ராமநாதபுரம் மாவட்டம, கமுதி அருகே மணல் கடத்தல் டிராக்டரை போலீஸார் பறிமுத்ல செய்து, வட்டாட்சியரி டம் ஒப்படைத்தனர்.
கமுதி பகுதியில் ஆற்று மணல் கடத்தப்படுவதைத் தடுக்கும்படி மாவட்ட ஆட்சியர் க.ந்தகுமார், மாவட்ட காவல் கண் காணிப்பாளர் எம்.என்.மயில் வாகனன் ஆகியோர் உத்தரவிட்டுள்ளனர். இதையடுத்து வட்டாட்சியர் பி.நாகநாதன் தலை மையில் வருவாய்த்துறையினரும், உதவி காவல் கண்காணிப்பாளர் எஸ்.சுந்தரவடிவேல் தலைமையில போலீஸாரும் தினசரி ரோந்து சுற்றி மணல் கட்த்தப்படாமல் தடுப்பதற்கு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையி்ல் கா வல் ஆய்வாளர் முருகன், சார்பு ஆய்வாளர்கள் தங்கப்பாண்டியன், திலகவதி, மாடசாமி ஆகியோர் போலீஸாருடன் ரோ ந்து சுற்றி வந்தபோது, எதிரே ஆற்று மணலை ஏற்றிக்கொண்டு டிராக்டர் ஒன்று வந்ததைக் கண்டனர். இதையடுத்து ம ணலுடன் டிராக்டரை போலீஸார் கைப்பற்றி மேல் நடவடி்க்கைக்காக, வட்டாட்சியர் பி.நாகநாதனிடம் ஒப்படைத்தனர். ம ணல் கடத்தல் சம்பந்தமாக விசாரித்து தண்டனை வழங்கும் பொருட்டு, பரமக்குடி உதவி ஆட்சியர் எஸ்.சமிரனுக்கு த கவல் அறி்க்கையை வட்டாட்சியர் அனுப்பி உள்ளார்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.