74 பேர் கொல்லப்பட்ட வங்காளதேச துப்பாக்கி படை வீரர்கள் புரட்சியை நடத்தியவர்கள் 167 பேருக்கு தூக்கு தண்டனை விதிப்பு.
பங்களாதேஷ் ரைஃபில் ஃபோர்ஸ் என்கிற துப்பாக்கி படை வீரர்கள் எல்லை பாதுகாப்பில் உள்ளவர்கள், இவர்கள் தான் அடிக்கடி இந்திய எல்லையில் ஊடுறுவது, இந்திய வீரர்களை கொல்வது என்று அத்துமீறல்கள் செய்பவர்கள். இவர்களுக்கு விடுமுறை சலுகைகள், சம்பளம் உட்பட பல உரிமைகள் பங்களாதேஷ் ராணுவ வீரர்களை விட குறைவாக இருந்தது, எனவே பங்களாதேஷ் ரைஃபில் படைப்பிரிவினர் பங்களாதேஷ் ராணுவ வீரர்களுக்கு இணையான உரிமைகள் கோரி 2009ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 25 மற்றும் 26 தேதிகளில் பங்களாதேஷ் ரைஃபில்ஸ் பிரிவின் தலைமை அலுவலகத்தை கைப்பற்றி புரட்சி நடத்தினார்கள். இது பங்களாதேஷ் ரைஃபில் படை வார விழா நடைபெற்ற போதே நடந்தது. சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதுப்பட்ட கட்டுரை
இதில் பங்களாதேஷ் ரைஃபில் படையின் உயர் அதிகாரிகள் 57 பேர் கொல்லப்பட்டனர், இதில் பங்களாதேஷ் ரைஃபில் படையின் டைரக்டர் ஜெனரல் மேஜர் ஷக்கீல் அகம்மது வும் கொல்லப்பட்டார். தலைநகர் டாக்காவில் பங்களாதேஷ் ரைஃபில் படை தலைமை அலுவலகம் பங்களாதேஷ் ராணுவம் மற்றும் அதிரடிப்படைகளால் சுற்றி வளைக்கப்பட்டது.
பொதுமக்கள் உயர் அதிகாரிகள் உட்பட 74 பேர் கொல்லப்பட்டனர். இரண்டாம் நாள் புரட்சி மேலும் 12 நகரங்களுக்கு பரவியது, பங்களாதேஷ் ரைஃபில் படையினர் பல நகரங்களை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்,
மூன்றாம் நாள் அமைச்சர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் பங்களாதேஷ் ரைஃபில் வீரர்கள் ஆயுதங்களை கைவிட்டனர், சிலர் சரணடைந்தனர், பலர் தப்பியோடினர்.
இந்த வழக்கில் 167 பங்களாதேஷ் ரைஃபில் படை வீரர்களுக்கு மரண தண்டனை விதித்து வங்கதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த புரட்சியில் தொடர்புடையதாக பல வீரர்கள் கைது செய்யப்பட்டனர்.சற்றுமுன் செய்திகள் ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதுப்பட்ட கட்டுரை அதில் 167 பேருக்கு தூக்கு தண்டனையும், 158 வீரர்களுக்கு ஆயுள் தண்டனையும், 251 பேருக்கு 3 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.
முக்கிய எதிர்க்கட்சியான பிஎன்பி கட்சியின் முன்னாள் எம்.பி. நசிருதின் அகமது பின்டு, அவாமி லீக் தலைவரும் முன்னாள் படைவீரருமான டோரப் அலி ஆகியோரும் ஆயுள் தண்டனை பெற்றவர்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் 242 பேர் நிரபராதிகளாக கருதப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இக்கலவரம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட 846 பேரில் 26 பேர் பொதுமக்கள்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.