கெய்ல் நிறுவனத்தின் குழாய் பதிக்க அனுமதி, இளிச்சவாய் தமிழக விவசாயிகளுக்கு எதிரான ஹைகோர்ட் தீர்ப்பு
தமிழர்கள் மட்டும் இளிச்சவாயர்கள் என்று அனைவரும் நினைத்துவிட்டார்கள் போல,
மிகுந்த ஆபத்தான கூடங்குளம் அணுமின் நிலையத்தை தமிழ்நாட்டில் அமைக்கிறார்கள், தேனி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைகளில் நியூட்ரினோ ஆராய்ச்சி மையம் அமைக்கிறார்கள், கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து கர்நாடக மாநிலம் மங்களூருக்கு கெய்ல் நிறுவனம் எரிவாயு குழாயை தமிழகத்தின் 7 மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக அமைக்க முயற்சித்தது.
தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களின் வழியாக எரிவாயு குழாய் அமைக்கும் பணி துவங்கியது. இதனால் விளைநிலங்கள் பாதிக்கப்படுவதாக கூறி இந்த திட்டத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழக அரசு இதற்கு தடை விதித்தது, ஆனால் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த கெய்ல் நிறுவனத்துக்கு சாதகமாக உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
முல்லை பெரியார் அணை விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை துச்சமாக மதித்து தமிழகத்திற்கு துரோகம் விளைவித்து வருகிறது கேரளா, தமிழ்நாட்டின் விவசாயத்தின் உயிர்நாடியான காவிரி நீரை தமிழகத்தின் பங்கை தர சொல்லி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழர்களை கொன்று வெறியாட்டம் ஆடியது கர்நாடகா, மேலும் இன்று வரை தண்ணீர் தராமல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் செயல்படுகிறது கர்நாடகா.
ஆனால் தமிழகத்தின் உயிர்நாடியான நீர் தரமறுக்கும் இரண்டு மாநிலங்களுக்கும் கேராளவிலிருந்து கர்நாடகத்திற்கு எரிவாயு குழாய் போக தமிழகத்தின் 7 மாவட்டங்களின் விவசாய நிலத்தை கொடுக்க வேண்டுமாம், அதற்கு இழப்பீடு கெய்ல் நிறுவனம் தருவார்களாம். தமிழகம் பிற மாநிலங்களால் வஞ்சிக்கப்படும் நிலை எப்போது மாறும்?
முல்லைபெரியாறு அணை, காவிரி நதிநீர் பங்கீடு குறித்து உச்ச நீதிமன்றங்கள் உத்தரவை காற்றில் பறக்க விட்ட கேரள, கர்நாடக மாநிலங்களின் துணிவு தமிழக அரசுக்கு வருமா? தமிழக விவசாயிகளின் விவசாயம் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுமா?
இது குறித்து உங்கள் கருத்தை தெரிவியுங்கள்

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.