வண்ண வண்ணக் காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவு வகைகளில் நிறைய ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது, அவை நம் உடலுக்கு மிகவும் நல்லது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.
1. நெல்லிக்காய் : இளம் பச்சை நிற நெல்லிக்காயை இருப்பது வைட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட். கான்சரை எதிர்க்கும் ஆற்றலுள்ளது. இது கொழுப்பை கரைக்க உதவும், இதில் சர்க்கரை அளவு குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளது.
2. திராட்சைப்பழம் : இதன் புளிப்புச் சுவையின் பின்னனியில் இருப்பது ஆன்டி ஆக்ஸிடென்ட்தான். சர்க்கரை வியாதிக்கு மிகவும் நல்லது.
3. பூண்டு : வெண்மையும் தூய சக்தி பூண்டு, இதைச் சாப்பிட்டால் வாயில் துர்நாற்றம் ஏற்படலாம், ஆனால் இதிலிருக்கும் அசிலின், உயர் ரத்த அழுத்தத்தைக் குறைக்கும் ஆற்றல் உடையது. கான்சரை தவிர்க்க, கெட்ட கொழுப்பை அகற்ற, இதய நோய்களிலிருந்து தற்காத்துக் கொள்ள என்று பூண்டின் நன்மைகள் கணக்கில் அடங்காது. தினமும் இதை உணவில் சேர்த்துக் கொண்டால் நோய்கள் நமக்கு நிரந்திரப் பகைதான்.
4. காபி : டார்க் பிரவுனைக் காபி கலர் என்றே தான் சொல்வோம். தினமும் இரண்டு கப் காபி தரும் எனர்ஜி என்பது அதை பருகி மகிழ்பவர்களுக்குத் தான் தெரியும். இதிலிருக்கும் பாலிபெனால் நம்மை சுறுசுறுப்பாக்கும். சர்க்கரை நோய், இதயம் சம்மந்தப்பட்ட வியாதிகளை தடுக்கும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.