BREAKING NEWS

Ads

உலகம்

Saturday, 20 July 2013

நியூஸ் பிட்ஸ் - சிம்பு ஹன்சிகா லவ்ஸ், சீமான் கதை காப்பி பஞ்சாயத்து, 4000 கொலைகள், பீஜிங் குண்டுவெடிப்பு, பாண்டிச்சேரி சரக்கு, புதுடில்லி மெட்ரோ ரெயில் ஆபாச படங்கள்

நியூஸ் பிட்ஸ் - சிம்பு ஹன்சிகா லவ்ஸ், சீமான் கதை காப்பி பஞ்சாயத்து, 4000 கொலைகள், பீஜிங் குண்டுவெடிப்பு, பாண்டிச்சேரி சரக்கு, புதுடில்லி மெட்ரோ ரெயில் ஆபாச படங்கள்

ஆமா நான் ஹன்சிகா கூட தான் இருக்கேன் - சிம்புவின் ஓப்பன் மெசேஜ்

நடிகை ஹன்சிகாவும் சிம்புவும் காதலிப்பதாக செய்திகளில் பரபரப்பு கிளம்பியது, அது குறித்து டிவிட் செய்த சிம்பு ஆமாம் நான் ஹன்சிகாவுடன் தான் இருக்கிறேன், திருமணம் குறித்து குடும்பத்தில் முடிவு செய்வார்கள் என்றார், ஹன்சிகாவும் ஆமா ஐ ம் சீயிங் சிம்பு, பெர்சனல் லைஃப் பற்றி பேச விரும்பவில்லை என்று தெரிவித்தார்.

# ஹன்சிகா மேடம், உசாரா கேமரா எதுவும் பக்கத்தில் இல்லாம பார்த்துக்குங்க, ஒருவேளை லவ்வு பிரேக் ஆச்சினா போட்டோ லீக் ஆகிடும் ஜாக்கிரதை


----------------------------
'' உங்கள் அந்தரங்கம் படமாக்கப்படுகிறது’’ இன்றை நக்கீரனில் மனுஷ்ய புத்திரன் கட்டுரை.

டெல்லி மெட்ரோ ட்ரெயின் சிசிடிவி அந்தரங்க வீடியோ பதிவுகள் ஆபாச இணைய தளங்களுக்கு கிடைத்ததன் பின் புலத்தில் எழுதப்பட்டது.
--Manushya Puthiran ஸ்டேட்டஸ் மெசேஜில் எழுதியது

# மெட்ரோ ட்ரெயினில் என்ன அந்தரங்கம் வேண்டிக்கிடக்கு? அது என்ன படுக்கை அறையா இல்லை மகாபலிபுரம் ரிசார்ட்டா?
-- Nambikai Raj ன் என்கவுண்டர்
-------------------------------------
தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைகள்: டாக்டர் ராமதாஸ்

பாஜக‌ மாநில பொதுச் செயலர் ஆடிட்டர் ரமேஷ் கொலைக்கு கண்டனம் தெரிவித்து ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் 2 ஆண்டுகளில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கொலைகளும் 40,000க்கும் மேற்பட்ட கொள்ளைகளும் நடந்துள்ளன, இதை தடுக்க வேண்டிய அரசோ பாமக அப்பாவிகள் மீது வழக்கு போட்டு கைது செய்வதில் மும்முரம் காட்டுகிறது என்றார் மேலும் 9 மாதங்களில் 4 பாஜகவினர் கொல்லப்பட்டது ஒரே அமைப்பினை சேர்ந்த பலர் கொல்லப்படுவதன் பின்ணணி குறித்து சந்தேகம் எழுப்பினார்.

# கருணாநிதி அறிக்கை போலவே கொலைக்கெல்லாம் புள்ளி விவரம் கொடுக்க ஆரம்பிச்சிட்டாரே டாக்டர்
----------------------------
சீனாவில் பீஜிங்க் விமான நிலையத்தில் குண்டு வெடிப்பு - ஒருவர் காயம்

சீனாவில் பீஜிங்க் விமான நிலையத்தில் பட்டாசு செய்ய வைத்திருக்கும் மருந்து பவுடரை யாரோ வெடிக்க வைத்ததில் வீல் சேரில் இருந்த ஒருவர் காயமடைந்தார், பெரும் புகை வந்தாலும் ஒருவரைத்தவிர வேறு யாரும் காயப்படவில்லை. இது தீவிரவாதிகள் சதி வேலையா என்பது குறித்தும் எந்த தகவலும் இல்லை.
----------------------
புதுச்சேரி மாநிலத்தில் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் முதல்வர் ரங்கசாமியுடன் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் வாபஸ் ஆனது.

# இனி சரக்கு பிரச்சினை இருக்காது பாண்டியில்
---------------------
சீமான் கதையைக் காப்பியடித்த லிங்குசாமி- இயக்குநர் சங்கத்தில் நடக்கும் பஞ்சாயத்து!

நடிகர் விஜய்க்காக பகலவன் என்ற பெயரில் ஒரு கதை செய்திருந்தார் இயக்குனர் மற்றும் நாம் தமிழர் கட்சி தலைவரான சீமான், இதே கதையை சுட்டு சூர்யாவ வைத்து லிங்குசாமி எடுப்பதாக செய்தியறிந்து இயக்குனர் சங்கத்தில் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார் சீமான், கதை சுட்ட கதை என்று முடிவாகியுள்ளது, இதனால் லிங்குசாமி சூர்யாவுக்காக வேறு கதை டிஸ்கசனில் இறங்கியுள்ளார்.

# வருங்கால முதல்வருக்கே இந்த நிலையா?


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media