காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து வழங்கும் 370வது பிரிவை நீக்குவது என்பது பாஜகவின் முக்கிய கோஷமாகும், தற்போது பாஜக தனிப்பெரும்பாண்மையுடன் ஆட்சி அமைத்துள்ளதால் இந்த கோஷம் வலுத்துள்ளது, இது குறித்து பிரதமர் மோடி பதவியேற்றபின் இதுவரை எதுவும் சொல்லவில்லை என்றாலும் அவரது கட்சியினரும் ஆர்.எஸ்.எஸ்சும் இதை பிரச்சினையாக்குகின்றன.
காஷ்மீரில் வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க இயலாது, காஷ்மீர் மாநிலத்தின் எல்லையை அதிகரிக்கவோ சுருக்கவோ இந்திய பாராளுமன்றத்தால் இயலாது. இராணுவம், வெளியுறவு, நிதி மற்றும் தொலை தொடர்பு தவிர மற்ற அனைத்து சட்டங்களும் காஷ்மீர் மாநில சட்டத்திற்குட்பட்டது.
இது குறித்து ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு முசாஃபர் ஹூசைன் பெய்க் என்ற அரசியல் சாசன வல்லுநர் அளித்துள்ள பேட்டியில் குறிப்பிட்டதாவது இந்தியாவிலிருந்து வெள்ளையர்கள் வெளியேறியபோது பல்வேறு தனி தனி சாம்ராஜ்யங்களாக இருந்தவைகள் இந்தியாவில் தாமாகவோ அல்லது இந்திய அரசின் பேச்சுவார்த்தை, போலிஸ் மற்றும் ராணுவநடவடிக்கையினால் இணைக்கபப்ட்டன, ஆனால் ஜம்மு காஷ்மீர் இணைப்பு மட்டும் ஐ.நா சபை வரை சென்றது. இதனால் ஐக்கிய நாடுகள் சபையானது ஜம்மு காஷ்மீர் மக்களிடத்தில் பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் அந்த பொதுவாக்கெடுப்பு நடத்தும் வரை ஒரு தற்காலிக ஏற்பாடாகவே இந்திய அரசுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசனம் 370வது பிரிவு உருவாக்கப்பட்டது.
இந்த 370 ஒப்பந்தம் என்பது இரு நாடுகளுக்கு இடையேயானது. இது இந்தியாவுக்கும் ஜம்மு காஷ்மீரத்துக்கும் இடையே அரசியல் சாசன தொடர்பை ஏற்படுத்தியுள்ளது. இப்போது இந்தியா 370வது பிரிவை ரத்து செய்ய வேண்டும் கோரி நீக்கிவிட்டால் இயல்பாகவே ஜம்மு காஷ்மீரத்து மக்கள் தங்களது தலைவிதியைத் தீர்மானித்துக் கொள்ளும் பொதுவாக்கெடுப்பை நடத்துவதற்கு உரிமை படைத்தவர்களாகிவிடுவர்கள் என்றார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.