BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 24 November 2014

குழந்தைகளுக்கு உணவு ஊட்டுறீங்களா ? கொஞ்சம் கவனிங்க !



குழந்தைகளுக்கு உணவு ஊட்டுவது என்பது ஒரு கலை. ஒவ்வொரு கவளம் உணவையும் சரியாக கொடுத்தால் மட்டுமே அவர்கள் சாப்பிடுவார்கள். குழந்தைகளுக்கு எவ்வாறு உணவு ஊட்டவேண்டும் என்று குழந்தை நல மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர் படியுங்களேன். குழந்தைகளுக்கு உணவு ஊட்டும்போது பொறுமை அவசியம். சீக்கிரம் சாப்பிட்டால் ஐஸ்கிரீம் வாங்கித்தரேன், மிட்டாய் வாங்கித்தருகிறேன் என்று கூறுவது தவறான முன் உதாரணமாகும். குழந்தைகளின் உணவில் 90 சதவிகிதம் சத்தான காய்கறிகள், பழங்கள், தானியங்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். மீதமுள்ள 10 சதவிகிதத்தில் இனிப்பு, பொறித்த உணவுப்பொருட்கள் இருக்குமாறு பார்த்துக்கொள்ளவும். பழங்கள், காய்கறிகளை வெவ்வேறு வடிவங்களில் வெட்டி கொடுத்தால் அவர்கள் சாப்பிடுவார்கள்.

உணவு உண்ணும் போது குழந்தைகள் கீழே மேலே சிந்திதான் சாப்பிடும் எனவே அதற்காக குழந்தைகளை அடிக்கவேண்டாம். குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான உணவை கொடுத்து போரடிக்கவேண்டாம் வடிவத்தையோ, நிறத்தையோ மாற்றிக் கொடுங்கள் அதுவே உணவு உண்பதில் குழந்தைகளுக்கு ஆர்வத்தை அதிகரிக்கும். சிறுசிறு சமையல் வேலைகளில் குழந்தைகளை ஈடுபடுத்தினால் குழந்தைகளுக்கு உணவில் மீதான ஆர்வத்தை அதிகரிக்கும் என்கின்றனர் நிபுணர்கள். வீடுகளில் குளிர்பானங்களையோ, சிப்ஸ் போன்ற பொருட்களையோ வாங்கிவைக்காதீர்கள். அவற்றை கூடுமானவரை வாங்கி வைக்காமல் இருப்பது நல்லது. கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்கள், எனர்ஜிபானங்கள், பழச்சாறுகள் போன்றவைகளில் எந்த சத்தும் இருப்பதில்லை. அதில் உள்ள ரசாயனங்களினால் குழந்தைகளின் உடலுக்குத்தான் கெடுதல் என்று ஜெனரல் பீடியாட்டிரிக்ஸ் ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது. எனவே விளம்பரங்களை நம்பி ஏமாறவேண்டாம் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அதிவேகக் குறுஞ்செய்தியில் உலக சாதனை



செல்போனில் வேகமாக குறுஞ்செய்தி எழுதி அனுப்புவதில் 17 வயது இளைஞர் உலக சாதனை படைத்துள்ளார். குறுஞ்செய்தி வேகமாக எழுதி அனுப்புவதை அளவிட, 25 சொற்கள் கொண்ட ஆங்கில வரிகள் அளிக்கப்பட்டன. அதனை பிரேசிலைச் சேர்ந்த மார்செல் ஃபில்யோ எனும் இளைஞர், தனது ஐஃபோன்-6 செல்போனில் 17 விநாடிகளில் எழுதி அனுப்பினார்.

இதனை உலக சாதனையாக கின்னஸ் அங்கீகரித்தது. இதற்கு முந்தைய வேகக் குறுஞ்செய்தி உலக சாதனையையும் இதே இளைஞர் நிகழ்த்தினார் என்பது குறிப்பிடத் தக்கது. முந்தைய சாதனையை சாம்சங்கின் கேலக்ஸி எஸ்-4 போன் மூலம் 18.19 விநாடிகளில் நிகழ்த்தினார்.

"கத்தி போன்ற பற்களை உடைய ஜெனரா ùஸராஸால்மஸ் மற்றும் பைகோùஸன்ட்ரஸ் வகை பிரன்ஹா மீன்களே நதி, ஏரிகளில் காணப்படுபவற்றில் கொடியவை. உண்மையில், இவை மனிதனைத் தாக்குவது அரிது' - எனப் பொருள்படும் 25 ஆங்கிலச் சொற்கள் கொண்ட இரு வரிகள் குறுஞ்செய்தியாக அளிக்கப்பட்டன.

அணு ஆயுத தயாரிப்பில் பாகிஸ்தான் மிக வேகமாக வளர்ந்து வருகிறது : அமெரிக்கா தகவல்



உலக அளவில் அணு ஆயுத திட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக பாகிஸ்தான் மாறிவருகிறது எனவும் 2020ம் ஆண்டுக்குள் இந்நாடு 200 அணு ஆயுதங்களை தயாரிக்கும் மூலப்பொருட்களை சேகரித்து வைத்திருப்பதாகவும் அமெரிக்க வெளிவிவகாரத் துறை தெரிவித்துள்ளது.

மேலும் இதுகுறித்து கூறும் போது உலகின் பல நாடுகளில் அணு ஆயுதங்களை குறைக்க வலியுறுத்தப்பட்டு வந்த போதிலும் ஆசியாவில் மட்டும் அணு ஆயுத பரவல் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பாகிஸ்தான் அணு ஆயுத தயாரிப்பில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடாக உருவெடுத்துள்ளது. இந்தியா, 90 முதல் 110 அணு ஆயுதங்களை தயாரிக்க தேவையான மூலப்பொருட்களையும் சீனா நடுத்தர, இடை நிலை மற்றும் கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் வல்லமை கொண்ட 250 அணு ஆயுதங்களை வைத்திருப்பதாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது.

சார்க் உச்சி மாநாடு : நாளை நேபாளம் செல்கிறார் பிரதமர் நரேந்திர மோடி



பிரதமர் நரேந்திர மோடி சார்க் உச்சி மாநாட்டில் பங்கேற்க நாளை நேபாளம் செல்கிறார். 18-வது சார்க் மாநாடு நேபாள தலைநகர் காத்மாண்டுவில் 26 மற்றும் 27-ந் தேதிகளில் நடக்கிறது. இம்மாநாட்டில் சார்க் உறுப்பு நாடுகளான இந்தியா, பாகிஸ்தான், இலங்கை உள்ளிட்ட 8 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். 2 நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் இந்தியா சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இதற்காக அவர் நாளை காத்மாண்டு புறப்பட்டு செல்கிறார்.

கேரள அரசு புகார் எதிரொலி: முல்லைப் பெரியாறு அணையில் மூவர் குழு இன்று ஆய்வு



முல்லைப் பெரியாறு அணை மூவர் கண்காணிப்புக் குழுவின் தலைவர் பாரபட்சமாக நடப்பதாக, கேரள அரசின் புகாரைத் தொடர்ந்து, மூவர் குழுவினர் திங்கள்கிழமை அணையில் ஆய்வு மேற்கொள்கின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையை பராமரிக்கவும், கண்காணிக்கவும் உச்சநீதிமன்ற உத்தரவின்படி, மத்திய நீர்வள ஆணையத் தலைமைப் பொறியாளர் எல்.ஏ.வி.நாதனை தலைவராகக் கொண்டு மூவர் கண்காணிப்புக் குழு அமைக்கப்பட்டது. குழுவில் தமிழக அரசின் சார்பாக பொதுப்பணித்துறை முதன்மைச் செயலர் சாய்குமார், கேரளத்தின் சார்பில் அம்மாநில நீர்பாசனத்துறை முதன்மைச் செயலர் வி.ஜே.குரியன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். மூவர் கண்காணிப்புக் குழுவினர், இதுவரை 5 முறை அணையில் ஆய்வும், ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்தியுள்ளனர். இந்நிலையில், கண்காணிப்புக்குழுத் தலைவர் எல்.ஏ.வி.நாதன் பாரபட்சமாக நடந்து கொள்வதாக, ஆணையத் தலைவர் அஸ்வின் பாந்தியா, மத்திய நீர் வளத் துறைச் செயலர் அனுஜ் குமார் பிஷ்னோய் ஆகியோருக்கு, கேரள அரசு புகார் கடிதம் எழுதியுள்ளது. இந்நிலையில், மூவர் குழுவினர் திங்கள்கிழமை காலை முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு மேற்கொள்வதாகவும், மாலையில் மூவர் கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டமும் நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு தண்ணீர் திறப்பதில் மாற்று கருத்து இல்லை : கேரள முதல்வர் உம்மன் சாண்டி பேட்டி



தமிழகத்திற்கு தண்ணீர் தர தயார் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் கேரள அரசின் கருத்து மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசுடன் சுமூகமான போக்கை கடைபிடிக்கவே கேரள அரசு விரும்புகிறது கேரள மக்களின் உணர்வுகளை தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். என்று கூறினார். .

மேலும் தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு தண்ணீர் திறப்பதில் எந்த மாற்று கருத்தும் கேரள அரசுக்கு இல்லை. பழமையான முல்லை பெரியாறு அணையின் பலமும், கேரள மக்களின் பாதுகாப்பும் அவசியம். என்பதையே நாங்கள் வலியுறுத்துகிறோம் என்று கூறினார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media