BREAKING NEWS

Ads

உலகம்

Friday, 17 January 2014

மும்பையில் டி.சி.எஸ் ஊழியரான பெண் ஒருவர் கற்பழித்து, எரிக்கப்பட்டிருக்கிறார்

ஆந்திராவில் உள்ள விஜயவாடாவை சேர்ந்த அனுயா என்கின்ற 23 வயது பெண் ஒருவர், மும்பையில் டி.சிஎஸ் கம்பெனியில், சாப்ட்வேர் துறையில் பணி புரிந்து வருகிறார். விடுமுறைக்காக, தன் வீட்டிற்கு வந்திருந்த அவர், ஜனவரி 4ம் தேதி, விஜயவாடாவிலிருந்து ரயிலில் மும்பை புறப்பட்டுச் சென்றார். தன் தந்தை பிரசாத்திடம், தான் விடுதிக்கு சென்று அடைந்ததும், போன் செய்து தெரிவிப்பதாக கூறியிருந்தார்.

அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வராததால், அவரின் நண்பர்களிடமும், அவர் தங்கிருந்த இடத்தையும் தொடர்பு கொண்டு தன் மகளை பற்றி விசாரித்து இருக்கிறார் பிரசாத். தகவல் ஏதும் கிடைக்காததால், மும்பை மற்றும் விஜயவாடா போலீஸிடம் புகார் கொடுத்து இருக்கிறார்.

போலீஸ் தீவிரமாக விசாரணை மேற்கொண்ட போது, ஒரு பெண்ணின் சடலம் எரிக்கப்பட்ட நிலையில் இருப்பதாக கூறி, பிரசாத்தை அவரின் மகளா என்று அடையாளம் காட்ட அவரை அழைத்தனர். நேரில் சென்று பார்த்த பிரசாத், எரிக்கப்பட்ட நிலையில் இருந்த சடலம் தன் மகளுடையது என  அடையாளம் காட்டியிருக்கிறார்.

ரயிலில் பயணம் செய்த அனுயா, கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டுள்ளதாக போலீசார் சந்தேகிக்கின்றனர். இதையடுத்து, இந்த கொடூரமான குற்றம் புரிந்தவர்கள் யார் என்று, போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

கற்பழிப்புக்கு இணங்க மறுத்த சிறுமி தீ வைத்து கொளுத்தப்பட்டார்

உத்தர பிரதேசத்தில் உள்ள புலாந்த்ஷார் மாவட்டத்தில் உள்ள பஹாசு என்ற பகுதியில், 16 வயது சிறுமி ஒருவர் அவரது வீட்டிலேயே, மண்ணெண்ணெய் ஊற்றி கொளுத்தப் பட்டிருக்கிறார். அந்த சிறுமி தனியாக வீட்டில் இருக்கும் போது, ஒருவர் வீட்டினுள் புகுந்து, அவரை கற்பழிக்க முயன்று இருக்கிறார். அதற்கு அவர் இணங்காததால், எவ்வளவோ முயன்று பார்த்தும், தன் ஆசைக்கு இடம் கொடுக்காத அந்த சிறுமியின் மீது கோபம் அடைந்து , மண்ணெண்ணெய் ஊற்றி அவரை கொளுத்தி இருக்கிறார்.

சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் உடல் 90% எரிக்கப்பட்டிருக்கிறது எனவும், அவர் உயிர் பிழைக்காமல் போகலாம் என்று கூறியிருக்கின்றனர்.

போலீஸார், கற்பழிப்பு மற்றும் கொலை செய்ய முயன்ற நபர் மீது வழக்கு பதிவு செய்து, தலைமறைவாகியுள்ள அவனை தேடி வருகின்றனர்.

தேநீர் விற்ற மோடி தான் காங்கிரஸ் வாரிசு அரசியலை தகர்க்க போகிறார், பா.ஜ.க பதிலடி

மோடியால் பிரதமராக முடியாது, அவருக்கு டீக்கடை வைத்து தருகிறோம், காங்கிரஸ் கூட்டத்தில் அவர் டீ விற்கட்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் கூறியிருந்தார்.

சாதாரண முன்னாள டீ விற்பனையாளரான மோடி தான், காங்கிரஸ் கட்சியின் வாரிசு அரசியலுக்கு ஒரு முற்று புள்ளி வைத்து, நாட்டின் பிரதமராகி, இந்தியாவின் ஜனநாயகத்தை வலுப்படுத்த போகிறார். அதற்கான நாள் நெருங்கி விட்டது என பதிலடி கொடுத்து இருக்கிறார், பா.ஜ.க வை சேர்ந்த அருண் ஜெட்லி.

மோடி, டீ விற்க தான் சரியானவர் என்று கூறியதற்காக, தான் மன்னிப்பு கேட்க முடியாது என மணி சங்கர் அய்யர் கூறியுள்ளார். அரசியலில் இருப்பது, வீட்டின் ஓய்வு அறையில் இருப்பது போன்று அல்ல. அது ஒரு குத்து சண்டை நடக்கும் இடம் போன்றது. சூட்டை தாங்க முடியாதவர்கள், அரசியலை விட்டு வெளியேறுங்கள் என்று அவர் கூறியுள்ளார்.

மோடிக்கு டீக்கடை வைத்து தருகிறோம்


பா.ஜ.க வின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியால் தேர்தலில் வெற்றி பெற்று இந்திய நாட்டின் பிரதமராக பதவி பெற முடியாது, அவர் விரும்பினால் நாங்கள் அவருக்கு டீக்கடை வைத்து தருகிறோம், காங்கிரஸ் கூட்டத்தில் டீ விற்கட்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணி சங்கர் அய்யர் தெரிவித்துள்ளார்.

இதைப் பற்றி பா.ஜ.க தரப்பினரை கேட்ட போது, "மணி சங்கருக்கு இப்படி பேசுவதை தவிர வேறு என்ன தெரியும்?" என்று பதில் அளித்தனர்.

இதே போன்று, கடந்த ஆண்டு, சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த நரேஷ் அகர்வால், மோடியை பற்றி பேசுகையில், டீக்கடை வைத்திருந்தவர் எல்லாம், நாட்டின் பிரதமராக முடியாது என கருத்து கூறியிருந்தார்.

டீக்கடை வைத்திருந்தவர் நாட்டின் பிரதமராக முடியுமா அல்லது முடியாதா என்ற கேள்விக்கு அடுத்த வருட நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் பதில் சொல்லும்.

காங்கிரஸ், தி.மு. க ஊழலில் பி.எச்.டி பெற தகுதி உள்ள கட்சிகள்: சோ



துக்ளக் இதழின் 44வது ஆண்டு விழா, கடந்த புதன்கிழமை அன்று சென்னை மியூசிக் அகாடமியில் நடந்தது. 

அப்போது பேசிய துக்ளக் ஆசிரியர் சோ, நரேந்திர மோடி பிரதமராக வர வேண்டும். அப்படி அவர் வருவதில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால், ஜெயலலிதா பிரதமராவதற்கு பாஜக ஆதரவு அளிக்க வேண்டும் என்று  கூறினார். 

ஊழல் என்பது, அனைத்து கட்சிகளுக்கும் பொதுவான விஷயம் தான்.  இருந்தாலும், காங்கிரஸ், தி.மு.க போன்ற கட்சிகள், ஊழலில் டாக்டரேட் பெறும் அளவிற்கு வளர்ந்துவிட்ட கட்சிகள் என்றும் அவர் கூறினார்.

மேலும் அவர் ஜெயலலிதாவை பற்றி பேசும் போது, அவரிடம் உள்ள உழைப்பு, நிர்வாகத் திறன் குறித்து சந்தேகமே வேண்டாம். முதல்வராக 10 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் அவருக்கு உள்ளது. தன்னிச்சையாக முடிவெடுக்கும் திறன் கொண்டவர் ஜெயலலிதா என தெரிவித்தார்.

ஆம் ஆத்மி கட்சியை குறித்து கருத்து தெரிவித்த சோ, டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் ஊழல் செய்ததற்கு ஆதாரமாக 360 பக்க ஆதாரங்கள் இருப்பதாகக் கூறிய கெஜ்ரிவால், தற்போது மற்றவர்களிடம் ஆதாரம் கேட்கிறார். பதவி ஆசையால் காங்கிரஸ் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார், மற்றும் இந்தியன் முஜாகிதீன் தீவிரவாதிகளை ஆதரிக்கும் நபர்கள்  ஆம் ஆத்மி கட்சியில் உள்ளனர் என்று அக்கட்சியையும், அதன் தலைவர் கேஜ்ரிவாலையும் குற்றம் சாட்டினார்.

இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பாஜக மாநிலத்தலைவர், பொன்.ராதாகிருஷ்ணன், இல.கணேசன், ஆடிட்டர் குருமூர்த்தி, காங்கிரஸ் பிரமுகர்கள் கோபண்ணா, பீட்டர் அல்போன்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி டி.கே.ரங்கராஜன், ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். காங்கிரஸ், பாஜக, கம்யூனிஸ்ட் பிரமுகர்கள் ஒரே மேடையில் பங்கேற்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


இன்று ராகுல் காந்தி பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படமாட்டார்

ராகுல் காந்தி இன்று டெல்லியில் நடக்கும் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில், பிரச்சார குழு தலைவராக அறிவிக்கப்படுகிறார். நேற்று, டெல்லியில் சுமார் இரண்டு மணி நேரம் நடந்த காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில், ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக அறிவிக்கும் முடிவு ரத்து செய்யப்பட்டது.

இது பற்றி பேசுகையில், சோனியா காந்தி, தேர்தலுக்கு முன்பு வேட்பாளரை அறிவிக்கும் வழக்கம் காங்கிரஸில் இல்லை என்றார்.

காங்கிரஸ் கட்சியினருக்கு தெரியும், எப்படியும்,  அவர்கள் ஆட்சிக்கு வர போவதில்லை என்று. அதனால், வேட்பாளரை அறிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்து இந்த முடிவுக்கு வந்துள்ளனர், என பா.ஜ.க தலைவர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.


 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media