பஞ்சாபில் பிரபல காமெடியனாக இருப்பவர் பக்வாண்ட் மண் . இவர் ஆம் ஆத்மி கட்சி சார்பாக போட்டியிட்டு சங்க்ரூர் தொகுதியில் வெற்றி பெற்றார் .
ஈராக்கில் உள்ள இந்தியர்களை காப்பாற்ற மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டு வரும் இந்நிலையில் , இவர் தன்னால் என்ன செய்ய முடியும் அவர்களுக்கு என யோசித்து கொண்டு இருந்தார் . இதனால் அங்குள்ள சில இந்தியர்களிடம் இவரால் சமூக வலைதளங்கள் மூலம் தொடர்பு கொள்ள முடிந்தது . அவர்கள் இவருக்கு அந்த இடத்தில் இருந்து சில புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பினர் . அந்த வீடியோவில் அவர்கள் ஆபத்தில் இருப்பதாகவும் , அவர்கள் வீட்டிற்கு வர வேண்டும் எனவும் கோரிக்கை வைத்தனர் .
இது குறித்து பக்வாண்ட் கூறுகையில் , " இளைஞர்கள் பலர் தங்கள் நிலம் , நகைகள் ஆகியவற்றை அடகு வைத்து ஈராக் சென்றுள்ளனர் . அங்குள்ளவர்களில் பாதி பேர் இங்கு வர முடியாத சூழ்நிலையில் உள்ளனர் . ஏனென்றால் அவர்களிடம் கடனை அடைக்க பணம் இல்லை .
பல இளைஞர்கள் காண்ட்ராக்டர்களிடம் சிக்கி உள்ளனர் . அந்த காண்ட்ராக்டர்கள் அவர்களுக்கு சம்பள்த்தை வாங்கி வைத்து கொள்வது மட்டுமில்லாமல் அவர்களின் பாஸ்போர்ட்டையும் வாங்கி வைத்துள்ளார் . பாஸ்போர்ட்டை திருப்பி கொடுக்க பணம் செலுத்த வேண்டும் என மிரட்டி வருகிறார் " என்றார்
இவர் இரண்டு நிறுவனங்களின் உதவியுடன் அந்த காண்ட்ராக்டர்களின் பணத் தேவையை அடைத்துள்ளார் . மேலும் அங்கே உள்ள 70 இந்தியர்களுக்கு இந்தியா வர டிக்கெட் அனுப்பி வைத்துள்ளார் .
இவரின் முயற்சியால் இதுவரை 10 பேர் இந்தியா வந்துள்ளனர் . மற்றவர்களும் கூடிய விரைவில் வந்து சேருவர் என நம்பிக்கை தெரிவித்தார் .