பொதுசொத்துக்கு சேதம் விளைவித்த 16 அதிமுக எம்.எல்.ஏக்கள் 2 மந்திரிகளை முதல்வர் ஜெயலலிதா நீக்குவாரா? டாக்டர் ராமதாஸ் கேள்வி
டாக்டர் ராமதாஸ் கைது செய்யப்பட்டவுடன் நடைபெற்ற போராட்டங்களில் நூற்றுக்கும் மேற்பட்ட பேருந்துகள் உடைக்கப்பட்டன, சில பேருந்துகள் முழுதாக தீவைத்து கொளுத்தப்பட்டன, இதைத்தொடர்ந்து பாமகவிடமிருந்து சேதமடைந்த பொது சொத்துக்களுக்கான பணத்தை பெறப்படும் என முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் அறிவித்தார், மேலும் பாமகவுக்கும் டாக்டர் ராமதாஸ்க்கும் இது தொடர்பான விசாரணைக்கு வருமாறு சரமாரியாக சம்மன்கள் அனுப்பப்பட்டன. இந்த அறிவிப்பு பொதுமக்களிடத்திலும் பாமகவுக்கு எதிர் நிலை கொண்டவர்களிடமும் பெருத்த வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் இன்று அறிக்கை வெளியிட்ட டாக்டர் ராமதாஸ் அதிமுகவின் 16 எம்.எல்.ஏக்கள் பெயர்களை வெளியிட்டு இவர்கள் மீது பொது சொத்தை நாசம் செய்த வழக்கு உள்ளது என்றும் இதில் ஓ.பி.எஸ் உட்பட 5 பேர் அமைச்சர்களாக உள்ளனர், 2 பேர் முன்னாள் அமைச்சர்கள். இவர்கள் மீது ஜெயலலிதா அரசு நடவடிக்கை எடுத்து இவர்களை பதவி நீக்கம் செய்யுமா என்றும் "கட்சியினரை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதுடன், சட்டவிரோத செயல்களில் ஈடுபடாமல் பார்த்துக்கொள்ள வேண்டியது கட்சித் தலைவர்களின் கடமை ஆகும்" என்று சட்டப்பேரவையில் பேசிய முதல்வர் ஜெயலலிதா இதற்கு தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் டாக்டர் ராமதாஸ் கோரியுள்ளார். மேலும் பொது சொத்தை நாசம் செய்த வழக்கு உள்ளா 16 எம்.எல்.ஏக்கள் மீதும் குண்டர் சட்டம் பதிவு செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
# டாக்டர் சார், தர்மபுரி பஸ்சை கொளுத்தி 3 மாணவிகள் கொல்லப்பட்டார்களே அது பற்றி உங்க அறிக்கையில் ஒன்றுமே சொல்லலையே.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.