BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 7 July 2014

யார் ஏழை ?? புதிய விதிமுறையை அறிமுகப்படுத்தினர் ரங்கராஜன் கமிட்டி !!






இனிமேல் நகர்ப்புறங்களில் 47 ரூபாய்க்குக் கீழும் , கிராமப்புறங்களில் 32 ரூபாய்க்குக் கீழும் செலவு செய்பவர்களே ஏழைகள் என ரங்கராஜன் கமிட்டி அறிவித்துள்ளது . இந்த நிபந்தனையை மோடி அரசு ஏற்குமா என்று தெரியவில்லை .  

எந்த மக்கள் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளனர் என்பதை தீர்மாணிக்க சச்சின் கமிட்டி அமைக்கப்பட்டது .இந்த கமிட்டியின் பரிந்துரைகளை மீண்டும் சோதனை செய்ய போன வருடம் ரங்கராஜன் கமிட்டி அமைக்கப்பட்டது . 

இந்த கமிட்டியின் அறிக்கையின் படி இந்தியாவில் 10 ல் 3 பேர் ஏழைகள் . 





Today special news - இன்றைய சிறப்பு செய்திகள்


தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்
செக்ஸ் உறவு கொண்டால் மைக்ரேன் தலைவலி தீருமாம்,  மேலும் என்னென்ன தீரும் என படிக்க
 http://www.satrumun.net/2014/07/10-reasons-to-have-daily.html

தேசிய விருதுவாங்கிய குழந்தைக்கு விஜய்டிவி விருது தர மாட்டாங்களா?
விஜய்டிவியை மேடையிலேயே வெளுத்துவாங்கிய  இயக்குனர் ராம்
http://www.satrumun.net/2014/07/thangameengal-vijay-awards-director-ram.html

கல்யாணம் ஆகி ஒரு வாரத்திற்குள் டிடியின் தாலியை காணவில்லை
http://www.satrumun.net/2014/07/blog-post_4372.html

சசிகலா கணவர் நடராஜன் கைது? ஷீகான் ஹூசைனி புகாரில் நடவடிக்கையா?
http://www.satrumun.net/2014/07/sasikala-natrjan-arrested-in-nellai.html

ஒரு பாட்டில் சரக்குக்காக 20 ஆண்களுடன் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட பெண்
http://www.satrumun.net/2014/07/20_6.html

யாராலும் முறியடிக்க முடியாத புதிய சாதனையை செய்தார் டெண்டுல்கர்
http://www.satrumun.net/2014/07/blog-post_830.html


மீண்டும் ஒரு கட்டிடம் இடிந்து விழுந்தது: சென்னையில் பில்டிங்கும் வீக்கு, பேஸ்மென்ட்டும் வீக்கு
http://www.satrumun.net/2014/07/blog-post_5349.html

பேஸ்புக் வந்தார் இளையராஜா : ரசிகர்கள் உற்சாகம்
http://www.satrumun.net/2014/07/blog-post_4033.html

சாராய கடத்தல்காரர்களை எதிர்த்த மாணவன் வெட்டிக் கொலை !!
http://www.satrumun.net/2014/07/blog-post_5508.html

ஆசிரியரை கற்பழித்து , வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்கள் !!
http://www.satrumun.net/2014/07/blog-post_1415.html

முன்னாள் குடியரசு தலைவரின் தம்பி கொலை வழக்கில் சிக்கினார் !


நமது நாட்டின் முன்னாள் குடியரசு தலைவர் பிரதீபா பாட்டில் . இவரது தம்பி கஜேந்திரா நாரயண் பாட்டில் . இவரை மஹாரஷ்ட்ரா ஜலகான் நகரில் நீதிமன்றம் ஒன்று விஷ்ராம் பாட்டில் கொலை வழக்கில் குற்றவாளியாக தீர்ப்பு வழங்கியது .

இதற்கு முன் டிவி பேட்டி ஒன்றில் விஷ்ராம் பாட்டில் அவர்களின் மனைவி , கஜேந்திரா பாட்டில் தான் இந்த கொலையில் அனைத்து வேலைகளையும் செய்ததாக கூறியிருந்தார் .  மேலும் பிரதீபா பாட்டில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அவரது தம்பியை காக்க முயற்சித்ததாகவும் தெரிவித்து இருந்தார் .

கஜேந்திரா பாட்டிலும் ஜலகான் காங்கிரஸில் ஒரு முக்கிய தலைவர் !!

தினமும் செக்ஸ் உறவு கொள்ள 10 நல்ல காரணங்கள்


1) ஸ்ட்ரெஸ்சை குறைக்கும்

தினமும் தன் துணையுடன் செக்ஸ் உறவு கொண்டால் அது ஸ்ட்ரெஸ்சை குறைக்கும், உடலுறவின் போது டோபமைன் என்ற பொருள் உடலில் சுரக்கும் இது மன அழுத்தத்தை குறைக்கும் காரணியாகும்.

இதுவே கள்ள காதலில் செக்ஸ் உறவு கொள்ளும் போது அது மன அழுத்தத்தை அதிகரிக்கும், யாரும் பார்த்துவிடுவார்களோ, யாருக்கும் தெரிந்துவிடுமோ என்ற பதட்டத்திலேயே செக்ஸ் உறவும் திருப்தியாக இல்லாமல், மன அழுத்தத்தையும் இருவருக்கும் கூட்டிவிடும்.

2) நல்ல உடற்பயிற்சி

வாரத்திற்கு மூன்று நாட்கள் ஒவ்வொரு முறையும் 15 நிமிடங்கள் அளவுக்கு உடலுறவு கொள்வது என்பது ஓராண்டில் 75 மைல்கள் ஜாக்கிங் செய்ததற்கு சமம் ஆகும், ஜிம்முக்கோ ஜாகிங்கோ போக முடியாதவர்கள் தினமும் படுக்கையில் உடற்பயிற்சி செய்யுங்கள்.

3) இரத்த அழுத்தத்தை குறைக்கும்

செக்ஸ் உறவு கொள்வது ரத்த அழுத்தத்தை குறைக்கும், டயஸ்டாலிக் ப்ளட் பிரஷர் எனப்படும் இரத்த அழுத்த கீழ் லிமிட்டினை குறைக்க உதவும்.

4) சளிபிடிப்பதலிருந்து விடுவிக்கும், எதிர்ப்பு சக்தியை கூட்டும்

தினமும் செக்ஸ் உறவு கொள்பவர்களுக்கு அவர்களின் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும், இம்மோனோகுளோபின் என்ற வேதிப்பொருளில் செக்ஸ் உறவு கொள்வதால் உடலில் சுரக்கும், இது சளிபிடிப்பதை எதிர்க்கும் ஆண்டிஜென் ஆகும், இதனால் சளிபிடிப்பது போன்ற தொல்லைகளிலிருந்து விடுதலை கிடைக்கும்

5) தினம் செக்ஸ் உறவு உங்களை இளமையாக வைத்திருக்கும்

6) ஆரோக்கியமான இதயம், அடிக்கடி உடலுறவு கொள்ளும் ஆண்களுக்கு இதய நோய் பாதிப்பு மற்றவர்களை விட 45% குறைவாக உள்ளதாம். மேலும் ஸ்ட்ரோக்கின் பாதிப்பும் குறைவாக உள்ளதாம்

7) மைக்ரேன் தலைவலி, உடல்வலியிலிருந்து நிவாரணம் கிடைக்க வேண்டுமெனில் நல்ல செக்ஸ் உறவு கொண்டால் போதும் நிவாரணம் கிட்டும், முதுகுவலி இருந்தால் நல்ல டாக்டரை பார்க்கவும், மிஷனரி தவிர வேறு பொசிஷன்களில் முதுகு வலி இருப்பவர்கள் முயற்சித்தால் வலி அதிகமாக வாய்ப்புள்ளது.

8) தினமும் துணையுடன் செக்ஸ் உறவு கொள்வதால் துணையுடன் நெருக்கமும் காதலும் உருவாகும், இது நீடித்த சுவாரசியமான உறவை பாதுகாக்கும்

9) மாதத்திற்கு 21 முறை செக்ஸ் உறவு கொள்ளும் ஆண்களுக்கு ப்ரோஸ்டேட்(Prostate) கேன்சர் தாக்கும் அபாயம் இல்லையாம்

10)தினமும் உடலுறவு கொள்வதினால் பழைய விந்தணுக்குள் போய் தினமும் புதிய விந்தணுக்கள் சுரக்கும், இதனால் கர்ப்பமாகும் வாய்ப்பு அதிகரிக்கும், மேலும் பழைய விந்தணுக்குள் சேர்வதினால் டி.என்.ஏக்கள் பாதிப்படைய வாய்ப்புள்ளதால் பிறக்கும் குழந்தைக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

ஷகிப் அல் ஹாசனை போட்டிகளில் ஆறு மாதம் விளையாட தடை செய்தது பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாகம் !!


பங்களாதேஷ் அணியின் பிரபல ஆல் ரவுண்டர் ஷகிப் அல் ஹாசன் . இவரின் நடத்தை சரி இல்லாத காரணத்தால் அடுத்த ஆறு மாதங்களுக்கு எந்த  கிரிக்கெட் போட்டிகளில் விளையாட தடை செய்யப்பட்டுள்ளார் . மேலும் 2015 வரை வெளிநாட்டு போட்டிகளில் பங்கேற்க கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளனர் .



அவர் வங்கதேச நிர்வாகத்திடம் அனுமதி வாங்காமல் வெளிநாட்டு போட்டிகளில் கலந்து கொண்டார் . மேலும் பயிற்சிக்கு அழைத்த போது கலந்து கொள்ளாமல் கிரிக்கெட் போட்டியில் இருந்து ஓய்வு பெற்றுவிடுவேன் என்று மிரட்டினார் . மேலும் ரசிகர் ஒருவருடன் சண்டையில் ஈடுபட்டதாகவும் அவர் மீது பூகார் உள்ளது

இதைப் பற்றி பங்களாதேஷ் கிரிக்கெட் நிர்வாக இயக்குனர் கூறுகையில் , " அவருடைய நடத்தை சரி இல்லை . வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை யாரும் இப்படி இல்லை . அவருடைய நடத்தை அணியை நேரடியாக பாதிக்கும் என்பதால் அவருக்கு தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது . அவர் என்னிடம் தொடர்பு கொண்டு மன்னிப்பு கேட்டார் . ஆனால் நாங்கள் அவருக்கு தெளிவான ஒன்றை கூற விரும்புகிறோம் . அவர் இனிமேல் இதுபோன்று செயல்பட்டால் அவருக்கு வாழ்நாள் தடை விதிக்கப்படும் " 

சசிகலா கணவர் நடராஜன் கைது?

சில நாட்களுக்கு முன் கராத்தே வீரர் ஷீகான் ஹூசைனி தன்னை நடராஜன் மற்றும் ஏர்போர்ட் மூர்த்தி உள்ளிட்ட சிலர் மிரட்டியதாக அளித்த புகாரில் சசிகலாவின் கணவர் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார், ஷூகான் ஹூசைனி கராத்தே வீரர் மட்டுமின்றி ஒரு சிற்ப கலை நிபுணரும் கூட.

தஞ்சை மாவட்டம் விளாரில் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் சிற்பம் செய்து கொடுத்ததாகவும் அதில் 25 இலட்சம் ரூபாயை பாக்கி உள்ளதை கேட்டதற்கு, நடராஜன் கொலை மிரட்டல் விடுத்தாக புகாரில் கூறியுள்ளார். ஆனால் நடராஜன் தரப்பில் பேசிய ஏர்போர்ட் மூர்த்தியோ 75 இலட்சம் பணத்தை வாங்கிக்கொண்டு வெறும் 3 இலட்சம் மதிப்புள்ள பிளாஸ்டிக் கைகால்களை மட்டுமே கொடுத்துள்ளதாகவும் இதனால் கொடுத்த பணத்தை கேட்டதாகவும் கூறினார், மேலும் ஷீகான் ஹூசைனி மீது பெண் புகார்கள் உட்பட பல்வேறு புகார்களும் உள்ளதால் அதிலிருந்து தப்பிக்க நடராஜனை வழக்கில் இழுத்துள்ளதாகவும் கூறினார்.

ஹூசைனியின் இந்த புகாரின் பேரில் சென்னை போலீசாரால் நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் நடராஜன் கைது செய்யப்பட்டுள்ளார் மேலும் கைது செய்யப்பட்ட நடராஜனை விசாரணைக்காக சென்னை அழைத்து வரப்படுகிறார் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆனால் காவல்துறை இன்னும் இந்த கைது குறித்து உறுதி படுத்தவில்லை என்றும் நெல்லை போலீசார் அவரை கைது செய்யவில்லை என்றும் கூறுகிறார்கள்.

தேசிய விருதுவாங்கிய குழந்தைக்கு விஜய்டிவி விருது தர மாட்டாங்களா - விழா மேடையில் கோபப்பட்ட இயக்குனர் ராம்

தேசிய விருதுவாங்கிய குழந்தைக்கு விஜய்டிவி விருது தர மாட்டாங்களா - விழா மேடையில் கோபப்பட்ட இயக்குனர் ராம்

விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி.

விஜய் விருது வழங்கும் நிகழ்ச்சியில் தங்கமீன்கள் படத்திற்கு சிறந்த படம் என்ற விருது வழங்கப்பட்டது. எல்லோரும் விருது கிடைத்ததும் விருது கொடுத்தவர்களை ஆஹா..! ஓகோ..! என புகழ்ந்து தள்ளுவார்கள். ஆனால் இயக்குனர் ராம் விருதை வாங்கிக்கொண்டு நெஞ்சை உருக்கும் கருத்துகளை தெரிவித்துள்ளார்.

தங்க மீன்கள் படத்தில் ராமுக்கு மகளாக நடித்த குழந்தை நட்சத்திரம் சாதனா கடந்த ஒரு வாரமாக நான் சென்னை வரட்டுமா? எனக்கு விருது தராங்களா என ராமுக்கு அடிக்கடி போன் செய்துள்ளார். உனக்கு எந்த விருதும் தரவில்லை, தங்கமீன்கள் படத்திற்கு மட்டுமே விருது தராங்க எனக்கூறியுள்ளார். அதற்கு சாதனா எனக்கு நேஷனல் அவார்ட் குடுத்துருக்காங்க… விஜய் அவார்ட்ஸ் தரமாட்டாங்களா… தெய்வத்திருமகள்படத்தில் நடித்த சாராவுக்கு விஜய் அவார்ட்ஸ் குடுத்தாங்களே, அந்த மாதிரி எனக்கும் தர மாட்டாங்களா என ராம்மிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்திக்க வைத்துள்ளது அந்த குழந்தை. இதை அப்படியே மேடையில் சொல்லி விஜய் டிவியின் முகத்திரையை கிழித்துள்ளார் ராம்.

மேலும் தங்கமீன்கள் படத்திற்கு உயிர்கொடுத்ததே ‘ஆனந்த யாழில்’ என்ற பாடல் தான். ஆனால் அந்த படல் நாமினி லிஸ்டில் கூட சேர்க்கவில்லை அவ்வளவு தரம் கெட்ட பாடலா அது என கேள்வியை எழுப்பிவுடன் ஒரு நிமிடம் அரங்கமே ஆடிப்போய்விட்டது. மேலும் அந்த பாடலை ஒருமுறை ஒலிபரப்புங்கள் நான் கேட்கவேண்டும் என கேட்டுக்கொண்டார். உடனே கோபிநாத், “சார் அந்த பாடல் இல்லையென்று நினைக்கின்றேன்”என மழுப்பலான பதிலை தெரிவித்தார். ஆனால் ராம் “அந்த படலை பாடத்தெரிந்தவர்கள் யாராவது இந்த விழாவில் உள்ளீர்களா?” எனக் கேள்வியை எழுப்பினார். எப்படியாவது ராம்-யை மேடையைவிட்டு இறக்கிவிட வேண்டும் என்ற நோக்கத்தில் கோபிநாத் அந்த பாடல் வேறு ஒரு லிஸ்ட்டில் நாமினியாகி உள்ளது எனக்கூறினார். எனக்கு தெரியும் அந்த பாடல் எந்த லிஸ்டிலும் இல்லையென்று என ராம் தெரிவித்தார்.

வேறுவழியில்லாமல் கூட்டத்தில் இருந்த ஒருவர் அந்த பாடலை பாடிக்காட்டினார். அவர் பாடிமுடித்ததும்தங்கமீன்கள் படத்திற்கு உயிர்தந்த என் தோழன் யுவன்சங்கருக்குஇந்த விருதை சமர்பிக்கின்றேன் எனக்கூறி யுவனை மேடைக்கு அழைத்து அவரை கவுரவித்தார்.

ராம்மின் இந்த தைரியமிக்க செயலால் வெட்கிதலைகுனிந்தனர் விஜய்டிவியினரும் விருதுகொடுத்த குழுவினரும். டிஆர்பி ரேட்டிங் வேண்டும் என்பதற்காக பெரிய நடிகர்களுக்கு விருதுகளை வழங்கி பணம் சம்பாதிக்க நினைக்கும் தொலைக்காட்சிகளுக்கு சாதனாவின் கேள்விகள் சாட்டையடி.

- தமிழர் முன்னேற்றக் கழகம் அதியமான்

என்ன பயப்படுறியா பாஜக ?? : காங்கிரஸ் கேள்வி

தேர்தல் முடிந்து புதிய அரசு  பதவீயேற்று ஒரு மாத காலம் முடிந்து விட்டாலும் நமது எதிர்கட்சி தலைவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற வேண்டுமானால், மொத்தம் உள்ள இடங்களில் 10 சதவீத இடங்களை பிடிக்க வேண்டும். அதாவது 54 இடங்கள் இருக்க வேண்டும். அந்த அளவு கூட இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. விதிகளின் படி அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்கிற உரிமையில் காங்கிரஸ் இந்த பதவியை கேட்டு வருகிறது. ஆனால் பாஜக இதனை தராமல் தட்டி கழிக்கிறது.



இது குறித்து இன்று பேசிய முன்னால் மத்திய அமைச்சர் கமல்நாத், காங்கிரஸ்க்கு எதிர்கட்சி தலைவர் பதவியை தர பாஜக ஏன் பயப்படுகிறது என்று கேள்வி எழுப்பி உள்ளார். இந்த பதவியை பெறுவதற்கு காங்கிரஸ்க்கு முழு தகுதியும் இருப்பதாக அந்த கட்சியின் தலைவர் சோனியா காந்தி கருத்து தெரிவித்து உள்ளார். இந்த பிரச்சனைக்கு பாஜக சீக்கிரம் முற்றுபுள்ளி வைக்க வேண்டும்.

பேஸ்புக் வந்தார் இளையராஜா : ரசிகர்கள் உற்சாகம்


இசை என்றால் அதற்கு மறுபெயர் இளையராஜா தான். இன்று எத்தனையோ இசையமப்பாளர்கள் வந்து விட்டாலும் அவர்கள் யாரும் இளையராஜாவுக்கு இணையாகாது. அந்த காலத்து பாட்டிகள் முதல் இந்த காலத்து பியூட்டிகள் வரை அனைவரும் இளையராஜாவின் பாட்டுக்கு அடிமை. 1000 படத்திற்கு மேல் இசையமைத்து உள்ளார். இருந்தாலும் கொஞ்சம் கூட தலைகணமோ தற்பெருமையோ இல்லாதவர். இந்த இசைஞனியும் பேஸ்புக் வந்து விட்டார். இவரது பக்கத்தை இதுவரை 1.9 மில்லியன் பேர் லைக் செய்து உள்ளார்கள். இது நாளுக்கு நாள் கூடி கொண்டே போகிறது.



தமிழ் சினிமாவின் சிறந்த இசையமப்பாளர் அது இவர் தான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இவரது மாணவர் ஆவார். இவருக்கு ஆஸ்கர் தராததால் ஆஸ்கர் விருது தான் தனது பெருமையை இழந்து விடுமே தவிர , இவரது பெருமை எந்த விதத்திலும் குறைந்து விடாது.

இவரது பேஸ்புக் பக்க முகவரி   https://www.facebook.com/Ilaiyaraaja ஆகும்.

கெட்ட வார்த்தையில் திட்டி பழி தீர்த்து கொண்ட கிரிக்கெட் வீரர்


லார்ட்சில் சனிக்கிழமை அன்று எம்.சி.சி. அணிக்கும் ரெஸ்ட் ஆப் தி வேர்ல்டு அணிக்கும் இடையே காட்சி போட்டி நடைபெற்றது. இதில் எம்.சி.சி. அணி வெற்றி பெற்றது. இதில் சச்சின் ,திராவிட்,லாரா,வார்னே, முரளிதரன் போன்ற உலகின் தலைசிறந்த வீரர்கள் பங்கேற்றனர். அதனால் இந்த போட்டியை அதிக பேர் பார்த்து ரசித்தார்கள். இதில் இங்கிலாந்து அணியின் கெவின் பீட்டர்சன் எம்.சி.சி. அணிக்காக விளையாடினார். இங்கிலாந்து அணியின் ஆன்ட்ரு ஸ்டராஸ் ஸ்கை ஸ்போர்ட்ஸ் டிவிக்காக வர்ணனையாளர்கள் குழுவில் இடம் பெற்று இருந்தார்.



 அவர் போட்டியின் போது பீட்டர்சன்னை கெட்ட வார்த்தையில் திட்டி விட்டார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஸ்ட்ராஸ்க்கு எதிர்ப்பு கிளம்பியது. அதனால் அவர் இன்று அந்த செயலுக்காக மன்னிப்பு கேட்டார். தென் ஆப்பிரிக்க தொடரின் போது பீட்டர்சன் ,ஸ்ட்ராஸை முட்டாள் என்றார். அதனை பழி தீர்க்கும் விதமாக ஸ்ட்ராஸ் இதனை பயன்படுத்தி கொண்டார்.



மீண்டும் அரசியலில் இருந்து சினிமாவுக்கே வரும் நடிகை


கன்னட சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்யா. இவர் தமிழில் குத்து, கிரி, பொல்லாதவன் , வாரணம் ஆயிரம் போன்ற படங்களில் நடித்தவர். குத்து படத்தின் மூலம் அவரது பெயர் குத்து ரம்யா என்றே மாறி விட்டது. அதனை விரும்பாத அவர் , பெயரை திவ்யா என்று மாற்றி கொண்டார். அரசியல் ஆசையால் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து , இடைத்தேர்தலில் வெற்றி பெற்று எம்.பி ஆனார். இளம் வயது பெண் எம்.பி. என்னும் சாதனையையும் பெற்றார். முழு நேர அரசியலில் ஈடுபடுவதற்காக சினிமாவில் நடிக்காமல் இருந்தார்.



அதன் பின் தற்போது முடிந்த 2014 தேர்தலில் தோல்வி அடைந்தார். அதனால் மீண்டும் சினிமாவுக்கே திரும்பும் முடிவில் இருக்கிறார். தொட்மனே ஹூடுகா என்ற படத்தின் மூலம் மீண்டும் வருகிறார்.

மோடி இரட்டை வேடம் போடுகிறார் : சச்சின் குற்றச்சாட்டு

ஆட்சிக்கு வந்த பிறகு மோடி இரட்டை வேடம் போடுகிறார் என்று முன்னால் மத்திய அமைச்சர் சச்சின் பைலட் குற்றச்சாட்டியுள்ளார். அதிலும் முக்கியமாக உணவு பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வு பிரச்சனையில் அவரது இரட்டை வேடம் தெளிவாக அம்பலமாகிறது என்றார். 56 இன்ச் மார்பு கொண்ட மோடியால் ஏன் விலைவாசியை குறைக்க முடியவில்லை. விலைவாசியை கட்டுக்குள் வைப்போம் என்று கூறிய மோடியின் வார்த்தைகளாகவே போய் விடும் .



காத்ரா ரயில் திட்டமும், பிஎஸ்எல்வி சி 23 திட்டமும் காங்கிரஸின் சாதனைகள் அதனை மோடி திருட பார்க்கிறார். இதற்கு அவர்களின் 10 ஆண்டு கால உயர்வு தான் காரணாம் என்கிறார்கள். விலைவாசி உயர்வுக்கு மட்டும் காங்கிரஸ் ஆட்சி தான் காரணம் என்கிறார்கள்.

சாதனை என்றால் அதற்கு காரணம் பாஜக ஆட்சி
வேதனை என்றால் அதற்கு காரணம் காங்கிரஸ் ஆட்சியா ??
என்று மோடியை முன்னால் அமைச்சர் சச்சின் பைலட் கடுமையாக விமர்ச்சித்து உள்ளார்.

" அம்மா ஆட்டோ " வேண்டும் : நுகர்வோர் கோரிக்கை !!



ஆட்டோ ஓட்டுனர்கள் பயணிகளிடம் அதிகம் காசு வசூலிப்பதால் பயணிகள் கடும் துயரத்திற்கு ஆளாகின்றனர் . எனவே பயணிகளின் சுமையைப் போக்க தமிழக அரசு அம்மா ஆட்டோ போன்ற ஆட்டோக்களை இயக்க வேண்டும் என நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது .

நுகர்வோர் பாதுகாப்பு சார்பாக நேற்று எழும்பூரில் ஒரு கூட்டம் நடந்தது . இந்த கூட்டத்தின் முடிவில் பல தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது .

அந்த தீர்மாணங்களில் ஒன்றாக , சென்னையில் ஆட்டோ ஓட்டுநர்கள் அரசு நிர்ணயித்த கட்டணகளை விட உயர்ந்த கட்டண்ங்களை பெறுகின்றனர் . ஆட்டோ ஓட்டுநர்களின் இந்த தன்னிச்சையான போக்கை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் , அம்மா ஆட்டோ கொண்டு வர வேண்டும் என தீர்மாணம் நிறைவேற்றப்பட்டது .

மேலும் காலியான நீதிபதிகளை நிரப்பும் பணியை நிறைவேற்றவும் , கட்டிடம் கட்ட அனுமதி வாங்க கடுமையான விதிமுறைகளை பின்பற்றவும் , காலவாதி மருந்துகளை தடுக்க அரசு அதிகாரிகள் தனியார் மருந்தகங்களை ஆய்வு செய்யவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன .

தமிழக முதல்வர் இந்த தீர்மாணங்களை கருத்தில் கொண்டு ஆவண செய்ய வேண்டும் .

கல்யாணம் ஆகி ஒரு வாரத்திற்குள் டிடியின் தாலியை காணவில்லை

விஜய் டிவியில் தொகுப்பாளராக இருந்து அனைவரின் மனதையும் கவர்ந்தவர் டிடி, இவரது பெயர் திவ்யதர்ஷினி ஆகும். இவருக்கு கடந்த வாரம் தனது நீண்ட நாள் நண்பனான ஸ்ரீகாந்த் ரவிசந்திரன் உடன் திருமணம் நடபெற்றது. இந்த திருமண விழாவிற்கு பலரும் வந்து வாழ்த்தினார்கள். கல்யாணம் முடிந்த ஒரு வாரத்திலையே விஜய் டிவியின் முக்கிய நிகழ்ச்சியான விஜய் அவார்ட்ஸ் சனிகிழமை அன்று நடைபெற்றது . இதனை டிடி கோபிநாத் உடன் தொகுத்து வழ்ங்கினார். இதில் டிடியின் கழுத்தில் தாலி இல்லை. கல்யாணம் ஆகி ஒரு வாரம் கூட ஆகவில்லை அதற்குள் தாலி எங்கே.



இது அவரது சொந்த வாழ்க்கை தான் ,அதில் தலையிடுவதற்கு நமக்கு உரிமை இல்லை தான். ஆனால் இது பொது மேடைக்கு வரும் போது பொது பிரச்சனை ஆகிறது. தாலி என்பது தமிழர்களின் பண்பாடு ஆகிறது. ஆனால் இது காலபோக்கில் மாறி வருகிறது. அதனை வேண்டும் போது அணிந்து கொள்வதும் ,வேண்டாத போது கழட்டி விடும் காட்சி பொருளாக மாற்றி விட்டார்கள். திருமணம் ஆகி ஒரு வாரமே ஆகியுள்ள நிலையில் தாலியில்லாமல் டிடி டிவி நிகழ்ச்சியில் தொகுக்க வந்தது சலசலப்பை உண்டு செய்துள்ளது

தாலியோடு நிகழ்ச்சிகளை தொகுக்க கூடாது என்று எந்த முட்டாள் சொன்னார்?

ஆசிரியரை கற்பழித்து , வீடியோ எடுத்து மிரட்டிய மாணவர்கள் !!



உத்தரபிரதேசத்தில் மீண்டும் ஒரு அவலம் அரங்கேறியுள்ளது . 23 வயது ஆசிரியர் ஒருவரை ஒருவன் கற்பழிக்க இரண்டு பேர் விடியோ எடுத்துள்ளனர் . இதைப் பற்றி வெளியே தெரிவித்தால் வீடியோவை வெளியிட்டு விடுவோம் என மிரட்டியுள்ளனர் . ஆனால் தைரியமாக அந்த பெண் தனது அப்பாவிடம் இதை கூறினார் . அவரது அப்பா காவல் துறையினரிடம் பூகார் கொடுத்தார் .

இதைப் பற்றி ஆசிரியர் கூறுகையில் , நான் டியுசன் எடுத்துவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டு இருக்கும் போது , பின்னாடி ஒருவன் வந்து என் வாயை மூடி , கட்டப்பட்டு கொண்டு இருக்கும் ஒரு கட்டிடத்திற்கு அழைத்துச் சென்றான் . மேலும் இரண்டு நண்பர்களை மொபைலில் அழைத்து வரச் சொன்னான் . இவர்களும் இந்த விஷயம் வெளியே தெரியக் கூடாது என மிரட்டினர் .

அந்த மூன்று பேரும் கைது செய்யப்பட்டனர் . விசாரணையில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என்று தெரிய வந்துள்ளது .

உத்தர  பிரதேசத்தில் இது போன்ற அவலங்கள் நிறை நடந்தேறி வருகிறது . இதனை தடுக்க வேண்டிய அரசு , தக்க நேரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
  

இந்தியாவின் எதிர்கட்சி தலைவர் யார் ? , இன்று முக்கிய முடிவு

தேர்தல் முடிந்து புதிய அரசு  பதவீயேற்று ஒரு மாத காலம் முடிந்து விட்டாலும் நமது எதிர்கட்சி தலைவர் யார் என்பது இன்னும் தெரியவில்லை. தேர்தல் முடிவுகளில் காங்கிரஸ் கட்சி 44 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. ஆனால் எதிர்கட்சி தலைவர் பதவியை பெற வேண்டுமானால், மொத்தம் உள்ள இடங்களில் 10 சதவீத இடங்களை பிடிக்க வேண்டும். அதாவது 54 இடங்கள் இருக்க வேண்டும். அந்த அளவு கூட இல்லாத அளவுக்கு காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. விதிகளின் படி அவர்களுக்கு எதிர்கட்சி தலைவர் பதவி தர வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் தாங்கள் தான் இரண்டாவது பெரிய கட்சி என்கிற உரிமையில் காங்கிரஸ் இந்த பதவியை கேட்டு வருகிறது.



இது குறித்து முடிவு எடுக்கும் அனைத்து உரிமைகளும் நமது சபாநாயகர் சுமித்ரா மஹாராஜன் கையில் தான் உள்ளது. அவர் நினைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு இந்த பதவியை தரலாம். ஒரு நல்ல எதிர்கட்சி தலைவரும் இருந்தால் தான் ஒரு நல்ல அரசு அமையும். எதிர்கட்சி தலைவர் இருந்தால் தான் நாம் செய்யும் தவறுகளை சுட்டி காட்டுபார்கள் என்பதை பாஜக புரிந்து கொள்ள வேண்டும். அதுவே அவர்களின் தவறுகளை திருத்தி கொள்ள உதவும்.  இதனை உணர்ந்து காங்கிரஸ்க்கு எத்ர்கட்சி தலைவர் பதவி தருவதே சரியான முடிவு.


எதிர்கட்சி தலைவன் என்பவன் எதிரி அல்ல, நம்மை திருத்த உதவும் நண்பன் என்பதை மோடி புரிந்து கொள்ள வேண்டும்.

சாராய கடத்தல்காரர்களை எதிர்த்த மாணவன் வெட்டிக் கொலை !!



21 வயது மாணவனான சவுரவ் சௌத்ரி கடத்தல் கும்பலால் 11 துண்டுகளாக வெட்டி கொலை செய்யப் பட்டுள்ளார் . சவுரவ் சௌத்ரி அங்கே உள்ள கடத்தல் கும்பலை எதிர்த்து போராட்டம் நடத்தியதால் கொலை செய்யப்பட்டார் என தெரிகிறது .

அவரது குடும்பத்தார் தெரிவிக்கையில் , அவரை வீட்டிற்கு வந்து அழைத்துச் சென்றனர் . அதன் பிறகு நாங்கள் அவரை பார்க்கவில்லை . இதனால் போலிஸிடம் பூகார் கொடுத்தோம் . இதனை தொடர்ந்து வழக்கை போலிசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர் . இதுவரை ஒருவன் கைது செய்யப்பட்டுள்ளான் .

நேற்று இந்த கொலை சம்பவத்தால் பாஜக மாநிலத்தில் 12 மணி நேர பந்த் நடத்தியது .

புகை பழக்கத்தை தடுக்க சீகரெட்டுகளின் விலையை உயர்த்தும் மத்திய அரசு !!



மத்திய சுகாதாரத் துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் ஹர்ஷ வர்தன் . இவர் சில தினங்களுக்கு முன் , நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கு கடிதம் எழுதி இருந்தார் . அந்த கடிதத்தில் இளைஞர்கள் பலர் புகையிலை பிடிப்பதால் உயிரை இழக்கின்றனர் . இதனால் இந்த பொருட்களை எளிதில் வாங்க முடியாத வகையில் விலையை உயர்த்த வேண்டும் என தெரிவித்து இருந்தார் . இதன்படி அனைத்து மாநில முதல்வர்களுக்கும் கடிதம் எழுதி உள்ளார் .

அந்த கடிதத்தில் , " நாட்டில் இளைஞர்கள் மத்தியில் புகையிலை பயன்படுத்தும் பழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது . 10 ஆண்டுகளுக்கு முன் புகையிலை பயண்படுத்தும் மக்களின் எண்ணிக்கை 8 கோடியாக இருந்தது , இப்போது இது 10 கோடியாக உயர்ந்துள்ளது . இதனால் இவர்களுக்கு ஏற்படும் நோய்களால் இவர்களுக்கு மருத்துவச் செலவு 1.4 லட்சம் கோடி வரை செலவாகிறது . எனவே இந்த பழக்கத்தை குறைக்க விலையை உயர்த்த வேண்டும் . புகையிலை பொருட்களுக்கு 50 சதவீத வாட் வரியை அமல்படுத்த வேண்டும் . ராஜஸ்தானில் மட்டும் 60 சதவீதம் இருக்கிறது . அதுபோல அனைத்து மாநிலங்களிலும் கொண்டு வர வேண்டும் " என கடிதத்தில் எழுதியுள்ளார் .

இந்த கோரிக்கையை அனைத்து முதல்வர்களும் ஏற்று செயல்படுத்தினால் புகையிலை பயன்பாடு குறையும் வாய்ப்புள்ளது .
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media