தமிழ்நாட்டில் இருந்து கொண்டு தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக செயல்படும் தனியார் கிளப்களின் அனுமதி ரத்து செய்யப்படும் எனவும் , அதற்கான மசோதா விரைவில் நிறைவேற்றப்படும் என்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார் .
இதுகுறித்த அறிக்கையில் தமிழக முதல்வர் அந்த சம்பவத்துக்கு தன் கண்டனத்தை பதிவு செய்தார் . மேலும் இதற்கு முன்னர் நடந்த இதுபோன்ற சம்பவங்களை சுட்டிக்காட்டி அதற்கு அப்போது ஆட்சியில் இருந்த திமுக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கூறினார் .
மேலும் வேட்டி கட்டியதால் அனுமதிக்கப்படாததால் , மொத்த ஆங்கிலேய அரசையும் பணிய வைத்த சர். தியாகராயர் கதையைக் கூறினார் . இது குறித்து விளக்கம் அளிக்குமாறு , தமிழக கிரிக்கெட் சங்க மன்றத்திற்கு கடிதம் அனுப்ப உத்தரவிட்டுள்ளார் .
மேலும் இது போன்ற பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண , இனிமேல் இதுபோன்று தமிழர்களின் கலாச்சாரத்திற்கு எதிராக ஈடுபடும் மன்றங்களுக்கு அனுமதி ரத்து செய்யும் மசோதாவை விரைவில் நிறைவேற்றுவோம் என்றார் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.