகிதம் பேர், உடல் ரீதியாக துன்புறுத்த படுகின்றனர் என்று 2012ல் எடுக்கபட்ட‌ ஒரு சர்வே வெளியிட்டுள்ளது.

இது குறித்து, ஐ.நா. சபையில் உள்ள குழுக்கள், வெளி நாட்டில் இருந்து வரும் பணியாட்களை பாதுகாக்க முயற்சிகள் எடுக்குமாறு, ஹான்காங் அரசை வலியுறுத்தி வருகிறது.

நாட்டிலேயே முதல் முறையாக கேமராவில் கண்கானிக்கப்படும் காவல் நிலையம்

புதுச்சேரியில் நேருவீதியில் அமைந்துள்ள பெரியக்கடை காவல் நிலையத்தில், எட்டு இடங்களில் சி.சி.டி.வி. கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளது. இதுவே, சி.சி.டி.வி. மூலம் கண்கானிக்கப்பட்டு இயங்கும், நாட்டின் முதல் காவல்நிலையமாகும்.

நுழைவாயிலில் 2 கேமராக்களும், வரவேற்பு அறை, தலைமை காவலர் அறை, உதவி ஆய்வாளர் அறை, கைதிகள் அடைக்கப்படும் லாக் அப், மேல்தளத்தில் உள்ள ஆய்வாளர் அறை என்ற இடங்கள், காவல் நிலையத்தில் கேமராக்கள் பொறுத்தப்பட்ட இடங்களாகும்.

"காவல்நிலையத்தில் நாங்கள் இல்லாதபோதும் அங்கு நடப்பது சிசி டி.வி கேமராவில் பதிவாகும். மேலும், இணையத்தின் மூலம் எஸ்.பி, ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் செல்போனில் காவல்நிலையத்தில் நடப்பதை பார்க்க முடியும்.", என்று ஆய்வாளர் பாஸ்கரன் கூறியுள்ளார். நாங்கள் வெளிப்படையாக இருப்பதை, மக்களிடம் காட்டி கொள்ளவே இந்த முயற்சி எனவும் அவர் கூறினார்.

ஊழலை முடிவுக்குக் கொண்டு வர ராகுலின் 9 அஸ்திரங்கள் என்ற தலைப்பில் ஒட்டப்படும் போஸ்டர்


நாடளுமன்ற தேர்தலை முன்னிட்டு,  ஊழலை ஒழிக்க ராகுலின் ஒன்பது அஸ்திரங்கள் என்ற தலைப்பில் புதிதாக ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டு வருகிறது.  அந்த போஸ்டரில் கூறப்படுகம் அஸ்திரங்கள்:

தகவல் பெறும் உரிமைச் சட்டம்

லோக்பால்

கறுப்பு பணம் முறைப்படுத்தல் சட்டம்

 ஊழல் தடுப்புச் சட்டம்

முறைகேடுகள் குறித்து தகவல் தருவோர் பாதுகாப்பு சட்டம்

அதிகாரிகள் லஞ்சம் பெறுவதைத் தடுக்கும் சட்டம்

உரிய நேரத்தில் சேவை செய்வதற்கான சட்டம்

குடிமக்களின் சாசனம்

குறை தீர்ப்பு மசோதா

நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற வாய்ப்புகள் இல்லை எனும் சூழல் பரவியுள்ள நிலையில், அதை எதிர்கொள்ள,  சகோதரி பிரியங்கா உள்ளிட்ட பலருடன் ஆலோசனைகள் கேட்டு வருகிறார், ராகுல். அதன் மூலமே உருவாகி இருக்கிறது, இந்த 9 அஸ்திரங்கள் போஸ்டர்.




சென்னையை சிறுவனின் கண்டுபிடிப்புக்கு அமெரிக்க பல்கலைகழகத்திடம் இருந்து முதல் பரிசு


 சென்னையை சேர்ந்த அர்ஜீன் என்கிற 13 வயது சிறுவன், தன்னுடைய கண்டுபிடிப்பான, "பேருந்து இருப்பிடம் அறியும்" பயன்பாட்டிற்கு(app) அமெரிக்காவின் மசாச்சுஸெட்ஸ் தொழிற்கல்வி நிறுவனம் 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டிற்கான சிறந்த தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கான முதல் பரிசை பெற்றுள்ளார்.



2012 ஆம் ஆண்டிற்கான பரிசாக "கூகுள் நெக்சஸ் டேப்ளட்டும்" 2013 ஆம் ஆண்டிற்கான பரிசாக நெக்சஸ் 5 ஆண்டிராய்டு ஸ்மார்ட் போன் மற்றும் சான்றிதழ்களயும், அந்த நிறுவனத்திடம் இருந்து பெற்றார், எட்டாம் வகுப்பு படிக்கும் அர்ஜூன்.

மென்பொருள் பற்றிய விவரங்களை யூ டியூப் வீடியோக்களை பார்த்து அறிந்துகொண்டு, தன் கண்டுபிடிப்பை மேற்கொண்டிருக்கிறார்.

தற்போது, ஐ.சேப் என்னும் ஒரு பயன்பாட்டை உருவாக்கி வருகிறார். இதன் மூலம், ஒருவர் எங்கிருக்கிறார் என்ற தகவலை பெற முடியும் என்று அச்சிறுவன் கூறியுள்ளார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media