BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 28 July 2014

பேஸ்புக்கில் அவதூறாக போஸ்ட் செய்ததால் மூன்று பேர் படுகொலை !! பாகிஸ்தானில் நடந்த விபரீதம் !!


வேறு மதத்தைச் சேர்ந்த இரு குழந்தைகள் மற்றும் அவர்களின் பாட்டியை இன்னொரு மதத்தைச் சேர்ந்த கும்பல் அடித்து படுகொலை செய்துள்ளனர் . மேலும் 4 பேரின் நிலைமை பரிதாபமாக உள்ளது .

இந்த 3 பேரும் அஹமதி என்னும் மதத்தைச் சேர்ந்தவர்கள் . இவர்கள் தங்களை இஸ்லாமியர்கள் என்று கருதினாலும் மொஹமத் போன்று இன்னொருவர் வருவார் என்ற நம்பிக்கையை கடைப்பிடிப்பர் . இதனால் இவர்கள் 1984 பாகிஸ்தான் சட்டப்படி இவர்கள் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று கூறுவர் .

அஹமதி மதத்தைச் சேர்ந்த அகிப் சலிம் என்னும் வாலிபன் இஸ்லாமிய கடவுளை எதிர்க்கும் வகையில் பேஸ்புக்கில் போஸ்ட் ஒன்றை போட்டு இருந்தார் . இதனை எதிர்க்கும் வகையில் ஒரு குழுவினர் காவல் நிலையத்தில் பூகார் செய்ய வந்தனர் . இன்னொரு கும்பல் அஹமதி மதத்தைச் சேர்ந்தவர்களின் வீட்டை எரிக்கவும் , உடைக்கவும் தொடங்கினர் .

இந்த தாக்குதலில் ஆறு முதல் ஏழு வீடுகள் உடைக்கப்பட்டுள்ளது . மூன்று பேர் இறந்துள்ளனர் . எட்டு பேர் காயமடைந்துள்ளனர் .


இன்றைய செய்திகள் - Satrumun Daily News


செக்ஸ் உறவில் உடல்நலத்தின் முக்கிய பங்கு, போலி மருந்துகளை சாப்பிடுவது, பலான இணையதளங்கள் பார்த்தால் அவுட்
http://www.satrumun.net/2014/07/health-tips-for-life.html

விஜய் அஜித் சண்டை, டிவிட்டரிலும் சாதனை புரிந்த ரசிகர்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_58.html

பேஸ்புக்கில் அவதூறாக போஸ்ட் செய்ததால் மூன்று பேர் படுகொலை
http://www.satrumun.net/2014/07/blog-post_78.html

பாலச்சந்திரனை கொச்சைப்படுத்தும் 'புலிப்பார்வை' : வெளிச்சத்துக்கு வந்த புதிய ஆதாரங்கள்!
http://goo.gl/nqeztR

மோடிக்கு எதிராக புதிய அணி உருவானது, 24 ஆண்டுகளாக அரசியல் எதிரிகள் மோடிக்கு எதிராக கை கோர்த்தனர்
http://www.satrumun.net/2014/07/blog-post_68.html

ஷரபோவாக்கு சச்சினை தெரியவில்லை என்றால் சண்டை போடும் நாம் தங்கம் வென்ற தமிழர் சதீஷ் குமாரை தெரிந்து பாராட்டுவோம்
http://www.satrumun.net/2014/07/blog-post_76.html

நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
http://www.satrumun.net/2014/07/court-ordered-to-arrest-nithyanandha.html

முகத்தை மறைத்து கொண்டு வீல் சேரில் சென்னைக்கு வந்த கேப்டன் விஜய்காந்த், என்ன ஆனது?
http://www.satrumun.net/2014/07/blog-post_81.html

டாஸ்மாக் நடத்துவதால் ஜெயலலிதா சபிக்கப்பட்டவர் - வைகோ தாக்கு
http://www.satrumun.net/2014/07/blog-post_72.html

வீரம் Vs விஜய் அவார்ட்ஸ், விஜய்-அஜித்தை கலாய்த்த வந்த போட்டோக்கள்
http://www.satrumun.net/2014/07/vs.html

டைட்டன் வாட்ச் கம்பெனியில் யார் பங்குதாரர்கள்? பலரும் அறியாத தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_86.html

இனி இந்தியா முழுவதும் சியோமி மொபைல் தான், இதுவரை 1 லட்சம் மொபைல்கள் முன்பதிவு
http://www.satrumun.net/2014/07/1_27.html

ஆடி அமாவாசை அன்று திதி கொடுப்பதால் மட்டும் நன்மை வந்து விடாது
http://www.satrumun.net/2014/07/blog-post_82.html

"தலை"க்கு கனம் இருக்க கூடாது, நடிகர் விஜய் பேச்சு, மீண்டும் ஆரம்பமாகும் அஜீத்-விஜய் மோதல்
http://www.satrumun.net/2014/07/vijay-criticize-ajith-in-vijay-awards.html

துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கமும் வெள்ளியும் வென்ற இந்திய வீரர்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_39.html

செக்ஸ் உறவில் உடல்நலத்தின் முக்கியம், பலான இணையதளங்கள் பார்த்தால் அவுட்

கணவன் மனைவி தாம்பத்தியத்தில் தொடர்ந்து மன மகிழ்வுடன் செயல்பட தம்பதியர்கள் இருவரின் உடல் நலமும், மன நலமும், முக்கியம், அன்றாட உணவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புரதம், ஒமேகா கொழுப்பு, வைட்டமின்கள், தாதுப் பொருள்கள் நிறைந்த சைவ, அசைவ உணவுகளையும, காய்கறிகள், பழங்கள், கீரைகள், போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

ஒமேகா கொழுப்பு வகைகள் பாதம், பிஸ்தா, முந்திரி போன்ற கொட்டை (நட்ஸ்) வகைகளில் கிடைக்கும், இதனால் செக்ஸ் சக்தி அதிகரிக்கும்.

எந்த நிலையிலும் செக்ஸ் சக்தியை அதிகரிக்கும் என்று சொல்லும் போலி டாக்டர்கள் கூறும் மருந்துகளையோ, பூஸ்டர்கள் என்று சொல்லும் பவுடர்களையோ சாப்பிடக்கூடாது.

சாப்பிட்ட முடித்ததும் உடனே உடலுறவை வைத்துக்கொள்ள கூடாது. வயிற்றில் உணவு செரிக்காமல் இருந்தால் செக்ஸ் செயல்பாடுகளில் ஆர்வம் காட்ட முடியாது எனவே முழுமையான இன்பம் கிடைக்காது.

அவசர கோலத்தில் செக்ஸ் உறவு கொள்ள கூடாது, இதை ஒரு இசையை ரசிப்பது போல மென்மையாகவும், நிதானமாகவும் செயல் பட வேண்டும், ஆவேசமும், அவசரமும் காட்டினால் செக்ஸ் உறவு அரைகுறையாக ஆகிவிடும்.

தம்பதியர்களிடையேயான கோபம் சண்டையை தீர்க்கக்கூடிய சக்தி செக்ஸுக்கு உண்டு.  அதே சமயம் மனம் ஒற்றுமையான பின் உடலுறவு கொண்டால் நலமாக இருக்கும், கோபத்தில் உடலுறவு கொண்டால் ஆழ்ந்த மனபாதிப்புகள் உண்டாகி தாம்பத்திய உறவுக்கு பெரும் எதிரியாகும்.

செக்ஸில் ஒரே மாதிரி செயல்பதும் இயந்திர தனங்கள் இனிமை தராது. கற்பனை சிறகை விரித்து வெவ்வேறு மாதிரியாக உடலுறவு கொண்டால் வாழ்க்கை இனிக்கும். அதே நேரத்தில் கண்ட கண்ட பலான சிடிக்களை பார்த்து அது போல முயற்சித்தால் கடும் பிரச்சினைகள் உண்டாகும்.

வயதான பின்போ குழந்தை வளர்ந்ததும் செக்ஸ் உறவு கொள்வது பாவம் என்று நினைக்க தேவையில்லை, இன்பம் தரும் உடலுறவுக்கு வயது ஒரு தடை அல்ல.

கணவன் மனைவி செக்ஸில் எதுவுமே தவறில்லை,  இப்படி பேசினால் அநாகரிகம் என்றோ அப்படி செய்தால் அநாகரிகம் என்று எண்ணத் தேவையில்லை. மேலும் நாம் பெண் இப்படித்தான் நடக்க வேண்டும் என்றோ படித்தவர்கள் நல்ல வேலையில் இருப்பவர்கள் இது போன்று எல்லாம் செய்யக் கூடாது என்று தங்களுக்குள் சுய கட்டுப்பாடு விதித்துக்கொள்ள கூடாது. இருவரது விருப்பங்களில் ஆரோக்கியமான அனைத்துமே சுகமான அனைத்துமே சுகமான அனைத்துமே பாலியல் வாழக்கை நெறிப்படி சரியானது தான்.

செக்ஸ் உணர்ச்சிகள் ஆணுக்கும் பெண்ணுக்கும் ஒரே மாதிரி இருப்பதில்லை. ஆணுக்கு அடிக்கடி ஆசை ஏற்படும், பெண்களுக்கோ அடிக்கடி ஆசை எழாது, ஆண்கள் ஆசை எழுந்தாலும் பெண்ணுக்கு தொல்லைதரக் கூடாது என்று அடக்குபவர்கள் அதிகம். இதை மனைவி புரிந்து கொண்டு ஒத்துழைக்க வேண்டும், இல்லையென்றால் மனைவி மீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படும்,

செக்ஸ் இணையதளங்கள் பார்ப்பது, செக்ஸ் புத்தகம் படிப்பது, சிடி பார்ப்பது போன்றவை என்றாவது ஒருநாள் என்றால் பரவாயிலை, ஆனால் தினம் தினம் அதை பார்ப்பதும் அதன்படி உறவு கொள்ளவதும் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

செக்ஸ் உறவை அதிகரிக்கும் சக்தி, கீரை மற்றும் பழங்களுக்கும் உண்டு. மீன், புறா, வெள்ளாட்டுக்கறி, இறால் போன்றவை மிகவும் நல்லது. பேரீச்சம்பழம், பதாம்பருப்பு, பசும்பால் போன்றவையும் ஆண் - பெண் உறவுக்கு வலிமையும், இனிமையும் சேர்க்க கூடியவை.

அழுக்கு உடம்போடும், வியர்வை பிசுபிசுப்புடனும் உடல்உறவு கொள்ள கூடாது, உடல் உறவை மேற்கொள்ளும் முன் தம்பதியர் இருவரும் குளித்து செண்ட் அடித்து கொள்ளலாம்.

இருவரும் தூங்க ஆரம்பிக்கும் முன்பே  உடலுறவு கொள்ள வேண்டும், வேலை முடிந்து நள்ளிரவில் வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருக்கும் மனைவியிடம் செக்ஸ் வைத்துக்கொள்ள நினைத்தால் மனைவி தயாராக இருக்க மாட்டார், இதை புரிந்து கொள்ள வேண்டும்.

அவசர உடலுறவு  வேஸ்ட் ஆகும், தனிமையும் இடமும் கிடைப்பது தம்பதியர்களுக்கு அரிதாகிக்கொண்டிருந்தாலும்  யாருமற்ற நேரம், இடம் போன்றவற்றை தேர்வு செய்து தொந்தரவு இல்லாமல் உறவை அனுபவிக்கும் போது மட்டுமே இன்பத்தினை நன்றாக அனுபவிக்க முடியும்.

கணவன் மனைவி இருவரும் முற்றிலும் தவிர்க்க வேண்டியது கூச்சம். எதற்காகவும் எப்போதும் கூச்சப்படாமல் உடல்உறவில் இறங்கும் போது தான் இருவரும் ஆசைப்பட்டதை கேட்கவும் கொடுக்கவும் முடியும்.

ஒலிம்பிக்கில் வெண்கல‌ம் வென்ற ககன் நராங் வெள்ளி வென்றார் !!



50 மீட்டர் துப்பாக்கிச் சூடுதல் போட்டியில் இந்தியாவின் ககன் நரங் வெள்ளி வென்றார் இவர் 0.7 புள்ளியில் ஆஸ்திரேலிய வீரரிடம் தவறவிட்டார் . இவர் ஒலிம்பிக்கில் வெண்கல‌ம் வென்று இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது .



தமிழகத்திற்கு பெருமை சேர்த்த சதீஷ் குமார் !! இவரை மனதார பாரட்ட வேண்டாமா ??



இஷாந்த் சர்மாவுக்கு கால் வலி என்றால் தலை போகும் அளவுக்கு வருத்தப்படவும் , சச்சினை தெரியாது என்று சொன்னதற்கு பொங்கி எழவும் தயாரான நாம் , தனது முதல் காமன்வெல்த் போட்டியிலேயே அமர்க்களப்படுத்தி , தங்கம் வென்ற நமது வேலூரைச் சேர்ந்த சதீஷ் குமார் சிவலிங்கத்தை நாம் பாராட்டாமல் யார் பாராட்டுவது .



வேலூரைச் சேர்ந்த சிவலிங்கம் மற்றும் தாயார் தெய்வானை அவர்களுக்குப் பிறந்தவர் தான் தங்க மகன் சதீஷ் குமார் சிவலிங்கம் . இவரது தந்தை சிவலிங்கம் முன்னாள் ராணுவ அதிகாரி . சிவலிங்கமும் ஒரு பளுதுக்கும் வீரர் தான் . தந்தைக்கு தப்பாமல் பிறந்த சதீஷ் குமார் அவரது தந்தை போல ஆக வேண்டும் என்று ஆசைக் கொண்டு அதற்கான பயிற்சிகளை மேற்கொண்டார் . பளுதூக்குதலில் அவரது திறமையைக் கண்ட நிர்வாகிகள் அவரை தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தில் பயிற்சிக்கு சேர்த்தனர் .

அங்கே தனது திறமையை மெருகேற்றிய சதீஷ் குமார் , தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று பல பதக்கங்களை குவித்தார் . இதனால் அவருக்கு இந்தியாவிற்காக வெளிநாடுகளில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது . தன்னை தேர்வு செய்தவர்களின் தேர்வை ஏமாற்றாமல் பங்கேற்ற போட்டிகளில் அசத்தினார் . 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டு நடந்த பளுதூக்கும் போட்டியில் தங்கம் வென்றார் .

இப்போது நடந்த காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ பளுதூக்கும் பிரிவில் 149 கிலோ எடைதூக்கி சாதனை புரிந்துள்ளார் . இதனால் இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளது .

இது குறித்து பெருமைமிக்க அவர் அம்மா கூறுகையில் , " காமன்வெல்த்தில் தங்கம் வென்றது பெருமையாக உள்ளது . மேலும் ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் " என்றார் .


துப்பாக்கி சுடுதலில் மீண்டும் தங்கமும் வெள்ளியும் வென்ற இந்திய வீரர்கள்




 இன்று நடந்த ஆண்கள் 50 மீ துப்பாக்கி சூடுதல் போட்டியில் இந்திய வீரர்கள் தங்கமும் வெள்ளியும் வென்றனர். இந்திய வீரர் ஜித்து ராய் தங்கப்பதக்கமும், குர்பால் சிங் வெள்ளி பதக்கமும் வென்றார்கள். இப்போது இந்தியா 7 தங்கம், 10 வெள்ளி, 7 வெண்கலத்துடன் இந்தியா 4வது இடத்திற்கு முன்னேறியது.

முகத்தை மறைத்து கொண்டு வீல் சேரில் சென்னைக்கு வந்த கேப்டன் விஜய்காந்த்





 தேமுதிக தலைவர் விஜய்காந்துக்கு உடல் நிலை சரியில்லாததால் கடந்த 9 ஆம் தேதி அன்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை கொடுக்கப்பட்டது. உடல் நலம் சரியான பின்பு அவர் வீடு திருப்பினார். ஆனால் அவரது உடல் நிலை முழுமையாக குணமடையவில்லை என கூறப்பட்டு வந்தது.இந்நிலையில் மேல் சிகிச்சைக்காக அவர் 2 வாரங்களுக்கு முன்பு சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் மூலம் சிங்கப்பூர் சென்றார் . இந்த பயணம் ரகசியமாக இருந்து உள்ளது. அவருடன் அவரது மனைவி பிரமேலதா மட்டும் சென்றார்.ஆனால் அவர் மகனின் பட வேலைக்காக சென்றதாக கூறப்பட்டது.


 இந்நிலையில் சிகிச்சை முடிந்து கேப்டன் நேற்று சென்னைக்கு திரும்பி உள்ளார். அவர் விமானம் மூலம் சென்னை வந்து சேர்ந்தார். கேப்டனுக்கு என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது என்பது பற்றிய தகவல்கள் இன்னும் வரவில்லை. முதலில் அவர் மனைவி ஒரு காரில் சென்று விட்டார். பின்பு முகத்தை துணியால் மூடியபடி விஜய்காந்த் சக்கர நாற்காலியில் வந்தார். காரில் ஏறும் போது அவர் துணியை எடுத்ததால் தான் அவர் விஜய்காந்த்  என்றே பலருக்கு தெரிய வந்தது .



 .

தனுஷ் பிறந்த நாள் அன்று அவரை வாழ்த்தி அவரது ரசிகர்கள் வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்து போட்டோக்கள்


சாதாரண நடிகனாக உள்ளே வந்து பல விமர்சனங்களை முறியடித்து தனது இயல்பான நடிப்பின் மூலம் தேசிய விருது பெற்று இன்று ஒரு சிறந்த நடிகனாக இருந்து அவருக்கு என தனி ரசிகர் கூட்டத்தை உருவாக்கி கொண்ட தனுஷிற்கு நமது சார்பில் பிறந்தநாள் வாழ்த்துக்கள். தனுஷ் பிறந்த நாள் அன்று அவரை வாழ்த்தி அவரது ரசிகர்கள் வெளியிட்ட பிறந்த நாள் வாழ்த்து போட்டோக்களை பார்ப்போம்.

டாஸ்மாக் நடத்துவதால் ஜெயலலிதா சபிக்கப்பட்டவர் என மறைமுகமாக கூறிய அரசியல் தலைவர்




 மதிமுக பொது செயலாளர் மதிமுக சார்பில் நடத்தப்பட்ட இஃப்தார் நோன்பில் கலந்து கொண்டார். அதில் பங்கேற்ற முஸ்லிம் நண்பர்களுடன் பேசி கொண்டு அவர்களுக்கு ரமலான் வாழ்த்து சொன்னார். பின்பு வைகோ பேசுவதற்காக அழைக்கப்பட்டார். அதில் நபிகள் நாயகத்தின் கருத்து ஒன்றை கூறி அனைவரையும் கவர்ந்தார்.

அது மதுவுக்கு எதிரான கருத்து ஆகும். அதாவது நபிகள் நாயகம் யாரை எல்லாம் சபிக்கப்பட்டவர்களாக கூறுகிறார் என்றால்,

 1. மதுபானம் தயாரிப்பவர்
 2. தயாரிக்கக் கூறுபவர்
 3. மது அருந்துபவர்
 4. மது அருந்தத் தருபவர்
 5. மதுவை எடுத்துக்கொண்டு போகிறவர்
 6. மதுவை எடுத்துச் செல்லக் கூறுபவர்
 7. மதுவை விற்பவர்
 8. மதுவை வாங்கிச் செல்பவர்
 9. மதுவை அன்பளிப்பாக தருபவர்
 10.மது விற்ற பணத்தில் உணவு உண்பவர்

 ஆகிய பத்து பேரும் சபிக்கப்பட்டவர்களே என்று நபிகள் நாயகம் பட்டியலிடுகிறார். தமிழக குடிகாரர்களுக்கு டாஸ்மாக்கை திறந்து வைத்து மதுவை விற்கும் ஜெயலலிதாவையும் சபிக்கபட்டவராக எடுத்துக் கொள்ளலாமா என்று தெரியவில்லை. சொல்லுங்கள் வைகோ சொல்லுங்கள் !!

டிவிட்டரில் சாதனை புரிந்த விஜய் அஜித் ரசிகர்கள்,



விஜய் டிவியில் நேற்று விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பபட்டது. இதற்கு போட்டியாக கடந்த வாரம் சன் டிவியில் சிங்கம் 2 படம் ஒளிபரப்பபட்டது. விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சியை குறைந்தபட்சம் 2 கோடி பேர் பார்ப்பார்கள் என்று ஒரு ஆய்வு கூறியது. இதில் அஜித்துக்கு விருது தராததால் அதற்கு எதிராக அஜித் ரசிகர்கள் இருந்தனர். எனவே அஜித் ரசிகர்களை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ள சன் டிவி முடிவு எடுத்தது. அவர்களை தங்கள் பக்கம் இழுக்க நேற்று வீரம் படத்தை போட்டார்கள். #VEERAM_TheCheckMateFromSunTv என்று இந்த ஹாஷ்டேக்கில் அஜித்துக்கு ஆதரவாக டிவிட்டரில் டீவிட்டுகள் வந்த வண்ணம் இருந்தன.விஜய் ரசிகர்கள் மட்டும் சும்மா இருப்பார்களா என்ன, விஜய்க்கு ஆதரவாக #VIJAYFavHeroForever என்ற ஹேஷ்டேக்கில் டிவீட்டுகள் வந்த வண்ணம் இருந்தன. விஜய் தான் அனைவருக்கும் பிடித்த ஹீரோ என கூறி வந்தார்கள். முதலில் தமிழகத்தில் இருந்த இந்த டிவீட்டுகள் பின்பு உலக அளவில் பரவ தொடங்கியது. பலரின் கவனத்திற்கும் இந்த விவகாரம் சென்றது. டிவிட்டரின் டெரண்டிங்கில் இவை வந்தன.


 அதில் பலரை கவரும் வண்ணம் இருந்த சில டிவீட்டுகளை பார்ப்போம்.

 1. முன்பெல்லாம் ரஜினி கடைசியா பேசுவார் இப்போ விஜய் பேசுறார் , இது இருந்தே தெரியா வேண்டாமா. #VIJAYFavHeroForever

 2. அஜித் ரசிகர்கள் செக்மேட் என்று சொன்னதை கலாய்க்க , இனிமே அவர்கள் கிரிக்கெட் ஆடுவார்கள், கபடி ஆடுவார்கள், ஏன் கதகளி கூட ஆடுவார்கள் ஆனால் செஸ் மட்டும் ஆட மாட்டார்கள். #VIJAYFavHeroForever

 3. காசியப்பன் பாத்திரக்கடை அவார்டுகள் எதிர்ப்பினும் அதகளம் புரிந்திடும் வீரம். #VEERAM_TheCheckMateFromSunTv

 4. தல தலை காட்டாமலே அவர் பெயர் உச்சரிக்கும் போது கரகோஷம் குறைய நேரமாகுது, சூப்பர் ஸ்டாருக்கு அடுத்து எல்லார் மனதையும் கொள்ளை கொண்டவன் #தலடா.

காமன்வெல்த்தில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு குவியும் பாராட்டுகள்

கிளாஸ்கோவில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்று தமிழகத்திற்கு பெருமை சேர்த்து உள்ளார் தமிழகத்தின் வேலூர் மாவட்டத்தை சேர்ந்த சதிஷ் குமார் சிவலிங்கம் என்பவர். ஆண்கள் 77 கிலோ பளுதூக்கும் பிரிவில் இவர் 149 கிலோ எடைதூக்கி சாதனை புரிந்து தங்கப்பதக்கம் வென்று உள்ளார். இவருக்கு அடுத்த இந்தியாவை சேர்ந்த ரவி என்பவர் வெள்ளி பதக்கம் வென்றார். ஆஸ்திரேலியாவின் பிரான்காய்ஸ் வெண்கல பதக்கம் வென்றார். சதிஷ்குமார் ஒரு ராணுவ வீரர். இவரது தந்தையும் ராணுவ வீரர் மட்டுமல்லாமல் அவரும் பளுதூக்கும் வீரர். தங்கப்பதக்கம் வென்று தமிழகத்துக்கு பெருமை சேர்த்த சதிஷ்குமாருக்கு நமது வாழ்த்துக்கள்.

நடப்பது கனவா நினைவா ?, மோடிக்கு எதிராக புதிய அணி அமைந்தது

கடந்த 24 ஆண்டுகளாக அரசியலில் எதிரிகளாக இருந்த வந்த ஒரே மாநிலத்தின் 2 முதல்வர்கள் இன்று ஒன்றாக சேர்ந்து கை கோர்த்து உள்ளார்கள். அவர்கள் வேறு யாரும் இல்லை பீஹாரின் முன்னாள் முதல்வர்கள் நிதிஷ் குமாரும், லாலு பிரசாத் யாதவும் தான். இது எப்படி என்றால் தமிழகத்தில் கருணாநிதயும் ஜெயலலிதாவும் ஒரு கூட்டணி அமைத்தால் எப்படி இருக்கும் அது போல அமைந்து இருக்கிறது இந்த கூட்டணி. இவர்கள் இருவரும் ஆரம்ப காலத்தில் ஜனதா கட்சியில் ஒன்றாக பணியாற்றினார்கள். அதன் பிறகு இருவரும் தனியாக கட்ச் அமைத்து பிரிந்து விட்டார்கள். பிஹாரில் லாலுவின் ஆட்சி அதிக காலம் நடந்தது. அதன் பிறகு 2005 இல் பாஜகவுடனான கூட்டணியில் நிதிஷ் குமார் ஆட்சியை பிடித்தார். அதற்கு அடுத்த முறையும் அவரே ஆட்சியை பிடித்தார். நாடாளுமன்ற தேர்தலில் மோடியின் வளர்ச்சி பிடிக்காமல் கூட்டணியில் இருந்து விலகினார். அதனால் முடிந்த லோக் சபா தேர்தலில் படுதோல்வி அடைந்தது அவரது கட்சி. ஆகஸ்ட் 10 ஆம் தேதி அன்று அங்கு 10 தொகுதிகளுக்கு இடைதேர்தல் நடக்க உள்ளது. அதில் காங்கிரஸ், லாலு, நிதிஷ்குமார் ஆகியோர் சேர்ந்து பாஜகவுக்கு எதிராக புதிய கூட்டணியை அமைத்து உள்ளார்கள். இந்த இடைதேர்தலில் லாலு கட்சிக்கு 4 தொகுதிகளும், நிதிஷ் குமார் 4 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 2 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டு உள்ளன. பார்ப்போம் இந்த கூட்டணி எத்தனை நாட்களுக்கு நீடிக்கிறது என்று.

இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special News


வீரம் Vs விஜய் அவார்ட்ஸ், விஜய்-அஜித்தை கலாய்த்த வந்த போட்டோக்கள்
http://www.satrumun.net/2014/07/vs.html

"தலை"க்கு கனம் இருக்க கூடாது, நடிகர் விஜய் பேச்சு, மீண்டும் ஆரம்பமாகும் அஜீத்-விஜய் மோதல்
http://www.satrumun.net/2014/07/vijay-criticize-ajith-in-vijay-awards.html

நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.
http://www.satrumun.net/2014/07/court-ordered-to-arrest-nithyanandha.html

இனி இந்தியா முழுவதும் சியோமி மொபைல் தான், இதுவரை 1 லட்சம் மொபைல்கள் முன்பதிவு
http://www.satrumun.net/2014/07/1_27.html

நடிகர் விஜய்யின் மதம் என்ன? அவர் பள்ளி சான்றிதழில் குறிப்பிட்டிருக்கும் மதம் என்ன தெரியுமா?
http://www.satrumun.net/2014/07/blog-post_88.html

காஸாவில் ரம்சானுக்கு முன் 24 மணி நேர போர் நிறுத்தத்திற்கு ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் !!
http://www.satrumun.net/2014/07/24.html

3 வது டெஸ்டில் இங்கிலாந்து பேட்டிங், கடந்த போட்டியின் ஆட்ட நாயகன் இஷாந்த் சர்மா இந்த போட்டியில்ஆடவில்லை.
விவரங்களை தெரிந்து கொள்ள
http://www.satrumun.net/2014/07/3_27.html

சிங்கப்பூரில் சிகிச்சை முடிந்து சென்னைக்கு திரும்பினார் கேப்டன், கேப்டனுக்கு என்ன பிரச்சினை? அதிர்ச்சி தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/9.html

அடுத்த குழந்தைக்கு அப்பாவாக போகிறார் தல அஜித்
http://www.satrumun.net/2014/07/blog-post_49.html

டைட்டன் வாட்ச் கம்பெனியில் யார்  யாருக்கெல்லாம் பங்குகள் உள்ளன தெரியுமா? பலரும் அறியாதபுதிய தகவல்கள்
http://www.satrumun.net/2014/07/blog-post_86.html

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்ல ராகுல் டிராவிட் தலைமையில் இந்தியாவின் புதிய திட்டம்
http://www.satrumun.net/2014/07/blog-post_62.html

துணை அதிபரின் மனைவியை கடத்திய தீவிரவாத அமைப்பினர் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_40.html

சாய்னா நெஹ்வாலிடம் 50 இலட்சம் கடன் பாக்கி வைத்து இருக்கும் தெலுங்கானா அரசு
http://www.satrumun.net/2014/07/50.html

நித்யானந்தாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.


கர்நாடக உயர்நீதிமன்றத்தின் பரிந்துரையின் பெயரில் நித்யானந்தா மீது பெங்களூரு ராம் நகர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகின்றது. இன்றைய வழக்கு விசாரணையில் நித்யானந்தா நேரில் ஆஜராக வேண்டும், ஆனால் ஹரிதுவாரில் இருப்பதால் வர இயலவில்லை என்று அவரது வழக்கறிஞர் கூறினார்.

இதை ஏற்றுக்கொள்ளாத நீதிமன்றம் நித்யானந்தாவை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்தது. மேலும் வழக்கை 7ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

நித்யானந்தாவுக்கு ஆகஸ்ட் 6ம் தேதி ஆண்மை பரிசோதனை மருத்துவ சோதனை நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media