BREAKING NEWS

Ads

உலகம்

Thursday, 25 July 2013

தர்மபுரி திவ்யா கவுன்சிலிங், மோடி யுஎஸ் விசா, அமிர்த்தியா சென் பாரத ரத்னாவை பறிக்க கோரிக்கை, திருடி ஹீரோவானவர் மேலும் பல செய்திகள்

தெளிவான எதிர்கால சிந்தனையோ,மீண்டும், படிப்பை தொடர விரும்பும் தர்மபுரி திவ்யா - கவுன்சிலிங் செய்த டாக்டர்கள் அறிக்கை

தர்மபுரி திவ்யா இளவரசனுடன் செய்து கொண்ட திருமணத்தை தொடர்ந்து திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டார், இதையடுத்து ஏற்பட்ட கலவரம் திவ்யா இளவரசனை பிரிதல் என பல திருப்பங்களுக்கிடையே இளவரசன் தற்கொலை செய்து கொண்டார், இதையடுத்து நீதிமன்ற ஆணைப்படி திவ்யா மற்றும் குடும்பத்தினருக்கு கவுன்சிலிங் மேற்கொண்ட டாக்டர்கள் திவ்யா தன் நர்சிங் படிப்பை மீண்டும் தொடர விரும்புவதாகவும், எதிர்காலம் பற்றிய, உறுதியான எண்ணத்துடன் இருப்பதாகவும், அவருக்கு கவுன்சிலிங் அளித்த டாக்டர்கள் குழு சென்னை ஐகோர்ட்டில் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

# பெண்கள் நல்ல மன உறுதியுடன் தெளிவாக உள்ளார்கள், ஆண்கள் தான் மன உறுதியற்று தற்கொலை செய்துகொள்கிறார்கள்

--------
மோடி பிரதமர் ஆக தகுதி இல்லாதவர் என்று விமர்சித்த அமிர்தியா சென்னின் பாரத ரத்னாவை பறிக்க கோருகிறது பாஜக‌

நோபல் பரிசு வென்றவரும் பாரத ரத்னாவுமான அமிர்தியா சென் மோடியின் மதவாத செயல்களினால் மோடி பிரதமர் ஆக தகுதி இல்லாதவர் என்று விமர்சித்திருந்தார் இதனால் கோபமடைந்த பாஜக அவரின் பாரத ரத்னா விருதை பறிக்க வேண்டுமென்று விமர்சித்திருந்தது, சுப்ரமணிய சாமி அமிர்த்தியா சென் இந்தியரே அல்ல என்று விமர்சித்திருந்தார், ஆனால் இதற்கு பதிலளித்த அமிர்த்தியா சென் இந்திய குடிமகனான தனக்கு எந்த மாதிரியான பிரதமர் வேண்டும் என்று கருத்து சொல்ல உரிமை உண்டு என்றும், மோடி பிரதமராக தகுதி இல்லை என்று கூறியதால் காங்கிரஸ் அரசை ஆதரிப்பது ஆகாது என்றும் அதே சமயம் இது மோடிக்கு எதிரான கருத்து மட்டும் தான் பாஜகவுக்கு எதிரானது அல்ல என்றும் தன் கருத்துக்கு வருந்தப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார்.

# சபாஷ் டாக்டர் அமிர்த்தியா சென், மோடிக்கு குஜராத் முதல்வர் பதவியே அதிகம், இதில் பிரதமர் பதவி வேறா?

------------
செக்ஸ் குற்றச்சாட்டுக்குள்ளான சன் நியூஸ் டிவி முன்னாள் தலைமை அதிகாரி ராஜா தந்தி டிவியில் பணியில் சேருகிறார்.

சன் நியூஸ் ரீடர் அகிலா என்பவர் சன் நியூஸ் அதிகாரி ராஜா மீது செக்ஸ்க்கு வற்புறுத்துவதாக குற்றம் சாட்டி போலிசில் புகார் அளித்தார், அதைத்தொடர்ந்து ராஜா கைது செய்யப்பட்டார். தற்போது சன் நியூசை விட்டு வெளியேறி தந்தி டிவியில் நல்ல சம்பளத்தில் ராஜா வேலைக்கு சேரப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

# அங்கே போயாவது அடக்கமா இருங்க ராசா

-------------
ஹீரோ ஆசையில் கொள்ளையடித்து அந்த பணத்தை கொடுத்து நடிக்க வந்த வெண்ணிலா கபடி குழு நடிகர் கைது.

வெண்ணிலா கபடிக்குழுவில் துணை நடிகராக நடித்த செந்தில் குபேரன் விடலைப்பட்டாளம் என்ற படத்தின் நாயகனாகும் வாய்ப்புக்காக 20 இலட்சம் ரூபாயை கொள்ளையடித்து கொடுத்துள்ளார். நேற்று கைது செய்யப்பட்ட இவரிடமிருந்து 10 இலட்சம் மதிப்புள்ள நகைகள் கைப்பற்றப்பட்டன.

# கொள்ளையடிச்சு மக்கள் மனசை கொள்ளையடிக்க பார்த்திருக்கார்

---------------
நரேந்திரமோடி விசா அப்ளை செய்தால் பரிசீலிக்கப்படும் - அமெரிக்கா அறிவிப்பு

நரேந்திரமோடி அமெரிக்கா செல்ல விசாவுக்கு விண்ணப்பித்தால் அமெரிக்க குடியேற்ற சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு அவரது விசா விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

# என்னாங்கடா சொல்றீங்க? இப்ப தருவிங்களா? தரமாட்டீங்களா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media