அபிலேஷ் கெமிக்கல் என்ற வேதிப்பொருள் தொழிற்சாலை மதுரை அழகர் கோவில் அருகில் உள்ள பொய்கைகரைப் பட்டி பஞ்சாயத்தில் இயங்கிவருகிறது.
இந்த ஆலையின் வழியேதான் அழகர்கோவிலின் நூபுரக் கங்கையின் புனித நீர் பொய்கையை அடைகிறது. அதன் காரணமாகத்தான் பொய்கைகரைப்பட்டி என்ற பெயர் வந்திருக்கிறது.
சில ஆண்டுகளுக்கு முன்புபொய்கையில் தாமரைகள் அழிந்தன. மீன்கள், தவளைகள் செத்துமிதந்தன. வேதித் தொழிற்சாலை தனது கழிவுகளை ஆலை வளாகத்தில் உள்ள கைவிடப்பட்ட விவசாயக் கிணறுகளில் கொட்டி புதைத்திருக்கிறது. அது நில மேற்பரப்பு நீரையும் நிலத்தடி நீரையும் நஞ்சாக்கிவிட்டது. விளைவாக 80க்கும் மேற்பட்ட பெண்கள் கருப்பை அகற்றப்பட்டுள்ளது. சிறுநீர் கல் பிரச்சனை உள்ளது. குழந்தைகள் மன/ உடல் வளர்ச்சி சிதைந்தவர்கள் ஆகிறார்கள். பெரியவர்களுக்குக் கழலை வளருகிறது. மாடுகள் கழலையால் மரணம் அடைகின்றன.
இப்பிரச்சனையை மாவட்ட ஆட்சியரிடம் கொண்டு சென்றோம். அப்படியெல்லாம் ஒன்றுமில்லை என்று அடம்பிடித்தார் மதுரை ஆட்சியர் சுப்பிரமணியம். என்னுடன் வந்ததிருந்த அந்த ஊர் இளைஞர்களின் கருத்துக்களையும் அவர் கேட்கத் தயராக இல்லை. கொட்டிப் புதைக்கப்பட்ட வேதிப்பொருள் என்பது பற்றி அவர் கேட்கத் தயாராக இல்லை.
தற்போதைய கதை
இன்று மாசுகட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடமிருந்து நாங்கள் ஆட்சியரிடம் அளித்த புகாருக்கான பதில் வந்திருக்கிறது. ஆட்சியர் போலவே, நாங்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் வேறு கதைகளையே கடிதமாக எழுதியிருக்கிறார், மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மு. விஜயலட்சுமி. புற்றுநோய் வரவைக்கும் வேதிப்பொருள் பகுதியின் நீரில் இல்லை என்று சான்றளிக்கிறார். வேடிக்கை என்னவென்றால், பெண்களின் கருப்பை அகற்றப்பட்டதற்கான காரணம் கருமுட்டை பாதையில் ஏற்பட்ட கழலை.. கேட்காத கேள்விகளுக்கு வேண்டாத பதில்களை அளிக்கும் அதிகாரிகள், கேட்கும் நீரை மட்டும் வழங்க மறுக்கிறார்கள். ஊருக்குள் வரும்போது கிராமத்து நீரைக் குடிக்க மறுத்து ஓடும் அதிகாரிகள் நீர் தரமானது என்று சான்றளிக்கின்றனர்.
அதனால் போராட்டம் ஒன்றுக்கு அனுமதி கேட்டோம். காவல்துறை ஆய்வாளர் மறுப்பு தெரிவிக்க அதற்கும் போரட வேண்டியிருந்தது. அனுமதி மறுத்தாலும் போராட்டம் நடக்கும் என்று எச்சரித்த பின்னர் இப்போது அனுமதி கிடைத்துள்ளது.
படங்களில் உள்ளவர்களில் முதல் பட குழந்தையின் வயது 4. இரண்டாவது குழந்தை அல்ல சிறுவன். வயது 15. நாளாவது படம்தில் உள்ள குழந்தைக்கும் உடல் / மன வளர்ச்சி சிதைந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறார்களின் பொது அடையாளர் எச்சிலைக் கட்டுப்படுத்த முடியாததுதான். அவர்களின் மூளை/ நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கு அது ஒரு வெளிப்படை அடையாளம்.
‘எல்லாமே நல்லாருக்கு’ என்கிறார்கள் அதிகாரிகள். அப்புறம் ஏன் எல்லாமே கெட்டுக்கிடக்கிறது?
அதிகாரிகள் உளறிக்கொட்டி கிளறி மூடப் பார்க்கிறார்கள். ஆனால், அவர்கள் கக்கியதை அவர்களே சாப்பிட வேண்டிய நாள் நெருங்கும். அதனைப் போராட்டங்கள் கொண்டுவரும்.
via @mathi vanan in Facebook
https://www.facebook.com/mathivananml/posts/10201355545825025

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.