நன்றி! நன்றி!! நன்றி!!
2 இலட்சம் லைக்குகளை (200K Likes) பெற்றது சற்றுமுன் செய்திகள் பக்கம்.
சற்றுமுன் செய்திகள் 2 இலட்சம் ஃபாலோயர்களையும் பெற்றதற்கு முழு முதற் காரணமான வாசகர்களுக்கு எங்களின் மனமார்ந்த நன்றியை உரித்தாக்குகிறோம், இந்த நாளில் சில புதிய முயற்சிகளை தொடங்க உள்ளோம், அதற்கு உங்கள் ஆதரவை அளிக்கவும். அந்த விவரங்கள் கீழே.
16 டிசம்பர் 2012ல் "சற்றுமுன் செய்திகள்" ஃபேஸ்புக் பக்கம் ஆரம்பிக்கப்பட்டது. அதை முதலில் லைக் செய்து ஃபாலோயர் ஆனவர்
திரு சத்ய சீலன்(Sathya Seelan) முதன் முதலில் எங்கள் மீது நம்பிக்கை வைத்து இணைந்த அவருக்கு இந்த நேரத்தில் அவருக்கு ஒரு ஸ்பெசல் நன்றியை தெரிவிக்கின்றோம்.
சென்ற ஆண்டு ஆகஸ்ட் 15ம் நாள் சற்றுமுன் செய்திகள் பக்கம் 1 இலட்சம் லைக்குகளை பெற்றது, முதல் ஒரு இலட்சம் லைக்குகளை பெற்றது. 8 மாதங்களில் முதல் ஒரு இலட்சம் வாசகர்களையும் அடுத்த 12 மாதங்களில் அடுத்த ஒரு இலட்சம் ஃபாலோயர்களையும் பெற்றது. ஃபேஸ்புக்கில் செய்யப்பட்ட பல மாற்றங்களினால் சற்றுமுன் செய்திகள் பக்கத்தின் பல போஸ்ட்டுகள் நிறைய பேரை சென்றடையவில்லை, ஒரு ஃபேஸ்புக் பக்கத்தின் போஸ்ட்கள் உங்களுக்கு வரவேண்டுமெனில் அந்த பக்கத்தின் போஸ்ட்களில் லைக், கமெண்ட் அல்லது ஷேர் செய்தால் மட்டுமே தொடர்ந்து ஃபேஸ்புக் டைம்லைனில் இந்த பக்கங்கள் காண்பிக்கப்படும், இல்லையென்றால் சிறிது நாட்களில் அந்த பக்கங்களில் போஸ்ட்களை காண்பிக்காது. எனவே சற்றுமுன் செய்திகளின் போஸ்ட்களை படிப்பது மட்டுமின்றி அவ்வப்போது லைக், கமெண்ட், ஷேர் செய்யுங்கள்.
சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரல் அற்றவர்களின் குரலாக உள்ளது, டிவி, பிரஸ் மீடியாக்க்கள் தொடக்கத்தில் மாணவர்களின் ஈழத்தமிழர் ஆதரவு போராட்டத்திற்கு கவரேஜ் கொடுக்காமல் அலட்சிய படுத்திய போது இணைய ஊடகமே அவர்களின் போராட்டத்தை உலகுக்கு சொன்னது. மாணவர்களின் கல்வி உதவிக்கான கோரிக்கைகள் உட்பட பல்வேறு சமூக நலன் சார்ந்த செய்திகளை வெளியிட்டுள்ளோம்.
அச்சு, டிவி மற்றும் அனைத்து ஊடகங்களும் ஒருவழிப்பாதையாகவே உள்ளன, செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கும் செய்தியை வாசகர்களுக்கு சென்று சேரும், ஆனால் குடிமக்களின் செய்திகள் மக்களிடம் பரவுவது எப்படி? இணைய ஊடகங்களில் கமெண்ட் பாக்ஸ் குடிமக்கள் தங்கள் கருத்துகளை சொல்ல உதவுகிறது, ஆனால் இது மட்டும் போதாது.
குடிமக்கள் ஊடகம்
ஊடகங்கள் ஒருவழிப்பாதையாக இல்லாமல் இருவழிப்பாதையாக குடிமக்கள் ஊடகமாக இணைய ஊடகங்கள் திகழ வேண்டும் என்ற நோக்கில் "சற்றுமுன் செய்திகள்" என்ற குழுமத்தை உருவாக்கியுள்ளோம்,
https://www.facebook.com/Satrumun#!/groups/satrumun/ இதில் அனைவரும் இணைந்து உங்கள் செய்திகளை கருத்துகளை பகிருங்கள், அந்த செய்திகளை நாங்கள் சற்றுமுன்.நெட் இணையதளத்திலும், சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்திலும் பகிருகிறோம்.
நட்சத்திர பதிவர்
ஃபேஸ்புக்கில் பதிவிடும் பலர் சிறந்த சமூக அக்கறையுடனும், தமிழ், வரலாறு, அறிவியல், நகைச்சுவை, கலை என பல்வேறு பரிமாணங்களில் சிறந்து விளங்குகிறார்கள், இவர்களை பற்றிய அறிமுகத்தை பல இலட்சம் பேர் படிக்கும் சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்திலும் இணையதளத்திலும் அளிக்கலாம் என உள்ளோம், இதற்கு உங்களின் பங்களிப்பை வேண்டுகிறோம், நீங்கள் விரும்பும் ஒரு பதிவர் பற்றிய குறிப்பை அவரது ஃபேஸ்புக்/வலைப்பதிவு ஐடி உடன் எங்களுக்கு அனுப்பவும், நாங்கள் அதை பக்கத்திலும், இணையதளத்திலும் வெளியிடுவோம்.
தினம் ஒரு தளம்
தமிழில் பல சிறந்த தளங்கள் லாப நோக்கின்றி பல ஆண்டுகளாக தனி நபர்களின் சொந்த முயற்சியால் நடத்தப்பட்டு வருகின்றன, இவைகள் குறித்த குறிப்புகளை எங்களுக்கு அனுப்பினால் அதையும் நம் பக்கத்திலும், இணைய தளத்திலும் வெளியிடுவோம்.
விளம்பரம்
சற்றுமுன்.நெட் இணைய தளம் ஒரு நாளைக்கு பல இலட்சம் பேர் பார்வையிடும் இணையதளமாக உள்ளது, மேலும் சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தையும் இலட்சக்கணக்கானோர் படிக்கின்றனர். இதில் விளம்பரம் செய்து வந்தால் சற்றுமுன் செய்திகள் நிறுவனமும் விளம்பரதாரர்களும் பயன் அடையலாம். சற்றுமுன் செய்திகள் நிறுவனம் மேலும் பல முயற்சிகளை மேற்கொள்ள இந்த விளம்பரங்கள் உதவும்.
மீண்டும் அனைவருக்கும் நன்றி கூறுகிறோம்.
சற்றுமுன் செய்திகள் எப்போதும் குரலற்றவர்களின் குரலாகவும், உண்மையின் பக்கம் இருப்போம் என்றும் இந்நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறோம். உங்கள் நண்பர்களுக்கும் நமது சற்றுமுன் செய்திகள் பக்கத்தை ஷேர் செய்து உங்கள் ஆதரவை தாருங்கள்.
இணையதளம்
http://www.satrumun.net/
எங்கள் மின்னஞ்சல் முகவரி satrumun.net(at)gmail.com
எங்களை பற்றிய உங்கள் கருத்துகளையும், விமர்சனங்களையும் தெரிவிக்கவும், நாங்கள் எந்த விதத்தில் செயல்படலாம் என்ற உங்கள் அறிவுரைகளையும் கமெண்ட்டில்/ ஈமெயிலில் தெரிவிக்கவும்.