இப்போது எல்லாம் சிலர் மாதத்திற்கு ஒருமுறை மொபைல் போனை மாற்றுவதை தங்கள் வேலையாக கொண்டுள்ளனர் . புதிய மொபைல் வந்தவுடன் , அனைவரும் தங்களுடைய பழைய மொபைலை விற்றுவிடுவது இயல்பு . விற்கும் முன் நாம் எடுத்த போட்டோ , நமது மெசெஜ் என அனைத்தையும் அழித்துவிட்டு பேக்டரி ரிசெட் செய்துவிட்டு தான் விற்போம் . ஆனால் இப்போது நடந்து முடிந்த ஒரு ஆய்வில் , போனில் போட்டோக்களை அழித்து இருந்தாலும் அதனை மீண்டும் எளிதாக எடுத்து விடலாம் என்று நிரூபித்துள்ளனர் .
இந்த ஆய்வை பிரபல அண்டி வைரஸ் நிறுவனமான அவாஸ்ட் நிறுவனம் நடத்தியது . அவர்கள் இ-பே நிறுவனத்திடம் இருந்து இரண்டாம் தரமாக 20 போன்களை வாங்கிக் கொண்டனர் . அந்த போனில் இருந்து அவர்கள் 40,000 போட்டோக்கள் , 750 இ-மெயில்கள் , 250 காண்டக்ட்ஸ்கள் ஆகியவை எளிதாக மீட்டெடுத்தனர் . அவற்றுள் கிடைத்த போட்டோக்கள் அந்த போனை பயன்படுத்தியவர்களின் அந்தரங்க போட்டோக்களாக இருந்தது .
எனவே அடுத்த முறை உங்கள் போனை விற்கும் போது ஒருமுறை இருமுறை யோசித்து பாருங்கள் . மெமரி கார்ட்டை ஒருபோதும் விற்காதீர்கள் . மெமரி கார்ட் உங்களுக்கு தேவை இல்லாததாக இருந்தால் அவற்றை உடைத்து தூக்கி எறியுங்கள் . போனில் போட்டோக்களை சேவ் செய்வதை நிறுத்துங்கள் . முடிந்த வரை மெமரி கார்டில் பதிவு செய்யுங்கள் . சிறந்த பாதுகாப்பு உங்கள் அந்தரங்களை போட்டோ எடுப்பதை நிறுத்துங்கள் .