தனுஷ் நடிப்பில் வெளிவந்து தற்போது மிகபெரிய வெற்றியை பெற்ற படம் வேலை இல்லா பட்டதாரி. இந்த படத்துக்கு எல்லா இடத்திலும் ஆதரவு இருந்தது. இந்த படத்தின் நாயகன் தனுஷிற்கு இது 25 வது படம். அது அவரது சினிமா வாழ்க்கையில் மிக பெரிய வெற்றி படமாக அமைந்து விட்டது. இந்த படம் தனுஷுக்கு என தனி ரசிகர் கூட்டத்தை சேர்த்தது. குறிப்பாக இந்த படம் இன்ஜினியரிங் மாணவர்களிடையே மிக பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. வசூலிலும் மிக பெரிய சாதனை படைத்து வருகிறது.
இந்த படத்தின் உரிமையை பலரும் கேட்டும் தனுஷ் கொடுக்க முன்வரவில்லை. அந்த படத்தின் ஹிந்தி பதிப்பில் நடித்து விட வேண்டும் என தனுஷ் அதிக ஆர்வத்துடன் இருக்கிறார். அதற்காக சரியான தயாரிப்பாளரை தேடி வருகிறார். இந்நிலையில் படத்துக்கு புதிய சிக்கல் வந்து உள்ளது. இந்த படத்தின் போஸ்டர்களில் தனுஷ் புகைபிடிப்பது போன்று உள்ளது. இது போன்ற போஸ்டர்கள் புகையிலை கட்டுப்பாட்டு வாரிய விதிமுறைகளை பின்பற்றாமல் அதனை மீறுவதாக இருப்பதை அதிகாரிகள் புகாராக தெரிவித்திருந்தனர். படத்தின் தயாரிப்பாளரான தனுஷ் உடனடியாக இந்த உத்தரவை ஏற்று கொண்டதுடன் பட போஸ்டர்களை விரைவில் நீக்குவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.