Sunday, 24 August 2014
மூட் ஏறினால் வெளிப்படையாக தெரியும் வகையில் மாறும் புதிய ஆடை !!
அறிவியல் வேகமாக வளர்ந்து வரும் நிலையில் , கிடைக்கும் இடங்களில் எல்லாம் அறிவியலை வேகமாக புகுத்தி வருகின்றனர் . அறிவியலில் இன்னும் ஒரு படி மேலே போய் நமது மூடைப் பொறுத்து மாறும் வகையில் ஆடை ஒன்றை வடிவமைத்துள்ளனர் ஆராய்ச்சியாளர்கள் .
இந்த ஆடையை நெதர்லாந்தைச் சேர்ந்த ஸ்டுடியோ ரோஸ்கார்டே என்னும் நிறுவனம் வடிவமைத்துள்ளனர் . இந்த ஆடையின் பெயர் , "இண்டிமேசி 2.0 " . இந்த ஆடை வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்கிறது .
இந்த ஆடை அணிபவர் தீடிரென்று மூட் மாறினால் , ஆடை வெளிப்படையாக மாறிவிடும் . அவர் கோவம் அடைந்தாலோ , அதீத பதற்றம் அடைந்தாலோ , மூட் ஏறினாலோ இந்த ஆடை மற்றவர்களுக்கு வெளிப்படையாக மாறிவிடும் . இதில் உள்ள சென்சார்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களையும் , இதய துடிப்பையும் அளந்து அதற்கேற்ப ஆடைய மாற்றி அமைக்கும் .
ஸ்பூனினால் உணவு அருந்துவதை விட கையினால் சாப்பிடுவதே நல்லது , ஏன் ??
இந்தியாவில் கிட்டத்தட்ட பலர் கையை தான் உணவு அருந்த பயன்படுத்தி வருகின்றனர் . ஆனால் மேற்கத்திய முறை என்ற பெயரில் பலர் ஸ்பூன் போன்றவற்றை பயன்படுத்தி உணவு அருந்தி வருகின்றனர் . அது தான் நாகரிகம் என்றும் பலர் அதையே பழக்கப்படுத்தி கொள்கின்றனர் . ஆனால் நம் முன்னோர்கள் கற்று தந்த முறையே நாம் மறப்பது எவ்வளவு பெரிய தவறு என்பதை கீழ் உள்ள பயன்கள் மூலம் நாம் அறியலாம் .
1 ) . உயிர் சக்திகளை சமநிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது :
ஆயுர்வேதத்தின் படி நமது உடம்பு ஐந்து உயிர் சக்திகளால் உருவாக்கப்பட்டுள்ளது . மேலும் நமது கைகளில் உள்ள ஐந்து விரலும் ஐந்து பூதங்களை குறிக்கிறது . இந்த ஐந்து ஆற்றலில் ஒன்று சமநிலையில் இருந்து விலகினாலும் , நமது உடம்பிற்கு கேடு விளைவிக்கும் . நாம் கையினால் உணவு அருந்தும் போது , நமது அனைத்து விரல்களையும் நாம் உபயோகப்படுத்துவதால் , நமது உயிர் சக்திகள் அனைத்தும் ஆற்றல் அடைகிறது .
2 ) . செரிமானத்திற்கு உதவும் :
தொடுதல் உணர்வு என்பது நமது உடம்பில் மிக முக்கியமான மற்றும் அதிகம் பயன்படுத்தப்படுகின்ற உணர்வுகளில் ஒன்றாகும் . நாம் கையினால் உணவு அருந்தும் போது அதில் தொடுதல் உணர்வு ஏற்படுவதால் , நமது வயிற்றை அது செரிமானத்திற்கு தயாராக இருக்கும் படி நமது மூலை செய்தி அனுப்புகிறது . இதனால் செரிமானம் நன்றாக நடக்கிறது .
3 ) சாப்பாட்டில் கவனம் செலுத்த உதவியாக இருக்கும் :
கையினால் உணவு அருந்துவதன் மூலம் , நாம் என்ன சாப்பிடுகிறோம் என்ற உணர்வு நமக்கு இருக்கும் . ஏதாவது கல் போன்றவை தட்டுப்பட்டாலும் நீக்கி விடலாம் . நமது கவனம் உணவில் இருக்க கையினால் சாப்பிடுவது தான் சிறந்தது .
4 ) உணவு சூடாக இருப்பதை அறிந்து கொள்ள :
நமது கை தான் சிறந்த வெப்பம் அறியும் கருவி . நமது கையை உணவு அருந்த பயன்படுத்துவதன் மூலம் சூடாக இருக்கும் உணவை நாம் ஆற வைத்து உண்ண உதவியாக இருக்கும் . சூடாக இருக்கும் உணவை தவிர்ப்பதன் மூலம் நமது நாவினை பாதுகாக்கலாம் .
சியோமி நிறுவனத்தின் புதிய மொபைல் ஆகஸ்ட் 26 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் ஆகிறது
இப்போது இந்திய மார்கெட்டில் பலருக்கும் வாங்குவதற்கு தவம் இருந்து கொண்டு இருக்கும் மொபைல் எதுவென்றால் அது சியோமி எம்.ஐ.3 ஆக தான் இருக்கும். இதே வசதிகளுடன் உள்ள மற்ற மொபைல்களின் விலை 20 ஆயிரத்திற்கு மேல். ஆனால் இதன் விலை 14 ஆயிரம் தான். அது தான் இந்த மொபைல் வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணம். விற்பனைக்கு வந்த சில நொடிகளில் இது தீர்ந்து விடுகிறது.
இதன் வெற்றியை தொடர்ந்து அந்த நிறுவனம் தனது அடுத்த மொபைலை இந்தியாவில் வெளியிட உள்ளது. இதன் பெயர் சியோமி ரெட்மி 1 எஸ் ஆகும். இதன் விலை ரூ.6999 ஆகும். இந்த மொபைலை சியோமி நிறுவனம் நாளை மறுநாள் அறிமுகம் செய்ய உள்ளது. இது எப்போது விற்பனைக்கு வரப்போகிறது என்று தெரியவில்லை.
கடந்த சில மாதங்களாக பேஸ்புக் நம்மை ஏமாற்றி வருகிறது
இன்றைய உலகில் பல காரணங்களுக்காக பேஸ்புக்கை பயன்படுத்தி வருகிறார்கள். மார்க் ஜூக்கர்பெர்க் இதனை தொடங்குவதற்கு முக்கிய காரணம் இது செய்தித்தாளை போன்று மக்களுக்கு அனைத்து செய்திகளையும் தர வேண்டும் என்று தான். பின்பு அது நியூஸ் சேனல்களை விட வேகமாக செய்திகளை தந்து வருகிறது. அதன் பின்பு பேஸ்புக்கில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. அதன் பின்பு அது அதன் பயனாளர்களை அதிகம் பாதித்தது. நாம் லைக் செய்த பக்கத்தில் இருந்து வரும் போஸ்டுகளை மீண்டும் லைக் செய்தால் நமக்கு அந்த பக்கத்தில் இருந்து புதிய போஸ்டு வரும் என புதிய மாற்றம் சொல்கிறது.
பேஸ்புக் உபயோகப்படுத்துவர்களுக்கு பழைய செய்திகளை தந்து பேஸ்புக் நிறுவனம் ஏமாத்தி வருவதாக புதிய புகார் வந்துள்ளது. புதிய செய்திகளை அவர்களுக்கு உடனுக்குடன் தராமல் மறைத்து விடுகிறது. இதனை ஒருவரின் அக்கவுண்டை வைத்து நிருபித்துள்ளார்கள். டிம் என்பவரின் அக்கவுன்டை வைத்து பார்த்த போது , ஒரு நாள் முழுவதும் அவர் பேஸ்புக்கை பயன்படுத்தியுள்ளார். ஆனால் அவருக்கு 1855 புதிய போஸ்டுகள் வரவில்லை. அவருக்கு மொத்தம் வந்தவை 1417 போஸ்டுகள் , அதில் 679 போஸ்டுகள் பழையவை.
எனவே பேஸ்புக் மீண்டும் இந்த மாற்றத்தை எடுத்து விட்டு பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என்பது பலரது கோரிக்கை ஆகும்.
அழகிப் போட்டிக்காக மகளின் எடையைக் குறைக்க புழுவை உணவாக கொடுத்த தாய் !!
தன் மகள் அழகாக இருக்க வேண்டும் என்பதே அனைத்து தாய்களின் விருப்பமாக இருக்கிறது . அது போல ஒரு தாய் தன் மகள் ஒல்லியாக தெரிய வேண்டும் என்று எண்ணி தன் மகளை நாடா புழுவை உணவாக கொடுத்துள்ளார் . அதனால் வயிற்றுவலி வந்து மகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் .
வயிற்றுவலியால் அனுமதிக்கப்பட்ட மகளை பரிசோதித்த மருத்துவர்கள் முதலில் அவர் கற்பமாக இருக்கலாமோ என்ற சந்தேகத்தில் இருந்தனர் . பின்னர் அவரின் கழிப்பறையில் பார்த்த போது நாடாப் புழுக்கள் இருப்பதைப் பார்த்தனர் . இதன் மூலம் அவர்கள் காரணத்தை அறிந்தனர் .
பின்னர் அவரின் அம்மாவிடம் கேட்டதற்கு நடந்த அனைத்தையும் கூறினார் . அவர் தன்னுடைய மகள் அழகிப் போட்டியில் கலந்து கொள்வதற்கு முன் ஒல்லியாக தெரிய வேண்டும் என்ற நோக்கில் புழுக்களை கொடுத்ததாக கூறினார் . இதற்காக அவர் மன்னிப்பு கேட்டார் .
அண்ணாவுக்கு பாரத ரத்னா விருது தர சொல்லி மோடிக்கு கருணாநிதி கடிதம்
நாம் வாழும் தமிழ்நாட்டுக்கு பெயர் வைத்தவர் பேரறிஞர் அண்ணா. அவரது இறுதி ஊர்வலத்துக்கு தான் இது வரை அதிக மக்கள் வந்துள்ளார்கள் , இது ஒரு கின்னஸ் சாதனையாகும். ஒருவன் இறந்த பிறகும் அவனை பார்ப்பதற்கு இவ்வளவு கூட்டம் வருகிறது என்றால் அவன் சாதாரண மனிதன் அல்ல.
அந்த மாமனிதனுக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கருணாநிதி நமது பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கும், ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கும் கடிதம் எழுதியுள்ளார். அறிஞர் அண்ணா மிக பெரிய சீர்த்திருத்தவாதி, சிறந்த பேச்சாளர், எழுத்தாளர் , இலக்கியவாதியும் கூட. நாட்டின் மிக பெரிய விருதான பாரத ரத்னாவுக்கும் அவர் தகுதியானவர் என கூறியுள்ளார்.
ஐஸ் பக்கெட் சேலஞ்சிற்கு அடுத்து கேன்சர் நோய்க்காக வந்துவிட்டது புஷ் அப் சேலஞ்ச் !!
இப்போது இணையத்தை கலக்கி வருவது ஐஸ் பக்கெட் சேலஞ்ச் தான் . ஒரு நல்ல நோக்கத்துடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த சேலஞ்ச் , இப்போது அனைவராலும் ஜாலியாக செய்யப்பட்டு வருகிறது . இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சால் இதுவரை ஏ.எல்.எஸ் நிறுவனத்திற்கு 1.9 மில்லியன் டாலர் நன்கொடையாக கொடுக்கப்பட்டுள்ளது .
இந்த ஐஸ் பக்கெட் சேலஞ்சின் வெற்றி பலரை பல நல்ல நோக்கத்திற்காக இது போன்ற சேலஞ்சுகளை தொடங்க வைத்துள்ளது .
அது போல இப்போது குழந்தைகளின் கேன்சர் நோய்க்காக புஷ் அப் சேலஞ்ச் என்ற ஒன்று தொடங்கப்பட்டுள்ளது . இந்த சேலஞ்சில் நாம் ஒருவரை நாமினேட் செய்ய வேண்டும் . நாம் நாமினேட் செய்தவர்கள் எத்தனை புஷ் அப் எடுத்தார்களோ அவ்வளவு டாலர் நாம் நாம் கொடுக்க வேண்டும் .
இதனை ஜேமி ஈசன் என்னும் பெண் பயிற்சியாளர் மற்றும் எழுத்தாளர் தொடங்கி வைத்துள்ளார் . இது எந்த அளவுக்கு வெற்றி அடைகிறது என்பதை நாம் பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .
இனிமேல் பீச்சில் பிகினி கிடையாது , பேஸ்கினி தான் !!
வெளிநாடுகளில் பெண்கள் பிகினி அணிந்து பீச்சுக்கு செல்வது வழக்கம் . இந்த வழக்கம் இப்போது இந்தியாவிலும் பரவலாக காணப்பட்டு வருகிறது . இப்போது அந்த பிகினி போன்று பேஸ்கினி என்ற ஒன்றை பெண்கள் அணிய தொடங்கி உள்ளனர் . பெண்கள் பீச்சில் செல்லும் போது அவர்கள் முகம் வெயிலால் பாதிக்கப்படுகிறது . இந்த வெயில் பிரச்சனையில் இருந்து தப்பிக்க தான் இவர்கள் புதிதாக அணிய தொடங்கியுள்ள இந்த முகமூடி தான் " பேஸ்கினி " .
நைலானால் உருவாக்கப்பட்ட இந்த முகமூடியை அணிவதால் , இவர்கள் வெயில் தொல்லையில் இருந்து தப்பிக்கலாம் . இந்த வழக்கம் முதலில் சீனாவில் தொடங்கப்பட்டது .
கவர்ச்சி நடிகை சன்னி லியோன் ஐஸ் பக்கெட் சாலஞ் செய்தார்
பேஸ்புக்கில் இன்று மிக பிரபலமாக இருக்கும் ஒன்று ஐஸ் பக்கெட் சாலஞ். இது ஏ.எல்.எஸ் என்னும் நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக செய்யப்பட்டு வருகிறது. இதனை பாலிவுட் நடிகை சன்னி லியோன் செய்துள்ளார். அவர் அடுத்து இந்த சாலஞ்சை செய்யுமாறு யோ யோ ஹனி சிங்கிடம் அழைப்பு விடுத்து உள்ளார்.
http://youtu.be/AIpnHXgPAHI
விராத் கோலியை திருமணம் செய்து கொள்ள போவது இல்லை - அனுஷ்கா ஷர்மா மனம் திறந்தார்
சமீபத்தில் முடிந்த இங்கிலாந்து உடனான தொடரில் இந்திய அணி 3-1 என படுதோல்வியடைந்தது. இதற்கு முக்கிய காரணமாக கருதப்படுவது விராத் கோலியின் பேட்டிங் சொதப்பல் தான் என கூறப்படுகிறது. விளையாடிய 5 டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்சில் கூட விராத் சரியாக ஆடவில்லை. இந்த தொடரில் அவர் அடித்த ரன்களை விட உபரி மூலம் வந்த ரன்கள் அதிகமாக இருந்தது. கோலியின் இந்த பேட்டிங் சொதப்பலுக்கு முக்கிய காரணமாக கூறப்படுவது அனுஷ்கா ஷர்மா என்று ஒரு கூட்டம் சொல்லி வருகிறது.
இங்கிலாந்து உடனான முதல் 3 டெஸ்ட் வரை அனுஷ்கா சர்மா கோலியுடன் இருந்துள்ளார். இதற்காக அவர் பிசிசிஐ யிடம் அனுமதி வாங்கியுள்ளார். இது குறித்து இந்திய அணியின் நிர்வாகி ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மற்ற நாட்டு வீரர்கள் கூட வெளிநாட்டு போட்டிகளுக்கு செல்லும் போது தங்கள் காதலியை தங்களுடன் அழைத்து செல்கிறார்கள். ஆனால் நம் கலாச்சாரம் என்பது வேறு. எனவே பிசிசிஐ இதனை அனுமதிக்க கூடாது என கூறியுள்ளார்.
ஆனால் விராத் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என்று ஒரு செய்தி வந்து உள்ளது. இதனால் அனுஷ்கா ஷர்மா விராத்துடன் தங்குவதற்கு அனுமதிக்கலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் இன்று அனுஷ்கா ஷர்மா தான் விராத் கோலியை திருமணம் செய்து கொள்ள போவதாக வந்து உள்ள செய்தி பொய்யானது என கூறியுள்ளார். எனவே இது குறித்து மேலும் பேசுவதை தவிர்க்கவும் என கூறியுள்ளார்.
போலிசுக்கு தகவல் கொடுத்ததாக கூறி 16 வயது சிறுமியை அவரின் பெற்றோர்கள் முன் சுட்டுக் கொன்ற என்.டி.எப்.பி கிளர்ச்சியாளர்கள் !!
அசாம் மாநிலம் சிராக் மாவட்டத்தில் 16 வயது சிறுமியை போலிசுக்கு தகவல் கொடுத்தார் என்ற சந்தேகத்தின் பெயரில் அவரின் பெற்றோர் முன்பு சுட்டுக் கொன்று , அந்த விடியோவை லோக்கல் சேனல்களில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர் என்.டி.எப்.பி அமைப்பினர் .
அந்த விடியோவில் ஒருவர் , " அந்த சிறுமி போலிசுக்கு தகவல் கொடுப்பவராக செயல்பட்டதால் அவரை சுட்டுக் கொன்றோம் . இது மற்றவருக்கும் ஒரு பாடமாக அமையும் " என்று கூறினார் .
இது குறித்து அரசு அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில் , இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் . அங்கே இருந்த மக்கள் , போலிசார் விடியோ வந்த பின்னர் தான் இது குறித்து விசாரிக்க வந்தனர் என்றார் . சம்பந்தப்பட்ட போலிசார் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அதிகாரி தெரிவித்தார் .
இன்றைய சிறப்பு செய்திகள் - Satrumun Special news
போட்டி விஜய்க்கும் - அஜித்துக்கும் இல்லை, அஜித்துக்கும் - ரஜினிக்கும் தானாம்
http://www.satrumun.net/2014/08/ajith-to-beat-rajini.html
ஹனிமூன் செல்வதற்கு இந்தியாவின் சிறந்த 10 இடங்கள்
http://www.satrumun.net/2014/08/best-10-places-for-honeymoon-in-india.html
மாணவர்களை கத்தியால் குத்த ஓட ஓட விரட்டிய சம்பவம் ; சென்னையில் பரபரப்பு !!
http://www.satrumun.net/2014/08/students-with-knife-sen-running-in-roads.html
http://www.satrumun.net/2014/08/jayalalitha-cheating-tamil-people.html
கிரிக்கெட் ரசிகர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய புதிய வார்த்தை
http://www.satrumun.net/2014/08/new-word-to-come-in-cricket.html
பேஸ்புக்கில் உள்ள பேக் ஐடிகளை கண்டுபிடிக்க சில வழிகள்
http://www.satrumun.net/2014/08/10-tips-to-find-fake-id-in-facebook.html
வெறும் 2,299 ரூபாயில் இந்தியாவின் முதல் பயர்பாக்ஸ் ஓஎஸ் மொபைல்
http://www.satrumun.net/2014/08/firefox-mobile-to-be-launched-india-by-spice-mobile.html
இந்த வாரம் பேஸ்புக்கில் வந்த பொய்யான 3 பிரபலமான பதிவுகள்
http://www.satrumun.net/2014/08/3-fake-things-in-facebook-this-week.html
ஐஸ் பக்கெட் சேலஞ்ச் செய்ய மறுத்த நடிகை !! ஏன் மறுத்தார் ??
http://www.satrumun.net/2014/08/pamela-anderson-opposes-ice-bucket-challenge.html
டீ கொடுப்பதற்கு லேட் ஆனதால் மனைவியைக் கொன்ற கணவன் !!!
http://www.satrumun.net/2014/08/blog-post_26.html
செல்பி எடுப்பதற்கு என புதிய மொபைல் வந்துள்ளது
http://www.satrumun.net/2014/08/new-phone-launched-to-take-selfie.html
பெரிய பிரச்சனை ஆகிறது கோலி - அனுஷ்கா ஷர்மா காதல் விவகாரம்
http://www.satrumun.net/2014/08/virat-kohli-issue-becoming-big-one.html
தமிழர்களுக்கு நீதி கிடைக்க இலங்கை அரசு உத்தரவாதம் கொடுக்க வேண்டும் - மோடி பேச்சு !!
http://www.satrumun.net/2014/08/srilanka-must-ensure-justice-to-tamils-says-modi.html
டெல்லியில் கேங் ரேப் செய்யப்பட்ட நிர்பயா பெயரில் ஸ்கூட்டர் வருகிறது
http://www.satrumun.net/2014/08/scooty-to-come-in-name-of-nirbhaya.html
காதலித்து கற்பமாக்கி கழட்டி விட்ட பெண்ணை காதலனுடன் திருமணம் செய்து வைத்த நீதிபதி !!
http://www.satrumun.net/2014/08/judge-made-the-two-person-to-marry-in-villupuram.html
இந்திய கிரிக்கெட் அணியை நாமினேட் செய்த இந்திய ஹாக்கி அணி !!
http://www.satrumun.net/2014/08/ice-bucket-challenge-now-into-the-indian-cricket-players.html
சோதனை ஓட்டத்தின் போது வெடித்து சிதறிய ஸ்பெஸ்-எஃஸ் ராக்கெட் !!
http://www.satrumun.net/2014/08/rocket-explodes-during-test-flight.html
Subscribe to:
Posts
(
Atom
)