BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 2 February 2014

யாருடன் கூட்டணி? கூட்டணி குறித்து விஜயகாந்த் மாநாட்டில் பேசியது

யாருடன் கூட்டணி? தனித்து போட்டியா? கூட்டணி குறித்து விஜயகாந்த் மாநாட்டில் பேசியது


கேஜ்ரிவாலுக்கு சவால் விடும் கபில்சிபல்

டெல்லியில் நடைபெற்ற ஆம் ஆத்மி கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டத்தில், ஊழலில் ஈடுபடுவோர்கள் பட்டியலை முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் வெளியிட்டார்.  இதையடுத்து, கேஜ்ரிவாலை எதிர்த்து அரசியல் கட்சிகள் மற்றும் குற்றம் சாட்டப் பட்டோரின் சார்பில் கண்டனங்கள் எழுந்தவாறு உள்ளது.

கேஜ்ரிவால் வெளியிட்ட ஊழல்வாதிகளின் பட்டியலில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ப.சிதம்பரம், ஜி.கே. வாசன், கபில் சிபல் ஆகியோரது பெயர்களும் இடம்பெற்றிருந்தன.

இது குறித்து கருத்து தெரிவித்த கபில்சிபல், தம் மீது அரவிந்த் கேஜ்ரிவால் அவதூறு பரப்புவதாக தெரிவித்தார். மேலும் தமக்கு எதிராக ஒரே ஒரு புகாரை அவர் நிரூபித்தாலும் கூட உடனே பதவி விலகத் தயாராக இருப்பதாகவும்,  ஆனால் அதை நிரூபிக்கத் தவறினால் கேஜ்ரிவால் முதல்வர் பதவியிலிருந்து விலகுவாரா  என்று கபில்சிபல் கேஜ்ரிவாலுக்கு சவால் விடுத்து கேள்வி எழுப்பியுள்ளார்.

தம் மீது சுமத்தப்பட்டப் புகாரை நிரூபிக்க கேஜ்ரிவாலுக்கு 48 மணி நேர அவகாசம் அளிக்கிறேன் என்று கபில்சிபல் கெடு விதித்துள்ளார்.

சகோதரர் முன்பே பெண் கூட்டு கற்பழிப்பு


உத்தர பிரதேச மாநிலத்தில் பதினெட்டு வயது பெண் ஒருவர் தனது சகோதரருடன் கர்னல் என்ற இடத்தில் இருந்து சஹரன்பூருக்கு நேற்று கிளம்பிச் சென்றுள்ளார். அப்போது அவர்கள் வழியில் சென்ற வாகனத்தை நிறுத்தி லிப்ட் கேட்டுள்ளனர். வாகனத்தில் இருந்த நான்கு வாலிபர்கள் அவர்களை வாகனத்தில் ஏற்றிக் கொண்டு அருகில் உள்ள வயலுக்கு சென்றனர். வயலிலேயே வைத்து அந்த பெண்ணை துப்பாக்கி முனையில் மிரட்டி,  அவரது சகோதரரின் கண் முன்பே அந்த நான்கு வாலிபர்களும் பாலியல் பலாத்காரம் செய்தனர். இது குறித்து வெளியே  யாரிடமாவது கூறினால் கொன்றுவிடுவோம் என்று மிரட்டிவிட்டு அந்த நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீசார் வழக்கு பதிவு செய்து, பலாத்காரம் செய்த நால்வரையும் தேடி வருகின்றனர்.


கனிமொழி தற்கொலை முயற்சியா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என மருத்துவமனை அறிக்கை

கனிமொழி தற்கொலை முயற்சியா? மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது ஏன் என மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது

அமைச்சரின் எருமை மாடுகளை காணவில்லை என மோப்ப நாய்கள் வைத்து தேடும் போலீஸ்

நாட்டில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு என சட்டம் ஒழுங்கு சீர் கொலைந்து இருக்கும் நிலையில், உத்திர பிரதேசத்தில் உள்ள போலீசார், அமைச்சரின் காணாமல் போன எருமை மாடுகளை தேடி கொண்டிருக்கின்றனர். 

உத்திர பிரதேச மாநில சிறுபான்மையினர் மற்றும் நகர்புற வளர்ச்சிதுறை அமைச்சரான அசாம் கானின் ஏழு எருமை மாடுகளைக் காணவில்லை என்று நேற்று உடனடியாக பண்ணை அமைந்துள்ள இடத்திற்கு அருகிலுள்ள காவல் நிலையத்திற்கு தெரிவிக்கப் பட்டுள்ளது. இதை அடுத்து போலீசார்  குழு ஒன்றை அமைத்து எருமைகளை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. மாடுகளைத் தேடும் பணியில் மோப்ப நாய்களையும் போலீசார்கள்  ஈடுபடுத்தியுள்ளார்கள் என தெரிகிறது.




மாடுகளை திருட வந்த 4 பேரை கொளுத்திய கிராம மக்கள்

                                                      
மேற்கு வங்காள மாநிலத்தில் பாலராம் என்ற இடத்தில் இன்று காலை 3 மணி அளவில் பண்ணையில் கட்டி வைக்கப் பட்டிருந்த மாடுகளை திருட நான்கு பேர் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்பொழுது கையும் களவுமாக, கிராம மக்களிடம் அவர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். பிடிப்பட்ட திருடர்களை கடுமையாக தாக்கி அவர்களை கட்டி வைத்து உயிருடன் தீ வைத்து எரித்துள்ளனர்அப்பகுதி மக்கள்.

சம்பவ இடத்திற்கு போலீசார் வந்த போது, பிடிபட்டவர்களின் உடல்கள் அடையாளம் தெரியாத அளவிற்கு எரிந்து சாம்பலாகி இருந்ததாக கூறப்படுகிறாது. இதை தொடர்ந்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால், இதுவரை யாரும் கைது செய்யப் படவில்லை என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் கெஜ்ரிவால் படத்துக்கு செருப்பு மாலை

                                                                                                             
ஆம் ஆத்மி கட்சி தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கேஜ்ரிவால், அரசியலில் ஊழல்வாதிகளின் பெயர்களை கொண்ட‌ பட்டியல் ஒன்றை வெளியிட்டார். இதில் காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் மத்திய அமைச்சர்கள் பலரது பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதனால் அதிருப்தி அடைந்த காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள், கேஜ்ரிவாலுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி, அவர் படத்திற்கு செருப்பு மாலை அணிவித்து, சென்னை மயிலாப்பூரில் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அவர்கள் கேஜ்ரிவாலின் உருவ பொம்மையை கொலுத்த முயன்ற போது, போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர்.

ஹெலிகாப்டர் பேர ஊழலில் சோனியா பெயர்

                                                   
இந்தியாவின் மிக முக்கிய தலைவர்கள் பயணம் செய்வதற்காக பன்னிரெண்டு சொகுசு ஹெலிகாப்டர்களை இத்தாலிய நிறுவனமான பின்மெக்கானிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா கடந்த 2010-ம் ஆண்டு ரூ. 3600 கோடியில் ஒப்பந்தம் செய்தது. இந்த ஹெலிகாப்டர்கள் விற்பனை பேரத்தில் பின்மெக்கானிக்கா நிறுவனத்தின் துணை நிறுவனமான அகஸ்டாவெஸ்ட்லேண்ட், இந்திய விமானப்படை முன்னாள் தளபதி எஸ்.பி.தியாகி உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.

இந்த ஒப்பந்தத்தின் முக்கிய இடைத்தரகர் கிறிஸ்டியன் மைக்கேல், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்தின் இந்திய கிளையில் பணியாற்றிய பீட்டர் புல்லெட் என்பவருக்கு எழுதிய கடித தகவல்கள் வெளியாகியுள்ளது. கிறிஸ்டியன் மைக்கேல் எழுதிய கடிதத்தில், ஹெலிகாப்டர் ஒப்பந்தத்தை வெற்றிகரமாக முடிக்க காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பிரதமர் மன்மோகன் சிங், பிரணப் முகர்ஜி, வீரப்ப மொய்லி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், எம்.கே. நாராயணன் மற்றும் அகமத் படேல் ஆகியோரில் யாரையாவது தொடர்பு கொள்ளலாம் என்று கூறியுள்ளார். இந்த கடிதம் இத்தாலி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ஆம் ஆத்மி ஒரு கட்டைப்பஞ்சாயத்து கட்சி, பெண்களை மதிக்காத‌ கட்சி - அக்கட்சியின் முக்கிய பெண் தலைவர் குற்றச்சாட்டு

ஆம் ஆத்மி கட்சி கட்டைப்பஞ்சாயத்து மனநிலை கொண்ட பெண்களை மதிக்காத‌ கட்சி - ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய பெண் தலைவர் குற்றச்சாட்டு

தேமுதிக வாகனம் மோதி விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனையில் சேர்த்த வைகோ

                                                  

மதுரை மாவட்டம் சிகரக்கோட்டை அருகில் இருசக்கர வாகனத்தில் சென்ற இருவர் மீது, தேமுதிக மாநாட்டிற்கு கலந்து கொள்ளச் சென்றவர்கள் பயணம் செய்த வாகனம் மோதியுள்ளது.  இருசக்கர வாகனத்தில் பயணம் செய்தவர்களுக்கு, இதையடுத்து தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ஆனால், விபத்தை ஏற்படுத்திய வாகனம் அடிபட்டவர்களைக் கவனிக்காமல் நிற்காமல் சென்று விட்டதாகக் கூறப்படுகிறது.

அப்பொழுது அந்த வழியாக திண்டுகல்லிற்கு காரில் சென்று கொண்டிருந்த வைகோ, சம்பவ இடத்தில் மக்கள் கூட்டமாக இருந்தததை பார்த்து, தனது வாகனத்தை நிறுத்தி கீழே இறங்கி பார்த்துள்ளார். அங்கு விபத்தில் காயம் அடைந்து, ஆபத்தான நிலையில் இருந்த இரு நபர்களை கண்டு பதறிய வைகோ, உடனடியாக அவர்களைத் தன்னுடன் வந்த வாகனங்களில் ஏற்றி திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்துள்ளார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் பணியிலிருந்த மருத்துவர் அருள் ராஜ்குமாரிடம் விபத்தில் அடிபட்டவர்களை நன்கு கவனித்து கொள்ளுமாறு கூறிவிட்டு, விபத்தில் காயமடைந்தவர்களின் உறவினர்களுக்கு தகவல் கூறிவிட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றுள்ளார் வைகோ.

கனிமொழி கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி! காரணம் என்ன?



திமுக எம்பியும் திமுக தலைவர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி கருணாநிதிக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உண்மையான காதலோடு கை வைத்தால் மட்டும் தான் இந்த "பிரா" திறக்கும் - ஜப்பானின் புதிய பிரா டிசைன்



வன்கொடுமை தடுப்பு சட்டத்துக்கு எதிராக கருணாநிதி போராட்டம் நடத்த முன் வருவாரா? என டாக்டர் ராமதாஸ் கேள்வி

மு.க.ஸ்டாலின் ஆதரவாளர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு, கருணாநிதி போராட்டம் நடத்த முன் வருவாரா? என டாக்டர் ராமதாஸ் கேள்வி

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அவர்கள் வன்கொடுமை தடுப்பு சட்டம் தமிழகத்தில் தவறாக பலரால் பயன்படுத்தப்படுகிறது என்றும் அந்த சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வரவேண்டும் என்றும் நீண்ட காலமாக கூறி வருகிறார். பல ஆண்டுகளுக்கு முன் கோவை இரா.செழியன் அவர்களுடன் இணைந்து இந்த சட்டத்திற்கு எதிராக குரல் கொடுத்திருந்தார்.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media