ஐ.எஸ்.எல் அமைப்பில் இருக்கும் ஒரு அணியான சென்னையின் எப்.சி என்னும் அணிக்கு இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனி துணை உரிமையாளராகப் போகிறார் . இதன் மூலம் அதிகாரப்பூர்வமாக இந்த இந்தியன் சுப்பர் லீக்கில் சேரும் 4 வது கிரிக்கெட் வீரராக தோனி உள்ளார் . இதற்கு முன் சச்சின் , கோலி , கங்குலி ஆகியோர் இருந்தனர் .
சென்னை அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சனுடன் இணைந்து இவர் துணை உரிமையாளராக இருப்பார் . இவர் தான் சென்னை சுப்பர் கிங்கிஸின் கேப்டனாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .
சென்னையின் எப்.சி அணி வருகிற அக்டோபர் 21 ஆம் தேதி தனது முதல் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை சந்திக்கிறது . இந்த ஐ.எஸ்.எல் அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்குகிறது . முதல் போட்டியில் அத்லெடிகோ டி கொல்கத்தா அணி மும்பை சிட்டி எப்.சி அணியை சந்திக்கிறது .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.