BREAKING NEWS

Ads

உலகம்

Sunday, 12 October 2014

பண்டைய உலகம் கண்டுபிடிப்பு



தற்போதுள்ள பனி நிறைந்த அண்டார்டிகா பகுதியில் 14 லட்சம் ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் இருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இதன் மூலம் இப்பகுதியில் ஏற்கெனவே ஒரு “உலகம்’ இருந்துள்ளதை விஞ்ஞானிகள் தங்கள் கண்டுபிடிப்பின் மூலம் ஊர்ஜிதம் செய்துள்ளனர்.

அண்டார்டிகாவின் தொலைதூர மலைப்பகுதிகளில் தாவரங்கள், விலங்கினங்கள் ஆகியவற்றின் கல்லினுள் பதிந்த படிமங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள வடக்கு டகோடா மாநில பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ஆடம் லெவிஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் இந்த அரிய கண்டுபிடிப்பை வெளிப்படுத்தியுள்ளதாக, “தி டெய்லி டெலிகிராப்’ செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த 2 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு அண்டார்டிகா பகுதியில் நிலவிய கடுமையான பனிப்பொழிவு மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக உயிரினங்கள் அப்படியே பனியில் மடிந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

 பாதுகாக்கப்பட்ட உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி, எரிமலை சாம்பல்கள் மூலம் கிடைத்த ஆய்வுகள் மூலம் அங்கு பல லட்சம் ஆண்டுகளுக்கு முன் பெரிய பெரிய பனிப்பாறைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது. அப்பகுதியில் கிடைத்த கடின ஓடுள்ள நீர்வாழ் பிராணியின் படிமங்கள், பாசி வகைகள் ஆகியவற்றின் மூலம் உயிரினங்கள் வாழ்ந்ததற்கான அடையாளம் கண்டறியப்பட்டுள்ளது.

சுற்றுச்சூழல் மாசு காரணமாக உலகளாவிய விழிப்புணர்வு தற்போது ஏற்பட்டிருந்தாலும், “பழைய’ உலகம் ஒன்று இருந்து அழிந்துபோனதை கருத்தில் கொள்ள இந்த கண்டுபிடிப்பு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.

அபாயகரமான மீன் : ஈல்



ஈல்’ என்ற ஒரு வகை மீன்கள் தொடர்ந்து பயணம் செய்து உலகத்தின் ஒரு முனையில் இருந்து மறுமுனை வரை சென்றுவிடுமாம் .அதுமட்டும் இல்லை உலகத்தில் உள்ள உயிரினங்களில் உடலில் இருந்து அதிகமான மின்சக்தியை வெளிப்படுத்தும் ஒரே உயிரினம் இந்த ஈல்’ வகை மீன்கள்தானாம் . இந்த மீன்களின் உடலில் இருந்து ஒரு வினாடிக்கு 400-முதல் 650 வோல்ட்டு மின்சக்தி வெளிப்படுகிறதாம் .இந்த வகை மீன்கள் அதிகமாக பிரே சில், கொலம் பிய, வெனிசுலா, பெரு ஆகிய நாடுகளில் காணப்படுகிறதாம் . இதன் அருகில் இருக்கு ஒரு மனிதனைக்கூட இதன் சக்தியால் 5 நிமிடங்களில் கொன்றுவிடும் சக்தி இந்த வகை மீன்களில் உள்ளது என்றால் பார்த்துக்கொள்ளுங்கள் .

பொது அறிவு : நில அளவைகள்



தெரிந்து கொள்ள வேண்டிய நில அளவை

1 ஹெக்டேர் - 2 ஏக்கர் 47 சென்ட்
1 ஹெக்டேர் - 10,000 சதுர மீட்டர்
1 ஏக்கர் - 0.405 ஹெக்டேர்
1 ஏக்கர் - 4046.82 சதுர மீட்டர்
1 ஏக்கர் - 100 சென்ட் (4840 சதுர கெஜம்)
1 சென்ட் - 435.6 சதுர அடிகள்
1 சென்ட் - 40.5 சதுர மீட்டர்
1 கிரவுண்ட் - 222.96 சதுர மீட்டர் (5.5 சென்ட்)
1 கிரவுண்ட் - 2400 சதுர அடிகள்
1 குழி - 44 சென்ட்
1 மா - 100 குழி
1 டிஸ்மிஸ் - 1.5 சென்ட்
1 காணி - 132 சென்ட் (3 குழி)
1 காணி - 1.32 ஏக்கர்
1 காணி - 57,499 சதுர அடிகள்
1 அடி - 12 இஞ்ச் (30.48 செ.மீட்டர்)
1 மைல் - 1.61 கிலோ மீட்டர்
1 மைல் - 5,248 அடிகள்
1 கிலோ மீட்டர் - 1000 மீட்டர் (0.62 மைல்)
1 மிட்டர் - 3.281 அடிகள்

Man Tries to Rape, Angry Mob Chops His Penis Off கற்பழிக்க முயன்றவரின் ஆணுறுப்பு வெட்டப்பட்டது

Man Tries to Rape Teenager, Angry Mob Chops His Penis Off

A man had his penis cut off by an angry mob for attempting to rape a teenager in Ganganagar, Rajasthan. The incident took place after shocked members of the public saw the man in an alley, pinning a terrified girl to a wall.
 ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள காந்திநகர் கிராமத்தில் ஒரு பெண்ணை கற்பழிக்க முயன்றவரின் ஆணுறுப்பை கசாப்புக் கடைக்கு இழுத்துச் சென்று வெட்டினார்கள் கிராம மக்கள்.

பெண்ணை கற்பழிக்க முயன்ற  சம்பவத்தை கேள்விப்பட்ட கிராம மக்கள் ஆத்திரத்தில் அவரை ஒரு மணிநேரமாக அடித்து உதைத்து பின் அருகிலுள்ள கசாப்புக் கடைக்கு குறித்த நபரை அழைத்துச் சென்று அவரின் ஆணுறுப்பை வெட்டி வீதியில் எறிந்து தங்களது கோபத்தை வெளிக்காட்டி உள்ளனர். ஆனால் உள்ளூர் காவல்துறை அதிகாரி  பொதுமக்கள் சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்க முயற்சிக்கக் கூடாது. இப்படியான குற்றங்கள் வருந்தத் தக்கது என்றார்.

ஜெயலலிதா விடுதலைக்காக அமைச்சர் நடத்திய காவடி வேண்டுதல் ( படங்களுடன் ) ..

அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் 4 வருடங்கள் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் . இவர் விடுதலை ஆக வேண்டுமேன மதுரை அமைச்சர் செல்லூர் ராஜூ காவடித் திருவிழா நடத்தினார் . 

காவடி மட்டுமில்லாமல் வேல் குத்துதல் , பால் குடம் , பறவைக்காவடி என பல்வேறு வேண்டுதல் நடத்தி மதுரையை ஸ்தம்பிக்க வைத்தார் . 

இது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் என வலியுறுத்திய போதும் அமைச்சர்கள் தங்கள் செல்வாக்கு மற்றும் அம்மாவிற்கான விசுவாசத்தைக் காட்ட தொடர்ந்து இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் . 






Sachin Tendulkar request to public மக்களிடம் சச்சின் வைத்து இருக்கும் புதிய வேண்டுகோள் !!

தற்போது இந்தியா முழுவதும் பேசப்பட்டு வரும் ஒரு விஷயமாக மாறி உள்ளது மோடியின் தூய்மையான இந்தியா திட்டம். அக்டோபர் 2 ஆம் தேதி காந்தியின் பிறந்த நாள் அன்று மோடி இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். 2019 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை தூய்மை படுத்துவது தான் அவர்களது திட்டம் ஆகும்.


இதற்காக மோடி 9 நபர்களுக்கு அழைப்பு விடுத்தார். அந்த 9 நபர்களையும் மேலும் 9 நபர்களுக்கு அழைப்பு விடுக்க சொன்னார். மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க சச்சின் டெண்டுல்கர் இந்த திட்டத்தில் இணைந்தார். இந்த திட்டத்தில் அனைவரும் இணைய வேண்டும் என வேண்டுகோள் வைத்து உள்ளார். சுத்தமான இந்தியாவை உருவாக்க நாம் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். நமது சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்தால் தான் நாமும் ஆரோக்கியமாக இருக்க முடியும். மேலும் அதனால், சுகதாரமான இந்தியாவை உருவாக்க முடியும்" என்றார் . 

Hud Hud crosses its boundary in Vishakapatnam கரையை கடந்தது புயல் , உதவிக்கு இந்த எண்களில் அழைக்கலாம் !!

Hud Hud crosses its boundary in Vishakapatnam . Though the intensity of cyclone had been reduced it caused a terrible damage in the affected areas . The helpline numbers also given .

ஹுத்ஹுத் புயல் ஆந்திராவின் விசாகப்பட்டினம் அருகே கரையை கடந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வங்கக் கடலில் வடக்கு அந்தமானில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுப்பெற்று புயலாக மாறியது. ஹுத்ஹுத் என பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயல் மிக தீவிரப் புயலாக உருவெடுத்தது. இந்த புயலுக்கு ஆந்திராவில் 3 பேரும், ஒரிசாவில் 2 பேரும் பலியாகி உள்ளார்கள். விசாகப்பட்டினம் தான் இந்த புயலால் அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளது. அங்கு மின்சாரம், தொலைத்தொடர்பு என எல்லா சேவையும் பாதிக்கப்பட்டு உள்ளது. ஏதேனும் உதவிக்கு அழைக்க உதவி எண்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஆந்திரப் பிரதேசம்- 9849904019, 0853 - 2234870,2234301;

சம்பல்பூர்- 0663-2533037, 8455886999,

ஸ்ரீகாகுளம்  08942—225361 9652838191, toll free 1800—425—6625

விஜயநகரம்  08922—278770/236947

விசாகப்பட்டினம் 0891—2563121, toll free 1800—425—00002

கிழக்கு கோதாவரி 0884—2365424/2365506, toll free 1800—4253077/4251077

மேற்கு கோதாவரி 08812—230050/230934/252655, toll free 1800—4258848

பெண்ணின் மாதவிடாய் காலத்தில் ஒரு ஆண் எப்படி நடந்து கொள்ள வேண்டும் ??


* அவளிடம் அதிக கேள்விகளை கேட்டு அவளை தொந்தரவு செய்யாதீர்கள்.

* அவளை வெளியே அழைத்து செல்லுங்கள், பயணம் குறைவாக உள்ள இடத்துக்கு அழைத்து செல்லுங்கள்.

* அவளிடம் அந்த நாட்களில் பொறுமையாக இருங்கள், தவறு அவள் மீது இருந்தாலும் அவளை திட்டாதீர்கள்.

* அவளுக்கு சாக்லேட்களை அதிகம் வாங்கி கொடுங்கள். அது அவர்களது உடலுக்கு ஏதுவாக இருக்கும்.

* அவள் கேட்பதற்கு முன்பாக அவளுக்கு தேவையான நாப்கின்களை வாங்கி வைத்து இருங்கள்.

*அவளிடம் தேவையில்லாத சண்டையில் ஈடுபடாதீர்கள்.

பெண்களிடம் ஆண்கள் சொல்வதற்கு தயங்கும் தவிர்க்கும் 5 காரியங்கள் !!

There are some things which men afraid to tell to women .



பெண்களிடம் ஆண்கள் சில காரியங்களை சொல்ல மிகவும் தயங்குவார்கள் . அப்படி அவர்கள் சொல்ல தயங்கும் சில காரியங்கள் இதோ :

* தனது உண்மையான சம்பளம் என்ன என்பதை ஒரு பெண்ணிடம் சொல்ல ஆண் விரும்ப மாட்டான்.

* தனது பழைய பெண் தோழி பற்றிய எந்த தகவல்களையும் வாய் திறக்க மாட்டான்.

* தற்போது கூட அவனது கண்ணுக்கு ஏதாவது பெண் அழகாக பட்டால் அதை அவளிடம் சொல்ல மாட்டான்.

* மனைவியிடம் கேட்காமல் தனது நண்பர்களை உணவு அருந்த வீட்டிற்கு அழைக்க மாட்டார்கள்.

* எனக்கு எல்லாம் தெரியும் நீ ஒன்றும் சொல்ல வேண்டாம் என சொல்ல தயங்குவார்கள்.

இந்தியன் கால்பந்து லீக்கில் பங்கேற்க உள்ள பிரபல உலக கால்பந்து வீரர்கள் !!



இன்று இந்திய கால்பந்து வரலாற்றில் ஒரு புரட்சியாக பார்க்கப்படும் ஐ.எஸ்.எல் என்னும் இந்தியன் சுப்பர் லீக் தொடங்க உள்ளது . இந்த லீக்கில் உலக அளவில் பிரபலமான சில கால்பந்து வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர் . அப்படி கலந்து கொள்ள வீரர்களின் பெயர்கள் கீழ் வருமாறு :

1 ) அலெசண்ட்ரோ டெல் பியரோ

இத்தாலியைச் சேர்ந்த இவரின் வயது 39 . டில்லி டயனமோ அணிக்காக ஆட உள்ளார் . இத்தாலி அணிக்காக உலகக் கோப்பை போட்டிகளில் பங்கேற்றுள்ளார் .


2 ) நிகோலஸ் அனெல்கா :

செல்சி அணி ரசிகர்களுக்கு இவரை கண்டிப்பாக தெரியும் . ஸ்டிரைக்காரக ஆடும் இவர் மும்பை சிட்டி அணிக்காக ஆட உள்ளார் . இவர் பல கிளப்களில் ஆடி உள்ளார் . மும்பை இவரது 12 வது கிளப் ஆகும் .



3 ) ராபர்ட் பைரஸ் :

அர்செனல் அணியின் நட்சத்திர ஆட்டக்காரரான இவர் 40 வயதிலும் இன்னும் திறமையுடன் இருக்கிறார் . இவரின் அனுபவம் கோவா அணிக்கு உதவியாக இருக்கும் .


4 ) மார்கோ மாட்டாராசி :

2006 ஆம் ஆண்டு உலக கோப்பை பைனலை பார்த்த யாரும் இவரை மறந்திருக்க முடியாது . ஸிடேனிடம் முட்டு வாங்கியவர் இவர் தான் . இவர் சென்னையின் எப்.சி அணிக்காக ஆட இருக்கிறார் .



5 ) டேவிட் ஜேம்ஸ் :

44 வயதான இவர் கோல் கீப்பர் . இன்னும் தன்னை தாண்டி கோல் போகாது என்பதை கேரள அணிக்காக விளையாடி நிருபீக்க உள்ளார் .



6 ) லுயிஸ் கார்சியா :

ஸ்பெயின் அணியைச் சேர்ந்தவரான இவர் பார்சிலோனா , அத்லெடிகோ மாட்ரிட் , லிவர்பூல் ஆகிய அணிகளுக்காக விளையாடி உள்ளார் . இவர் இப்போது அத்லெடிகோ டி கொல்கத்தா அணிக்காக ஆட உள்ளார் .



7 ) கேப்டிவில்லா

ஸ்பெயின் அணியின் உலக கோப்பை வென்ற டீமில் இவரும் இருந்தார் . இடது பக்கத்தில் டிபண்டராக ஆடும் இவர் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிக்காக ஆட உள்ளார் .


8 ) மைக்கேல் சோப்ரா

இவரது தந்தை ஒரு இந்தியர் . இவர் இங்கிலாந்து பிரீமியர் லீக் போட்டிகளில் பங்கேற்று விரைவாக கோல் அடித்த சப்ஸ்டியுட் என்ற பெருமையைப் பெற்றார் ( 15 விநாடிகள் ) . கேரள பிளாஸ்டர்ஸ் அணிக்காக ஆட உள்ளார் .


9 ) எலனோ

பிரேசில் நாட்டைச் சேர்ந்த இவர் ஒரு சிறந்த நடுகள வீரர் . மேலும் ப்ரீகிக் மூலம் கோல் அடிப்பதில் வல்லவர் . இவர் சென்னையின் எப்.சி அணிக்காக ஆட உள்ளார் .



10 ) மைக்கேல் சில்வெர்ஸ்டர்

இவர் ஒரு டிபண்டர் . இவரும்  சென்னையின் எப்.சி  அணிக்காக ஆட உள்ளார்

ரஜினியின் அரசியல் பிரவேசம்!!!! பேஸ்புக் பதிவர் ஒருவரின் அருமையான கட்டூரை !!


ஆயிரம் ஆண்டுகால தமிழர் வரலாற்றில் மக்கள் நலனில் அக்கறை கொண்டு ஆண்ட எத்தனையோ மன்னர்கள், பேரரசர்கள் உண்டு. தமிழனின் பெருமையாக அவர்கள் கட்டிய பல்லாயிரக்கணக்கான கோவில்களையும் மாட அரண்மனைகளையும், கொட்டாரங்களையும் நம்மால் காட்ட முடிகிறது. ஆனால் எனக்கு தெரிந்து மக்கள் நலனுக்காக மன்னர்கள் கட்டிய ஒரே ஒரு மருத்துவமனையையோ, கல்விக் கூடத்தையோ, ஆராய்ச்சி கூடத்தையோ, பயிற்சிக் கூடத்தையோ நம்மால் காட்ட முடியவில்லை.
மீனாக்ஷி அம்மன் கோவில் உலக அதிசயம், மகாபலிபுரம் சிற்பக் கலையின் உச்சம் என்று மார்தட்டும் நம்மால், அக்காலத்தில் பஞ்சத்திலும் பட்டினியிலும் செத்தவர்களுக்கு தொழில் கற்றுக் கொடுக்கவோ, அறியாமையை அகற்ற கல்வி கற்றுக் கொடுக்கவோ, பிணி தீர்க்கும் மருத்துவ வசதிக்கோ அரசர்கள் எந்த முயற்சியும் எடுக்கவே இல்லை. ஆயிரம் ஆண்டுகால கோவில் என்று பெருமையுடன் காட்டும் நம்மால் ஆயிரம் ஆண்டுகால கல்லூரி என்றோ, ஆயிரம் ஆண்டு கால மருத்துவமனை என்றோ காட்ட எதுவுமே இல்லை.
ஆனால் குடிக்கும் கூத்திற்கும் என்றும் ஆதரவு அளிக்கும் சமூகம் நம் தமிழ் சமூகம். கோவிலில் ஆடுபவர்களுக்கு கிராமத்தை எழுதி வைக்கும் பெருமை கொண்டது. அறிஞர்களும் அறிவியலாளர்களும், சிந்தனையாளர்களும் பட்டினியில் சாகும் போது ஆட்டக்காரர்களுக்கு அணி செய்து அழகு பார்த்த பரம்பரை நாம். அதனாலேயே அறிவும் அறிவியலும் சிந்தனையும் வளரவில்லை நம் சமூகத்தில். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்று சொல்லிய வள்ளுவருக்கு பிறகு இரண்டாயிரம் வருடம் தேவைப்பட்டது பிறப்பால் மனிதன் சமம் என்று பெரியார் வந்து சுயமரியாதை சொல்லிகொடுக்க!!
சுயமரியாதை இல்லாத, அடிமை குணத்துடன், பிற்போக்கு எண்ணம் கொண்ட, குறுகிய எண்ணத்துடன், சுயநலம் மிக்க அடுத்தவனுக்கு என்ன நடந்தாலும் தான் நல்ல இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்ட, பொறாமையும் வஞ்சமும் கொண்ட, அறிவுசார் விசயங்களில் ஆர்வம் இல்லாத ஒரு இனமாகவே தமிழர் இனம் இருந்து வந்துள்ளது. விதிவிலக்குகள் இருக்கலாம். இன்றும் அவ்வாறே உள்ளது.
மழைநீரில் அடித்துச்செல்லப்பட்டு சிறுகுழந்தை கால்வாயில் விழுந்து இறந்தாலும் அஜித் விஜய் சண்டையே டுவிட்டர் ட்ரெண்டில் முன்னிலை வகிக்கிறது. வெப்சைட் நடத்துபவர்களிடையே ஒரு பேச்சு உண்டு. தமிழில் நடிகைகளை பற்றி நாலு வரி எழுதினால் போதும். வெற்றிகரமாக வெப்சைட் நடத்தலாம் என்று. முற்றிலும் உண்மை. உலகத்தை பற்றி கவலைப்படாமல் இன்று நீ கூத்தில் கவனம் செலுத்தினால் நாளை உன் குழந்தை கால்வாயில் சாகும் போது பக்கத்து வீட்டில் எந்திரன் படம் பார்த்துக்கொண்டு இருப்பர்.
அறிவியலாளர்களும், மெத்தபடித்தவர்களும் வெளிநாடு செல்கின்றனர் என்றால், "கூமுட்டைகளே! உங்களோடு சேர்ந்து என்னையும் இது எந்த நடிகையின் தொப்புள் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட சொல்கிறீர்களா? நானாவது நானோ டெக்னாலஜி பற்றி ஆராய்கிறேன். உங்கள் பரம்பரையில் அறிவியலாளர்களுக்கு நீங்கள் கொடுக்கும் மரியாதையை எனக்கு தெரியும்" என்று தான் அர்த்தம்.
புற நோயளியாக ஐம்பது ருபாய் கொடுக்க வக்கில்லாத தண்டம் எல்லாம் முன்னூறு ரூபாய்க்கு முதல் ஷோ பார்த்தால் உனக்கு எந்த முட்டாள் வைத்தியன் மருத்துவம் பார்ப்பான்? கூடங்குளம் வெடித்து எவன் செத்தால் என்ன, எனக்கு கரண்ட் வந்தால் போதும். யார் ஆட்சிக்கு வந்தால் என்ன டாஸ்மாக் போதும். புறணி பேச சினிமா கிசுகிசு போதும். சாலை வசதி, குடிநீர் வசதி, கல்வி வசதி போன்ற அடிப்படை உரிமைகளை கூட ஆட்சியாளர்களிடம் கேட்டு பெறமுடியாத பொறுக்கி தின்னிகள் தான் நாம்.
இந்நிலையில் அடுத்த மன்னனை தேட ஆரம்பித்து விட்டோம். ஆயிரம் ஆண்டு கழித்து ஐநூறு கோடி வசூல் செய்த படம் எங்கள் முதல்வர் நடித்தது என்று வரலாறு பேசும். நாமோ சிறு குழந்தைகளை கால்வாயிடமும், வளர்ந்த மூடர்களை டாஸ்மாக்கிடமும் பறிகொடுத்து, எப்போதும் மூடர்களாய் எழுபிறப்பும் அறிவிலிகளாய் இருப்போம். வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!
வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!
வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!
வாருங்கள் அடுத்த முதல்வரை இருட்டுக்குள் தேடுவோம்!!

நன்றி 

ஜெயலலிதாவை சிறையில் பார்க்கச் சென்ற நடிகைகள் ஏமாற்றத்துடன் திரும்பினர் !!

Some actress and Ministers wanted to meet ADMK chief in prison . But they were disappointed as Jayalaitha didn't want to meet them .

அதிமுக தலைவர் ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் . இவரை சந்திக்க சனிக்கிழமை அன்று பெங்களூரு பார்ப்பன அக்ரஹார சிறைக்கு நடிகைகள் பாத்திமா பாபு , குயிலி ,சரஸ்வதி , வாசுகி ஆகியோர் சிறைக்குச் சென்றனர் . அவர்களுடன் சில அமைச்சர்கள் மற்றும் எம்.பிக்கள் இருந்தனர் .

ஆனால் ஜெயலலிதா அவர்கள் யாரையும் பார்க்க விரும்பவில்லை என தெரிவித்து விட்டதால் , அவர்கள் ஏமாற்றத்துடன் மீண்டும் திரும்பினர் . சிறை வாசலில் காத்திருந்து விட்டு மீண்டும் திரும்பினர் .

ஜெயலலிதா சிறையில் இருந்த இந்த நாட்களில் இதுவரை யாரையும் சந்திக்க விரும்பவில்லை . முதலில் இவரை சிறையில் அடைக்கும் போது பல தொண்டர்கள் வெளியே காத்து இருந்தனர் . ஆனால் ஜெயலலிதா யாரையும் சந்திக்க விரும்பவில்லை என்பதால் இப்போது தொண்டர்கள் கூட்டம் குறைந்து கொண்டே வருகிறது .

அஜித்தின் 55 வது படம் குறித்த சுவாரஸ்யமான புதிய தகவல்கள் !!

Ajith's new fil still unnamed , often called by Thala 55 is being directed by Gowtham Menon . Some of the facts about the film are given below

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜீத் தற்போது ஒரு படத்தில் நடித்து வருகிறார். இது அஜீத்தின் 55 வது படமாகும். படத்துக்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. இது இப்போதைக்கு தல 55 என அழைக்கப்பட்டு வருகிறது. இது குறித்த சில தகவல்களை பார்ப்போம்.

* இதில் அஜீத்துக்கு 2 கெட் அப்கள் தான் , 2 ரோல் இல்லை. ஒன்று இளமையான பழைய அஜீத், மற்றொன்று இப்போது இருக்கும் சால்ட் அண்ட் பெப்பர் லுக்.

* அஜீத்தின் 28 முதல் 38 வயது வரையிலான அஜித்தின் கதை.

* படத்தின் பிளாஷ் பேக்கில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷாவும், கதையின் போது அனுஷ்காவும் ஜோடியாக நடித்து உள்ளார்கள்.

* தல இந்த படத்திற்காக குத்து சண்டையும், கிதார் வாசிக்கவும் கற்று கொண்டார். அதனை சரியான தருணத்தில் கௌதம் பயன்படுத்தி உள்ளார்.

* படத்தில் அஜித்துக்கு என தனியாக பஞ்ச் டயலாக்குகள் இல்லை. ஆனால் கதையோடு வரும் வசனங்கள் ரசிகர்களை கவரும் வண்ணம் இருக்கும்.

* இந்த படத்தில் அஜித்துக்கு இன்ட்ரோ சாங்கே கிடையாது.

* படத்துக்கு தலைப்பு சத்யா அல்லது ஆயிரம் தோட்டாக்கள் என வைக்கப்படலாம்.

* இந்த படத்தின் அடுத்த பாகத்துக்கான கதையையும் கௌதம் ரெடி செய்து விட்டார்.

* படத்தின் கிளைமாக்ஸ் சஸ்பென்சாகவே உள்ளது . இதனை இன்னும் அஜித்திடம் கூட சொல்லாமல் இருக்கிறார்கள். இது கௌதமின் ஸ்டைலாம்.

ரஜினிக்கு நேரடி அழைப்பு விடுத்தது பாஜக, அரசியல் மாற்றம் வருமா ??

BJP Tamil Nadu gave direct invitation to Modi to join BJP . But when asked about whether he will be a CM candidate , BJP officials told that it will be decided BJP central .

பாஜகவின் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் சென்னையில் உள்ள அவர்கள் தலைமையகத்தில் நடைபெற்றது. இதற்கு மாநில பாஜக தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தலைமை தாங்கினார். இதில் மாநில் பொது செயலாளர் வானதி சீனிவாசன், மோகன் ராஜூலு, 10 மாவட்ட நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 2016 தேர்தலை எப்படி எதிர்கொள்வது என்பது குறித்து இதில் கலந்து ஆலோசிக்கப்பட்டது. அடுத்து பொதுக்குழு தீபாவளிக்கு பிறகு இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இறுதியில் ரஜினிகாந்த் பாஜகவுக்கு ஆதரவு அளித்தால் 2016 தேர்தலில் அவரை முதல்வர் வேட்பாளர் ஆக்குவீர்களா என நிருபர்கள் தமிழிசையிடம் கேட்டதற்கு, ரஜினி தேசிய எண்ணம் கொண்டவர். அவரது ஆதரவு எங்களுக்கு கிடைத்தால், அது எங்களது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். முதல்வர் வேட்பாளராக அவர் முன்னிருத்தபடுவாரா என்னும் கேள்விக்கு தேசிய தலைமை தான் முடிவு செய்யும் என கூறிவிட்டார்.

மனித உடலிலுள்ள அதிசயங்கள்

  • மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
  • இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.
  • ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம். உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறை கண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
  • உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
  • நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
  • நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன.

அதிசயங்களின் ரகசியம்


அதிசயங்களின் ரகசியம்: உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தை கொண்டுள்ளது.


  • பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இன்னும் விடைகிடைக்கவே இல்லை. பிரமிடுகளில் மிகப்பெரிய பிரமிடான "கிஸா" பிரமிடு 23 லட்சம் கற்களால் கட்டப்பட்டது.ஒவ்வொரு கல்லும் 2 முதல் ஒன்பது டன் வரை எடை கொண்டது. இந்த கற்களை எங்கிருந்து எப்படி இழுத்து வந்தார்கள்; ஒன்றின் மீது ஒன்றாக எப்படி ஏற்றினார்கள் என்பது இன்னும் மர்ம முடிச்சாகவே உள்ளது.இந்த அளவுக்கு கற்களை தோண்டி எடுத்தால் பிரமாண்டமான பள்ளங்கள் ஏற்பட்டிருக்க வேண்டும். ஆனால் பலமைல் சுற்றளவிற்கு எந்த ஒரு பெரிய பள்ளமும் இல்லை.
  • இதைப் போலவே 1947 -க்கும் 1956-க்கும்இடைபட்ட காலத்தில் பாலஸ்தீனத்தின் மேற்கு பகுதியில் உள்ள கும்ராம் மலைக்குகையில் இருந்து 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான 900 ஆவணங்கள் கிடைத்தன.மெல்லிய செப்பு தகடுகளில் எழுதப்பட்ட இவை சாக்கடல் சுருள்கள் என்று அழைக்கப்படுகின்றன. ஹீப்ரு மொழியில் எழுதப்பட்ட இந்த சுருள்கள் ஒவ்வொன்றும் ஒரு ரகசியம். தங்கப்புதையலுக்கான தகவல்கள். புதையல் கரிசிம் மலையில் இருக்கிறது என்கிறது ஒரு சுருள். ஆனால் கரிசிம் மலை எது என்பதுதான் யாருக்கும் விடைதெரியாத வினா.
  • இலக்கியமும், சினிமா பாடல்களும், வரலாறும் அலசி காயப்போட்ட பாபிலோனின் தொங்கும் தோட்டம் எங்கே இருக்கிறது? என்பதே ஒரு ரகசியம்தான். கி.மு. 4 00- ல் பெரோசஸ் என்பவர்தான் முதன்முதலாக பாபிலோன் தொங்கும் தோட்டம் பற்றி எழுதினார்.பாக்தாத்துக்கு பக்கத்தில் கி.மு.6 00-ம் வருடங்களில் உருவாக்கப்பட்டது என்பது சிலருடைய கருத்து. சமீபத்தில் யூப்ரிடிஸ் நதியருகே 75 அடி அகல சுவரை கண்டு பிடித்திருக்கிறார்கள். இது தொங்கும் தோட்டமாக இருக்கலாம் என்று சிலர் நம்பிக்கையாக தெரிவிக்கிறார்கள்.
  • உலகில் உள்ள மலைகளிலேயே மிகவும் பணக்கார மலை எதுவென்றால் அது ஆல்ப்ஸ் மலைதான். காரணம் ஹிட்லர் இரண்டாம் உலகப்போரின்போது எதிரிகளுக்கு பயந்து, தான் வைத்திருந்த பிளாட்டினம், தங்கம், வெள்ளி முதலியவற்றை அள்ளி ஆல்ப்ஸ் மலையில் ஒளித்து வைத்திருப்பதாக நம்பி மலையெங்கும் அலைந்து திரிந்தது அமெரிக்கப்படை. கடைசியாக ௧௯௪௫ல் ஒரு புதையலை கண்டுபிடித்தது. அதுவே பல ஆயிரம் கோடி ரூபாய் பெறுமானம் கொண்டது. அன்றிலிருந்து மக்கள் கூட்டம் எப்போதும் ஆல்ப்ஸ் மலையில் புதையல் தேடி அலைந்து கொண்டே இருக்கிறது.
  • இயேசுகிறிஸ்து இறுதியாக திராட்சை ரசம் குடித்த கோப்பை ஒன்று ஐஸ்லாந்தில் இருப்பதாக கூறுகிறார்கள். திஹோலி கிரெயில் என்று அழைக்கப்படும் இந்த கோப்பை பூமிக்கு அடியில் 15 அடி ஆழத்தில் ஒரு ரகசிய அறையில் இருப்பதாக கதைகள் உலவுகின்றன.கோப்பை இருக்கிறதா? இல்லையா? என்று மக்கள் கூட்டம் ஐஸ்லாந்து பகுதியில் பூமியை தோண்டிக்கொண்டே இருக்கிறது. இப்படி விடை கிடைக்காத ரகசியங்கள், அதிசயங்கள் பூமியில் நிறைய இருக்கின்றன.

மோடியின் வேண்டுகோளுக்கு இணங்க புதிய ஆப் ஒன்றை உருவாக்க உள்ளார் மார்க் !!

Facebook CEO meets Indian Prime Minister Modi . They discussed a lot about digital expansion in the country . Zuckerberg also expressed his interest in working with Indian government . As Modi asked , Facebook will soon develop an app to Modi's "Swachch Bharath " Campaign .

இணைய உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் வியாழக்கிழமை அன்று இந்தியா வந்தார். அதன் பிறகு அவர் வெள்ளிக்கிழமை மாலை இந்திய பிரதமர் மோடியை சந்தித்தார். அவர்கள் இருவரும் பல புதிய திட்டங்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

இது குறித்த தகவல்களை தனது பேஸ்புக் தளத்தில் மோடி வெளியிட்டு உள்ளார். இது ஒரு அருமையான சந்திப்பு என மோடி கூறியுள்ளார். மோடி அண்மையில் தொடங்கிய தூய்மை இந்தியா திட்டம் குறித்து மார்க்கிடம் விரிவாக எடுத்துரைத்துள்ளார். அதற்கு உதவும் வகையில் பேஸ்புக் மூலம் ஒரு செயலியை உருவாக்குமாறு கேட்டுள்ளார். இது தூய்மை இந்தியா திட்டத்தை பரப்புவதற்கு உதவும் என மோடி நம்புகிறார். மார்க்கும் விரைவில் இதற்காக ஒரு செயலியை உருவாக்கி தருவதாக கூறியுள்ளார்.

இந்தியாவில் உள்ள பழமை வாய்ந்த சுற்றுலா தலங்கள் குறித்த ஆர்வத்தை தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் ஊக்குவிப்பது, டிஜிட்டல் இந்தியா முயற்சி உள்ளிட்டவைகள் குறித்தும் இந்தச் சந்திப்பில் இருவரும் ஆலோசித்தனர்.  மோடிஜி புதிய முறையில் ஆட்சி செய்து வருவது இளைஞர்கலை வெகுவாக கவர்ந்து உள்ளது.

இந்திய கால்பந்து புரட்சி இன்று தொடங்குகிறது !! மாற்றத்தை உருவாக்குமா ??

A much expected ISL is going to start today . Will it be able to bring a revolution in Indian football . The league which is formed in the same manner as the Indian hit IPL , is also a star studded league .The first match is between Kolkata and Mumbai . Final is scheduled on December 20 .

உலகில் உள்ள சிறிய நாடுகள் கூட கால்பந்தில் கலக்கி வருகின்றன. ஆனால் 120 கோடி மக்கள் தொகையை கொண்ட நம்மால் ஏன் சாதிக்க முடியவில்லை. மற்ற நாடுகள் ஆடும் போட்டிகளையே இந்திய ரசிகர்கள் ஆர்வமாக பார்க்கிறார்கள். இந்தியா விளையாடினால் பார்த்து ஊக்குவிக்க மாட்டார்களா என்ன. மாற்றத்துக்கான நேரம் வந்துவிட்டது.

இந்தியாவிலும் கால்பந்து வந்து விட்டது. ஐபில் போட்டிகளை இந்தியாவில் 8 அணிகளை உருவாக்கி உள்ளார்கள். இதில் ஒவ்வொரு அணியையும் கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் விலைக்கு வாங்கி உள்ளார்கள். சென்னை அணியை இந்திய கேப்டன் தோனியும் பாலிவுட் நடிகர் அபிஷக் பச்சனும் வாங்கி உள்ளார்கள். கேரளாவை சச்சின் வாங்கி உள்ளார். கொல்கத்தா அணியை வங்கத்து புலி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி வாங்கி உள்ளார். கோவா அணியை விராத் கோலி வாங்கியுள்ளார். கிரிக்கெட் வீரர்களும், பாலிவுட் நட்சத்திரங்களும் அணிகளை வாங்கியுள்ளதால் இதில் பல புதிய கால்பந்து ரசிகரகள் உருவாகலாம்.

இதன் தொடக்க விழா இன்று கொல்கத்தாவில் நடைபெறுகிறது. இதில் கலை நிகழ்ச்சிகளுடன் கோலாகலமாக தொடங்குகிறது. முதல் போட்டியில் கொல்கத்தா அணியும் மும்பை அணியும் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் மற்ற 7 அணிகளுடன் 2 முறை மோத வேண்டும். இறுதி போட்டி வரும் டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெற உள்ளது.  இனி இந்தியாவிலும் கால்பந்துக்கு என தனி ரசிகர்கள் இருப்பார்கள்.

ஜெயலலிதா தண்டனை பெற்று சிறையில் இருக்கும் வேலையில் புதிய திட்டத்தை கையில் எடுத்து இருக்கும் திமுக !!

As Jayalalitha was convicted and jailed for amassing un-accounted wealth , DMK is planning to use this opportunity and get back their image in Tamil Nadu . They are going to implement this in Srirangam by-elections .


சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என அறிவிக்கப்பட்டு அவருக்கு 4 வருட சிறை தண்டனை வழங்கப்பட்டது. இந்த தீர்ப்புக்காக தான் திமுக பல ஆண்டுகளாக காத்து இருந்தது. அவர்கள் எதிர்பார்த்தது போலவே  தீர்ப்பு வந்து விட்டது. ஆனால் அவர்களுக்கு வர வேண்டிய பயன் மட்டும் இன்னும் வரவில்லை.

ஜெயலலிதா சிறையில் இருப்பதை வைத்து அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி மக்களிடையே அனுதாபம் தேட நினைத்தனர். அதனை இப்போது திமுகவினர் புரிந்து கொண்டனர். அது நடந்தால் இந்த தீர்ப்புக்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும் என புரிந்து கொண்டார்கள் .

அதனால் தான் கருணாநிதி தனது மவுனத்தை கலைத்து ஜெயலலிதா ஊழல் செய்து விட்டு தான் தண்டனை பெற்றுள்ளார் என கூறினார். இது குறித்து மக்களிடையே பிராச்சாரம் செய்யுமாறு கூறியுள்ளார். ஜெயலலிதா தனது முதல்வர் பதவியையும் சட்டமன்ற உறுப்பினர் பதவியையும் இழந்து விட்டார்.

அதனால்  ஸ்ரீரங்கம் தொகுதிக்கு இடைத்தேர்தல் வரும். இதனை வைத்து பல திட்டங்களை வைத்து உள்ளது திமுக. இந்த இடைத்தேர்தலில் ஜெயலலிதாவை குற்றவாளி என கூறி திமுகவின் பிராச்சாரம் இருக்கும். ஸ்ரீரங்கம் அதிமுகவின் கோட்டை. இந்த தீர்ப்பு மக்கள் மனதை எந்த அளவு மாற்றி உள்ளது என்பது குறித்து இந்த தேர்தலின் மூலம் அவர்களால் தெரிந்து கொள்ள முடியும். அதற்கு ஏற்றவாறு 2016 தேர்தலுக்கு வியூகங்கள் அமைக்க முடியும். எனவே இந்த இடைத்தேர்தலுக்காக இப்போது இருந்தே வேலைகளில் இறங்கி விட்டது திமுக.

ஷங்கரின் ஐ படம் எப்போது ??

Shankar's Ai film is expected to be released on November 21

விக்ரம் எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஐ. இதனை ஷங்கர் இயக்கி உள்ளார். 180 கோடி ரூபாய் பட்ஜெட்டில் படம் பிராமாண்டமாய் உருவாகி உள்ளது. இந்த படத்தின் பாடல்கள் மற்றும் டீசர் கடந்த மாதம் வந்தது. இசை வெளியீட்டு விழாவுக்கு அர்னால்டு வந்ததால் ஐ படம் உலக புகழ் பெற்றது.

ஐ படத்தின் டீசர் 100 மில்லியன் வியூஸ்களை நெருங்கி கொண்டு இருக்கிறது. இது ஒரு தமிழ் சினிமாவின் புதிய சாதனை ஆகும். இந்த படம் தீபாவளிக்கு வெளிவருவதாக இருந்தது. அதன் பிறகு பட வேலைகள் இன்னும் மீதி இருப்பதால் தள்ளி போனது. இப்போது படம் எப்போது வரும் என உலகமே எதிர்பார்த்தி கொண்டு இருக்கிறது. அது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் 2 நாட்களில் வந்து விடும் என தெரிகிறது. பெரும்பாலும் நவம்பர் 21 ஆம் தேதி வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது.

சிற்பம் பேசும் காட்சி : தஞ்சை பெரிய கோவில்



சிற்பம் பேசுமா  என்ற எண்ணம் தோன்றுகிறது , ஆம் தமிழரின் கட்டிடக்கலை சிற்ப்பங்கள் பேசும் தஞ்சை பெரிய கோவில் சிற்ப்பத்தை பாருங்கள் அது உங்களிடம் சொல்லும் செய்தியை கேளுங்கள் .

படம் 1 : 18 அடி உயரமுடைய ஒரே கல்லில் உருவான துவாரபாலகர், காலை உயர்த்தி நிற்கும் அந்த துவாரபாலகருக்கு நான்கு கரங்கள் உள்ளன,அதை சுற்றி இருப்பதை சற்று கூர்ந்து கவனிப்போம், காலின் அடியில்,ஒரு சிங்கம், ஒரு பாம்பு, சாதாரணமாக பார்ப்பவர் கண்ணிற்கு இவைகள் மட்டும் தான் புலப்படும்

படம 2 : சாதரணமாக பார்த்தால் தெரியாத அதன் பிரம்மாண்டத்தை, ஒரு யானையுடன் ஒப்பிட்டு பாருங்கள் எப்படி விசுவரூபம் எடுத்து நிற்கிறது அந்த துவாரபாலகர் சிற்பம் என்பது நன்கு புலப்படும்

படம் 3 : சரி துவாரபாலகர், காலின் கீழ் இருக்கும் அந்த பாம்பை சற்று உற்று நோக்குங்கள் ,பாம்பின் வாயில் என்ன,ஆஹா ஒரு யானை, பின்புறமாக யானையை முழுங்கும் பாம்பு,யானை எவ்வளவு பெரியது, அதையே முழுங்கும் பாம்பு என்றால் அது எவ்வளவு பெரியதாக இருக்கவேண்டும் !!!??அவ்வளவு பெரிய அந்த பாம்பே, அந்த துவரபாலகரின் காலில் ஒரு அரைஞான் கயிறு போல சிறிதாக தொங்கிக்கொண்டு இருக்கிறதென்றால் அந்த துவாரபாலகர் எவ்வளவு பெரிய ஆளாக இருக்க வேண்டும் .

இதனால் என்ன தான் கூற வருகிறார்கள் ? இவ்வளவு பெரிய ஆள் நானே வெளியே காவல் தான் காத்துக்கொண்டிருக்கிறேன், " உள்ளே இவற்றை எல்லாம் காட்டிலும் பெரியவர் இருக்கிறார் , சற்று அமைதியாக செல்லுங்கள்  என்பதை வாயிலில் நிற்கும் இந்த சிற்பத்தில் எவ்வளவு அழகாக காட்டி இருக்கிறார்கள், வாய் பேசாத அந்த சிற்பம், தன் கையால் பேசிக் கொண்டிருப்பதையும் சற்று கவனியுங்கள், இடது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருக்கும் கடவுளை நோக்கி காட்டிக்கொண்டு இருக்கின்றது (இ-1) அதற்கு கீழே இருக்கும் கை நின்றுகொண்டிருக்கும் தான் எவ்வளவு பெரியவன் என்பதை அந்த பாம்பை பார்த்து தெரிந்து கொள்ள சொல்கின்றது (இ-2), வலது புறம் மேலே இருக்கும் கை உள்ளே இருப்பவர் எப்பேர் பட்டவர் என்பதை கையை மடித்து எவ்வளவு அழகாக பூரிப்புடன் காட்டிக் கொண்டு இருக்கிறது(வ-1), கீழே இருக்கும் கை எச்சரிப்பதை காட்டுகிறது(வ-2), நான் சொல்வதை எல்லாம் மறந்து விட்டு இப்போது நீங்களே இந்த நான்கையும் ஒப்பிட்டு சற்று கற்பனை உலகிற்கு செல்லுங்கள், வார்த்தைகள் ஊமையாகி, அந்த சிற்பியை காதலிக்க துவங்கி விடுவீர்கள், தமிழர்களின் ஆற்றலை உணர்வீர்கள்.


இது ஒன்று தானா, இல்லவே இல்லை, இது போன்று எத்தனை கோயில்களில், எத்தனை சிற்பங்கள் நம்மிடம் பேசிக்கொண்டு தான் இருக்கின்றது, அவைகள் ஒவ்வொன்றும் எதையோ ஒன்றை குறிப்பால் உணர்த்திக்கொண்டு தான் உள்ளது இவற்றை எல்லாம் நாம் கவனிக்கிறோமா ?? இல்லை மாறாக அழிக்கிறோம் !!! அடுத்த முறை கோயில்களுக்கு செல்லும் போது, இது போன்ற சிற்பங்களின் மீது விபூதிகொட்டுவது,அதன் மீது சாய்வது, அவற்றின் மீது பெயர்களை பதிப்பது,அதை சேதப் படுத்துவது போன்ற எந்த செயலிலும் ஈடுபட வேண்டாம் !!!!.காப்பாற்றுவோம் அழிவிலிருந்து நம் கலைப் பொக்கிஷங்களை.
 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media