போலிஸ் ஸ்டேசனில் கல்யாணம் செய்து வைக்க கூடாது, குற்றத்திற்கு போலிசும் உடைந்தை என்று குற்றம் சாட்டப்படுவார்கள் என போலிஸ்களுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்.
போலிஸ் ஸ்டேசனில் போலிஸ் ஆபிசர்கள் முன்னின்று திருமணம் செய்து வைப்பது சில போலிஸ் ஆபிசர்களுக்கு ஃபேஷனாக உள்ளது என்று உயர் நீதிமன்ற நீதிபதிகள் கடுமை காட்டியுள்ளார்கள்.
கே.தங்கராஜ் என்பவர் தாக்கல் செய்திருந்த ஹேபியஸ் கார்பஸ் மனுவை நீதிபதிகள் எஸ்.ராஜேஸ்வரன் மற்றும் ஆறுமுக சாமி ஆகியோர் விசாரித்தனர். தங்கராஜின் 17வயது மகள் டிசம்பர் 31,2012 அன்று காணாமல் போய்விட்டார், இது குறித்து துடியலூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார், அப்போது தங்கராஜ் அந்த பெண் அந்த பகுதியில் இருந்த பையனை காதலித்தார் என்றும் அவரோடு சென்று விட்டாரென்றும் கூறினார், காணாமல் போன மைனர் என்ற போதும் கூட போலிஸ் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதைத்தொடந்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் தங்கராஜ், இந்நிலையில் தங்கராஜினி மகள் கர்ப்பம் முற்றிய நிலையில் வந்தபோது போலிஸ் அந்த பெண் மைனராக இருந்த நிலையிலும் கர்ப்பம் அடைந்திருந்ததால் 20 வயது காதலனுடன் அனுப்பி வைத்தார்கள், இது குறித்து கடும் அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள் வழக்கு நிலுவையில் இருக்கும் போது மைனர் பெண்ணை 20 வயது பையனுடன் அனுப்பியது தவறு என்று கண்டனம் தெரிவித்தனர்.
இம்மாதிரியாக நடந்து கொள்ளும் போலிஸ் ஆபிசர்கள் இது போன்ற வழக்குகளில் (மைனர் பெண் கடத்தல்) உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்படும் என்றும் குறிப்பிட்டார்கள். மேலும் இது போன்ற வழக்குகளில் பெண் காணவில்லை என்று மட்டும் வழக்கு பதிவு செய்யாமல் சட்டப்படி என்ன மாதிரியான வழக்கு (மைனர் பெண் கடத்தல்) பதிவு செய்ய வேண்டுமோ அது போன்றே பதிவு செய்யவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்.
ஏற்கனவே இதே போன்றே மதுரை உயர்நீதிமன்ற கிளை 2010 ம் ஆண்டு விராதானூரை சேர்ந்த கருப்பசாமி மனைவி செல்வி தாக்கல் செய்திருந்த ஹேபியர்ஸ்கார்பரஸ் மனுவை விசாரித்த நீதிபதிகள் காவல்நிலையங்களில் கல்யாணம் செய்வதை ஊக்குவிக்க கூடாது என்று அனைத்து காவல்நிலையங்களுக்கும் அறிவுறுத்துமாறு போலிஸ் டிஜிபிக்கு உத்தரவிட்டார்கள் என்றாலும் தொடர்ந்து மைனர் பெண்களுக்கும், கல்யாண வயதையடையாத பையன்களுக்கு கல்யாணம் செய்து வைக்கும் கட்டை பஞ்சாயத்துகளில் காவல்துறையை சேர்ந்தவர்களே ஈடுபடுவதாக பலரும் குற்றம் சாட்டுகின்றார்கள்
சேரன் மகள் போன்ற பிரபலமானவர்களின் பெண்கள் மேஜர் ஆனாலும் காதலனுடன் செல்லவிடாமல் செயல்படும் காவல்துறையை சேர்ந்தவர்கள் கே.தங்கராஜ் போன்ற சாமானியர்களின் மகள்கள் மைனராக இருந்தாலும் பெற்றோருடன் செல்லவிடாமல் காதலனுடன் அனுப்பி வைக்கிறார்கள்.
# போலிஸ் ஸ்டேசன் காதல் கட்டைப்பஞ்சாயத்து காவலர்களுக்கு இது ஒரு சவுக்கடி.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.