மோடி அரசு பதவி ஏற்று தனது முதல் பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தது. அதனை மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடா தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் உள்ள சிறப்பு அம்சங்களை பார்ப்போம்.
* 58 புதிய ரயில்கள் வருகின்றன.
* 3700 கிமீ புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.
* அதிவேக ரயில்களுக்கு என வைர நாற்கர திட்டம் வருகிறது.
* 30 வருடங்களாக முடிக்கபடாமல் உள்ள திட்டங்களில் 4 திட்டங்கள் விரைந்து முடிக்க படும்.
* நமது பல ஆண்டு கனவான புல்லட் ரயில் அஹமதாபாத் - மும்பை வழித்தடத்தில் வருகிறது. இது மணிக்கு 160 முதல் 200 கிமீ வேகத்தில் செல்லும்.
* ரயில்வே துறையை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரயில்வேக்கு என தனி பல்கலைகழகம்.
* வடகிழக்கு மாநிலங்களில் ரயில் சேவை அதிகரிக்கப்படும்.
* இனி சரக்கு ரயில்களின் காய், பழங்களை அனுப்பி வைக்கலாம்.
* மக்கள் விரும்பும் நிறுவனங்களின் உணவு பொருட்களை ரயிலில் விற்க நடவடிக்கை எடுக்கப்படும்.
* ரயில் நிலையங்களில் சூரிய சக்தி பயன்பாடு அதிகரிக்க படுகிறது.
* ரயில்வே துறையை உயர்த்துவதற்கு , தனியாரும் அரசும் சேர்ந்து உழைப்பது.
* தூங்கி கொண்டு இருக்கும் பயணிகளை எழுப்பும் வசதி.
* ஏ1 மற்றும் ஏ தரம் கொண்ட ரயில் நிலயங்களில் வைஃபை வசதி வருகிறது. சில முக்கியமான ரயில்களிளும் இந்த வசதி வர உள்ளது.
* ரயில்வே இணையதளத்தில் ஒரு நிமிடத்தில் 7200 டிக்கெட்டுகள் புக் செய்யலாம். 1.2 இலட்சம் பயணிகள் ஒரே நேரத்தில் இந்த இணையதளத்தை பயன்படுத்தலாம்.
* கூட்டம் கூடுவதை தவிர்க்க தானியங்கி டிக்கெட் கொடுக்கும் இயந்திரம் ரயில் நிலையங்களில் வைக்கபடும்.
* இனி முன்பதிவு செய்யாத கோச்களுக்கும் இணையத்திலே டிக்கெட் வாங்கி கொள்ளலாம்.
* நடைமேடை டிக்கெட்டும் இணையம் மூலம் வழங்கப்படும்.
* ரயிலின் வருகை குறித்து பயணியின் மொபைலுக்கு குறுஞ்செய்தி அனுப்ப படும்.
* ரயிலில் மற்றும் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கப்படும்.
* ரயில்களில் பெண்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்படும்.
* மகளிருக்கு என தனியாக உள்ள ரயில் பெட்டியில் உள்ள பெண் காவலருக்கு செல்போன் வழங்கப்படும்.
* ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களை சுத்தமாக வைத்து இருக்க தனியாரின் உதவி வாங்கப்படுகிறது.
* ரயில்களில் உள்ள கழிவறைகளை சுத்தமாக வைத்து இருக்க நடவடிக்கை எடுக்கபடும்.
* ரயில்களில் உள்ள பயோ டாய்லெட்டுகளின் எண்ணிக்கை உயர்த்தப்படும்,
* தூய்மைபடுத்தபடும் பணி சரியாக நடக்கிறதா என்று கேமரா மூலம் கண்காணிக்கப்படும்.
* ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் சேவை உயர்த்தபடும்.
* இனி தபால் நிலையங்களிலும் டிக்கெட் புக் பண்ணலாம்.
* ரயில்வேயில் 1 ரூபாய் வருவாய் என்றால் செலவு 94 காசுகள் ஆகிறது.
* எரிபொருள் விலைக்கு ஏற்ப ரயில் கட்டணம் மாற்றி அமைக்க படும்.
* பயணிகள் கட்டணம் உயர்வு என்பது தவிர்க்க முடியாதது.
* இனி வரும் காலங்களில் பயணிகள் கட்டணத்தை உயர்த்தாமல் , ரயில்வே துறையை நல்ல நிலைக்கு கொண்டு வர முயற்சிகள் எடுக்கப்படும்.
தமிழகத்தை பொருத்த வரை இந்த பட்ஜெட் ஏமாற்றம் தான். நாம் அதிகம் எதிர்பார்த்த புதிய ரயில்களுக்கான அறிவுப்புகள் எதுவும் இல்லை. ரயில்வே பட்ஜெட்டில் எல்லா மாநிலங்களையும் கவர்வது என்பது முடியாத செயல் ஆகும். ஆனால் மொத்தத்தில் பார்க்கும் போது இது தொலைநோக்கு பார்வை கொண்ட பட்ஜெட் ஆகும்.