முன்னாள் இந்திய அணியின் கேப்டன் சவுரவ் கங்குலி தனது கால்பந்து அணியான அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கு ஆதரவு அளிக்கும் படி தனது ரசிகர்களுக்கு வேண்டுகோள் வைத்தார் .
வருகிற அக்டோபர் 12 ஆம் தேதி இந்திய கால்பந்து லீக்கான ஐ.எஸ்.எல் தொடங்க உள்ளது . அந்த லீக்கில் அத்லெடிகோ டி கொல்கத்தா என்னும் அணியை கங்குலி வாங்கியுள்ளார் . அவர் கால்பந்தை விட்டு விட்டு கிரிக்கெட் ஆட வந்தார் . ஆனால் இன்னும் தன்னிடம் திறமை குறையவில்லை என்பதை மைதானத்தில் மூன்று கோல்கள் அடித்து நிருபீத்தார் . அவர் முயற்சி செய்த 5 ஷாட்களில் மூன்றை கோல் ஆக்கினார் .
அப்போது அவர் அளித்த பேட்டியில் , " நீங்கள் ஈஸ்ட் பெங்காள் , மோகன் பகான் உள்ளீட்ட கிளப்களின் போட்டிக்கு அதிக அளவில் திரண்டு வருவீர்கள் . அது போல அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்கும் உங்கள் ஆதரவை அளியுங்கள் . போட்டிக்கு வாருங்கள் , ஒரு நல்ல கால்பந்து போட்டியை நீங்கள் பார்க்கலாம் . எல்லா அணியும் சமமாகவே இருக்கிறது . ஐ.பி.எல் போட்டிகள் போன்று இதுவும் வெற்றி பெறும் " என்று எதிர்பார்ப்பதாக கூறினார் .