குமுதம் பப்ளிஷர் வரதராஜன் மீதான மோசடி வழக்கு தள்ளுபடி, குமுதம் ஜவஹர் பழனியப்பன் வரதராஜன் மோதலில் கை ஓங்கும் வரதராஜன்
குமுதம் பப்ளிஷர் வரதராஜனுக்கும் அதன் உரிமையாளர் ஜவஹர் பழனியப்பனுக்கும் குமுதம் நிர்வாகத்தை உரிமையை அடைவது குறித்த பிரச்சினைகள் இருந்தன, 1947-ஆம் ஆண்டு ஜவஹர் பழனியப்பனின் தந்தை எஸ்.ஏ.பி. அண்ணாமலையால் பத்திரிகை தொடங்கப்பட்ட போது பி.வி.பார்த்தசாரதி(வரதராஜனின் தந்தை) மேலாளராக பணிபுரிந்தார், இருவரும் இணைந்து கடுமையாக உழைத்து குமுதத்தை தமிழகத்தின் / இந்தியாவின் மிக அதிக பிரதிகள் விற்கும் பத்திரிக்கையாக மாற்றினார்கள்.
ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் மிகப்பெரிய ஹார்ட் சர்ஜன்ட்டாக உள்ளார், அமெரிக்காவிலேயே முழு நேரமும் இருப்பதால் பெரியவர்கள் இருவரின் மறைவுக்கு பின் பத்திரிக்கை நிர்வாகம் முழுதும் பார்த்தசாரதி மகன் வரதராஜன் கைக்கு வந்தது, மேலும் வரதராஜனுக்கு குமுதத்தில் குறிப்பிட்ட அளவு பங்கும் வழங்கப்பட்டது, ஆனால் அதற்கான பணத்தை வரதராஜன் இது வரை செலுத்தவில்லை என்று ஜவஹர் பழனியப்பன் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த குமுதம் நிர்வாக மோதலில் வரதராஜனின் கை ஓங்கியது, நிர்வாகம் முழுக்க வரதராஜன் கட்டுப்பாட்டில் இருந்ததால் குமுதத்தை மொத்தமாக வரதராஜன் சுருட்டும் வாய்ப்பு அதிகரித்தது, ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் வசிப்பதால் தனது தாய் கோதை ஆச்சியை குமுதம் அலுவலகத்துக்கு அனுப்பினார், ஆனால் வயதான கோதை ஆச்சிக்கு அலுவலகத்தில் தண்ணீர் கொடுக்க கூட இல்லாமல் அவமானப்படுத்தப்பட்டார், இந்த மோதலில் உச்ச கட்டமாக பஞ்சாயத்து அப்போதைய முதல்வர் கருணாநிதியிடம் சென்றது, அதில் பஞ்சாயத்து படியாததால் ஒரு கட்டத்தில் வரதராஜன் மீது சில வழக்குகள் போடப்பட்டன, இதனால் கடுப்பான வரதராஜன் தன் முழு பத்திரிக்கை பலத்தையும் கருணாநிதிக்கு எதிராக தேர்தல் சமயத்தில் பயன்படுத்தினார். குமுதம் திமுக எதிர்ப்பு நிலையை தேர்தல் நேரத்தில் எடுத்தது, தமிழகத்தின் முக்கிய இரண்டு பத்திரிக்கைகளான குமுதமும் விகடனும் திமுக எதிர்ப்பு நிலையை எடுத்தது திமுகவின் தேர்தல் முடிவுகளை கடுமையாக பாதித்தது.
திமுக ஆட்சிகாலத்தில் ஜவஹர் பழனியப்பன் 2010-ஆம் ஆண்டு போலீஸ் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்று அளித்தார். அதில் வரதராஜன் 25 கோடி ரூபாய் பணத்தை குமுதம் நிர்வாகத்தில் இருந்து சுருட்டிவிட்டார் என்று கூறியிருந்தார், இந்த மனு சென்னை பெருநகர தலைமை மாஜிஸ்திரேட் நீதிமன்ற நீதிபதி எம்.மோகன் முன்பு விசார ணைக்கு வந்தது. விசாரணைக்குப் பிறகு நீதிபதி பிறப்பித்த உத்தரவில், ‘’நிறுவனத்தின் பணம் ரூ. 25 கோடியை தவறாக பயன்படுத்தியதாகவும், ஏமாற்றியதாகவும் வரதராஜனுக்கு எதிராக அளிக்கப்பட்ட புகாரில் அடிப்படை முகாந்திரம் ஏதும் இல்லை என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.
ஜவஹர் பழனியப்பன் கருணாநிதியை நாடியதால் கடுப்பில் இருக்கும் தற்போதைய ஆளும் தரப்பு ஜவஹர் பழனியப்பனுக்கு கை விரித்துவிட ஏற்கனவே குமுதத்தின் முழு நிர்வாகத்தையும் கையகப்படுத்தியுள்ள வரதராஜனி கை இந்த வழக்கின் முடிவுக்கு பின் மேலும் உயர்ந்துள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.