BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 2 June 2014

லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியா மற்றும் சீனாவில்


இந்தியாவில் உள்ள காஜூரகோ கோவில் முழுக்க பாலியல் கலவி காட்சிகள் சிற்பங்களாக செதுக்கப்பட்டிருக்கும், அதே போன்று லவ் லேண்ட் என்னும் செக்ஸ் தீம் பார்க்குகள் தென்கொரியாவில்2004ம் ஆண்டில் ஜீஜூ தீவில் ஆரம்பிக்கப்பட்டது, இங்கு பெரிய சிற்பங்கள் பாலியல் உறவுகளில் ஈடுபடுவது போன்ற காட்சிகளுடன் அமைக்கப்பட்டிருந்தன, இவற்றை காணவருகின்ற காதலர்களுக்குள் இயற்கையாக இனம்புரியாத ஈர்ப்பொன்று தோன்றுவதாக கூறப்படுகிறது.

இதே போன்றதொரு லவ் லேண்ட் என்னும் தீம் பார்க் சீனாவில் சாங்கிங் என்ற இடத்தில் கட்டப்பட்டது, இது சீன சமுதாயத்தை பற்றிய தவறான எண்ணத்தை அளிக்கும் என்று கூறி சீன அரசு அதை தடைசெய்து மூடிவிட்டது, மேலும் இதை அழிக்க உத்தரவிட்டது.

# ஓவர்டோஸ் கொடுக்காமல் கோவில்களில் கோபுரங்களிலே பாலுறவு சிலைகளை வைத்து அளவாக கொண்டாடிய இனம் தமிழர் இனம்.

இந்த ஒரு படம் தவிர வேறு படங்கள் எதுவும் இணைக்க முடியாது, love land south korea மற்றும் love land china என்று கூகிள் இமேஜ்ஜில் தட்டி பார்க்கலாம்

"காங்கிரஸ் சர்க்கஸ் கம்பெனியில் உள்ள கோமாளிக் குழுவின் நிர்வாக இயக்குநர் ராகுல் காந்தி" எனக் கூறிய எம்.எல்.ஏ சஸ்பென்ட்

காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தியை விமர்சித்து ராஜஸ்தான் எம்.எல்.ஏ பன்வர் லால் சர்மா, " ராகுல் காந்தி திசை தெரியாமல் செல்கிறார். அவருக்கு கொள்கை எதுவும் இல்லை. அரசியல் தெரியாதவர்கள் அவருக்கு ஆலோசகர்களாக இருக்கிறார்கள். காங்கிரஸ் சர்க்கஸ் கம்பெனி யில் உள்ள கோமாளிக் குழுவின் நிர்வாக இயக்குநர் ராகுல் காந்தி. மக்களவைத் தேர்தலில் கட்சி தோல்வி அடைந்ததற்கு ராகுலும் அவரது ஆலோசகர்களுமே காரணம். ராகுல் மீது பாசம் காட்டுவதை விட்டுவிட்டு கட்சியை வலுப்படுத் தும் நடவடிக்கைகளை கட்சித் தலைவர் சோனியாகாந்தி மேற் கொள்ள வேண்டும்." என்று கடுமையாக பேசியிருந்தார். அவர் அவ்வாறு பேசியதற்காக‌, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலர் பொறுப் பில் உள்ள குருதாஸ் காமத் உத்தரவின்படி சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.

காங்கிரஸ் நடவடிக்கை குறித்து சர்மாவிடம் கேட்டதற்கு, ‘இது பற்றி கவலை இல்லை; ராகுல் பற்றி நான் சொன்னது சரியானதுதான்’ என்று கூறினார்.

தெலங்கானாவின் முதல் முதல்வருக்கு மோடி டிவிட்டரில் வெளியிட்ட‌ செய்தி

தெலங்கானாவின் முதல்வராக இன்று பொறுப்பேற்ற சந்திரசேகர ராவுக்கு, பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டரில் வெளியிட்ட வாழ்த்து செய்தி:

"இந்தியாவிற்கு புதிய மாநிலம் கிடைத்துள்ளது. நாட்டின் 29-வது மாநிலத்தை நான் வரவேற்கிறேன். தெலங்கானாவின் முன்னேற்றத்திற்கு மத்திய அரசு அனைத்து வகையிலும் உதவி புரியும். பல ஆண்டு கால போராட்டத்திற்கும், பல மக்களின் அர்ப்பணிப்பாலும் இந்த மாநிலம் உதயமாகி உள்ளது.
அந்த மக்களுக்கு நாம் இந்த நேரத்தில் நன்றிகூற கடமைப்பட்டு இருக்கிறோம். எதிர்காலத்தில் நாட்டின் வளர்ச்சிக்கு தெலங்கானா மாநிலம் பலம் சேர்க்கும்.
தெலங்கானாவின் முதல் முதல்வராக பதவியேற்ற சந்திரசேகர ராவுக்கு வாழ்த்துகள்" என்று நரேந்திர மோடி தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் 29-வது மாநிலமாக உருவாகியுள்ள தெலங்கானாவின் முதல், முதல்வராக பதவியேற்றார் சந்திரசேகர ராவ்


ஒருங்கிணைந்த ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலங்கானா மாநிலம் இன்று (ஜூன் 2) அதிகாரப்பூர்வமாக பிரிந்தது. மாநிலத்தின் முதல்வராக கே. சந்திர சேகர் ராவ் காலை 8.15 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். இவருடன் 15 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். ஆளுநர் இ.எஸ்.எல் நரசிம்மன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் 9 மணியளவில் மாநிலம் உதயமானதையொட்டி அரசு சார்பில் விழா நடைபெற்றது. மதியம் 12.57 மணிக்கு தலைமைச் செயலகத்தில், தெலங்கானா மாநிலத்தின் புதிய முத்திரை அங்கீகாரத்திற்காக கையொப்பமிடுகிறார்.

பின்னர், மாநில பிரிவினைக்காக உயிர்த் தியாகம் செய்த குடும்பத்தினருக்கு தலா ரூ. 10 லட்சம் மற்றும் வீட்டிற்கு ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பு வழங்கும் கோப்பில் கையெழுத்திடுகிறார்.

சந்திரசேகர ராவின் பதவி ஏற்பு விழாவிற்கு, பிரதமர் நரேந்திர மோடி உட்பட எந்த மத்திய அமைச்சருக்கும் டி.ஆர்.எஸ் கட்சி அழைப்பு விடுக்கவில்லை. இது குறித்து செய்தியாளர்களிடம் சந்திர சேகர ராவ் கூறுகையில் “நான் தற்போது எந்த பதவியிலும் இல்லை. மேலும் புதிய மாநிலத்தில் இதுவரை மாநில டி.ஜி.பி மற்றும் முதன்மை செயலாளர்கள் போன்ற முக்கிய உயர் அதிகாரிகளை நியமனம் செய்யவில்லை. இன்னமும் 15 நாட்களில் மாநிலம் உருவானதற்கான விழா அரசு சார்பில் நடத்தப்பட உள்ளது. இதற்கு பிரதமர் உட்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த தலைவர்கள் அழைக்கப்படுவார்கள்” என்றார்.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media