சச்சினுக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது சர்ச்சைக்கு உள்ளாகி உள்ளது.
முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாயில் ஆரம்பித்து, தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி வரை ஏன் அவருக்கு பாரத ரத்னா வழங்கப்படவில்லை?, இவருக்கு ஏன் பாரத ரத்னா வழங்கப்படவில்லை? என கேள்விகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
உலகம் முழுவதும் இந்தியாவிற்கென திறமையின் அடையாளமாக அறியப்பட்டவர் சச்சின். இந்த விருதுக்கு இவரை விட தகுதியானவர் எவருமில்லை. பாரதத்தின் ரத்னம் என்றால் சச்சின் தான்.
இந்தியர்கள் அனைவரையும் கிரிக்கெட் என்ற மதத்தின் கீழ் ஒருங்கிணைத்தவர் சச்சின். எந்த ஒரு பொழுதுபோக்கிலும் போதை, ஆபாசம் என்று ஏதாவது ஒரு கெடுதல் உண்டு. இந்த எதுவும் இல்லாத இந்தியர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்கான கிரிக்கெட்டின் கடவுளாக கருதப்படுபவர் சச்சின்.
சச்சின் நாட்டிற்கு என்ன நல்லது செய்தார்? என கேள்வி வைக்கப்படுகிறது. நல்லது கிடக்கட்டும் ஐயா... கெடுதல் எதுவும் செய்யாத மனிதன் சச்சின்.
இதுவரை பாரத ரத்னா விருது வழங்கப்பட்டவர்களின் பட்டியலை பாருங்கள் http://en.wikipedia.org/wiki/Bharat_Ratna#List_of_recipients . 1998 ஆம் ஆண்டு கர்னாடக இசை வல்லுநர் எம். எஸ். சுப்புலட்சுமி அவர்களுக்கு வழங்கப்பட்டு இருக்கிறது. இவரை நாட்டில் உள்ள 1% இந்தியர்களுக்கு மேல் தெரியுமா என தெரியவில்லை. இப்போது சர்ச்சை கிளப்புபவர்கள் அப்போதெல்லாம் எங்கே சென்றார்கள் என தெரியவில்லை.
இந்தியர்கள் அனைவரின் பாசத்துக்கு உரித்தானவர் சச்சின். இந்தியன் ஒவ்வொருவரின் மனதிலும் இடம்பிடித்தவர். அவருக்கு விருது வழங்கி கொண்டாடுவதில் இந்தியன் ஒவ்வொருவனும் கொண்டாடுகிறான். பெருமைப்படுகிறான்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.