BREAKING NEWS

Ads

உலகம்

Wednesday, 2 July 2014

ஒரு விந்தணு தன்னுள் எத்தனை MB DNA டேட்டா வைத்துள்ளது தெரியுமா?

ஒரு விந்தணு தன்னுள் எத்தனை MB DNA டேட்டா வைத்துள்ளது தெரியுமா?

ஒரு ஸ்பூன் விந்தில் எத்தனை லேப்டாக்கள் டேட்டா சேமித்து வைக்கப்பட்டுள்ளன தெரியுமா?

இயற்கை மிகப்பெரிய சக்தி வாய்ந்தது, இயற்கையின் சக்தியிலும் அதன் டெக்னாலஜியிலும் மனித இனம் ஒரு துளி கூட இல்லை, 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு ப்ளாப்பி டிஸ்க் என்று ஒரு டிஸ்கை கையில் வைத்திருப்போம் 5.25 இஞ்ச் டிஸ்க் ஒரு MBக்கும் குறைவான டேட்டாவை மட்டுமே சேமிக்க இயலும், 3.5 இஞ்ச் டிஸ்கிலோ 1.4 MB தான் சேமிக்க இயலும்.

தற்போது ஒரு இஞ்ச் தம்ப் ட்ரைவில் சில GB டேட்டாக்கள் சேமிக்கலாம்.

ஒரு விந்தணுவில் 37.5 MB டி.என்.ஏ டேட்டா சேமிக்கப்பட்டுள்ளது, ஒரு ஆணின் உச்சக்கட்டத்தில் வெளியாகும் ஒரு ஸ்பூன் விந்தணுக்களில் (200 - 300 மில்லியன் விந்தணுக்கள்) 7153 TB லிருந்து  10,729 TB வரை டி.என்.ஏ டேட்டாக்கள் உள்ளன.  இது 7,500 லேப்டாப்களில் சேமிக்கப்படும் டேட்டாக்களுக்கு இணையானது.

இயற்கையின் அறிவியலில் நாம் ஒரு துளி கூட இல்லை, ஆனால் இயற்கையை அழிக்கவும் வசப்படுத்தவும் துடிக்கிறோம்.

20 ஆண்டுகள் கழித்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார் சந்தர்பால் !!

மேற்கு இந்திய தீவுகள் அணியின் சந்தர்பால் 20 ஆண்டுகள் கழித்து ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார். நியுசிலாந்து  அணியுடனான் போட்டியில் இந்த சாதனை நிகழ்ந்தது. அந்த போட்டியில் மேற்கு இந்திய தீவுகள் தோற்றாலும் சந்தர்பாலுக்கு இந்த சாதனை கிடைத்தது.



இதுவரை 156 போட்டிகளில் ஆடியுள்ள சந்தர்பால் இதுவரை ஸ்டம்பிங் முறையில் அவுட் ஆனது இல்லை .இப்போது தான் முதல் முறையாக இவ்வாறு ஆட்டமிழந்து உள்ளார். இவர் மார்க் க்ரைக் பந்தில் ஆட்டமிழந்தார். இவரை ஸ்டம்பிங் செய்தவர் வாட்லிங் ஆவார்.

உலகில் 2வது பிரபலமான அரசியல்வாதி நரேந்திர மோடி !!

உலகில் 2 வது பிரபலமான அரசியில்வாதி என்னும் பெருமையை பெற்று உள்ளார் நமது பிரதமர் நரேந்திர மோடி.  இந்த தகவலை பேஸ்புக்கின் மூத்த அதிகாரி ஷெர்ல் சண்ட்பேர்க் தெரிவித்தார். பேஸ்புக்கில் மோடியின் பக்கத்தை 18 மில்லியன் பேர் விரும்பி உள்ளார்கள். முதல் இடத்தில் அமெரிக்காவின் ஒபாமா உள்ளார். இவரது பக்கத்தை 41 மில்லியன் பேர் விரும்பி உள்ளார்கள்.



மோடி சமூக வலைதளங்களுக்கு அதிக முக்கியதுவம் தருகிறார். தான் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு அதுவும் ஒரு முக்கிய காரணம். தேர்தளுக்கு முன்பு மோடிக்கு இருந்த வெற்றி பாதை அவர் அரசு அமைந்த ஆட்சியமத்த பின்பும் இருக்குமா என்று பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.

சச்சின் யார் என்றே எனக்கு தெரியாது : மரியா ஷரபோவா அதிர்ச்சி தகவல் !!

கிரிக்கெட்டின் கடவுள் என அழைக்கபடுபவர் சச்சின் டெண்டுல்கர். இவருக்கு என பல கோடி ரசிகர்கள் உள்ளார்கள் . அவர்கள் இவரை தெய்வமாக பார்ப்பவர்கள். சச்சின் கிரிக்கெட்டில் இருந்து ஒய்வு பெற்ற போது உலகமே கண்ணீர் சிந்தியது. கிரிக்கெட்டில் இவர் செய்யாத சாதனைகளே இல்லை. அப்படிபட்டவரை தெரியாது என்று கூறி இருக்கிறார் டென்னிஸ் விளையாட்டில் நட்சத்திர வீராங்கனையாக இருக்கும் மரியா ஷரபோவா.



சச்சின் விம்பிள்டன் பார்பதற்காக அங்கு சென்று இருந்தார். கால்பந்து வீரர் டேவிட் பெக்காமுடன் சேர்ந்து ஆட்டத்தை கண்டு ரசித்தார். மரியா ஷரபோவா ஆட்டம் முடிந்த பிறகு அந்த இருக்கையில் அமர்ந்து ஆட்டத்தை ரசித்தவர்கள் யார் என்று தெரியுமா என்றார்கள். அவர் பெக்காம் என்றார். சச்சினை பற்றி கேட்ட போது ,சச்சின் யார் என்றே தெரியாது என்றார். இது பலரையும் அதிர்ச்சியடைய வைத்தது. சின்ன பிள்ளைகளுக்கு கூட தெரியும் சச்சினை ,ஷரபோவாவிற்கு எப்படி தெரியாமல் இருக்கும் என அவரது ரசிகர்கள் கோபத்தில் இறங்கினார்கள்.

ரயில்வே பட்ஜெட்டின் சிறப்பு ,ஆட்டோமேட்டிக் கதவுகள் !!


மோடி அரசின் முதல் ரயில்வே பட்ஜெட் 9 ஆம் தேதி அன்று தாக்கல் செய்யபடுகிறது . அதில் என்ன என்ன சிறப்பு அம்சங்கள் இருக்கும் என இப்போதே ஆராய தொடங்கி விட்டார்கள். ரயில் கட்டணம் மீண்டும் உயருமா, தங்கள் ஊருக்கு புது ரயில் அறிவிப்பு இருக்குமா என பல எதிர்ப்பார்ப்புகளுடன் மக்கள் இருக்கிறார்கள். இந்த பட்ஜெட்டில் பயணிகள் வசதிக்கும், பாதுகாப்பிற்க்கும் முன்னுரிமை கொடுக்கப்படும்.



அவர்களின் பாதுகாப்பை உயர்துவதற்கு ஆட்டோமேட்டிக் கதவுகள் ரயிலில் பொருத்தபடலாம் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது. பயணிகள் இரவில் தூங்கும் போது குளிராமல் இருப்பதற்கு ஒரு முறை மட்டும் பயன்படுத்தபடும் டிஸ்போசபில் போர்வைகளை தர இருக்கிறார்கள். இன்னும் பல அறிவிப்புகள் இருக்கலாம்.

அப்படியே இந்த ஒட்ட ரயில்களுக்கு பதில் அதிவேக புல்லட் ரயில்களை விடலாம்.

மீண்டும் உயருகிறதா பஸ் கட்டணம் : பயத்தில் மக்கள் !!

தமிழகத்தில் பஸ் கட்டணத்தை உயர்த்தும் முடிவில் தமிழக அரசு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழக அரசு பஸ் கட்டணத்தை கடந்த 2012 ஆண்டு உயர்த்தியது. திமுக அரசின் மிக மோசமான ஆட்சியால் அப்போது பஸ் கட்டணத்தை உயர்த்தும் நிலை அதிமுக அரசுக்கு வந்தது. அவர்களை விலையை உயர்த்தினார்கள் . ஆனால் அதற்கு பிறகு டீசல் விலை பல முறை உயர்ந்து விட்டது. அதனால் தமிழக போக்குவரத்து துறைக்கு ஆண்டுக்கு 5000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டு வருகிறது.



அதனால் அந்த நஷ்டத்தை போக்குவதற்கு பஸ் கட்டணத்தை உயர்த்துவது வழி என நினைகிறார்கள். அடுத்த தேர்தல் வருவதற்கு இன்னும் 2 ஆண்டுகள் இருப்பதால் இதுவே அதற்கான சரியான தருணம் என்று எண்ணுகிறது. இதற்கான அறிவிப்பு எப்போது வேண்டுமானால் வரலாம்.

மோடி அரசு ரயில் டிக்கெட் விலையை உயர்த்திய போது ஜெயலலிதா அதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார். ரயிலில் பயணம் செய்யும் ஏழைகளுக்கு இது பெரும் சுமையாக இருக்கும் என்றார். பஸ்ஸில் மட்டும் என்ன பணக்காரர்களா பயணம் செய்கிறார்கள்.

கட்டிட இடிபாடு மீட்பு பணியில் உதவிய நிஜ ஹீரோக்கள் !!


அடுத்த சூப்பர் ஸ்டார் யார் என்று ஒரு நாளிதழ் நடத்திய கருத்துகணிப்பாக அடித்து கொண்டு இருக்கிறது ஒரு கூட்டம். ஆனால் உண்மையான சூப்பர் ஸ்டார்கள் இங்கு உள்ளார்கள். கடந்த சனிக்கிழமை அன்று  11 மாடி இடிந்து விழுந்ததில் பலர் இடிபாடுகளில் சிக்கி கொண்டு உயிருக்காக போராடி வருகிறார்கள் . அவர்களை எப்படியாவது காப்பாற்றி விட வேண்டும் என்று ஒரு கூட்டம் போராடி வருகிறது . அவர்கள் தான் நம் வாழ்க்கையில் நிஜ ஹீரோக்கள். அங்கு இருந்த சிலரிடம் பேசிய போது,அவர்கள் கூறியது,



கிரன்மோரி என்பவர் பேரிடர் மீட்பு குழுவை சேர்ந்தவர், 6 மாதங்களுக்கு முன்பு தான் இதில் சேர்ந்தார். அங்கு இருந்தவர்களை உயிருடன் மீட்ட போது பெரும் மகிழ்ச்சியடைந்ததாக கூறினார்.கணேஷ் பாண்டியன் ,இவர் அம்பத்தூர் தீயணைப்பு துறையை சேர்ந்தவர். மக்களை காப்பாற்றாமல் அவர்களின் உடல்களை பார்க்கும் போது மிகவும் வேதனை அடைவதாக கூறுகிறார். மேகலா இவர் 108 ஆம்புலன்ஸ் உதவியாளர். இவர்கள் ஏற்றி சென்ற வண்டியில் இருந்த 3 பேரும் நலமாக உள்ளதால் இவர் மகிழ்ச்சியில் உள்ளார்.

சொந்தமோ,நண்பனோ யார் என்றே தெரியாமல் அவர்களை காப்பாற்ற துடிக்கும் இந்த ஹீரொக்களுக்கு தலை வணங்குகிறோம்.

ஜுனியர் விஜய்காந்துக்கு ஆதரவு கேட்ட கேப்டன் !!

தேர்தல் தோல்விக்கு பிறகு கட்சியை வலுப்படுதுவதற்காக கட்சி தொண்டர்களை உங்களுடன் நான் என்னும் நிகழ்ச்சியின் மூலம் சந்தித்து வருகிறார் கேப்டன். அதில் கலந்து கொள்ளும் ரசிககளுடன் புகைப்படம் எடுத்து கொள்கிறார். இந்த நிகழ்ச்சி சேலத்தில் நடந்தது .



அதில் பேசிய விஜய்காந்த் சினிமாவில் தனக்கு ஆதரவு அளித்தது போல் தனது மகனுக்கும் ஆதரவு அளிக்குமாறு கேப்டன் கேட்டு கொண்டார். அவரது இப்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார்,அது எப்போது ரிலீசிற்கு வருகிறது என்று தெரியவில்லை. எனவே ஜுனியர் விஜய்காந்த் ரெடி.

விஜய்காந்த் படங்களை கலாய்க்க முடியாமல் இருந்தவர்களுக்கு இந்த செய்தி இனிப்பு தான். விஜய்காந்தை கலாய்ப்பதற்க்கு என்றே பேஸ்புக்கில் பல பக்கங்கள் உள்ளன.


மீண்டும் சினிமாவில் ஜோடி சேர்ந்து நடிக்கிறார்கள் சூர்யாவும், ஜோதிகாவும் !!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஜோதிகா. நடிகர் சூர்யாவை காதல் திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு எந்த படங்களிளும் நடிக்காமல் ஒதுங்கியே இருந்தார். அவர் இப்போது புது படத்தில் நடிக்க போவதாக செய்திகள் வந்து உள்ளது. அதுவும் சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க போகிறார். பசங்க திரைபடத்தின் இயக்குனர் பாண்டிராஜ் 'இது நம்ம ஆளு ' என்னும் படத்தை இயக்கி வருகிறார் .இதில் சிம்பு,நயந்தாரா என பலர் நடிக்கிறார்கள்.



இதனை தொடர்ந்து பசங்க படத்தை போல குழந்தைகளை மையமாக வைத்து ஒரு படத்தை இயக்க உள்ளார். அதற்கான குழந்தைகளை தேர்வு செய்து விட்டார்கள் . அவர்களுக்கு அப்பா அம்மாவாக சூர்யாவும் ஜோதிகாவும் நடிக்க உள்ளார்கள். 

டிவிட்டரில் இணைந்தார் அரசியல்வாதி நடிகர் !!


தமிழகத்தை சேர்ந்த ஒரு பிரபலம் டிவிட்டரில் இணைந்து உள்ளது . அவர் வேரு யாரும் இல்லை நடிகர்,அரசியல்வாதி,பத்திரிக்கையாளர் என அனைவருக்கும் தெரிந்த சோ ராமசாமி ஆகும். இவர் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து உள்ளார். இவர் ஒரு அரசியல்வாதியும் கூட பிஜேபி கட்சியுடன் இருப்பார். எம்ஜிஆர், மூப்பனார், மோடி,அத்வானி, ஜெயலலிதா என எல்லா அரசியல்வாதிகளுடனும் நல்ல பழக்கம் உடையவர். 1999 முதல் 2005 வரை ஜனாதிபதியால் தேர்ந்தெடுக்கப்படும் 12 எம்.பி.களில் ஒருவராக இருந்து உள்ளார்.



துக்ளக் என்னும் பத்திரிக்கையை ஆரம்பித்து அதன் ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

ஆண்டுதோறும் சீனாவுக்கு இந்தியா ரூ.82 லட்சம் கொடுக்க வேண்டும் - இந்தியா - சீனா ஒப்பந்தம் !!



இந்தியா சீனா இடையே ஓடும் பிரம்மபுத்திரா நதியில் ஏற்படும் வெள்ளம் குறித்து அறிய இந்தியா சீனாவுக்கு 82 லட்சம் கொடுக்க வேண்டும் . இந்த ஒப்ப்ந்தத்தில் இந்திய துணை பிரதமர் ஹமீத் அன்சாரி நேற்று கையெழுத்திட்டார் .

அந்த ஒப்பந்தத்தின் படி , சீனா , இந்தியா இரு நாடுகளும் தங்கள் பகுதிகளில் ஓடும் பிரம்மபுத்திர நதியை ஆராய்ந்து அறிக்கைகளை பரஸ்பரமாக பகிர்ந்து கொள்ள வேண்டும் .

மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை இந்த பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் பலத்த சேதங்கள் ஏற்பட்டது . இதை தடுக்க வெள்ளம் குறித்த தகவல்களை பெற சீனாவுடன் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது . 2008 வரை இலவசமாக தகவல்களை வழங்கி வந்த சீனா , பின்னர் இதற்கென தனிக் கட்டணத்தை வசூலித்தனர் .

இனி மாவட்ட நீதிமன்றங்களில் தீர்ப்பு தமிழில் மட்டுமே எழுதப் பட வேண்டும் - மதுரை உயர்நீதி மன்றம் உத்தரவு !!



கடந்த 5/1/1994 இல் ஒரு சுற்றறிக்கையில் இனிமேல் தமிழகத்தில் நீதிமன்றங்களில் தமிழில் மட்டுமில்லாமல் ஆங்கிலத்திலும் தீர்ப்பு எழுதலாம் என ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது . இந்த சுற்றறிக்கையை ரத்து செய்யக் கோரி வக்கீல்கள் அனைவரும் உண்ணாவிரதம் , மனித சங்கிலி ஆகிய போராட்டாங்களை நடத்தினர் .

மேலும் வழக்கறிஞர்கள் ரத்தினம் , சோலை சுப்பிரமணியன் ஆகியவர்களும் மற்ற நீதிபதிகளும் இந்த சுற்றறிக்கை தமிழ் மொழி ஆட்சி மொழி சட்டத்திற்கு எதிரானது என்று மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர் .

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நேற்று தீர்ப்பை அளித்தனர் . அந்த தீர்ப்பில் , தமிழகத்தில் 1956 முதல் ஆட்சி மொழி சட்டத்தின்படி தமிழகத்தில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது . எனவே அந்த சுற்றறிக்கை தமிழ் ஆட்சி மொழி சட்டத்திற்கு எதிரானது , எனவே அந்த சுற்றறிக்கை ரத்து செய்வதாக அறிவித்தனர் . மேலும் தமிழை தாய்மொழியாக கொண்டிராதவர்கள் , இங்கே பணியாற்றும் போது , தமிழக அரசு நடத்தும் தமிழ்மொழி தேர்வில் குறிப்பிட்ட காலத்தில் தேர்ச்சி பெற  வேண்டும் என தீர்ப்பில் கூறியுள்ளனர் .

சாமானிய மக்களுக்கு அடுத்த ஆப்பு , சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு !!



கடந்த சில நாட்களுக்கு முன் பெட்ரோல் , டீசல் விலை உயர்ந்தது . இதனால் மக்கள் பெரும் கவலையில் இருந்தனர் . அவர்களது கவலை தீரும் முன்னே இப்போது அடுத்த கவலை அவர்களை தாக்கியுள்ளது . மானியம் இல்லாத சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டுள்ளது .

அது என்ன மானியம் இல்லாத சிலிண்டர் ??

ஒரு ஆண்டுக்கு 12 சிலிண்டர்கள் மானிய விலையில் கிடைக்கும் . அதற்கு மேல் சிலிண்டர்கள் அனைத்தும் மானியம் இல்லாத அதன் விலையிலேயே கிடைக்கும் .

இப்போது மானியம் இல்லாத சிலிண்டர் விலை 16.50 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது . இதன்படி இப்போதைய சிலிண்டரின் விலை ரூ.924 . மானியம் இல்லாத சிலிண்டர்களின் விலை கடந்த மாதம் 22 ரூபாய் குறைக்கப்பட்டது . இப்போது 16.5 ரூபாய் ஏற்றப்பட்டுள்ளது . 6 மாதங்களுக்கு பிறகு மானியம் இல்லாத சிலிண்டரின் விலை இப்போது தான் ஏற்றப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

ஈராக்கில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரால் சர்வதேச சந்தையில் பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வருவதால் இந்தியாவிலும் எரிபொருள் நிறுவனங்கள் விலையை உயர்த்தி வருகின்றனர் .

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது - வானிலை மையம் அறிவிப்பு !!



தமிழ்நாட்டி வட கிழக்கு மழை எதிர் பார்த்த அளவு விழாமல் பொய்த்த நிலையில் , விவசாயிகள் மற்றும் மக்கள் அனைவரும் தென்மேற்கு பருவமழை சராசரி அளவு பெய்ய வேண்டும் என்று நினைத்து கொண்டு இருந்தனர் . இந்நிலையில் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல இடங்களில் மழை பெய்து வருகிறது .

சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய அதிகாரி ஒருவர் கூறுகையில் , தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களில் இடியுடன் கூடிய மழை அல்லது மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது , இதே வானிலை நாளையும் தொடரலாம் என்று அவர் தெரிவித்தார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media