BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 22 July 2013

நியூஸ் பிட்ஸ்: மீண்டும் ஊடுறுவிய சீனா, பந்த் 50 பஸ்கள் உடைப்பு, அத்வானி சேலம் வருகிறார்,

அத்வானி வருகிறார், பாஜக ஆடிட்டர் ரமேஷ் கொலையை கண்டித்து இன்று நடக்கும் பந்த், இதுவரை 50க்கும் மேற்பட்ட பஸ்கள் உடைப்பு

சேலத்தில் பா.ஜ.க. பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை கண்டிக்கும் வகையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பந்த் நடைபெறுகிறது, இதை யொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் நேற்று இரவு திருவட்டாறு,தக்கலையில் 22 பஸ்கள் மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டது, இதனால் நிறுத்தப்பட்ட பஸ் போக்குவரத்து போலிஸ் பாதுகாப்புடன் மீண்டும் தொடர்கிறது, இதே போல் புதுச்சேரியில் 14 பஸ்கள் உடைக்கப்பட்டன.

ஆகஸ்ட் 1 ம் தேதி சேலத்தில் ஆடிட்டர் ரமேஷூக்கு அஞ்சலி செலுத்தும் கூட்டம் நடைபெற உள்ளது, இதற்கு பாஜக மூத்த தலைவர் அத்வானி வருவதாக பாஜக பொன்.ராதாகிருஷ்ணன் குறிப்பிட்டார்.

# சாதிச்சண்டையே இன்னும் முடியலை, இதில் மத மோதலை வேறு கிளப்பிவிட்டுடாதிங்க ப்ளீஸ்.

-----------------------
5 நாட்களில் 3முறை இந்திய எல்லையில் ஊடுறுவிய சீன ராணுவம்.

சீன-இந்தியா எல்லைப்பிரச்சினை குறித்து தொடர்ந்து பேச்சு வார்த்தை நடந்த நிலையிலும் சீன ராணுவம் கடந்த 5 நாட்களில் 3முறை இந்திய எல்லையில் ஊடுறுவியுள்ளது.

இதில் 50 சீன வீரர்கள் குதிரையில் ஊடுறுவி பல மணி நேரம் கூடாரம் அடித்து தங்கியுள்ளனர். இது குறித்து கருத்து தெரிவித்த இந்தியா இதை சீரியஸாக எடுத்துக்கொள்வதாக குறிப்பிட்டுள்ளது.

# சீரியாசா எடுத்தாலும் காமெடியா எடுத்தாலும் அப்பப்போ மாமியார் வீட்டுக்கு வரமாதிரி வந்து தங்கிட்டு போறானுங்களே

--------------
பாஜக பொது செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதை அடுத்து அவரால் அரசியலுக்கு வந்த பெண்மணி ராஜராஜேஸ்வரி மனம் நொந்து தீக்குளிப்பை மேற்கொண்டார், இந்த பெண்ணுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார்.
------------
கார்ப்பரேஷன் லாரி மோதி இறந்த பையன் குடும்பத்திற்கு ரூ 1 இலட்சம் நிவாரண நிதி.

2013ம் ஆண்டில் மட்டும் இதுவரை 13 பேர் கார்ப்பரேஷன் லாரி மோதி இறந்துள்ளனர்.

சென்னை புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த இம்ரான் கான் (13) என்பவர் கார்ப்பரேஷன் லாரி மோதி ஜூலை 18ம் தேதி இறந்துவிட்டார், முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ஒரு இலட்சம் ரூபாய் அவரது குடும்பத்துக்கு வழங்கப்பட்டது.


# பொறுப்பின்றி வண்டி ஓட்டும் லாரிக்காரர்களின் லைசன்சை கேன்சல் செய்ய வேண்டும்
------------------
ஓரினச்சேர்க்கைக்கு அழைத்ததால் நண்பனை கொலை செய்தவர் கைது.

29வயது ராஜேஷ் என்பவரும், ஹரி என்பவரும் நண்பர்கள். இதில் ஹரி என்பவர் transvestite  ஆவார் (பெண்கள் உடையை அணிந்து கொள்ளும் ஆண்). வெள்ளி இரவும் ராஜேஷூம் ஹரியும் மாங்காடு சுடுகாட்டில் மது அருந்தி உள்ளனர், அப்போது ஹரி ராஜேஷை செக்ஸூக்கு அழைத்ததாகவும் இதில் சண்டை வந்து ஹரியை கொன்று சுடுகாட்டிலேயே புதைத்துவிட்டதாகவும் ராஜேஷ் விசாரணையில் கூறியுள்ளார். 


ஹரி கோவில்களில் ஜோசியம் சொல்லி பணம் சம்பாதித்து அதை ராஜேஷூடன் செலவு செய்து வந்ததாகவும் அதில் ஏற்பட்ட தகராறிலேயே ராஜேஷ் ஹரியை கொன்றுவிட்டதாக அவரது அண்ணன் கூறியுள்ளார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media