skip to main
|
skip to sidebar
எளிய இயற்கை மருத்துவம் : கோதுமை,பீட்ரூட்
- யை நல்லா கழுவி முளைகட்ட வைக்கணும். முதல் நாள் சாயங்காலம் முளைகட்டி, மறுநாள் காலையில எடுத்து அதோட கொஞ்சம் தண்ணிவிட்டு நல்லா அரைச்சி பால் எடுக்கணும். அதுல கொஞ்சம் தேங்காய்ப்பால், சுவைக்கு தேன் சேர்த்துச் சாப்பிட்டால் உடம்புக்கு நல்ல பலம் கிடைக்கும்.இது, வாத நோயை குணமாக்கும். வெள்ளை அணுக்களோட எண்ணிக்கையை அதிகரிக்கும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தா, மூக்குல நீர் வடியறது உள்ளிட்ட சின்னச் சின்ன தொந்தரவுகளையும் அண்ட விடாது. இன்னும் சொல்லப்போனா, புற்றுநோயைக் எதிர்க்கக்கூடிய சக்திகூட இருக்கு இந்த கோதுமைப்பாலுக்கு. இதைச் சாப்பிடும்போது சிலருக்கு வயிற்றுப்போக்கு வந்தாலும் வரும். அப்படி வந்தால் குடிக்கறத நிறுத்திடணும். வயிற்றுப்போக்கு நின்னதும், ஒருநாள்விட்டு கோதுமைப்பாலைத் தொடர்ந்து சாப்பிட்டால் உடம்பு ஏத்துக்கும்.
- பீட்ரூட்டை சமைச்சோ, பச்சையாவோ சாப்பிடுறப்பல் மலச்சிக்கல், கல்லீரல் கோளாறு, பித்தக்கோளாறு எல்லாம் சரியாகும். மற்ற கீரைகளைப்போல, பீட்ரூட் கீரையையும் சாப்பிடலாம். அல்சர்னு சொல்லப்படுற வயிற்றுப்புண், மஞ்சள்காமாலை இதையெல்லாம் இந்தக் கீரை குணமாக்கும்.மாதக்கணக்குல மலச்சிக்கல், மூலக்கோளாறுனு அவதிப்படுறவங்க, பீட்ரூட் சாறோட தண்ணி சேர்த்து, ராத்திரி தூங்கப் போறதுக்கு முன்ன குடிச்சுட்டு வந்தா குணம் கிடைக்கும்.தினமும் ஒரு டம்ளர் பீட்ரூட் ஜூஸ் சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் பரவுறதைத் தடுக்கும். ஆரம்பக்கால புற்றுநோயைக் குணமாக்குற சக்தியும் இதுக்கு இருக்கு.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.