BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 25 September 2014

4000 ஆண்டுகள் பழமையான மரம்


சர்வ இ அபர்கோஹ் (sarv e-abarkooh) என்ற  சைப்ரஸ் மரம், அபர்கொஹ் யாத்       ( Abarkuh, Yazd) என்ற இடத்தில் , ஈரானில்  அமைந்துள்ளது. இது  ஒரு தேசிய இயற்கை நினைவுச்சின்னம் என, ஈரான் கலாச்சார பாரம்பரிய நிறுவனத்தால் பாதுகாக்கப்பட்டு வருகிறது. இந்த மரம்  18 மீட்டர் சுற்றளவு  25 மீட்டர் உயரம் கொண்டுள்ளது இதன் காரணமாக இது ஒரு முக்கிய சுற்றுலா மையமாக  உள்ளது. இந்த மரம்  4000 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாக  இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ஆசியாவிலேயே மிகவும் பழமையான மரமாக  இருக்கலாம் என கருதப்படுகிறது . உலகின் டாப் 10 பழமையான மரங்களை சீனா டெய்லி (China Daily) செய்தித்தாள்   தரவரிசைப்படுத்தியுள்ளது, இதில்  சர்வ  இ அபர்கோஹ்      (Sarv e Abarkooh), முக்கிய இடத்தை பிடித்துள்ளது.  உலகின் பழமையான மரம் மட்டும் அல்லாமல்  அது வலுவான மத சித்தாந்தங்களை எடுத்துரைப்பதோடு  அனைத்து ஈரானியர்கள் இதயத்தில் ஒரு சிறப்பான இடத்தை பெற்றுள்ளது. ( இந்த மரத்தை  ஜோரோஸ்ட்ரியரோடு ஒப்பிட்டு  கூறுவதும் உண்டு   )

மொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பா? வெங்கட்பிரபுவை கழுவி ஊற்றிய ஃபேஸ்புக் பதிவர்

மொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பாம். வரம்பு மீறி கிண்டல் செய்கிறார்களாம்.

ஆண்டாண்டு காலமா சினிமாக்காரங்க அவங்களோட படத்தப்பத்தி மீடியாவுல விடுற பீலாவ விடவா ரசிகர்கள் வரம்பு மீறிட்டாங்க. குப்பை படத்த எடுத்து வச்சிட்டு படம் அப்படி வந்திருக்கு இப்படி வந்திருக்குன்னு ஓவர் சீன் போட்டு மக்களை தியேட்டருக்கு வர வப்பாங்களாம். காசு குடுத்து 3 மணி நேரம் வேஸ்ட் பண்ணி படம் பாத்து ஏமாந்தவன் எதுவும் சொல்லக் கூடாதாம். எந்த ஊர் நியாயங்க இது?
 அண்னன் வெங்கட் பிரபு கொதிச்சி எழுந்து சில கேள்விகள் கேட்டிருக்கார். "நீங்கள் நல்ல ரசிகர்களாக இருந்திருந்திருந்தால், ‘தங்க மீன்கள்’ ஒரு மகத்தான வெற்றிப் படமாகி இருக்குமே?"
நீங்க யாருக்காக படம் எடுக்கறீங்களோ அத அவங்க ஏத்துக்கலன்னா அதுல‌ நிச்சயம் ஏதோ சரியில்லைன்னு தான் அர்த்தம். கமர்சியல் விஷயங்கள் இல்லாத படங்கள் நல்ல படங்கள்னு நீங்க ஒரு அளவுகோள் வச்சிகிட்டா அதுக்கு ரசிகர்கள் பொறுப்பல்ல!

ஐயா, நீங்க கமர்சியல் படமே எடுங்க. கலைப் படம் தான் வேணும்னு நாங்க கேக்கல. எதுவா இருந்தாலும் நல்லா இருந்தா கொண்டாடிகிட்டு தான் இருக்கோம். பொய் சொல்லி மக்களை தியேட்டருக்கு இழுத்தீங்கன்னா ஏமாந்தவன் திட்டத்தான் செய்வான்.

உங்களுக்கு சிறப்பா வர்றத எடுக்கறதும், சில நேரத்துல அது எடுபடாம போறதும் சரிதான். ஆனா நாங்க அப்படி எடுத்து வச்சிருக்கொம் இப்படி எடுத்து வச்சிருக்கோம்னு ஏன் ஓவர் பில்டப் கொடுத்து மக்கள ஏமாத்தறீங்க?
உங்க மனச தொட்டு சொல்லுங்க... எடுத்தவங்களுக்கே குப்பை படம், இது நாலு நாளைக்கு மேல ஓடதுன்னு தெரிஞ்சும் அந்த நாளு நாள்ல கலெக்ஷன் எடுத்துடனும்னுதான ஓவரா பில்டப் கொடுக்குறீங்க? பாக்குறவன் ஏமாந்தா நமக்கென்ன, படம் மோசம்னு ரீச் ஆகறதுகுள்ள வர்ற கலெக்ஷன பாத்துடனும்னுதான பொய் சொல்றீங்க?!
ப்ளாப் ஆன எத்தன படங்களுக்கு '100 நாள்' போஸ்டர் ஒட்டி இருக்கீங்க? "'திருமதி தமிழ்' வெற்றிகரமான 100வது நாள்" அப்டீன்னு போஸ்டர் பாத்து உங்களுக்கே கோவம் வரலன்னு சொல்லுங்க?! எவ்வளவு நாள் தாங்க நாங்களும் பொறுத்துப்போம்?

இதுக்கெல்லாம் ஒரு மபடி மேலே போய், ரிலீஸ் ஆகி, மொக்க படம்னு மக்கள் காறி துப்பிணதுக்கு அப்புறமும் அதுல நடிச்சவங்க, இசைச்சவங்க எல்லாரையும் கூட்டிட்டு வந்து படம் சூப்பர்‍னு டிவி ஷோ நடத்தி இன்னும் ஏமாந்தவன் எவனாச்சும் கிடைக்க மாட்டானான்னு தேடுற வேலைதான் இப்போ அதிகம் நடக்குது.
இப்போல்லாம் ஸ்டோரி டிஸ்கஷன்லயே "'ஃபேஸ் புக்ல' கழுவி கழுவி ஊத்துவாங்க, ஒழுங்க யோசிங்க"‍‍ ‍ன்னு பேசிக்கிறாங்களாம். மக்கள் கலாய்க்க ஆரம்பிச்சாத்தான் இவங்க ஓரளவுக்காவது திருந்துவாங்க!

அருள்குமார்
https://www.facebook.com/arul76?fref=ts

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun special news

பெண்கள் செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள் எவை? கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபடலாமா?
http://www.satrumun.net/2014/09/blog-post_801.html

மொக்கைப் படங்களை ரசிகர்கள் கிண்டல் செய்வது தப்பா? வெங்கட்பிரபுவை கழுவி ஊற்றிய ஃபேஸ்புக் பதிவர்
http://www.satrumun.net/2014/09/blog-post_242.html

ஹாரிபாட்டர் நடிகையின் நிர்வாண படங்கள் வெளியிடப் போகிறோம், இணையதளம் மிரட்டல்!!
http://www.satrumun.net/2014/09/news-about-emma-watson-a-hoax.html

மங்கள்யான் அனுப்பிய முதல் புகைப்படம் - வின்வெளியில் சாதனை
http://www.satrumun.net/2014/09/manglyan-sent-its-first-picture-from.html

தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வருகிறது, முதல் லுக் போஸ்டர் வந்தது
http://www.satrumun.net/2014/09/dhonis-to-life-to-become-movie.html

அமோக வரவேற்பை பெற்ற மோடியின் "மேக் இன் இந்தியா " !! மோடியின் பஞ்சுகளும் , தொழிலதிபரின் பாராட்டுகளும் !!
http://www.satrumun.net/2014/09/top-speeches-in-modi-make-in-india-campaign.html

பாஜக - சிவசேனா கூட்டனி டமால்! 25 ஆண்டு கால கூட்டணி பணால்
http://www.satrumun.net/2014/09/25-year-alliance-to-break.html

அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லருக்கு தயாராகுங்கள்
http://www.satrumun.net/2014/09/blog-post_491.html

சூப்பர் ஸ்டாரின் லிங்கா பட ஷூட்டிங் முடிந்தது
http://www.satrumun.net/2014/09/lingaa-shooting-over.html

இந்திய தொலைக்காட்சிகளில் வரும் டாப் 5 அழகிகள்
http://www.satrumun.net/2014/09/5-beautiful-actress-of-indian-television.html

சவூதி அரேபியாவில் கார் கதவை மூடாததால் டைவர்ஸ் கேட்ட கணவர் !!
http://www.satrumun.net/2014/09/divorce-for-not-closing-the-car-door.html

மேக் இன் இந்தியா' என்பது வெறும் கோஷமல்ல அது நாட்டின் தொலைநோக்குத் திட்டம்
http://www.satrumun.net/2014/09/modi-started-make-in-india-plan.html

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் இருந்து 5 பல்கலைக்கழகம் !!
http://www.satrumun.net/2014/09/5-indian-university-in-top-searched-in-google.html

துடைப்பத்தை வைத்து பள்ளியை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்
http://www.satrumun.net/2014/09/minister-cleans-school.html

தண்ணீர் இருக்கும் இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துவிட்டனர், அது எவ்வளவு தூரத்தில் இருக்கிறதாம் தெரியுமா?
http://www.satrumun.net/2014/09/water-found-in-distant-exoplanet.html

அரசு படிவங்களின் இனி நீங்கள் மதத்தை குறிப்பிட வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு !!
http://www.satrumun.net/2014/09/no-need-to-mention-your-religion-in-government-forms.html

தமிழின் பெருமை
http://www.satrumun.net/2014/09/blog-post_489.html

நவம்பர் 1 இல் வருகிறது ஆண்ட்ராய்ட் - எல் ..
http://www.satrumun.net/2014/09/amdroid-l-release-date-annonced.html

ஆள் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம், தடை செய்ய கோரிக்கை
http://www.satrumun.net/2014/09/blog-post_294.html

விண்வெளித் துறையில் புதிய வரலாறு
http://www.satrumun.net/2014/09/blog-post_809.html

40 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: மத்திய அரசு நடவடிக்கை
http://www.satrumun.net/2014/09/40.html

சிரியா: குர்து நகரை முற்றுகையிட்டுள்ள ஐ.எஸ். மீது அமெரிக்கக் கூட்டுப் படைகள் குண்டு மழை
http://www.satrumun.net/2014/09/blog-post_940.html

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி: முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கினார்
http://www.satrumun.net/2014/09/blog-post_580.html

அதிசய தென்னங்கன்று
http://www.satrumun.net/2014/09/blog-post_626.html

உங்கள் மொபைலின் மூலம் நிலநடுக்கத்தை கண்டு பிடிக்கலாம் !!
http://www.satrumun.net/2014/09/now-your-mobile-can-detect-earthquakes.html

ஆண்கள், பெண்கள் செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள் எவை? கர்ப்பமாக இருக்கும் போது உறவில் ஈடுபடலாமா?

குழந்தை பேறு என்ற ஒன்று இல்லாததால் ஆண்கள் செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டிய தருணங்கள் என்று எதுவும் இல்லை, மனதும் உடலும் ஒத்துழைத்தால் வயது ஒரு பிரச்சினையே இல்லை, செக்ஸ் உறவில் ஈடுபடலாம், ஆனால் பிரசவம் குழந்தை பேறு என்ற ஒன்று பெண்களுக்கு இருப்பதால் பெண்கள் சில காரனங்களுக்காக செக்ஸ் உறவை தவிர்க்க வேண்டியுள்ளது.

ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும் போது செக்ஸ் உறவில் ஈடுபடக் கூடாது என்று சொல்லப்படுவதுண்டு, ஆனால் இது முழுவதும் உண்மையல்ல, பொய்யுமல்ல.

கர்ப்பமாக இருக்கும் போதும் முதல் மூன்று மாதங்களை தவிர்த்து விட்டு 4ம் மாதத்திலிருந்து 7ம் மாதம் வரை மிதமான செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். பொதுவாக இந்திய பெண்கள் கர்ப்பமான பின் உடலுறவை வயிற்றில் உள்ள சிசுவுக்கு பிரச்சினை ஆகிவிடும் என்ற பயத்தால் தவிர்ப்பது உண்டு, இது தேவையற்ற பயம் என்றாலும் கர்ப்பிணி மனைவியைக் கட்டாயப்படுத்தி உறவு வைத்துக் கொண்டால், அவளது உடல் மற்றும் மனம் பாதிக்கப்படும்.

பிரசவத்திற்குப் பிறகு உடனே செக்ஸ் உறவை மேற்கொள்ள கூடாது, குறைந்த இரண்டு மாதங்கள் ஆனால் தான் உடலுறவுப் பாதையில் பிரசவத்தின் போது ஏற்பட்ட காயங்கள் ஆறியிருக்கும், மேலும் சுகப் பிரசவமா அல்லது சிசேரியனா என்று பார்த்து அதற்கேற்றார் போன்று தான் செக்ஸ் உறவில் ஈடுபட வேண்டும்.

சாதாரணமாக குழந்தைப் பேற்றுக்குப் பிறகு ஒரு பெண்ணின் கருப்பை சுருங்கி இயல்பு நிலையை அடைய ஆறு வாரங்களாகும். இது தோராயக் கணக்குதான். சில பெண்களுக்கு அவரவர் உடல்நிலையைப் பொறுத்து இந்தக் கணக்குக் கூடலாம். எனவே அப்பெண்ணின் உடல்நலம் சீராக இருப்பதாக மருத்துவர் உத்தரவாதம் கொடுத்த பிறகே உறவு கொள்ள வேண்டும்.

கணவனுக்குத் தொற்றும் வகையில் ஏதேனும் நோய் இருந்தால், அது முற்றிலும் குணமாகிற வரை மனைவி அவனுடன் உறவைத் தவிர்க்க வேண்டும்.

பிரசவத்திற்குப் பிறகு பெண்ணின் உடல்நலம் முற்றிலும் சரியாகி விட்ட போதிலும், அவளுக்கு உறவில் விருப்ப மில்லை என்று தெரிந்தால், அதற்குக் கட்டாயப் படுத்துவது கூடாது.

 உறவில் ஈடுபடும் போது உடலுறவுப் பாதையில் கடுமையான எரிச்சலோ, வலியோ இருந்தால், அதை உடனடியாகத் தவிர்ப்பது நல்லது.

 கருச் சிதைவுக்குள்ளானவர்களும், குறை மாதப் பிரசவத்துக்கு ஆளானவர்களும் மருத்துவரின் ஆலோசனையின் பேரிலேயே உறவைத் தொடங்க வேண்டும்.

மாதவிலக்கு நாட்களில் உறவு கொண்டால், கருத்தரிக்காது என்று பலரும் அந்நாளில் உறவு கொள்ள நினைப்பதுண்டு. அந்நாட்களில் உறவு கொள்வதன் மூலம் கணவன்-மனைவி இருவருக்குமே தொற்று நோய்கள் பரவ வாய்ப்புகள் அதிகம்.

பெண் நோய் வாய்ப்பட்டிருந்தால் அந்நாட்களில் உறவைத் தவிர்ப்பதே நல்லது.

கைக் குழந்தையிருக்கும் போது உறவில் ஈடுபட்டால் தாய்ப்பால் இல்லாமல் போய் விடும் என்று பல பெண்கள் அதைத் தவிர்ப்பதுண்டு. ஆனால் இது வெறும் மூட நம்பிக்கையே. குழந்தை பிறந்து, குறுகிய காலத்திலேயே உறவு கொண்டால் கடுமையான வலி இருக்கும் என்ற பயத்திலேயே அதைத் தவிர்க்கச் சொல்கிறார்கள்.

பிரசவித்த பெண்கள் தாய்ப்பால் கொடுப்பதே கருத்தடை முறை என்று நினைத்துக் கொண்டு, தைரியமாக உறவு கொள்வதுண்டு. ஆனால் அதை நூறு சதவிகிதம் நம்ப வேண்டாம். ஏதாவதொரு காரணத்தால் பால் வற்றி விட்டால், அந்தப் பெண் கருத்தரிக்க வாய்ப்புகள் உண்டு

அமோக வரவேற்பை பெற்ற மோடியின் " மேக் இன் இந்தியா " !! அந்த கூட்டத்தில் இடம்பெற்ற மோடியின் பஞ்சுகளும் , தொழிலதிபரின் பாராட்டுகளும் !!



இன்று மோடியின் " மேக் இன் இந்தியா "  கேம்பேய்ன் தொடங்கப்பட்டது . ( http://www.satrumun.net/2014/09/modi-started-make-in-india-plan.html )   அந்த கூட்டத்தில் பல உலக முதலீட்டாளர்கள் மற்றும் உயர்மட்ட வணிக தலைவர்கள் கலந்து கொண்டனர் . அவர்கள் அளித்த பேச்சுகளில் முக்கியமான சிலவற்றை கீழ்க் காணலாம் .


பிரதமர் நரேந்திர மோடி


நான் நல்லாட்சி பற்றி மட்டும் பேச மாட்டேன் . பயனுள்ள மற்றும் எளிதான ஆட்சி குறித்தும் பேசுவேன்

கிழக்கில் பாருங்கள் , மேற்கில் இணையுங்கள் .

நமக்கு ஹைவேஸ் தேவைப்படுகிறது . ஐ- வேஸும் தேவைப்படுகிறது .

இந்த உலகிற்கு நமது முகவரியை சொல்லத் தேவையில்லை , இங்கு ஒவ்வொரு முலையிலும் ஒரு வாஸ்-கோடா-காமா ஒழிந்துள்ளார் .

இந்தியாவில் இருந்து எந்த தொழிலதிபரும் வெளியேறுவதை நாங்கள் விரும்புவதில்லை .

FDI என்றால் FOERIGN DIRECT INVESTMENT இல்லை  FIRST DEVELOP INDIA

இது வெறும் கோஷம் அல்ல , ஒரு பணியை முடிக்க பல எண்ணங்களின் அமைப்பு .


முகேஷ் அம்பானி :

இந்தியா இது போன்ற தலைவரை பெற கொடுத்து வைத்து இருக்க வேண்டும் .அவரின் தலைமைப் பண்புகள் பல இந்தியர்களுக்கு ஊக்கம் அளிக்கிறது .

சைரஸ் மிஸ்ட்ரி :

டாட்டா குழுமம் பிரதமரின் இந்த முயற்சியை வரவேற்கிறது . இந்தியாவை சர்வதேச அளவில் போட்டி போட வைக்க இது தான் சரியான முயற்சி  .

சந்தா கோச்சார் :

உங்களின் இந்த திட்டம் எங்களை ஊக்கம் அடைய வைத்து இருக்கிறது . இது தான் இட்நியாவின் முன்னேற்றத்திற்கு ஊந்து சக்தியாக இருக்கும் .


இந்திய தொலைக்காட்சிகளில் வரும் டாப் 5 அழகிகள்

* ராகினி கண்ணா



* ஸ்வேதா திவாரி




* மஹி விஜ்




* ஜெனிபர் கிரோவர்



* சனாயா இராணி


சவூதி அரேபியாவில் கார் கதவை மூடாததால் டைவர்ஸ் கேட்ட கணவர் !!



எப்போவாது கார் கதவை மூடாமல் போனால் விவாகரத்து ஆகும் என்று நீங்கள் நினைத்தது உண்டா ?? ஆனால் இவ்வாறு உண்மையில் சவூதி அரேபியாவில் நடந்துள்ளது . தனது மனைவி காரின் கதவை சாத்த மறுத்ததால் விவாகரத்து கேட்டுள்ளார் கணவர் .

கணவன் மனைவி இருவரும் தனது குழந்தைகளுடன் சுற்றுலா சென்று வந்தனர் . வீட்டை அடைந்தவுடன் தனது குழந்தைகளை இறக்கி விட்ட பின் கார் கதவை மூடாமல் சென்று விட்டாள் மனைவி . இதனால் கணவன் தனது மனைவியை அழைத்து கதவை மூடும்படி கேட்டுக் கொண்டார் . ஆனால் மனைவியோ அவர் கதவின் அருகில் இருப்பதால் அவரை மூடச் சொன்னார் . அவர் முடியாது எனக் கூறவே விவாதம் ஆனது , விவாகரத்து வரைச் சென்றது . மனைவி தனது அம்மா வீட்டிற்குச் சென்று விட்டார் .

மற்றவர்கள் எவ்வளவு சமாதானப் படுத்தியும் இருவரும் சமாதானம் ஆவதாக இல்லை . அந்த பெண் இது போன்ற பொறுப்பில்லாத கணவனுடன் வாழ விருப்பம் இல்லை என்று தெரிவித்துவிட்டார் .

கோவம் மற்றும் சிறு காரணங்களுக்காக விவாகரத்து பெறுவது இஸ்லாமியத்தில் தடை செய்யப்பட்ட ஒன்றாகும் .

மேக் இன் இந்தியா' என்பது வெறும் கோஷமல்ல அது நாட்டின் தொலைநோக்குத் திட்டம்





பிரதமர் மோடி தன்னுடைய முதல் சுதந்திர தின விழா உரையின் போது அனைத்து உலக வர்த்தக சமூகத்தினரையும் இந்தியாவில் உற்பத்தி செய்ய அழைப்பு விடுத்து இருந்தார் . அவர்களுக்கு " வாருங்கள் , இந்தியாவில் உருவாக்குவோம் " என அழைப்பு விடுத்தார் . அதற்காக மேக் இன் இந்தியா என்னும் திட்டத்தை உருவாக்கினார். மேக் இன் இந்தியா' என்பது வெறும் கோஷமல்ல அது நாட்டின் தொலைநோக்குத் திட்டம்" என்றார்.

இந்த திட்டத்துக்கு தொழிலதிபர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது இந்தியாவுக்கு தேவையான மிக முக்கியமாவெறும் சலுகைகளால் மட்டுமே முதலீட்டை அதிகரித்துவிட முடியாது. முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பான சூழலை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதே இந்த திட்டம். மோடியின் இந்த பேச்சை பல தொழிலதிபர்கள் ஆர்வத்துடன் கேட்டனர்.

கூகுளில் அதிகம் தேடப்பட்ட பல்கலைக்கழகங்களில் இந்தியாவில் இருந்து 5 பல்கலைக்கழகம் !!



சில நாட்களுக்கு முன் டாப் பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியாவில் இருந்து எந்த ஒரு பல்கலைக்கழகமும் இடம்பெறவில்லை என வருந்திக் கொண்டு இருந்தோம் ( http://www.satrumun.net/2014/09/no-indian-universities-top-200-list.html ) . ஆனால் இப்போது கூகுளில் அதிகம் தேடப்படுகிற பல்கலைக்கழகங்களில் டாப் 20 இல் 5 பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளனர் .

கலிகட் பல்கலைக்கழகம் இந்தியாவில் இருந்து முதலாவதாக மற்றும் உலகில் நான்காவது இடத்தைப் பிடித்துள்ளது . நமது அண்ணா  பல்கலைக்கழகம் 5 வது இடத்தைப் பிடித்து இருக்கிறது . மும்பை  பல்கலைக்கழகம் 11 வது இடத்திலும் , முறையே ராஜஸ்தான்  பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலை  பல்கலைக்கழகம் 18 மற்றும் 20 ஆம் இடத்தை பிடித்துள்ளது .

இந்த பட்டியலில் முதல் இடத்தில் அமெரிக்காவின் பீனிஸ்  பல்கலைக்கழகம் இருக்கிறது .


தோனியின் வாழ்க்கை வரலாறு படமாக வருகிறது, முதல் லுக் போஸ்டர் வந்தது




இந்திய அணி கேப்டன் தோனியின் வாழ்க்கை படமாக வரவுள்ளது. படத்தின் பெயர் எம்.எஸ். தோனி ஆகும். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை அவரது மனைவி சாக்ஷி சிங் தோனி வெளியிட்டார். சுஷந் சிங் ராவத் என்பவர் இந்த படத்தில் தோனியாக நடிக்கிறார். படத்தின் பட்ஜெட் 45 கோடி ஆகும். இந்த படத்தின் முதல் லுக் போஸ்டரை டிவிட்டரில் வெளியிட்டவுடன் அதற்கு அதிக வரவேற்பு வந்தது. இப்போதே இந்த படத்தின் மீது எதிர்ப்பார்புகள் வர தொடங்கி விட்டன. தோனி வாழ்க்கையை வைத்து படம் என்பதால் இதன் மீது இந்தியா முழுவதும் எதிர்ப்பார்புகள் வரும். 

ஹாரிபாட்டர் நடிகையின் நிர்வாண படங்கள் வெளியிடப் போகிறோம் என்பது வெறும் கட்டுக்கதை !! வெட்டி விளம்பரம் தேடிய இணையதளம் !!



கடந்த சில வாரங்களாக ஹேக்கர்கள் நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார் . இந்நிலையில் ஹாரிபாட்டர் நடிகை எம்மா வாட்சன் அழுவது போன்று ஒரு படம் வைத்து யு ஆர் நெஸ்ட் !! ( நீ தான் அடுத்தது ) என்ற தலைப்பில் 4சான் இணையதளத்தில் ஒரு செய்தி வெளியிடப்பட்டது . இந்த செய்தி EmmaYouAreNext.com  என்ற இணையதளத்திற்கு எடுத்துச் சென்றது . ஏற்கனவே இந்த 4 சான் இணையதளத்தில் தான் பல நடிகைகளின் நிர்வாண படங்களை வெளியிட்டான் ஹேக்கர் .



அந்த EmmaYouAreNext.com  என்ற  இணையதளம் செவ்வாய்கிழமை இரவு வரை ஒரு கவுண்ட் டவுன் கடிகாரத்துடன் இருந்தது . ஆனால் இன்று rantic.com என்ற சைட்டுக்கு ரிடைரக்ட் செய்யப்பட்டது . அந்த இணையதளத்தில் அவ்வாறு வெளியிட்டது வெறும் கட்டுக்கதை என்றும் மக்களின் கவனத்தை பெறவே அவ்வாறு செய்யப்பட்டதாக கூறியது . மேலும் 4சான் இணையத்தை முடக்குவதற்காகவே அந்த திட்டம் என்றும் மேலும் நடிகைகளின் நிர்வாண படங்கள் வெளியாகாமல் தடுக்க 4சான் இணையதளம் தடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த தளத்தை முடக்க எங்களுடன் இணையுங்கள் என்றுஅந்த தளத்தில் செய்தி ஒன்று இருந்தது .


ஆனால் பல தகவல்களின்படி அந்த rantic.com  இணையதளமே வெறும் புரளியாக இருக்கும் என்று கருதப்படுகிறது .

ஐ.நா வின் பெண்கள் நல்லெண்ண தூதுவராக இருக்கும் எம்மா வாட்சன் இவ்வாறு புரளி கிளம்புவதற்கு முன் ஆண் பெண் சம உரிமைப் பற்றி நியுயார்க்கில் பேட்டி கொடுத்து இருந்தார் . 

துடைப்பத்தை வைத்து பள்ளியை சுத்தம் செய்த மத்திய அமைச்சர்




மத்திய மனிதவள் மேம்பாட்டு துறை அமைச்சராக இருப்பவர் ஸ்மிருதி இராணி. இவர் டெல்லியில் உள்ள ஒரு பள்ளிக்கு வருகை புரிந்துள்ளார். அப்போது அங்கு இருந்த துடைப்பத்தை கொண்டு பள்ளியை சுத்தம் செய்தார். சுத்தமான இந்தியா என்னும் இயக்கத்தை பிரபல படுத்துவதற்காக இந்த திட்டத்தை செய்தார். இந்த திட்டத்தில் சேருமாறு எல்லா மக்களையும் அறிவுறுத்தினார். 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மையானதாக மாற்ற வேண்டும் என்பதே இந்த  திட்டத்தின் நோக்கம் ஆகும்.

சுதந்திர தின உரையின் போது சுத்தமான இந்தியாவை உருவாக்குவது தனது கனவு என மோடி தெரிவித்து இருந்தார். அதற்காக தான் இந்த திட்டத்தை தொடங்க உள்ளார்கள். இதன் மூலம் இந்தியா ஒரு சிறந்த சுற்றுலா தளமாக மாறும் என மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை காந்தி பிறந்த நாளான அக்டோபர் 2 ஆம் தேதி அன்று இந்தியா முழுவதும் தொடங்கி வைக்க உள்ளார்.

தண்ணீர் இருக்கும் இன்னொரு கிரகத்தை கண்டுபிடித்துவிட்டனர் ஆய்வாளர்கள் !! அது இருக்கும் தூரத்தைக் கேட்டா ஷால் ஆகிடுவிங்க ..



நாசாவில் ஹப்பல் மற்றும் ஸ்பிட்சர் தொலை நோக்கிகள் பூமியில் இருந்து 729 டிரில்லியன் மைல் தொலைவில் நீர் இருக்கும் கிரகம் ஒன்றை கண்டுபிடித்துள்ளனர் .

நமது சூரிய குடும்பத்தின் வெளியே ஹட் - பி - 11 -பி (hat-p-11b) என்னும் கிரகத்தில் நீராவி இருப்பதை கண்டறிந்துள்ளனர் . இந்த கிரகம் நெப்டியுன் கிரகத்தின் அளவில் உள்ளது . இந்த கிரகத்தில் நீராவி கண்டுபிடிக்கப்பட்டதன் நீர் இருக்கும் சிறிய கோள்  என்ற பெருமையை பெறுகிறது .

இந்த ஹட் - பி - 11 -பி பூமியின் ஆரம் போன்று 4 மடங்கு . மேலும் எடை பூமியின் எடையை விட 26 மடங்கு கனமானது . இந்த கிரகத்தில் கடினமான பாறைகள் 90 சதவீதம் ஹைட்ரஜனால் சூழப்பட்டு இருக்கிறது . இவர்கள் ஒலிபரப்பி நிறமாலைக்காட்டியின் மூலம் தூரத்து கிரகத்தில் நீர் இருக்கிறதா இல்லையா என கண்டுபிடிக்கின்றனர் .


25 ஆண்டு கால கூட்டணி முடிவுக்கு வருகிறது




மஹாராஷ்டிரா மாநிலத்தில் பாஜக வும் சிவசேனா கட்சியும் 25 ஆண்டுகளாக கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட்டு வந்துள்ளார்கள். அந்த மாநிலத்தின் சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ளது. அதற்காக தொகுதி உடன்பாடு நடைபெற்று வந்தது. அதில் இழுபறி நீடித்து கொண்டே இருந்தது. கடந்த தேர்தலை விட இந்த முறை பாஜக அதிக தொகுதிகளை கேட்கிறது. இது தான் பிரச்சனைக்கு காரணம்.

சிவசேனா 150 தொகுதிகளிளும், பாஜக 131 தொகுதிகளிளும் போட்டியிட முடிவு செய்தன. மீதி உள்ள 7 தொகுதிகளை கூட்டணியில் உள்ள 4 கட்சிகளுக்கு ஒதுக்கின. அதில் 3 கட்சிகள் சமாதானம் அடையாததால் கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்தன. இப்போது தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. அதனால் கூட்டணி நிறைவடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

சூப்பர் ஸ்டாரின் லிங்கா பட ஷூட்டிங் முடிந்தது




கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இரட்டை வேடத்தில் நடித்து வரும் படம் லிங்கா. இதில் ரஜினிக்கு ஜோடியாக சோனாக்ஷி சின்ஹாவும், அனுஷ்காவும் நடிக்கிறார்கள். இதில் காமெடி வேடத்தில் சந்தானம் நடிக்கிறார். இதில் பல நட்சத்திரங்கள் நடிப்பதோடு , கே.எஸ். ரவிக்குமார் வேறு இயக்குவதால் படத்தின் மீது அதிக எதிர்ப்பார்ப்புகள் உள்ளது.

இந்த படத்தின் ஷூட்டிங் வேகமாக நடைபெற்று வந்தது. இறுதி கட்ட படப்பிடிப்பு நடந்து வந்தது. அதுவும் இப்போது முடிந்து விட்டது. அடுத்த மாத இறுதியில் பாடல்கள் வெளிவர உள்ளது. படம் சூப்பர் ஸ்டார் பிறந்த நாளான டிசம்பர் 12 ஆம் தேதி அன்று வெளிவர உள்ளது. 

அரசு படிவங்களின் இனி நீங்கள் மதத்தை குறிப்பிட வேண்டாம் - நீதிமன்றம் உத்தரவு !!



அடுத்த முறை நீங்கள் ஒரு அரசு படிவத்தை நிரப்பும் போது நீங்கள் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்று குறிப்பிட வேண்டாம் என மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது . ஓட்டளிக்கும் இயந்திரத்தில் இருப்பது போல இதிலும் நோட்டோ என்று ஒன்றை நீங்கள் தேர்வு செய்யலாம் .

 பொது நல வழக்காக போடப்பட்ட இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது . இந்த தீர்ப்பின்படி உயர் நீதிமன்றம் மாநில அரசுகளுக்கு , "  அவர்களின் மதத்தைக் குறிப்பிட கட்டாயப்படுத்தக் கூடாது " என உத்தரவிட்டுள்ளனர் . நமது சட்டப்படி மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ப எந்தவொரு மதத்தையும் பின்பற்றலாம் . அதற்கு சுதந்திரம் இருப்பது போல எந்தவொரு மதத்தையும் பின்பற்றாமல் இருக்கவும் சுதந்திரம் உண்டு .

எனவே அவர்கள் தான் எந்தவொரு மதத்தையும் சாரவில்லை என்று குறிப்பிட அவர்களுக்கு உரிமை இருக்கிறது . அவர்களை கட்டாயப்படுத்துவது சரி ஆகாது . எனவே உச்ச நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது .

தமிழின் பெருமை

எல்லா மொழிகளிலுமே  தொன்மையான மொழி எது என்று கேட்டால் அது தமிழாகத்தான் இருக்க வேண்டும்.அவ்வாறு காலத்தால் தொன்மையான மொழி தமிழ் மொழி , இதற்கு ஒரு சான்றும் உண்டு.அதாவது "கல் தோன்றி  மண்  தோன்றா காலத்தில் முன் தோன்றிய  மூத்த தமிழ் " என்று புலவன் படியுள்ளான். அப்படிப்பட்ட தொன்மை பொருந்திய தமிழின் பெருமையை  கூறுவதை இட்டு நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றும் எங்களின் தமிழ்  மொழிகளுக்கு வரி வடிவமும் ஒலி வடிவமும் இருப்பது அனைவரும் அறிந்த  ஒன்றே.தமிழை நாங்கள் முத்ததமிழ், அமுதம், சங்கத்தமிழ், செந்தமிழ்,கன்னித்தமிழ்  என்று எல்லாம் பலவாறு  அழைக்கலாம்.

"தமிழுக்கு அமுது என்று பெயர் அந்த தமிழ்  எங்கள் உயிருக்கு  நேர்" என்று கவிஞர்  பாரதிதாசன் பாடியுள்ளார்.அமுதம் என்றாலே அது ஒரு கிடைக்காத ஒன்று .அந்த அமுதத்தை எடுக்க தான் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்த ஒரு கதை இருக்கின்றதுறார் என்றால் தமிழின் பெருமையை உணந்து கொள்ளுங்களேன். 

மற்றும் அவர் அந்த தமிழை அப்படியே மட்டும் குறிப்பிடவில்லை அதை  எங்களுடைய உயிருக்கு சமன் என்றும் குறிப்பிடுகிறார்.அதாவது உடம்பு அழியுமே ஒழிய என்றைக்குமே உயிருக்கு அழிவில்லை என்று அந்த புலவன் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அந்த தமிழுக்கு." நான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது  எங்கும் காணோம் "   என்று பாரதியார்  குறிப்பிடுகின்றார்.அதாவது பாரதியார் எட்டு  திக்கும்  சென்றவர். அவர் பல  மொழிகளை கற்று அதிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர்.அப்படி  எல்லா மொழிகளும் கற்ருனந்த பாரதியார்  கூட கூறுகின்றார் இனிமையான பொழி தமிழ்  மொழி போல ஒரு மொழியும் இல்லை என்று,என்ன என்றால் எளிமையான மொழி தமிழ் மொழி.அப்படி பட்ட தமிழ்  மொழி இன்று கவலைப்படும் அளவுக்கு  மாறி வருகின்றதுதான்  சோகம்.

அப்படி பட்ட தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டியதன் அவசியம்  தான் என்ன எண்  சாண் உடம்புக்கு  தலையே பிரதானம் என்கிற மாதிரித்தான்  ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் பிரதானமாக இருக்கின்றது.பண்டைய காலத்தை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு தமிழ் மன்னனும்  தம்மோடு போர் தொடுத்து வந்த எதிரிகளை புறமுதுகிட்டு ஓட செய்த பெருமை அவர்களையே சாரும்.அப்படிப்பட்ட தமிழை தான்  நாங்கள்  வீரத்தமிழ் அச்சமிள்ளாத்தமிழ் என்று எல்லாம் கூறுகின்றோம்.

அடுத்து தமிழரின் பண்புகள் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான நல்ல பண்புகள் காணப்படுகின்றன.சங்ககாலத்தை எடுத்து நோக்கிணோமேயானால் அக்காலத்தில்  எழுந்த இலக்கியங்களை கொண்டு அக்காலத்து கலை கலாச்சாரங்களை நாங்கள்  அறியலாம்.அக்காலத்தில்  அகத்தினை இலக்கியங்கள், புறத்திணை இலக்கியங்கள் என்று பதினெட்டு  இலக்கியங்கள் தோன்றியதாக நம்பப்படுகின்றது.அகத்தினை  இலக்கியங்கள் என்றால் காதலை கூறும்  இலக்கியங்களாகும்.புறத்திணை இலக்கியங்கள் என்றால் விரத்தை பற்றி கூறும் இலக்கியங்களாகும்.

அக்காலத்தில் எழுந்த காதலானது  தெய்விகக்காதல் போன்றது.அவனுடைய காதல்களில் குற்றம் குறை காணப்பட வில்லை. என்றைக்குமே அவனுடைய காதல்  தோற்று  போனதும் இல்லை. அக்காலத்தில் எழுந்த நுல்களில் ஒன்று கூட தோற்றுப்போனதாக காணப்படவில்லை.மற்றும் உண்மையான அன்பை வெளிக்காட்டுவனவாக தான் இருக்கின்றது. அக்காலத்து காதல் புறத்திணை இலக்கியங்களை எடுத்து நோக்கினால் அக்காலத்தில் பெரும் பாலும் ஆண்கள் தான் போருக்கு செல்வார்கள்.  அவர்களுடைய தாய் போருக்கு செல்லும் மகனை அழைத்து  வீரத்திலகம்  இட்டு போருக்கு அனுப்பி வைப்பாள் .வெல் அல்லது செத்துமடி, என்று கூறித்தான் அவனை போருக்கு அனுப்பி வைப்பாள்.அவ்வாறு போர் செய்த போது அவனுடைய மகன் இறந்திருந்தால் போர் முடிந்ததும் அவள் தனது மகனை பார்க்கும் பொது எவ்வாறு இறந்தான்  என்று தான் பார்ப்பாள்.  நெஞ்சிலே வேல் குத்தி இருக்கிறதா அல்லது முதுகிலே வேல் குத்தி  இருக்கின்றதா என்றுதான் பாப்பால்.நெஞ்சிலே குத்தி இருந்தால் நேருக்கு நேர்  போர்  செய்து இறந்தான்  என்று பெருமை படுவார்கள். முதுகிலே வேல் குத்தி  இருந்தால் அவன் புறமுதுகிட்டு ஓடி வரும் போது வேல் பாய்ந்திருக்கு என்று நினைத்து அதே இடத்தில்  அந்த பிணத்தை போட்டு விட்டு இவன் எனக்கு மகனுமில்லை நான் அவனுக்கு தாயும்  இல்லை என்று திரும்பி வருவார்கள் அப்படி பட்ட வீரத்தமிழ் தாயின் குழந்தைகள் தான் நாங்கள்.

மற்றும் அவனுடைய கலை கலாச்சாரங்களும் கூட தனித்துவமான சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.இப்படிப்பட்ட எங்கள் தமிழின்  இன்றைய நிலைமை மிகமிக போசமானதாக போய்  கொண்டு செல்லுகின்றது.அதாவது தமிழன் தனது தாய் மொழியை பேசுவதற்கு தயன்குகின்றான். அவன் அந்நிய மொழியையே பேசுவதில் அக்கறை கொள்கிறான். ஏன் என்றால் தமிழ் மொழியை அவன் வியாபார மொழியாகவும் அந்நிய மொழியை அவன் நாகரீக மொழியாகவும்  கொள்கிறான். இன்று புலம் பெயர்ந்த நாடுகளை பார்ப்போமேயாயின் அங்குள்ள தமிழர்கள் தமிழர்களோட கதைக்கிறத்துக்கும் கூட தமிழ் மொழியை பயன்படுத்தாதது தான் கொடுமை.   ஏன் என்றால் ,அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது ,காரணம் தமிழ் மொழி தேவையில்லாத ஒரு மொழியாகவும், அதை படித்தால் தங்களுக்கு என்ன லாபம் என்றும் கேக்கும் சூழ்நிலை இன்று புலம்பெயந்த நாடுகளில்  தலை விரித்து ஆடுகின்றன. அப்படி தமிழ் மொழி வியாபார மொழியாக போய்  விட்டது தான் கரணம் . இப்படிப்பட்ட  தமிழ் மக்கள் உண்மையான தமிழ் தாய்
மற்றும்  இப்படிப்பட்ட தமிழ் மக்கள் உருவாவதற்கு அவர்களுடைய பெற்றோரும் காரணமாகின்றார்கள்.அதாவது தமது வீட்டிலையும் சரி தமது நண்பர்களோடும் சரி கதைக்கும் போது அவர்கள் அந்நிய பாசையிலேயே கதைக்கிறார்கள்.தமது பிள்ளைகள் தமக்குள்ள அந்நிய மொழி பேசும் போதும் கூட அவர்கள் அதை பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?

இப்படி பட்ட தமிழ் குடும்பங்களை எடுத்து நோக்கினால் அது பெரும்பாலும் படித்த குடும்பமாகத்தான் இருப்பது வெக்கப்பட வைக்கின்றது. இவர்கள்  வேறு  யாராவது தமிழில் கதைத்தல் அதை கிழ்த்தரமாக எண்ணுகிறார்கள்.இதனால் தமிழ் தெரிந்தவர்கள் கூட தமிழில் கதைப்பதற்கு  பின்னுக்கு நிப்பது தான்  என்னும் கேவலமாக உள்ளது.

மற்றும் தமிழ் மொழியுடன் பல்வேறுபட்ட நாட்டு மொழிகளும் சேர்ந்து தமிழ் மொழியை அழிக்கின்றது. அதாவது  ஆங்கிலம், சமஸ்கிரதம் ,,போர்த்துக்கல் ,ஒல்லாந்து மொழி ,மற்றும் வடமொழி ஏன்று எல்லா மொழிகளும் சேர்ந்து  தமிழ் மொழியை மழுங்கடிக்கின்றது.

இந்நிலை மாறவேண்டும்.இப்படி தமிழ் போகும் என்றால் தமிழனுக்காக போராடியதெல்லாம் வீனாக போய் விடும்.ஈழத்தில் தமிழனை கொன்று தமிழை அளிக்கின்றான் ,,புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மொழி  தெரியாது தமிழை அளிக்கின்றான்.என்றால் எமக்கும் மகிந்தவுக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழ வைக்கின்றது.

"தமிழன் என்று  சொல்லடா தலை நிமிந்து  நில்லடா"
எல்லா மொழிகளிலுமே  தொன்மையான மொழி எது என்று கேட்டால் அது தமிழாகத்தான் இருக்க வேண்டும்.அவ்வாறு காலத்தால் தொன்மையான மொழி தமிழ் மொழி , இதற்கு ஒரு சான்றும் உண்டு.அதாவது "கல் தோன்றி  மண்  தோன்றா காலத்தில் முன் தோன்றிய  மூத்த தமிழ் " என்று புலவன் படியுள்ளான். அப்படிப்பட்ட தொன்மை பொருந்திய தமிழின் பெருமையை  கூறுவதை இட்டு நான் பெரு மகிழ்ச்சி கொள்கிறேன். மற்றும் எங்களின் தமிழ்  மொழிகளுக்கு வரி வடிவமும் ஒலி வடிவமும் இருப்பது அனைவரும் அறிந்த  ஒன்றே.தமிழை நாங்கள் முத்ததமிழ், அமுதம், சங்கத்தமிழ், செந்தமிழ்,கன்னித்தமிழ்  என்று எல்லாம் பலவாறு  அழைக்கலாம்.
"தமிழுக்கு அமுது என்று பெயர் அந்த தமிழ்  எங்கள் உயிருக்கு  நேர்" என்று கவிஞர்  பாரதிதாசன் பாடியுள்ளார்.அமுதம் என்றாலே அது ஒரு கிடைக்காத ஒன்று .அந்த அமுதத்தை எடுக்க தான் அசுரர்களும் தேவர்களும் பாற்கடலை கடைந்த ஒரு கதை இருக்கின்றதுறார் என்றால் தமிழின் பெருமையை உணந்து கொள்ளுங்களேன். 

மற்றும் அவர் அந்த தமிழை அப்படியே மட்டும் குறிப்பிடவில்லை அதை  எங்களுடைய உயிருக்கு சமன் என்றும் குறிப்பிடுகிறார்.அதாவது உடம்பு அழியுமே ஒழிய என்றைக்குமே உயிருக்கு அழிவில்லை என்று அந்த புலவன் அன்றைக்கு சொன்னது இன்றைக்கு உயிரைக் கொடுத்து காப்பாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது அந்த தமிழுக்கு.

" நான் அறிந்த மொழிகளிலே தமிழ் மொழி போல் இனிதாவது  எங்கும் காணோம் "   என்று பாரதியார்  குறிப்பிடுகின்றார்.அதாவது பாரதியார் எட்டு  திக்கும்  சென்றவர். அவர் பல  மொழிகளை கற்று அதிலும் தேர்ச்சி பெற்ற ஒருவர்.அப்படி  எல்லா மொழிகளும் கற்ருனந்த பாரதியார்  கூட கூறுகின்றார் இனிமையான பொழி தமிழ்  மொழி போல ஒரு மொழியும் இல்லை என்று,என்ன என்றால் எளிமையான மொழி தமிழ் மொழி.அப்படி பட்ட தமிழ்  மொழி இன்று கவலைப்படும் அளவுக்கு  மாறி வருகின்றதுதான்  சோகம்.

அப்படி பட்ட தமிழ் மொழியை ஒவ்வொரு தமிழனும் கற்க வேண்டியதன் அவசியம்  தான் என்ன எண்  சாண் உடம்புக்கு  தலையே பிரதானம் என்கிற மாதிரித்தான்  ஒவ்வொரு தமிழனுக்கும் தமிழ் பிரதானமாக இருக்கின்றது.பண்டைய காலத்தை எடுத்து நோக்கினால் ஒவ்வொரு தமிழ் மன்னனும்  தம்மோடு போர் தொடுத்து வந்த எதிரிகளை புறமுதுகிட்டு ஓட செய்த பெருமை அவர்களையே சாரும்.அப்படிப்பட்ட தமிழை தான்  நாங்கள்  வீரத்தமிழ் அச்சமிள்ளாத்தமிழ் என்று எல்லாம் கூறுகின்றோம்.

அடுத்து தமிழரின் பண்புகள் தமிழர்களுக்கு என்று ஒரு தனித்துவமான நல்ல பண்புகள் காணப்படுகின்றன.சங்ககாலத்தை எடுத்து நோக்கிணோமேயானால் அக்காலத்தில்  எழுந்த இலக்கியங்களை கொண்டு அக்காலத்து கலை கலாச்சாரங்களை நாங்கள்  அறியலாம்.அக்காலத்தில்  அகத்தினை இலக்கியங்கள், புறத்திணை இலக்கியங்கள் என்று பதினெட்டு  இலக்கியங்கள் தோன்றியதாக நம்பப்படுகின்றது.அகத்தினை  இலக்கியங்கள் என்றால் காதலை கூறும்  இலக்கியங்களாகும்.புறத்திணை இலக்கியங்கள் என்றால் விரத்தை பற்றி கூறும் இலக்கியங்களாகும்.

அக்காலத்தில் எழுந்த காதலானது  தெய்விகக்காதல் போன்றது.அவனுடைய காதல்களில் குற்றம் குறை காணப்பட வில்லை. என்றைக்குமே அவனுடைய காதல்  தோற்று  போனதும் இல்லை. அக்காலத்தில் எழுந்த நுல்களில் ஒன்று கூட தோற்றுப்போனதாக காணப்படவில்லை.மற்றும் உண்மையான அன்பை வெளிக்காட்டுவனவாக தான் இருக்கின்றது. அக்காலத்து காதல் புறத்திணை இலக்கியங்களை எடுத்து நோக்கினால் அக்காலத்தில் பெரும் பாலும் ஆண்கள் தான் போருக்கு செல்வார்கள்.  அவர்களுடைய தாய் போருக்கு செல்லும் மகனை அழைத்து  வீரத்திலகம்  இட்டு போருக்கு அனுப்பி வைப்பாள் .வெல் அல்லது செத்துமடி, என்று கூறித்தான் அவனை போருக்கு அனுப்பி வைப்பாள். 

அவ்வாறு போர் செய்த போது அவனுடைய மகன் இறந்திருந்தால் போர் முடிந்ததும் அவள் தனது மகனை பார்க்கும் பொது எவ்வாறு இறந்தான்  என்று தான் பார்ப்பாள்.  நெஞ்சிலே வேல் குத்தி இருக்கிறதா அல்லது முதுகிலே வேல் குத்தி  இருக்கின்றதா என்றுதான் பாப்பால்.நெஞ்சிலே குத்தி இருந்தால் நேருக்கு நேர்  போர்  செய்து இறந்தான்  என்று பெருமை படுவார்கள். முதுகிலே வேல் குத்தி  இருந்தால் அவன் புறமுதுகிட்டு ஓடி வரும் போது வேல் பாய்ந்திருக்கு என்று நினைத்து அதே இடத்தில்  அந்த பிணத்தை போட்டு விட்டு இவன் எனக்கு மகனுமில்லை நான் அவனுக்கு தாயும்  இல்லை என்று திரும்பி வருவார்கள் அப்படி பட்ட வீரத்தமிழ் தாயின் குழந்தைகள் தான் நாங்கள்.

மற்றும் அவனுடைய கலை கலாச்சாரங்களும் கூட தனித்துவமான சில பண்புகளை தன்னகத்தே கொண்டிருக்கின்றது.இப்படிப்பட்ட எங்கள் தமிழின்  இன்றைய நிலைமை மிகமிக போசமானதாக போய்  கொண்டு செல்லுகின்றது.அதாவது தமிழன் தனது தாய் மொழியை பேசுவதற்கு தயன்குகின்றான். அவன் அந்நிய மொழியையே பேசுவதில் அக்கறை கொள்கிறான். ஏன் என்றால் தமிழ் மொழியை அவன் வியாபார மொழியாகவும் அந்நிய மொழியை அவன் நாகரீக மொழியாகவும்  கொள்கிறான். 

இன்று புலம் பெயர்ந்த நாடுகளை பார்ப்போமேயாயின் அங்குள்ள தமிழர்கள் தமிழர்களோட கதைக்கிறத்துக்கும் கூட தமிழ் மொழியை பயன்படுத்தாதது தான் கொடுமை.   ஏன் என்றால் ,அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது ,காரணம் தமிழ் மொழி தேவையில்லாத ஒரு மொழியாகவும், அதை படித்தால் தங்களுக்கு என்ன லாபம் என்றும் கேக்கும் சூழ்நிலை இன்று புலம்பெயந்த நாடுகளில்  தலை விரித்து ஆடுகின்றன. அப்படி தமிழ் மொழி வியாபார மொழியாக போய்  விட்டது தான் கரணம் . 

மற்றும்  இப்படிப்பட்ட தமிழ் மக்கள் உருவாவதற்கு அவர்களுடைய பெற்றோரும் காரணமாகின்றார்கள்.அதாவது தமது வீட்டிலையும் சரி தமது நண்பர்களோடும் சரி கதைக்கும் போது அவர்கள் அந்நிய பாசையிலேயே கதைக்கிறார்கள்.தமது பிள்ளைகள் தமக்குள்ள அந்நிய மொழி பேசும் போதும் கூட அவர்கள் அதை பார்த்து ரசிக்கிறார்கள் என்றால் என்னவென்று சொல்ல?

இப்படி பட்ட தமிழ் குடும்பங்களை எடுத்து நோக்கினால் அது பெரும்பாலும் படித்த குடும்பமாகத்தான் இருப்பது வெக்கப்பட வைக்கின்றது. இவர்கள்  வேறு  யாராவது தமிழில் கதைத்தல் அதை கிழ்த்தரமாக எண்ணுகிறார்கள்.இதனால் தமிழ் தெரிந்தவர்கள் கூட தமிழில் கதைப்பதற்கு  பின்னுக்கு நிப்பது தான்  என்னும் கேவலமாக உள்ளது.

மற்றும் தமிழ் மொழியுடன் பல்வேறுபட்ட நாட்டு மொழிகளும் சேர்ந்து தமிழ் மொழியை அழிக்கின்றது. அதாவது  ஆங்கிலம் ,,சமஸ்கிரதம் ,,போர்த்துக்கல் ,ஒல்லாந்து மொழி ,மற்றும் வடமொழி ஏன்று எல்லா மொழிகளும் சேர்ந்து  தமிழ் மொழியை மழுங்கடிக்கின்றது.

இந்நிலை மாறவேண்டும்.இப்படி தமிழ் போகும் என்றால் தமிழனுக்காக போராடியதெல்லாம் வீனாக போய் விடும்.ஈழத்தில் தமிழனை கொன்று தமிழை அளிக்கின்றான் ,,புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மொழி  தெரியாது தமிழை அளிக்கின்றான்.என்றால் எமக்கும் மகிந்தவுக்கும் என்ன வித்தியாசம் என்று கேள்வி எழ வைக்கின்றது.

"தமிழன் என்று  சொல்லடா தலை நிமிந்து  நில்லடா"

நவம்பர் 1 இல் வருகிறது ஆண்ட்ராய்ட் - எல் ..



கூகுள் நிறுவனம் ஆண்ட்ராய்டின் அடுத்த வெர்ஷனை வெளியிட முடிவு செய்துள்ளது . இப்போதைக்கு அதனை ஆண்ட்ராய்ட் - எல் என்று அழைத்து வருகின்றனர் . அதன் பெயர் என்னவென்று நமக்கு தெரியவில்லை என்றாலும் அந்த தொகுப்பு வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது .

கூகுள் நிறுவனம் தனது நெக்சஸ் 6 மற்றும் டேப்ளட் நெக்சஸ் 9 ஆகிய மொபைல்களை அக்டோபர் மாதம் நடுவில் வெளியிட உள்ளது . இந்த மொபைல்களில் ஆண்ட்ராய்ட் - எல் தான் இடம் பெற்று இருக்கும் . ஆனால் ஆண்ட்ராய்ட் - எல் நவம்பர் 1 ஆம் தேதி தான் வெளிவருகிறது என்பதால் அதுவரை இந்த மொபைல்கள் விற்பனைக்கு வராது என்று எதிர்பார்க்கப்படுகிறது .

சில புதிய மொபைல்களுக்கு இந்த அப்டேட்கள் கிடைக்கும் . மோட்டோ எஸ் , மோட்டோ ஜி ஆகிய மொபைலகளுக்கு கண்டிப்பாக கிடைக்கும் . கூகுளின் ஆண்ட்ராய்ட் - ஒன் மொபைல்களுக்கும் இந்த அப்டேட் கிடைக்கும் என கூகுள் அறிவித்துள்ளது .

மங்கள்யான் அனுப்பிய முதல் புகைப்படம்

 
செவ்வாய் கிரகத்தி சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட மங்கள்யான் அதில் பொருத்தப்பட்ட கலர் கேமராவை பயன்படுத்தி படங்கள் எடுக்க ஆரம்பித்துள்ளது, செவ்வாய்கிரகத்தின் மேற்பரப்பை படம் எடுத்து முதலில் 10 படங்களாஇ வியாழக்கிழமை காலை அனுப்பியுள்ளது.

இந்தப் புகைப்படங்கள் முதலில் பிரதமர் பார்வைக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இஸ்ரோவின் ஃபேஸ்புக் பக்கமான ISRO's Mars Orbiter Mission இல் பகிரப்பட்டுள்ளது

அட்டகாசமான ஆக்ஷன் த்ரில்லருக்கு தயாராகுங்கள்

 
Antoine Fuqua என்ற பெயர் ஆக்ஷன் பட ப்ரியர்களின் மத்தியில் பிரபலமானது. இவர் இயக்கிய அனைத்துப் படங்களுமே ரசிக்கத்தக்கவை. 
 
 தி ரீப்ளேஸ்மெண்ட் கில்லர்ஸ், ட்ரெய்னிங் டே, டியர்ஸ் ஆஃப் சன், கிங் ஆர்தர், ஷுட்டர், ப்ரூக்ளின் பைனஸ்ட்... எதுவுமே மோசமானவை அல்ல. கடைசியாக இவரது இயக்கத்தில் வெளியானது, ஒலிம்பஸ் ஹேஸ் ஃபாலன்.
 
இந்த வாரம் இவரது தி ஈகுவலைசர் (The Equalizer) திரைப்படம் வெளியாகிறது. படத்தில் நடித்திருப்பவர் டென்சல் வாஷிங்டன். இவர்கள் இணைந்து உருவாக்கிய ட்ரெய்னிங் டே திரைப்படம் இன்றும் கோடம்பாக்க ஜாம்பவான்களால் நினைவுகூரப்படும் அளவுக்கு முக்கியமானது.

அப்படத்தில் வரும் சில காட்சிகளை இயக்குனர் சரண் தனது ஜே.ஜே. சிலகுறிப்புகள் படத்தில் பயன்படுத்தியிருப்பார் (பாலியல் பலாத்காரத்துக்கு உள்படும் தாதாவின் தங்கை பூஜாவை மாதவன் காப்பாற்றுவது. தாதா மாதவனை பாத்ரூமில் வைத்து கொலை செய்ய முற்படுகையில் தனது தங்கை பூஜாவின் புகைப்படம் மாதவனிடம் இருப்பதைப் பார்த்து பூஜாவிடம் விசாரிப்பது என அந்த எபிசோட் முழுக்க ட்ரெய்னிங் டே படத்தில் வருவதுதான்).
 
தி ஈகுவலைசர் ஆக்ஷன் பட ப்ரியர்களுக்கு செம விருந்தாக இருக்கும் என்பது நிச்சயம். வரும் வெள்ளிக்கிழமை யுஎஸ்ஸில் வெளியாகும் இப்படம் அக்டோபர் 3 -ஆம் தேதி இந்தியாவில் வெளியாகிறது.

ஆள் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம், தடை செய்ய கோரிக்கை

இவ்வளவு நாள் எந்த சத்தமும் இல்லாமல் இருக்கே என்று ஆச்சரியப்பட்ட நிலையில், தமிழ் மக்கள் கட்சி என்ற லெட்டர் பேட் கட்சியிடமிருந்து கண்டன அறிக்கை வந்துள்ளது.
என்னவாம்?
விதார்த் நடித்துள்ள ஆள் படம் இந்தியில் வெளியான அமீர் படத்தின் தழுவல். வெளிநாட்டிலிருந்து இந்தியா வரும் முஸ்லீம் இளைஞனின் தாய், தங்கையை பிணை கைதியாக வைத்து, அவனை சில தீவிரவாத செயல்களுக்கு உட்படுத்துகிறது ஓர் தீவிரவாத இயக்கம்.
இந்தப் படத்துக்கு மலேசியா மற்றும் இஸ்லாமிய நாடுகள் பல தடை விதித்தன. இந்நிலையில் தமிழகத்திலும் படத்தை தடை செய்ய வேண்டும் என்று மேற்கண்ட லெட்டர் பேட் கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. இரண்டு நாள் போனால் படம் மொத்த தியேட்டரிலிருந்தும் தூக்கப்பட்டுவிடும். அவசரப்பட்டு ஒரு அறிக்கையை வீணடித்துவிட்டனர்.
மேலும், இதுவே ஒரு மாஸ் நடிகரின் படமாக இருந்திருந்தால்...?
 வேறென்ன... ஆள் இன்னொரு விஸ்வரூபமாகியிருக்கும்.

விண்வெளித் துறையில் புதிய வரலாறு

செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாகச் செலுத்தப்பட்டதன் மூலம் விண்வெளித் துறையில் இந்திய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்துள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம் தெரிவித்தார். பெங்களூரு பீன்யாவில் அமைந்துள்ள விண்வெளி தரைக் கட்டுப்பாட்டு மையத்தில், மங்கள்யான் விண்கலத்தை செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் செலுத்தும் பணியை புதன்கிழமை நேரில் பார்வையிட்ட பிறகு, அங்கு கூடியிருந்த விஞ்ஞானிகளிடையே அவர் பேசியது:


செவ்வாய் கிரக சுற்றுப் பாதையில் மங்கள்யான் விண்கலத்தை வெற்றிகரமாகச் செலுத்திய இந்திய விண்வெளி விஞ்ஞானிகளை மனதாரப் பாராட்டுகிறேன். முதல் முயற்சியிலேயே செவ்வாய் கிரகத்தின் சுற்றுப் பாதையில் விண்கலத்தைச் செலுத்தியதன் மூலம் இந்திய விஞ்ஞானிகள் புதிய வரலாறு படைத்துள்ளனர்.

உலக அளவில் முதல் முயற்சியிலேயே விண்கலத்தை சுற்றுப்பாதைக்குள் செலுத்திய நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றுள்ளது. மங்கள்யான் விண்கலத் திட்டம், பெங்களூரு முதல் புவனேசுவரம் வரையிலும், ஃபரீதாபாத் முதல் ராஜ்கோட் வரையிலும் ஒட்டுமொத்த இந்தியாவின் சொந்த முயற்சியாகும். மங்கள்யான் விண்கலத்தின் வெற்றி அல்லது தோல்வியைப் பற்றி கவலைப்படாமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க முடிவு செய்தேன். இஸ்ரோ விஞ்ஞானிகளின் சாதனை போற்றுதலுக்குரியது. மேலும், பல புதிய இலக்குகள் கொண்ட சவால்களை வகுத்துக் கொண்டு விஞ்ஞானிகள் பணியாற்ற வேண்டும். அந்தச் சவால்களையும் இந்திய விஞ்ஞானிகள் சாதித்துக் காட்டுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

சாதிக்க முடியாததையும் சாதித்துக் காட்டும் திறமையை இஸ்ரோ விஞ்ஞானிகள் கொண்டுள்ளனர். நவீன இந்தியா, உலகின் குருவாக பங்களிக்க நாம் தொடர்ந்து பாடுபட வேண்டும். விண்வெளித் திட்டங்களின் வெற்றி, பல்வேறு துறைகளில் புது வகையான பயன்பாடுகளுக்கு வழிவகுக்கிறது. இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் முயற்சிகள், பொருளாதாரத்தை பலப்படுத்தவும், நமது வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவியாக உள்ளன. மங்கள்யான் வெற்றி, பல மங்களகரமான விளைவுகளை இந்தியாவில் ஏற்படுத்தவுள்ளது. ஆயிரம் மடங்கு உயர்ந்த வெற்றி: கிரிக்கெட் போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்றால், அதை நமது நாடே கொண்டாடி மகிழ்கிறது. கிரிக்கெட் வெற்றியைக் காட்டிலும், மங்கள்யான் விண்கலத்தின் வெற்றி ஆயிரம் மடங்கு உயர்வானது. நமது இந்திய விண்வெளி விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியர்கள் அனைவரும் கொண்டாடி மகிழ வேண்டும். விஞ்ஞானிகளின் சாதனையை இந்தியா முழுவதும் கொண்டாட வேண்டும். பள்ளி, கல்லூரிகளில் விஞ்ஞானிகளின் சாதனையை கரவொலி எழுப்பிப் பாராட்ட வேண்டும் என்றார் அவர்.

40 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: மத்திய அரசு நடவடிக்கை

மத்திய அரசுப் பணியில் உள்ள சுமார் 40 ஐஏஎஸ் அதிகாரிகளை மத்திய அரசு இடமாற்றம் செய்துள்ளது. மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியும் உள் துறை அமைச்சக இணைச் செயலருமான ஐ.எஸ். சஹல் இடமாற்றம் செய்யப்பட்டு, பெண்கள், குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகத்தின் இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.பஞ்சாபைச் சேர்ந்த திலீப் குமார் உள்துறை அமைச்சக இணைச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஐஏஎஸ் அதிகாரிகள் ஹிதேஷ் குமார் எஸ். மக்வானா, ரஜித் புன்ஹனி, கோபால் கிருஷ்ண துவிவேதி ஆகியோரும் உள்துறை அமைச்சக இணைச் செயலர்களாக நியமிக்கப்பட்டதாக மத்திய மனிதவள மற்றும் பயிற்சித்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல் மத்திய அரசின் பல்வேறு துறைகளில் சுமார் 40 ஐஏஏஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிரியா: குர்து நகரை முற்றுகையிட்டுள்ள ஐ.எஸ். மீது அமெரிக்கக் கூட்டுப் படைகள் குண்டு மழை

சிரியாவில் குர்து நகரம் ஒன்றை முற்றுகையிட்டுள்ள இஸ்லாமிய தேச (ஐ.எஸ்.) பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தலைமையிலான கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதல் நிகழ்த்தின. செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முழுவதும் நடைபெற்ற இந்தத் தாக்குதலில், சவூதி அரேபியா, பஹ்ரைன், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், ஜோர்டான் ஆகிய நாடுகளும் பங்கேற்றன. ஐ.எஸ். பயங்கரவாதிகளின் முற்றுகை காரணமாக 1.3 லட்சத்தும் மேற்பட்டோர் சிரியாவிலிருந்து வெளியேறி, துருக்கிக்குள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

இந்நிலையில், அப்பகுதிகளில் ஐ.எஸ்.ஸýக்கு பின்னடைவை ஏற்படுத்தும் வகையில் கூட்டுப் படையினர் இத்தாக்குதலை நிகழ்த்தியுள்ளனர்.
பயங்கரவாதிகளுக்கு எதிராக போர் விமானங்கள் மூலமும், ஏவுகணைகள் மூலமும் கூட்டுப் படையினர் செவ்வாய்க்கிழமை மேற்கொண்ட தாக்குதலில் ஐ.எஸ்., அல்-காய்தா அமைப்புகளைச் சேர்ந்த 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலை நாடுகளில் தாக்குதல் நிகழ்த்த திட்டம் தீட்டியுள்ள பயங்கரவாதிகளைக் குறிவைத்து இந்தத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க அரசு கூறியுள்ளது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் ஒபாமா கூறுகையில், ""பயங்கரவாதிகளை எதிர்ப்பதில் உலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்பதை இந்தத் தாக்குதல் உணர்த்துகிறது'' என்று தெரிவித்தார்.

முக்கிய அல்-காய்தா தலைவர் சாவு?

பெய்ரூட், செப். 24: சிரியாவில் அமெரிக்கா மற்றும் அரபு நாடுகள் மேற்கொண்டு வரும் தாக்குதலில் அல்-காய்தாவின் முக்கிய தலைவர் யூசஃப் அல்-துருக்கி (47) கொல்லப்பட்டதாக பார்வையாளர்கள் தெரிவித்துள்ளனர். சிரியாவின் அலெப்போ மாகாணத்தில் செவ்வாய்க்கிழமை நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 50 பயங்கரவாதிகள் பலியானதாகவும், அவர்களில் யூசஃப் அல்-துருக்கியும் ஒருவர் எனவும் அவர்கள் தெரிவித்தனர். மேலை நாடுகளில் பயங்கரவாதத் தாக்குதல் நிகழ்த்த அவர் திட்டமிட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டி: முதல்வர் ஜெயலலிதா நிதியுதவி வழங்கினார்


ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏழு விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு ரூ.7.63 லட்சம் நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இது குறித்து தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:

ஆப்பிரிக்க நாடான துனீஷியாவில் 2014-ஆம் ஆண்டு ஜூன் 12 முதல் 19 வரை நடைபெற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான சர்வதேச தடகளப் போட்டிகளில் பங்கேற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஏழு பாராலிம்பிக் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் தலா ரூ.30 ஆயிரம் ஏற்கெனவே வழங்கப்பட்டது. இந்த விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் தங்களது இருவழி விமானப் பயணக் கட்டணம், நுழைவுக் கட்டணம், விசா கட்டணம், காப்பீட்டுக் கட்டணம், கையாளுதல் கட்டணம் போன்ற செலவினங்களுக்காக தலா ரூ.1.39 லட்சம் செலவு செய்துள்ளதாகவும், தங்களுக்கு மொத்த தொகையை வழங்க வேண்டும் எனவும் முதல்வர் ஜெயலலிதாவிடம் கோரிக்கை விடுத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று, ஒவ்வொருவருக்கும் தலா ரூ.1 லட்சத்து 9 ஆயிரம் வழங்க முதல்வர் உத்தரவிட்டார்.

அதன்படி, விளையாட்டுப் போட்டியில் பங்கேற்ற எஸ். குருநாதன், பி. ராசாத்தி, சி. பூங்கொடி, கே.ஜே. அந்தோணி, கே. சாந்தமுத்துவேல், பி. படைத்தலைவன், எஸ். திருமலைக்குமார் ஆகிய ஏழு பேருக்கு நிதியுதவியை முதல்வர் ஜெயலலிதா அளித்தார்.

இந்த நிகழ்ச்சியில் விளையாட்டு, இளைஞர் நலத் துறை அமைச்சர் எஸ்.
சுந்தரராஜ், தலைமைச் செயலாளர் மோகன் வர்கீஸ் சுங்கத், அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன், இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை முதன்மைச் செயலாளர் முகமது நசிமுதின், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர் வி.கே.ஜெயக்கொடி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அதிசய தென்னங்கன்று


கன்னியாகுமரி அருகே 6 மாதமான தென்னங்கன்றில் இருந்து பூ வெளிவந்த அதிசய நிகழ்வை பொதுமக்கள் பார்த்துச்சென்றனர். கன்னியாகுமரியை அடுத்த நாடான்குளம் ராமன்
புதூரைச் சேர்ந்தவர் எஸ். பெருமாள் (32). தச்சுத் தொழிலாளியான இவரது வீட்டுத் தோட்டத்தில் 5 தென்னை மரங்கள் உள்ளன.

இந்நிலையில், ஒரு மரத்தில் விளைந்த 4 தேங்காய்களை 6 மாதங்களுக்கு முன்னர் மண்ணில் புதைத்துவைத்தார். 4 கன்றுகளும் முளைவிட்டு வளர்ந்து வருகின்றன. இவற்றில் ஒரு தென்னங்கன்றிலிருந்து பூ வெளிவந்துள்ளது. இந்த அதிசய நிகழ்வை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.

உங்கள் மொபைலின் மூலம் நிலநடுக்கத்தை கண்டு பிடிக்கலாம் !!



நிலநடுக்கத்தை தடுக்க வழி இல்லை என்பதால் அது வருவதற்கு முன்னர் கண்டு பிடித்தால் உயிர் இழப்பு ஏற்படுவதற்கு முன் சிறிதளவு காப்பாற்றிவிடலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர் . அதனால் தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்படுவதை கணிக்க இயந்திரங்களை உருவாக்கி வருகின்றனர் .

அது போல குஜராத் ஐஐடி மாணவர்கள் உங்கள் மொபைல் மூலம் நிலநடுக்கம் ஏற்படுவதை கண்டு பிடிக்க சென்சார் ஒன்றை உருவாக்கியுள்ளனர் . இந்த சென்சாரை உங்கள் மொபைலுடன் இணைத்து சி.எஸ்.என் இணையதளத்தில் இருந்து ஒரு அப்ளிகேஷன் ஒன்றை டவுன்லோட் செய்தால் போதுமானது . இந்த சென்சார் நிலத்தில் ஏற்படும் அதிர்வுகளை கண்காணித்து அந்த இணையதளத்திற்கு அப்லோட் செய்யும் .


இந்த சென்சார்கள்  நில நடுக்கத்தின் இடத்தை மட்டும் கண்டுபிடிக்காமல் , அந்த மொபைலை பயன்படுத்துபவர் எங்கே இருக்கிறார் என்பதை கண்டுபிடித்தும் அலர்ட் கொடுக்கும் . நில நடுக்கத்தின் நடுமையத்தில் இருந்து பயனர் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பதையும் கூறும் .

செவ்வாய் கிரகத்தின் போட்டோக்களை அனுப்பியது மங்கள்யான் !!



நேற்று வரலாறு படைத்த மங்கள்யான் , தனது கேமராக்கள் மூலம் இதுவரை கிட்டத்தட்ட ஒரு 10 படங்கள் எடுத்து இந்தியாவிற்கு அனுப்பியுள்ளது .

மங்கள்யான் விண்கலத்தில் உள்ள 5 இயந்திரங்களில் ஒன்றான கேமரா இயங்க தொடங்கிவிட்டது .  மற்ற 4 இயந்திரங்களும் அடுத்த அடுத்த சில நாட்களில் இயங்க தொடங்கிவிடும் . இந்த படங்கள் இந்தியன் ஸ்பேஸ் டேட்டா சென்டருக்கு அனுப்பப்பட்டுள்ளது .

அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , " படங்கள் நல்ல விதமாக வந்துள்ளது . பிரதமர் மோடி அவர்களுக்கு காட்டிய பின் பத்திரிக்கைகளில் வெளியிடப்படும் " என அறிவித்தார் .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media