BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 1 October 2014

கற்பனை அல்ல இது காரட்டின் அற்புதம்

 இலகுவில் எல்லோருக்கும் எந்த நாட்டிலும் கிடைப்பதும் மருத்துவத்திலும் மந்திரச்சாறு எனப் போற்றப்படும் காரட்டின் தாவரப் பெயர் “டக்கஸ் காரோட்டா” ஆகும். இதன் பிறப்பிடம் மத்திய ஆசியா ஆகும். ஆனாலும் இது தற்போது உலகெங்கும் கிடைக்கக்கூடிய ஒரு குளிர் காலப் பயிர் ஆகும். காரட்டில் அதிகளவு இருப்பது பீட்டா காரோட்டின் என்னும் மஞ்சள் நிறப்பொருள்தான். இதிலிருந்துதான் உடலுக்குத் தேவையானதும் மிகவும் முக்கியமானதுமான வைட்டமின் ‘ஏ’ உருவாகிறது. நமது ஈரல்தான் பீட்டா காரோட்டினை வைட்டமின் ‘ஏ’ ஆக மாற்றுகிறது. மீதமுள்ள பீட்டா கரோட்டின் ஈரலிலேயே பாதுகாக்கப்படுகிறது.

100 கிராம் காரட்டில் இருக்கும் சத்துக்கள் ஈரப்பதம் – 85% புரோட்டீன் – 0.9% கொழுப்பு – 0.2% தாது உப்புக்கள் – 1.2% நார்ச்சத்து – 2% காபோகைட்ரேட் – 10.6% கால்சியம் – 80 மி.கி. பொஸ்பரஸ் – 530 மி.கி. இரும்பு – 2.2 மி.கி. கரோட்டின் – 1890 மி.கி. தயமின் – 0.04 மி.கி. ரிப்போபிலோவின் – 0.02 மி.கி. நயாசின் – 0.06 மி.கி. வைட்டமின் சி – 3 மி.கி. கலோரி – 48 மி.கி.

உடலுக்கு ஆரோக்கியத்தை தரும் ஒரு அற்புதமான காய்கறி காரட் ஆகும். இதைப் பச்சையாக தோலுடன் உண்பதே சாலச்சிறந்தது. ஏனெனில் இதன் தோலில் தான் அதிகளவு தாது உப்புகள் காணப்படுகின்றன. காரட் ஒரு சிறந்த நச்சு முறிப்பான் ஆகும். காரட்டில் காணப்படும் ஆல்காலின் பொருட்களினால் இரத்தம் சுத்திகரிக்கப்படுகிறது. அத்துடன் இரத்தத்தில் அமில கார அளவை சமநிலைப்படுத்தும் தன்மையும் இதற்கு இருப்பதால் புற்றுநோயையும் இரத்த தமனிகளில் ஏற்படும் குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.

இதன் சாறு குழந்தைகள் முதல் முதியோர்வரை பயன்படுத்தக்கூடிய ஆரோக்கிய பானம் ஆகும். அதுமட்டுமல்ல இதனைப் பருகுவதால் கண்பார்வை மேம்படும். சளித்தொந்தரவுகள் குறையும். உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க காரட்டை பச்சையாக உண்ண நல்ல பலன் கிடைக்கும். காரட்டை பச்சையாகச் சாப்பிடும் போது அது உடலில் தீங்கிழைக்கும் கொழுப்பைக் குறைத்து உடலுக்கு நன்மை தரும் கொழுப்பை உருவாக்குகிறது. இது அமெரிக்க ஈஸ்டேர்ன் ரீஜனல் ரிசர்ச் சென்டர் மருத்துவ ஆராய்ச்சியாளர்களான டாக்டர் பிலிப் பிலிஃபர் மற்றும் டாக்டர் ஹேக் லாண்ட் என்பவர்களால் கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி காரட்டில் கொழுப்பைக் கரைக்கும் பெக்டின் இருப்பதால் தினமும் 2 காரட் சாப்பிடும் உயர் இரத்த அழுத்த நோயாளிகளின் கொழுப்பில் 10 முதல் 20 சதவிகிதம் குறைகிறது எனவும் இதனால் இரத்த அழுத்தம் சமநிலைக்கு வருகிறது எனவும் டாக்டர் வெப்பர் என்பவர் தனது ஆதாரபூர்வமான ஆராய்ச்சி மூலம் நிரூபித்துள்ளார்.

ஹார்வார்ட்டு மருத்துவ பல்கலைக் கழகத்தில் 8 வருடங்களாக 90,000 பெண்களை ஆராய்ந்ததில் தெரிய வந்த உண்மை இது. மாதத்தில் ஒருமுறை காரட் சாப்பிடுபவர்களிலும் பார்க்க வாரத்திற்கு ஐந்து முறை அல்லது அதற்கு மேலும் காராட் சாப்பிடுபவர்களுக்கு நோய்கள் வரும் அபாயம் மூன்றில் இரண்டு விகிதம் குறைவாக கண்டறிந்தார்கள். காரட்டை பச்சையாக மென்று தின்னும் போது அது பால் ஈறுகளிலுள்ள கிருமிகளை கொல்வதுடன் பற்களுக்கிடையேயுள்ள உணவுத் துகள்களையும் வெளிக்கொணர்ந்து பற்கள் மற்றும் ஈறுகளில் இரத்தக்கசிவு ஏற்படுவதை தவிர்த்துப் பாதுகாத்து நமது பற்களையும் ஈறுகளையும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றது.

காரட் சாப்பிடும் போது அதிகப்படியான உமிழ்நீர் சுரப்பதால் உணவு விரைவில் செரிக்கப்படுகிறது.இதற்குக் காரணம் உணவு சமிபாடடையச் செய்யும் நொதியங்கள் தூண்டப்படுவதால் அஜீரணக் கோளாறு, கேஸ்டிரிக் அல்சர், குடல நோய்கள், அப்பண்டிக்ஸ் பெப்டிக் அல்சர் என்பவை வராமல் தடுக்கப்படுகிறது. மேலும் அட்ரீனலின் சுரப்பியின் பணியை ஊக்குவிப்பதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கப்படுகிறது.

தமிழ் மொழியின் சிறப்பு பெயர்கள்

1) அந்தமிழ்:- அம் + தமிழ் = அழகிய தமிழ்

2) அருந்தமிழ்:- அருமை + தமிழ் = அருமைபாடுடைய தமிழ்

3) அழகுதமிழ்:- எல்லாவகையிலும் அழகுநலம் மிக்க தமிழ்

4) அமுதத்தமிழ்:- அமுதம் போன்று வாழ்வளிக்கும் தமிழ்

5) அணித்தமிழ்:- அணிநலன்கள் அமைந்த தமிழ், தமிழினம் பெருமிதமுறும் அணியாக இலங்கும் தமிழ்

6) அன்னைத்தமிழ்:- நம் அன்னையாகவும் மொழிகளுக்கெல்லாம் அன்னையாகவும் விளங்கும் தமிழ்

7) இசைத்தமிழ்:- முத்தமிழில் ஒரு பிரிவு (இசை மொழியின் கூறாவது ஏனைய மொழிகளுக்கு இல்லாத சிறப்பு)

8) இயற்றமிழ்:- முத்தமிழின் மற்றொரு பிரிவு. ஆயகலை அறுபத்து நான்கும் அவற்றின் வழிவந்தனவும் உணர்த்தும் அறிவுநூல்கள் அடங்கியது

9) இன்றமிழ்:- இனிக்கும் தமிழ் (ஒலிக்க, உரைக்க, சிந்திக்க, செவிமடுக்க, எழுத, இசைக்க என எதற்கும் இனியது)

10) இன்பத் தமிழ்:- இன்பூட்டும் ஒலியமைப்பும் மொழியமைப்பும் இலக்கண இலக்கிய மரபும் கொண்டு, கற்பவர்க்கு எஞ்ஞான்றும் இன்பம் பயப்பது.

11) எந்தமிழ்:- எம் + தமிழ் (கால்டுவெல், போப்பு போன்ற பிறமொழிச் சான்றோரும், கற்றதும் 'எந்தமிழ்' என்று பெருமித உரிமை பாராட்டும் தமிழ்)

12) உகக்குந்தமிழ்:- மகிழ்ச்சியளிக்கும் தமிழ்

13) ஒண்டமிழ்:- ஒண்மை + தமிழ் (அறிவின் செறிவும் நுட்பமும் கொண்டு ஒளிதரும் தமிழ்)

14) கனித்தமிழ்:- கனிகள் போன்ற இயற்கைச் சுவையுடைய தமிழ்

15) கற்கண்டுத்தமிழ்:- கற்கண்டு கடிதாய் இருப்பினும் சுவைக்கச் சுவைக்கக் கரைந்து இனிமை தருவது போல, அடர்ந்து செறிந்த நிலையிலும் மாந்தமாந்த மேலும் மேலும் இன்பம் பயக்கும் தமிழ்

16) கன்னித் தமிழ்:- எந்நிலையிலும் தனித்தன்மை கெடாமலும் இளமைநலம் குன்றாமலும் விளங்கும் தமிழ்

17) சங்கத்தமிழ்:- மன்னர்களாலும் புலவர்களாலும் சங்கங்கள் அமைத்துப் போற்றி வளர்க்கப்பட்டத் தமிழ்

18) சுடர்தமிழ்:- அறிவுக்கும் உணர்வுக்கும் சுடர்தரும் தமிழ்

19) சுவைத்தமிழ்:- சொற்சுவை, பொருட்சுவை, கலைச்சுவை, கருத்துச்சுவை என எல்லாச் சுவையும் செறிந்தது

20) செந்தமிழ்:- செம்மை + தமிழ் = எல்லா வகையிலும் செம்மை உடையது (செந்தமிழ் தகைமையால் அன்றே செந்தமிழ் எனப்பட்டது தமிழ்)

21) செழுந்தமிழ்:- செழுமை + தமிழ் - வளம் குன்றாத தமிழ்

22) தனித்தமிழ்:- தன்னேரிலாத தனித்தன்மை வாய்ந்த தமிழ்

23) தண்டமிழ்:- தண்மை + தமிழ் - குளிர்ச்சி நிறைந்தது

24) தாய்த்தமிழ்:- தமிழினத்தின் தாயாகவும் மொழிகளுக்கெல்லாம் தாயாகவும் மூலமாகவும் விளங்கும் தமிழ்

25) தீந்தமிழ்:- (தேன் > தேம் > தீம்) இனிமை நிறைந்த தமிழ்

26) தெய்வத்தமிழ்:- தெய்வத்தன்மை வாய்ந்தது

27) தேன்தமிழ்:- நாவுக்கும் செவிக்கும் சிந்தைக்கும் இனிமை பயக்கும் தமிழ்

28) பசுந்தமிழ்:- பசுமை + தமிழ் – என்றும் தொடந்து செழித்து வளரும் தமிழ்

29) பைந்தமிழ்:- பைம்மை + தமிழ் (பசுமை > பைம்மை)

30) பழந்தமிழ்:- பழமையும் தொடக்கமும் அறியாத தொன்மையுடைய தமிழ்

31) பாற்றமிழ்:- பால் + தமிழ் – பால் போன்று தூய்மையிலும் சுவையிலும் தன்மையிலும் இயற்கையானது

32) பாகுதமிழ்:- வெம்மையிலும் வெல்லம் உருகிப் பாகாகி மிகுசுவை தருவது போன்று, காய்தலிலும் கடிதலிலும் நயம் குறையாதது

33) நற்றமிழ்:- நன்மை + தமிழ் – இனிய, எளிய முறையில் எழுதவும் கற்கவும் பேசவும் கருவியாகி நன்மைகள் விளையத் துணைபுரிவது

34) நாடகத்தமிழ்:- முத்தமிழுள் ஒன்று – நாடகத்தின் மெய்ப்பாடுகளை நுட்பமாய் உணர்த்தும் சொல்வளமும் பொருள்வளமும் ஒலிநயமும் நிறைந்தது

35) மாத்தமிழ்:- மா – பெரிய – பெருமைமிக்க தமிழ் (மங்கலப் பொருளுணர்த்தும் உரிச்சொல் மா)

36) முத்தமிழ்:- இயல், இசை, நாடகம் என முத்திறம் கொண்டு அமைந்த தமிழ்

37) வண்டமிழ்:- வண்மை + தமிழ் (வளஞ்செறிந்த தமிழ்)

38) வளர்தமிழ்:- காலந்தொறும் வளர்ந்துகொண்டே வரும் தமிழ்

தமிழின் சிறப்பு

 தமிழின் சிறப்பென்றால் அனைவர் எண்ணங்களில் முன்வருவது அதன் லகர ழகரங்கள், வாழ்க்கையில் எப்படி வாழவேண்டும் வாழக்கூடாது என்று கூறும் நூல் திருக்குறள் மற்றும்  உச்சரிப்பு இனிமை போன்ற கருத்துக்கள் தான். தமிழ் எனும் சொல்லின் பொருள் இனிமை, எளிமை, நீர்மை என்பதாகும். தமிழில் பகுபதம், பகாப்பதம் என இரண்டு வகை உண்டு. அவை  பிரித்துப்பார்க்க வேண்டியவை, பிரித்துப்பார்க்க கூடாதவையாகும்.

உதாரணமாக கடவுள் (கட+ உள் ) என்ற சொல்லின் பொருள் எல்லாவற்றையும் கடந்து உள்ளிருப்பவன் என்பதல்ல. நீ ஆசைகளை ,பந்த பாசங்கள்  எல்லாவற்றையும் கட உனக்குள் கடவுள் இருப்பான் என்பதாகும்.
எண்கள் என்றால் அரேபியர்களை தான் கூறுகின்றனர் ஆனால் அவர்களுக்கு அது பற்றி ஒன்று தெரியவில்லை. கேட்டால் இந்தியர்களிடம் இருந்து வந்தது என்கின்றனர். வட இந்தியனை கேட்டால் அவனுக்கு ஒன்றும் தெரியாது. இந்திய அரேபிய குழப்பத்தில் இருக்கும் எண்களை தமிழ் கல்வெட்டுகளில்  பாருங்கள். உங்களுக்கே புரியும்.
இது சிறிய அளவின்  பிரிவுகள் .
 1/102400 – கீழ்முந்திரி
1/2150400 –
இம்மி
1/23654400 –
மும்மி
1/165580800 –
அணு –> ≈ 6,0393476E-9 –> ≈ nano = 0.000000001
1/1490227200 –
குணம்
1/7451136000 –
பந்தம்
1/44706816000 –
பாகம்
1/312947712000 –
விந்தம்
1/5320111104000 –
நாகவிந்தம்
1/74481555456000 –
சிந்தை
1/489631109120000 –
கதிர்முனை
1/9585244364800000 –
குரல்வளைப்படி
1/575114661888000000 –
வெள்ளம்
1/57511466188800000000 –
நுண்மணல்
1/2323824530227200000000 –
தேர்த்துகள்
இந்த இம்மியளவும் அசையாது என்று நம்  பேச்சு  வழக்கில்  பேசும் சொல். தமிழை அழகு தமிழ் ,இசைத்தமிழ் ,அமுதத்தமிழ் என மேலும் பல பெயர்கள் உண்டு .

தமிழ் எழுத்துக்களின் ஒலி வடிவம் இனிமையானதொடு மட்டும்மல்லாது அதை உச்சரிக்கும் போது குறைந்தளவு காற்றே வெளியேறுகிறது .இது மொழியியலார்களின் ஆராய்ச்சி முடிவு .உலகில் இருக்கும் எந்த மொழிகளின் இலக்கியத்தையும் உணர்ச்சி, பொருள், நயம், வடிவம் குன்றாமல் மொழி பெயர்த்து விடலாம் .ஆனால் தமிழை அப்படியே பிரதிபலிக்க வேறு எந்த மொழிகளாலும்  முடியாது . 

ஏன் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை கூட சரியாக மனதில் உள்ள எண்ணங்களை அப்படியே வெளிப்படுத்த தமிழால் மட்டுமே முடியும் . உதாரணமாக ஆங்கிலம் மற்ற மொழிகளை கடன் வாங்கி வளர்ந்ததால் அதன் சொல் உச்சரிப்புக்கும் எழுத்து உச்சரிப்புக்கும் சம்மந்தமே இருக்காது  . தமிழில் அன்பை இப்படி பிரிக்கலாம் . அ + ன்+ பு (ப்+உ) இந்த எழுத்துக்களை தனித்தனியே எப்படி உச்சரித்தாலும் அதே  சொல் தான். LOVE உச்சரித்தால் எல்ஒவிஇ என்று தான் வரும்.

ற,ன,ழ,எ,ஒ ஆகிய ஐந்து எழுத்துக்களும் தமிழின் சிறப்பு எழுத்துக்கள்  எனலாம். அதிலும் ழ உலகமொழிகளில் பிரெஞ்சில் மட்டும் தான் காணப்படுகிறது . (நற்றமிழ் இலக்கணம்:டாக்டர் சொ.பரமசிவம்). தமிழுக்கே சிறப்பான ழகரம் உச்சரிப்புக்கள் எத்தனை பேர் சரியாக உச்சரிக்கிறார்கள் என்பது தான் கவலை. உச்சரித்து பாருங்கள். அல்லது பாடி பாருங்கள் அதன் இனிமை உணர்வீர்கள்.
டாக்டர்  கால்ர்டு வேல் போப் என்பவர்கள் தமிழை கற்று திருக்குறள், திருவாசகத்தை மொழிபெயர்த்தவர்கள் ஆவார்கள். கலப்பில்லாத தூய தமிழ் என போப் தான் இறந்த பிறகு கல்லறையில் ஒரு தமிழ் மாணவன் என பொறிக்க சொன்னார். முக்கியமாக இந்த “கற்க்க கசடற கற்பவை கற்ற பின் நிற்க்க அதற்க்கு தக “எனும் குரல் கிட்டத்தட்ட 3000 வருடங்கள் முன் எழுதியது. இது இப்போது படித்தாலும் சாதாரண மனிதனுக்கே விளங்கும். 3000 வருடங்களுக்கு முன்னர் இப்படி தமிழில் எழுதும் அளவுக்கு (இரண்டு வரியில் இவ்வவளவு அர்த்தம் ) மொழி அப்போதே வளர்ச்சி அடைந்திருக்கிறது  என்றால் அது எவ்வளவு காலத்திற்கு முதல் தோன்றியிருக்க வேண்டும் என சிந்தித்து பாருங்கள். சீனன் சீன மொழியில் பேசினான் சீனா வளர்ந்தது , பிரான்ஸ் நாட்டுக்காரன் பிரெஞ்சு  மொழியில் பேசினான் பிரான்ஸ் வளர்ந்தது. தமிழன் ஆங்கிலத்தில் பேசினான் அமெரிக்கா  வளர்ந்தது.

முக்கியமாக சீனாவின் துயரம் மஞ்சள் நதி ,இந்தியாவின் துயரம் பிராமணர்கள் என்று புதுதாக சேர்த்துள்ளனர் சிலர் அதே போல…

தமிழர்களின்/தமிழின் துயரம்:- 

அரசியல் ,சினிமா ,மதம்/ஜாதி மேலே உள்ள தமிழ் மொழியின் சிறப்புகள் நம் முன்னோர்கள் புத்திசாலிகள் என்பதை காட்டுகிறது. ஆனால் நாம் ? 

“யாதும்  ஊரே யாவரும்  கேளிர்” என்ற உலக பொது நியதியை கொண்ட ஒரே மொழி இத்தகைய தமிழில் பிறந்து தமிழால் வளர்ந்ததை நினைத்து பெருமை கொள்வோம்

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

ஆண்கள் செக்ஸ் உறவு கொள்வதற்கான டாப் 5 காரணங்கள்!
http://www.satrumun.net/2014/10/top-5-reasons-for-men.html

ஃபேஸ்புக் பிரபலம் கிஷோர் கே ஸ்வாமி அதிமுகவினர்களால் தாக்கப்பட்டார்
http://www.satrumun.net/2014/10/facebook-fame-kishore-k-swamy-attacked.html

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது
http://www.satrumun.net/2014/10/no-bail-for-jayalalithaa.html

விக்ரமை கட்டாயப்படுத்தி போராட்டத்துக்கு அனுப்பியுள்ளார்கள்
http://www.satrumun.net/2014/10/who-said-vikram-to-go-to-fasting.html

பீகார் அமைச்சரை உயிரோடு கொளுத்த முயற்சி, காயங்களுடன் உயிர் தப்பினார்
http://www.satrumun.net/2014/10/mob-tries-to-burn-bihar-minister-alive.html

நீதிபதி தீர்ப்பை கூறியதுடன் ஜெயலலிதா என்ன கூறினார் - புதிய தகவல் வந்துள்ளது
http://www.satrumun.net/2014/10/jayalalitha-speech-in-court.html

பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் பேஸ்புக்கின் மார்க் !!
http://www.satrumun.net/2014/10/mark-to-meet-modi.html

கூகுளின் நெக்சஸ் 6 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை !!
http://www.satrumun.net/2014/10/things-to-know-about-nexus-6.html

நீதிக்கு தலைவணங்க வேண்டும்: சட்டத்தை வளைக்க முயலக்கூடாத - டாக்டர் ராமதாஸ் அறிக்கை
http://www.satrumun.net/2014/10/drramadoss-said-respect-court-and.html

விஜய் தான் 2016-இல் தமிழ்நாட்டோட முதல்வர்? : தொடர்ந்து விஜய்யின் பொறுமையை சோதிக்கும் ரசிகர்கள்!
http://goo.gl/Fvpyx2

அவார்டு கெடைக்கும், ஆனா படம் ஓடாது… : மணிரத்னத்தை காயப்படுத்திய ஹீரோ!
http://goo.gl/hZwx6P

மாணவர்களுக்கு கூகுள் வழங்க உள்ள இலவச அன்லிமிட்டெட் கிளவுட் ஸ்டோரெஜ் !!
http://www.satrumun.net/2014/10/google-to-offer-unlimited-cloud-storage.html

குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் !!
http://www.satrumun.net/2014/10/phelps-caught-in-drunk-and-drive.html

ஆம் ஆத்மியின் மேலும் இரண்டு புள்ளிகள் கட்சியை விட்டு விலகினர் !!
http://www.satrumun.net/2014/10/another-two-members-of-aap-quits.html

நமது முதல்வரிடம் இருந்து முதல் வாழ்த்து வந்தது
http://www.satrumun.net/2014/10/first-wish-from-new-cm.html

லுமியா 830 , 930 , 730 மொபைல்களை வெளியிட்டது நோக்கியா நிறுவனம் !!
http://www.satrumun.net/2014/10/lumia-introduces-three-new-phones.html

தங்கம் வென்றார் மேரி கோம் !!
http://www.satrumun.net/2014/10/mary-kom-strikes-again-with-a-gold.html

ஒன்சைட்டாக தீர்ப்பு அளித்த நடுவர் ; மேடையில் கதறி அழுது பதக்கத்தை பெற மறுத்த இந்திய வீராங்கனை !!
http://www.satrumun.net/2014/10/saritha-devi-cries-in-ceremony-due-to-false-judgement.html

வயது 3; எடை 70 கிலோ: அகோரப் பசி நோயால் அவதிப்படும் குழந்தை
http://www.satrumun.net/2014/10/3-70.html

காணாமல் போன மலேசிய விமானம்: தேடும் பணி மீண்டும் தொடக்கம்
http://www.satrumun.net/2014/10/blog-post_30.html

பயங்கரவாதத்தை வேரறுக்க தொலைநோக்குத் திட்டம்: இந்தியா - அமெரிக்கா வெளியீடு
http://www.satrumun.net/2014/10/blog-post_1.html

பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைப்பு
http://www.satrumun.net/2014/10/65.html

இன்றுமுதல் உதகை மலை ரயில் இயக்கம்
http://www.satrumun.net/2014/10/blog-post.html

ஆண்கள் செக்ஸ் உறவு கொள்வதற்கான டாப் 5 காரணங்கள்!

பெண்கள் செக்ஸ் உறவு கொள்ள 237 காரணங்கள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகள் நடத்தி கூறியுள்ளனர், பெண்கள் செக்ஸ் உறவு தொடர்பாக எக்கச்சக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன, ஆனால் ஆண்கள் செக்ஸ் உறவு கொள்ள என்னென்ன காரணங்கள் என்று சில ஆய்வுகள் தான் மேற்கொள்ளப்பட்டுள்ளன, அதில் ஆண்கள் செக்ஸ் உறவு கொள்வதற்கான டாப் 5 காரணங்கள் என்று கூறுபவைகள் எவை தெரியுமா?

உடல் சுகம்
ஆண்களின் செக்ஸ் உறவு கொள்ள டாப் காரணம் உடல் சுகம், உடல்சுகமே ஆண்களுக்கு முக்கியமானது, பெரும்பாலான ஆண்களுக்கு காதல் என்பது வேறு செக்ஸ் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

ஸ்ட்ரெஸ்சில் இருந்து விடுபட‌
பெரும்பாலான ஆண்களுக்கு உடல்சுகம் தான் செக்ஸின் முக்கிய அம்சம் என்றாலும் சில ஆண்கள் தங்களின் மனழுத்தத்தை தீர்க்கும் என்பதற்காக செக்ஸ் உறவை மேற்கொள்கிறார்கள்.

ஆம்பளை சிங்கம் டா
தான் ஒரு ஆண் மகன் என்று நிரூபிப்பதற்காக செக்ஸ் உறவை சில ஆண்கள் மேற்கொள்கிறார்கள்

ஈகோ
பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் திருப்தி படுத்தவே செக்ஸ் உறவில் ஈடுபடுகிறார்கள், அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்காக செக்ஸ்
செக்ஸ் உறவு கொள்வது ஒரு உடற்பயிற்சி போன்றது என்றும் அதனால் பல கலோரிகள் எரிக்கப்படுவதாலும் செக்ஸ் உறவு வைத்துக் கொண்ட மறுநாள் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடிவதாகவும் அதற்காகவே செக்ஸ் உறவை மேற்கொள்கிறார்கள்

நீதிக்கு தலைவணங்க வேண்டும்: சட்டத்தை வளைக்க முயலக்கூடாத - டாக்டர் ராமதாஸ் அறிக்கை


முதலமைச்சர் பதவியை தவறாக பயன்படுத்தி ஊழல் செய்து சொத்துக் குவித்ததற்காக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும், நீதித்துறை மீது நடத்தப்படும் தாக்குதலும் கவலையளிக்கின்றன. இதனால், தமிழகத்தில் ஜனநாயகத்தின் எதிர்காலம் என்னவாகுமோ? என்ற அச்சமும் ஏற்படுகிறது.

தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா காவிரிப் பிரச்சினைக்காக போராட்டம் நடத்தியோ, ஈழப்பிரச்சினைக்காக போர்க்கொடி உயர்த்தியோ, மீனவர்கள் கைது மற்றும் மின்வெட்டு சிக்கலுக்காக குரல் கொடுத்தோ சிறைக்கு செல்லவில்லை. மாறாக, ஊழல் செய்ததற்காகத் தான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, அதுவும் காலம் கடந்து தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இத்தீர்ப்பை வழங்கிய நீதிபதி தமிழகத்தைச் சேர்ந்தவர் கூட அல்ல... வெளிமாநிலத்தைச் சேர்ந்தவர்.

ஆனால், ஜெயலலிதா ஏதோ தவறே செய்யாதவர் போலவும், விசாரணை நீதிமன்றத்தில் தொடங்கி உச்சநீதிமன்றம் வரை உள்ள நீதிபதிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து சதி செய்து அவரை சிறையில் தள்ளிவிட்டதைப் போலவும் ஒரு மாயத்தோற்றத்தை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

1991 ஆம் ஆண்டு ஜூன் முதல் 1996 ஆம் ஆண்டு மே மாதம் வரை தமிழக முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா ஊதியமாக பெற்றது வெறும் ரூ.60 மட்டுமே. இந்தக்காலத்தில் இவரும், இவரை சார்ந்தவர்களும் வாங்கிக் குவித்த சொத்துக்களின் மதிப்பு மட்டும் ரூ. 66.65 கோடி ஆகும். வாங்கிய ஊதியத்தை விட ஒரு கோடி மடங்குக்கும் அதிகமான சொத்துக்களை ஜெயலலிதா குவித்துள்ளார்; கணக்கில் வராத ஊழல் பணத்தில் தான் அவர் இவ்வாறு செய்திருக்க முடியும் என்பது ஜெயலலிதா மீதான குற்றச்சாற்று ஆகும்.

ஜெயலலிதா ஊழல் செய்யாத உத்தமராக இருந்திருந்தால் தாம் வாங்கிய சொத்துக்களுக்கான பணம் எங்கிருந்து வந்தது என்பதை நீதிமன்றத்தில் விளக்கி குற்றமற்றவர் என நிரூபித்திருக்கலாம். ஆனால், ஜெயலலிதா அப்படிப்பட்டவர் இல்லை என்பதால் தான் இவ்வழக்கை 18 ஆண்டுகளாக இழுத்தடித்தார். அதன்பிறகும் தாம் ஊழல் செய்து சொத்து சேர்க்கவில்லை என்பதை நிரூபிக்கவில்லை என்பதால் தான் அவரை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் சட்டப்படி தண்டித்திருக்கிறது.

ஜெயலலிதா எவ்வளவு மோசமான குற்றத்தை செய்துள்ளார்; அது இந்த நாட்டை எப்படியெல்லாம் பாதிக்கும் என்பதை சொத்துக்குவிப்பு வழக்கில் அளித்த தீர்ப்பில் நீதிபதி தெளிவாக விளக்கியுள்ளார். ‘‘ கொடநாட்டில் 900 ஏக்கர் உட்பட மொத்தம் 3,000 ஏக்கர் நிலங்களை மட்டும் ஜெயலலிதா வாங்கிக் குவித்துள்ளார். அவற்றின் தற்போதைய மதிப்பு எவ்வளவு என்பது நமது கற்பனைக்கே விடப்பட்டுள்ளது. ஜெயலலிதாவும் மற்றவர்களும் ஐந்தாண்டுகளில் இவ்வளவு சொத்துக்களைக் குவித்திருப்பது, ஒருவர் கைகளில் அதிகாரம் கிடைத்தால் அது சட்டவிரோதமாக சொத்துக்களைக் குவித்து ஜனநாயக அமைப்புக்கு கடுமையான அச்சுறுத்தலை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதற்கு சிறந்த உதாரணமாகும்.

கடுமையான தண்டனைகளை வழங்குவதன் மூலம் ஊழலை ஒழிப்பது தான் நாடாளுமன்றத்தின் நோக்கமாக இருக்கும் நிலையில், அந்த நோக்கத்தை நிறைவேற்றுவது நீதிமன்றத்தின் கடமையாகும். அதன்படி தான் இவ்வழக்கில் தண்டனை அளிக்கப்பட்டிருக்கிறது’’ என்று நீதிபதி விளக்கம் அளித்திருக்கிறார்.

ஜெயலலிதா மீதான வழக்கின் முக்கிய ஆதாரங்களாக விளங்கியவை அசையும் சொத்துக்கள் மற்றும் அசையா சொத்துக்கள் தொடர்பான ஆவணங்கள் ஆகும். இந்த ஆவணங்கள் விசாரணை அதிகாரிகளாலும், நீதிபதிகளாலும் ஒன்றுக்கு பலமுறை ஆய்வு செய்யப்பட்டவை ஆகும். இவற்றின் அடிப்படையில் தான் இவ்வழக்கில் தீர்ப்பளிக்கப்பட்டிருக்கிறது; இதில் யாருடைய தலையீடும் தாக்கத்தை ஏற்படுத்தாது என்று சட்ட வல்லுனர்களே கருத்து தெரிவித்துள்ளனர்.

முழுக்க முழுக்க ஆவண ஆதாரங்களின் அடிப்படையிலான இந்த வழக்கை இந்தியாவிலுள்ள எந்த நேர்மையான நீதிபதி விசாரித்திருந்தாலும் இதே தீர்ப்பைத் தான் வழங்கியிருப்பார்கள் என்பதே வல்லுனர்களின் கருத்தாகும்.
விசாரணை நீதிமன்றத்தில் தண்டனை அளிக்கப்பட்டுள்ள நிலையில், அதில் உடன்பாடு இல்லை என்றால் அத்தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யலாம்; சிறை தண்டனை அனுபவிப்பதை தவிர்க்க நீதிமன்றத்தை அணுகி பிணை பெறலாம். அதைவிடுத்து, தீர்ப்புக்கு உள்நோக்கம் கற்பிப்பதும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை களங்கப்படுத்த முயல்வதும் முறையல்ல.

காவிரிப் பிரச்சினைக்காக ஜெயலலிதா போராடியதால், அவரை பழி வாங்குவதற்காகவே கன்னடர் என்ற முறையில் நீதிபதி குன்ஹா கடும் தண்டனை வழங்கியதாக ஆளுங்கட்சியினரும், அவர்களின் அடிப்பொடிகளும் குற்றஞ்சாற்றுவது மிக அபத்தமானது என்பது மட்டுமின்றி, இருமாநில உறவை நிரந்தரமாக பாதிக்கக்கூடியதும் ஆகும். இன்னொருபுறம் வேலூர் மாநகராட்சி உள்ளிட்ட பல்வேறு உள்ளாட்சி அமைப்புகளில் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கிய நீதிபதியை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும்.
இன்னொருபுறம், ஜெயலலிதா சிறையில் அடைக்கப்பட்டிருப்பதால் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும், இதனால் அவரது பிணை மனுவை உடனடியாக விசாரிக்க வேண்டும் என்றும் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் கூறியுள்ள ஆளுங்கட்சித் தரப்பு, ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதற்கு எதிராக தமிழகத்தில் கொந்தளிப்பு ஏற்பட்டிருப்பதைப் போன்ற தோற்றத்தை ஏற்படுத்த முயல்கிறது. இதற்காக திரையுலகினர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் அழுத்தம் கொடுத்து, அவர்களை நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக போராட வைக்கும் பணியில் தமிழக அரசே ஈடுபட்டிருக்கிறது. இவ்வாறு தூண்டிவிடப்பட்டு நடத்தப்படும் போராட்டங்கள் குறித்த செய்திகளை விரிவாக வெளியிடும்படி செய்தி&மக்கள் தொடர்பு அதிகாரிகள் நெருக்கடி தருவதாக ஊடகத்துறையினர் குற்றஞ்சாற்றுகின்றனர்.

இவை கடுமையாக கண்டிக்கத்தக்கவை என்பதுடன், இவ்வாறு நடத்தப்படும் போராட்டங்களில், ஜெயலலிதாவின் படத்தை போட்டு ‘கடவுளை மனிதன் தண்டிப்பதா?’, ‘ உச்சநீதிமன்றமே... உத்தமியை விடுதலை செய்’ என்பன போன்ற வாசகங்களை அச்சிட்டு நீதிமன்றங்களை மிரட்டும் தொனியில் செயல்படுவது அருவருக்கத்தக்கதாகும்.

இத்தகைய நடவடிக்கைகளின் மூலம் ஜெயலலிதா மீது மக்கள் மத்தியில் அனுதாபத்தை ஏற்படுத்திவிட முடியும் என்று ஆளுங்கட்சியினர் நினைத்தால், அது தவறாகவே இருக்கும். ஏனெனில் ஜெயலலிதா கொள்ளையடித்தது தங்களின் வரிப்பணத்தை தான் என்பதை மக்கள் தெளிவாக உணர்ந்திருக்கின்றனர். அவர்களை யாராலும் ஏமாற்ற முடியாது.

இத்தகைய போக்குகள் அனுமதிக்கப்பட்டால், அவை தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும். எதிர்காலத்தில் ஆட்சியில் இருப்பவர்கள் செய்த குற்றத்திற்காக தண்டனை அளிக்கப்பட்டால், அதை எதிர்த்து சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தையும், நீதிபதியையும் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தும் அளவுக்கு நிலைமை மோசமாகி விடும். இது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல.

மனுநீதி சோழன் தோன்றிய இந்த பூமியில் நீதிக்கு தலைவணங்குவதே சரியானதாக இருக்கும். அதை விடுத்து ஆட்சி அதிகாரம் கைகளில் இருக்கும் ஆணவத்தில் சட்டத்தை வளைக்க முயன்றால் சட்ட ரீதியாக மட்டுமின்றி, ஜனநாயக ரீதியாகவும் மோசமான விளைவுகள் ஏற்படும்.

இந்த ஆபத்தை தடுத்து நிறுத்துவதில் ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு உள்ளது. ஜனநாயகத்தின் நான்காவது தூணான ஊடகங்கள் முதன்மையான எதிர்க்கட்சியாக செயல்பட வேண்டும். எனவே, ஊடகங்கள் அமைதியை கலைத்து, ஒருசார்பு நிலையை தவிர்த்து சட்டத்தையும், நீதியையும் வளைக்கும் ஆளும் கட்சியினரின் முயற்சியை முறியடித்து, ஜனநாயகத்தையும், நீதியையும் நிலைநாட்டுவதற்கு துணை நிற்க வேண்டும்.

ஃபேஸ்புக் பிரபலம் கிஷோர் கே ஸ்வாமி அதிமுகவினர்களால் தாக்கப்பட்டார்

 ஃபேஸ்புக்கில் அதிமுகவுக்கும் முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கும் ஆதரவு தெரிவித்து நீண்ட காலமாக எழுதி வருபவர் கிஷோர் கே ஸ்வாமி, பல நேரங்களில் அதிமுகவின் உட்கட்சி விவகாரங்களை எழுதுவார், கவுன்சிலர்கள் வட்டச்செயலாளர்கள் முதல் அமைச்சர்கள் வரை அத்தனை பேரின் உள் விவகாரங்களை ஃபேஸ்புக்கில் எழுதி அம்பலப்படுத்துவார்.

சில நாட்களுக்கு முன் தான் அவரது ஃபேஸ்புக் ஐடி முடக்கப்பட்டது, உடனடியாக இன்னொரு ஐடி தொடங்கிய அவர் தொடர்ந்து எழுதி வருகிறார். அவரது புதிய ஐடி https://www.facebook.com/kishorekswamy1

27ம் தேதி முன்னாள் முதல்வர் செல்வி ஜெயலலிதாவுக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட அன்றே அதிமுக ஆதரவாளராக இருந்தும் கிஷோர் மீது அதிமுகவினர்களில் சிலரே தாக்க முயற்சித்துள்ளனர், அப்போது ஆட்டோவில் ஏறி தப்பியோடிய கிஷோர் இன்று வள்ளுவர் கோட்டம் எதிரில் ஜெயலலிதாவை விடுதலை செய்ய கோரி நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொள்ள சென்ற போது கூட்டத்தில் வைத்து 15 பேர் கிஷோர் கே ஸ்வாமியை தாக்கியுள்ளார்கள், இவர்களும் அதிமுகவினர் என்றே கூறப்படுகிறது.

சமீபத்தில் சென்னை வட்டச்செயலாளர் ஒருவர் திமுகவினருடன் கூட்டாக செயல்படுவதை கிஷோர் அம்பலப்படுத்தியதால் அவர் தான் ஆள் வைத்து செய்திருப்பார் என்றும் ஒரு பேச்சு உலவுகிறது, மருத்துவமனையில் சிகிச்சை எடுத்த கிஷோர் இது குறித்து காவல்துறையில் புகார் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் பேஸ்புக்கின் மார்க் !!



பேஸ்புக்கின் இரண்டாவது பெரிய மார்க்கெட் ஆன இந்தியாவுக்கு பேஸ்புக்கின் துணை நிறுவனரான மார்க் ஜுக்கர்பெர்க் அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற் கொள்ள உள்ளார் .

இவர் internet.org நடத்தும் அமைப்பில் கலந்து கொள்வதற்காக இந்தியா வர உள்ளார் . அக்டோபர் 9,10 தேதிகளில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது . இந்தியா வருகையில் அவர் பிரதமர் மோடியை சந்திக்க உள்ளார் . மேலும் சில அமைச்சர்களையும் அவர் சந்திக்க உள்ளார் .

இந்த சந்திப்பின் போது பேஸ்புக் மற்றும் இந்திய அரசு இணைந்து செயல்படுவது குறித்து பேசுவர் என்று தெரிகிறது .

கூகுளின் நெக்சஸ் 6 குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியவை !!



கூகுள் தன்னுடைய ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனை அக்டோபர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு இருந்தனர் . எப்போது கூகுள் தன்னுடைய புது ஆண்ட்ராய்ட் வெர்ஷன் வெளியிடுகிறதோ அப்போது எல்லாம் ஒரு நெக்சஸ் மொபைல் வெளிவருவது விளக்கம் . இப்போது ஆண்ட்ராய்ட் எல் வர உள்ளதால் கூகுளின் நெக்சஸ் 6 மற்றும் நெக்சஸ் 9 வெளி வர உள்ளது . இதனை பலரும் எதிர்பார்த்து காத்து இருக்கிற நிலையில் இது குறித்து நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய சில செய்திகள் .

1 ) இந்த முறை நெக்சஸ் 6 மொபைல் பெரிய அளவு திரையுடன் வெளி வர உள்ளது . இந்த மொபைலுக்கு 5.9 இன்ச் அளவு திரை இருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது .

2 ) இந்த முறை நெக்சஸ் 6 மொபைலை எல்.ஜி நிறுவனம் தயாரிக்கவில்லை . முதல் முறையாக மோட்டோரோலா நிறுவனம் தயாரிக்க உள்ளது .

3 ) மேலும் இந்த முறை நெக்சஸ் 6 இல் குவால்கம் ஸ்னாப்டிராகன் 805 குவாட் கோர் பிராசசர் இடம் பெற உள்ளது . இந்த பிராசசர் இது வரை சாம்சங்கின் நோட் 4 மொபைலில் மட்டுமே இடம் பெற்று இருந்தது .

4 ) இந்த மொபைலில் பேட்டரி திறன் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது . முந்தைய நெக்சஸ் மொபைல்களில் பேட்டரி திறன் மோசமாக இருந்ததால் இந்த முறை அது சரி செய்யப்பட்டு இருக்கும் என்று தெரிகிறது .

5 ) இந்த மொபைல் அக்டோபர் 31 ஆம் தேதி வெளிவரும் என்று முன்னர் எதிர்பார்த்து இருந்தனர் . ஆனால் இப்போது அதற்கு முன்னாடியே அக்டோபர் 15 ,16 இல் வெளிவரலாம் என செய்திகள் வெளிவந்துள்ளது . 

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது

கடந்த சனிக்கிழமை அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதனை எதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில், ஜாமீன் மற்றும் தீர்ப்புக்கு எதிரான மனுக்களை நாளையே விசாரிக்க வேண்டும் எனக் கோரி ஜெயலலிதா தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் அவசர மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு கர்நாடக உயர்நீதிமன்ற பதிவாளர் தேசாயிடம் கொடுக்கப்பட்டது. இதனை ஏற்று கொண்டார் அவர். இன்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி வழக்கை அக்டோபர் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார். அதனால் அக்டோபர் 7 ஆம் தேதி வரை ஜெயலலிதாவுக்கு ஜாமீன் கிடையாது , அதனால் அவர் சிறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அக்டோபர் 7 ஆம் தேதி பக்ரீத் , அது விடுமுறை தினம்  என்பது குறிபிடத்தக்கது.

மாணவர்களுக்கு கூகுள் வழங்க உள்ள இலவச அன்லிமிட்டெட் கிளவுட் ஸ்டோரெஜ் !!



இரண்டு மாதங்களுக்கு முன் கூகுள் வேலைகளுக்காக கூகுள் டிரைவ் ஒன்றை அறிமுகம் செய்தது . இன்று (புதன்கிழமை) உலகின் முன்னனி தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான கூகுள் , மாணவர்களின் கல்விக்காக புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது .

இது குறித்து கூகுள் அதிகாரி கூறுகையில் , " நாங்கள் கூகுளின் சேவைகளை பயன்படுத்தும் மாணவர்கள் அனைவரும் அதில் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும் என நினைக்கிறோம் . அதில் உள்ள தொழில்நுட்பங்கள் குறித்து இனி கவலைப்பட வேண்டாம் .  இந்த டிரைவ் மூலம் மாணவர்கள் தங்கள் ஸ்டோரெஜ் குறித்த கவலைகளை விட்டு விடலாம் " என்று அவர் தெரிவித்தார் .

கல்விக்கான இந்த் கூகுள் டிரைவ் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் . இந்த அன்லிமிட்டெட் கிளவுட் ஸ்டோரெஜ் மூலம் மாணவர்கள் அவர்கள் விருப்பம் போல் பைல்களை சேவ் செய்து கொள்ளலாம் . மேலும் இதன் மூலம் 5 ஜிபி பைல்களை அவர்கள் அப்லோட் செய்யலாம் .

விக்ரமை கட்டாயப்படுத்தி போராட்டத்துக்கு அனுப்பியுள்ளார்கள்





சொத்துக் குவிப்பு வழக்கில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு விதிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து, தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை முன்பு  (புதன்கிழமை) காலை 9 மணி அளவில் தமிழ்த் திரையுலகினர் மவுன உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இதில், நடிகர் சங்கத் தலைவர் சரத்குமார், கேயார், சத்யராஜ், விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், எஸ்.ஜே. சூர்யா, பிரபு, விக்ரம் பிரபு, சிபிராஜ், அபிராமி ராமநாதன், நடிகை சச்சு, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா உள்ளிட்ட நடிகர் நடிகைகள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

இதில் விக்ரம் கலந்து கொண்டார்கள். ஆனால் விக்ரம் விருப்பப்பட்டு இந்த போராட்டத்துக்கு செல்லவில்லை. அவரை கட்டாயப்படுத்தி இதற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். 'ஐ' படக்குழுவினர் தான் அவரை கட்டாயப்படுத்தி அனுப்பி வைத்துள்ளார்கள். ஐ படத்தின் உரிமையை ஜெயா டிவி நிறுவனம் தான் வாங்கியுள்ளார்கள். அதற்கான அட்வான்ஸ் மட்டும் தான் வந்துள்ளது. இன்னும் 70 சதவீத தொகை மீதி உள்ளது. இப்போது விக்ரம் இந்த போராட்டத்திற்கு செல்லாமல் இருந்தால் அதனால் ஆளும்கட்சியினர் கடுப்பாகி விடுவார்கள். அந்த காரணத்துக்காக அவரும் சென்று விட்டார்.

நீதிபதி தீர்ப்பை கூறியதுடன் ஜெயலலிதா என்ன கூறினார் - புதிய தகவல் வந்துள்ளது




நமது முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கு 18 ஆண்டுகளாக நடைபெற்றது. அதன் தீர்ப்பு கடந்த சனிக்கிழமை அன்று வழங்கப்பட்டது. அதில் ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தண்டனையை 2 ஆண்டுகளாக குறைப்பதற்கு ஜெயலலிதா தரப்பில் கடுமையாக முயற்சி செய்தார்கள். ஆனால் எந்த பலனும் இல்லை. நீதிபதி தனது தீர்ப்பை மாத்துவதாக இல்லை. நீதிபதி தீர்ப்பை கூறிய பின் ஜெயலலிதா என்ன கூறினார் என்பதை பார்ப்போம்.


நான் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே வசதியாக இருந்தவர். செல்வச் செழிப்பு மிக்க குடும்பத்தில் பிறந்து, அந்த காலத்திலேயே திரைப்படங்களில் நடிக்க பல கோடிகளை சம்பளமாகப் பெற்றவர். எனக்கென்று எந்த குடும்பமும் இல்லை. எந்த குடும்பத்துக்கும் சொத்து சேர்க்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. எனக்குள்ள ஒரே சொத்து தமிழக மக்கள் தான். நான் உழைத்து சம்பாதித்த சொத்துக்கள் அனைத்தும் தமிழக மக்களுக்கே. மக்கள் மன்றத்தில் என்னை சந்தித்து பகை தீர்க்க முடியாத அரசியல்வாதிகள், இந்த வழக்கு மூலம் என்னை பழி தீர்த்துக் கொண்டிருக்கின்றனர். என் மீது எந்த தவறும் இல்லை. நாம் ஒரு நிரபராதி என்பதை நிருபித்து கட்டாயம் வெளியில் வருவேன் என்றார்.

குடித்து விட்டு போதையில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டார் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் !!



ஒலிம்பிக் நீச்சல் வீரர் மைக்கேல் பெல்ப்ஸ் குடித்து விட்டு அதி வேகத்தில் கார் ஓட்டியதற்காக கைது செய்யப்பட்டுள்ளார் . 29 வயது பெல்ப்ஸ் அதிகாலை 1.30 மணி அளவில் போலிசாரிடம் பிடிப்பட்டார் .

இவர் 72 வேக அளவில் செல்ல வேண்டிய வேகக் கட்டுப்பாடு இருந்த இடத்தில் 135 கிமீ வேகத்தில் சென்றதால் இவரை போலிசார் கைது செய்தனர் . கைது செய்த பின் இவரை போலிசார் ரிலிஸ் செய்தனர் .

பெல்ப்ஸ் இதுவரை ஒலிம்பிக் போட்டிகளில் 22 தங்கம் வென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது .

ஆம் ஆத்மியின் மேலும் இரண்டு புள்ளிகள் கட்சியை விட்டு விலகினர் !!



ஆம் ஆத்மி கட்சியின் மஹாராஷ்டிர மாநில பொறுப்பாளரான அஞ்சலி டமானியா மற்றும் மாநில பொருளாளர் இன்று இருவரும் ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவித்தனர் .இருவரும் தங்களின் சொந்த காரணங்களை கூறி கட்சியை விட்டு விலகினர் .

இது குறித்து அஞ்சலி கூறுகையில் , " நான் மாநில பொறுப்பாளராக என்னுடைய பதவியை விட்டு விலகுகிறேன் . நான் எப்போதும் கூறுவது போல என்னுடைய மனதும் இதயமும் எப்போதும் ஆம் ஆத்மி உடன் தான் இணைந்து இருக்கும் . மாநில பொறுப்பாளருக்கு வேலைகள் அதிகம் . நான் என்னால் முடிந்த வரை சில வேலைகளை பார்த்தேன் . ஆனால் நானும் பிரித்தியும் சில சொந்த காரணங்களால் பதவியை விட்டு விலகுகிறோம் " என்றார் .

இதேப் போன்று பிரித்தி ஷர்மாவும் தான் தொடர்ந்து ஆம் ஆத்மிக்கு ஆதரவாக இருப்பேன் என்று கூறினார் .

ஆம் ஆத்மி ஏற்கனவே மஹாராஷ்டிரா சட்ட மன்ற தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்து இருந்தது .

நமது முதல்வரிடம் இருந்து முதல் வாழ்த்து வந்தது




கடந்த சனிக்கிழமை அன்று ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்று தீர்ப்பு எழுதப்பட்டது. இதனை எதித்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஜெயலலிதா தரப்பில் மனு செய்து இருந்தார்கள். இந்த மனுவை விசாரித்த விடுமுறை கால நீதிபதி ரத்னகலா இந்த மனு மீதான விசாரணையை அக்டோபர் 6 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இந்நிலையில் புதிய முதல்வராக பன்னீர்செல்வம்  பொறுப்பேற்று கொண்டார். அவர் பதவியேற்கும் போது, கண்ணீர் விட்டு அழுது கொண்டே பதவி ஏற்றார். இப்போது அவர் தனது முதல் வாழ்த்து செய்தியை தமிழக மக்களுக்கு தெரிவித்துள்ளார். அது சரஸ்வதி பூஜை, விஜய் தசமிக்கான வாழ்த்தாகும். வாழ்த்தோடு நிறுத்தி கொள்ளாமால் ஜெயலலிதாவை போல் புது திட்டங்களை அறிமுக படுத்த வேண்டியது அவருடைய கடமையாகும்.

லுமியா 830 , 930 , 730 மொபைல்களை வெளியிட்டது நோக்கியா நிறுவனம் !!



இன்று நோக்கியா நிறுவனம் தன்னுடைய மூன்று புதிய மொபைல் போன்களை வெளியிட்டுள்ளது . இந்த மொபைல்களுக்கு 730 , 830 , 930 என பெயரிட்டுள்ளனர் . அந்த மொபைல்களுக்கு முறையே 15,299 ரூபாய் , 28,999 ரூபாய் 38,649 ரூபாய் என்று விலையிட்டுள்ளனர் .

இந்த மொபைல்கள் அனைத்தும் இதற்கு முன்னரே வெளியிடப்பட்டு இருந்தாலும் , இன்று தான் இந்தியாவில் வெளிவந்துள்ளது . அனைத்து மொபைல்களிலும் 8.1 விண்டோஸ் இருக்கிறது .

தங்கம் வென்றார் மேரி கோம் !!



இன்று நடந்த 51 கிலோ எடைப்பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் மேரி கோம் இன்று கசகஸ்தானின் ஜைனா ஷெகர்பெகோவா உடன் மோதினார் . இறுதிப் போட்டியான இந்த போட்டியில் முதலில் மேரி கோம் தடுமாறினாலும் இறுதியில் தங்கம் வென்று அசத்தினார் . இதன் மூலம் ஆசியப் போட்டிகளில் முதல் தங்கம் பெறும் குத்துச் சண்டை வீராங்கனை என்று பெருமையைப் பெற்றார் .

இவருக்கு டிவிட்டரில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது . நாமும் தங்க மங்கைக்கு வாழ்த்து தெரிவிக்கலாமே !!

ஒன்சைட்டாக தீர்ப்பு அளித்த நடுவர் ; மேடையில் கதறி அழுது பதக்கத்தை பெற மறுத்த இந்திய வீராங்கனை !!



ஆசிய விளையாட்டுப் போட்டிகள் தென் கொரியாவின் இன்சியான் நகரில் நடந்து வருகிறது . மகளிர் 60  கிலோவிற்கான எடைப்பிரிவு குத்துச் சண்டைப் போட்டியில் இந்தியாவின் சரிதா தேவி மற்றும் ஜினா பார்க் மோதினார் . ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சரிதா தான் போட்டியில் வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கையாக இருந்தார் . ஆனால் இறுதியில் நடுவர் தீர்ப்பு அளிக்கும் நேரத்தில் அனைவரும் எதிர்பாரா விதமாக ஜினா வெற்றி பெற்றதாக அறிவித்தார் .

இதனை தாங்கிக் கொள்ள முடியாத அவர் மேடையில் பரிசளிக்கும் போது மனமுடைந்து கதறி அழுதார் . துயரம் தாங்க முடியாத அவர் அழுதபடியே தன்னுடைய பதக்கத்தை தென் கொரிய வீராங்கனையிடம் கொடுத்து விட்டார் . முன்னாள் ஆசிய மற்றும் உலக சாம்பியனான சரிதா தேவி மன வருத்தத்துடன் பரிசளிப்பு விழாவில் இருந்து வெளியேறினார் .

இந்த போட்டியில் சரிதாவின் திறமைக்கு முன்னால் ஜினாவால் ஒன்றும் செய்ய இயலவில்லை . ரசிகர்களும் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்தனர் . அவர் வெற்றி பெற்று விட்டதாகவே அனைவரும் கருதினர் . ஆனால் அவர் தோல்வி அடைந்ததாக நடுவர் அறிவித்தவுடன் அவரது கணவர் கோவத்துடன் சண்டை போட தொடங்கிவிட்டார் . இந்திய நிர்வாகமும் இது குறித்து மேல் முறையீடு செய்தனர் . ஆனால் நடுவர் தீர்ப்பை மாற்ற முடியாது என அறிவித்து விட்டனர் .

மனவருத்தத்தில் சரிதா கூறுகையில் , " இது தான் தீர்ப்பு என்றால் எங்களை ஏன் விளையாட விட்டுருக்க வேண்டாம் ?? " என்று ஆதங்கத்துடன் கூறினார் .

வயது 3; எடை 70 கிலோ: அகோரப் பசி நோயால் அவதிப்படும் குழந்தை

தென்அமெரிக்க நாடான பிரேசிலைச் சேர்ந்த சிறுவன் ஒருவன், அகோரப் பசி நோயால் அவதிப்படுகிறான். இந்த நிலையை மருத்துவர்கள் ப்ராடர்-வில்லி சிண்ட்ரோம் என்று அழைக்கின்றனர். இது மிகவும் அபூர்வமான மரபியல் நோயாகக் கருதப் படுகின்றது. எப்போதும் பசி, எப்போது உணவு உண்பதன் மீதான தீராத ஆசை என இந்த நோய் இந்த 3 வயதுக் குழந்தையை மிகவும் வாட்டி எடுப்பதாக அவனது பெற்றோர் புலம்புகின்றனர்.

பிரேசிலைச் சேர்ந்த மைக்கேலின் மகன் மிசேலுக்கு வந்துள்ள நோய், அவனை நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக உடலை குண்டாக்கி வருகிறது. 3 வயதை எட்டியுள்ள மிசேல், நாள்தோறும் 5 முதல் 6 முறை சாப்பிடுகிறான். அவ்வாறு ஆறு வேளைகளில் அவன் எடுத்துக் கொள்ளும் உணவு, சாதாரணமாக மற்றவர்கள் எடுத்துக் கொள்ளும் உணவை விட இரு மடங்கு அதிகரித்துள்ளதாக பெற்றோர் கூறுகின்றனர். இவ்வளவுக்கும், மிசேல் பிறக்கும் போது 2.9 கிலோவாகத்தான் இருந்தானாம். ஆனால் பின்னர் அவனது எடை ஒவ்வொரு மாதமும் 2.5 கிலோ உயர்ந்து வருவதாக பெற்றோர் கூறுகின்றனர்.

இதனால் பலூனைப் போல் உடம்பு பெருத்துவிட்டதாகவும், அவனை அழைத்துக் கொண்டு எங்கும் செல்ல முடியவில்லை என்றும் பெற்றோர் வருத்தப் படுகின்றனர். மிசேலைப் பரிசோதித்த மருத்துவர்கள் ப்ராடர்-வில்லி சிண்ட்ரோம் என்ற பிரச்னை அவனுக்கு இருப்பதாகக் கூறுகின்றனர். இது மரபு வழி குறைபாடு என்று கூறும் அவர்கள், அளவுக்கதிமாக பசி, எப்போதும் சாப்பிட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும் எண்ணம் ஆகியவைதான் இதற்குக் காரணம் என்று கூறியுள்ளனர். மிசேலை சிரமப்பட்டு வாடகை காரில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போது பலர் அவனுடன் படம் எடுக்க ஆர்வத்துடன் வருவதாகக் கூறுகிறார் அவனது தந்தை மிக்கேல். தெருக்களில் செல்லும்போதும், தங்களைத் தடுத்து, உடன் படம் எடுத்துக் கொள்ளும் மக்கள், தங்கள் வாழ்க்கையில் இது போன்று எடையுடன் குழந்தையைப் பார்த்ததில்லை என்று கூறுகின்றனராம்.

இந்த நோய்க்கான நிரந்தரத் தீர்வும் மருத்துவமும் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததாக வருத்தமுடன் கூறுகிறார் அவரது தாயார். இருந்தாலும், குழந்தையின் உணவுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்தத் தனக்குத் தெரியவில்லை என்று பாசம் நிறைந்த தாயாக அவர் தன் இயலாமையை வெளிப்படுத்துகிறார். பிரேசிலில் இந்தக் குழந்தையின் அபார உடல் பருமன், இப்போதைய பரபரப்புச் செய்தியாகியிருக்கிறது.

காணாமல் போன மலேசிய விமானம்: தேடும் பணி மீண்டும் தொடக்கம்

 ஆறு மாதங்களுக்கு முன்பு காணாமல் போன மலேசிய எம்எச் 370 விமானத்தைத் தேடும் பணி இந்த வாரம் மீண்டும் தொடங்குகிறது. விமானத்தைத் தேடும் பணியில் இரண்டு கப்பல்கள் ஈடுபடுத்தப்படுகின்றன. இதில் ஜிஓ ஃபீனிக்ஸ் கப்பலானது மேற்கு ஆஸ்திரேலியப் பெருங்கடல் பகுதியில் இருந்து விமானம் விழுந்ததாகக் கருதப்படும் முக்கிய இடத்துக்கு புதன்கிழமை வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கப்பல் 20 நாள்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படும். இதனுடன், ஃபூயுக்ரோ டிஸ்கவரி எனும் கப்பலும் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது.

இது தவிர, ஃபூயுக்ரோ ஈக்வேட்டர் எனும் மற்றொரு ஆய்வுக் கப்பலும் அக்டோபர் மாத இறுதியில் விமான பாகங்களைத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் 6-ஆம் தேதி மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்கிற்குப் புறப்பட்டுச் சென்ற எம்எச்370 விமானம் நடுவானில் திடீரென்று காணாமல் போனது. அந்த விமானத்தில் 239 பயணிகள் பயணம் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பீகார் அமைச்சரை உயிரோடு கொளுத்த முயற்சி, காயங்களுடன் உயிர் தப்பினார்

பாட்டு கச்சேரி சவுண்ட் செட்டிங் சரியில்லை என்று பீகார் அமைச்சரை  உயிரோடு கொளுத்த முயற்சி, காயங்களுடன் உயிர் தப்பினார்

பாட்னாவிலிருந்து 150 கிமீ தூரத்தில் உள்ளா சாஸ்ரம் நகரில் பீகார் அமைச்சரை உயிரோடு கொளுத்த முயற்சி நடந்தது, தாராசந்தி கோவிலில் நவராத்திரி திருவிழா கொண்டாட்டங்களில் ஒரு பகுதியாக பாட்டுக்கச்சேரி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதில் பீகார் கலை மற்றும் கலாச்சார அமைச்சரும் பாடகருமான வினய் பிகாரி கலந்து கொண்டு பாடல்கள் பாடினார், இதில் பிற கலைஞர்களும் கலந்து கொண்டு பாடினார்கள்.

மிக மோசமான இருக்கை ஏற்பாடுகளும், மோசமான சவுண்டு செட்டிங்கினாலும் கடுப்பான கும்பல் சேர்களை வீசி எறிந்து கலவரம் செய்ய தொடங்கியது, போலிசார் மீது கற்கள் வீசித்தாக்கப்பட்டன, மேலும் அமைச்சர் காரை கொளுத்தியது, சிலர் பெட்ரோல் கேன் உடன் அமைச்சரை கொளுத்த தேடியுள்ளார்கள், இந்நிலையில் அங்கிருந்து ஓடி போலிசாருடன் இணைந்து அதன் பின் தப்பியுள்ளார் அமைச்சர், இது வரை 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர், 500 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது, காவல்துறை எஸ்.பியும் இதில் காயமடைந்துள்ளார்.

பயங்கரவாதத்தை வேரறுக்க தொலைநோக்குத் திட்டம்: இந்தியா - அமெரிக்கா வெளியீடு

பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக இந்தியாவும், அமெரிக்காவும் கூட்டாக நடவடிக்கை எடுக்கும். பேரழிவு ஆயுதங்கள் பரவலை இரு நாடுகளும் இணைந்து தடுக்கும்'' என்று இந்தியா-அமெரிக்கா சார்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட தொலைநோக்குத் திட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் கடந்த 26ஆம் தேதி முதல் பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். இந்த பயணத்தின் முதல் கட்டமாக, நியூயார்க்கில் 26ஆம் தேதி முதல் அவர் 3 நாள்கள் சுற்றுப்பயணம் செய்தார். அப்போது அவர், ஐ.நா. பொதுச் சபைக் கூட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பேசினார்.

இலங்கை அதிபர் ராஜபட்ச, நேபாளப் பிரதமர் சுஷீல் கொய்ராலா உள்ளிட்ட உலக நாடுகளின் தலைவர்களையும் மோடி சந்தித்துப் பேசினார்.
அதைத் தொடர்ந்து, நியூயார்க் பயணத்தை முடித்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமாவுடனான விருந்து உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக வாஷிங்டனுக்கு மோடி செவ்வாய்க்கிழமை வந்தார். ஒபாமாவுடன் விருந்து நிகழ்ச்சியில் மோடி பங்கேற்பதற்கு முன்னதாக இந்தியா - அமெரிக்கா சார்பில் தொலைநோக்குத் திட்ட அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இந்தியா-அமெரிக்கா இடையிலான ஒத்துழைப்பின் மூலம், அமைதி, மேம்பாடு அடைவதற்கு முயற்சிக்கப்படும். தீவிர ஆலோசனைகள், கூட்டுப் பயிற்சிகள், தொழில்நுட்பப் பரிமாற்றம், பாதுகாப்பு துறையில் ஒத்துழைப்பு ஆகியவற்றில் இரு நாடுகளும் ஒத்துழைத்து செயல்படுவதால் இந்தப் பிராந்தியத்தையும், உலகத்தையும் பாதுகாப்பாக திகழச் செய்ய முடியும். பல்வேறு கலாசாரங்கள், நம்பிக்கைகள் கொண்ட சிறந்த ஜனநாயக நாடுகளாக இந்தியாவும், அமெரிக்காவும் உள்ளன. அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படுவது இரு நாடுகளுக்கும் மட்டுமல்லாமல் உலகத்துக்கே நன்மையைத் தரும்.

இரு நாடுகளும் இணைந்து தீவிரவாத அச்சுறுத்தல்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும். மேலும், இரு நாடுகளிலும், பயங்கரவாதத் தாக்குதல்கள் நிகழாமல் தடுக்கப்படும். மனித குலத்துக்கு பேரழிவுகள் ஏற்படும்போதும், பிரச்னைகள் ஏற்படும்போதும் இரு நாடுகளும் இணைந்து விரைந்து நடவடிக்கை எடுக்கும். பேரழிவு ஆயுதங்கள் பரவலை இரு நாடுகளும் இணைந்து தடுக்கும். அணு ஆயுதக் குறைப்பில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும். 21ஆம் நூற்றாண்டில் இந்தியாவும், அமெரிக்காவும் நம்பிக்கையான கூட்டாளிகளாகத் திகழ்கின்றன. இரு நாடுகளிடையேயான நட்புறவு என்பது, உலகத்துக்கே எடுத்துக்காட்டாகும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள் குறைப்பு

பெட்ரோல் விலை லிட்டருக்கு 65 காசுகள்  குறைக்கப்பட்டுள்ளது. இது இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

இன்றுமுதல் உதகை மலை ரயில் இயக்கம்

 மேட்டுப்பாளையம், செப்.30: உதகை மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, இன்று உதகை மலை ரயில் இயக்கப்படுமென அதிகாரிகள் தெரிவித்தனர்.

 கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு மேட்டுப்பாளையம், குன்னூர் பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக கல்லாரை அடுத்த ஹில்குரோவ் ரயில் நிலையம் அருகே ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு, பெரிய பாறைகள் விழுந்தன. இதையடுத்து, உதகை மலை ரயில் திங்கள், செவ்வாய்க்கிழமை இரண்டு நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டது. 25-க்கும் மேற்பட்ட ரயில்வே தொழிலாளர்கள், ரயில் பாதையில் கிடந்த மண், கற்களை அகற்றியும், பாறைகளை வெடிவைத்து தகர்த்தும் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.

 செவ்வாய்க்கிழமை மாலையில் இப் பணிகள் முடிந்ததையடுத்து, மலை ரயிலை இயக்க ரயில்வே நிர்வாகம் முடிவு செய்தது. இன்று முதல் உதகை மலை ரயில் மேட்டுப்பாளையத்தில் இருந்து வழக்கம்போல் இயங்குமென அதிகாரிகள் தெரிவித்தனர்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media