புலிகளால் ஸ்டாலினுக்கு ஆபத்து என்பது பொய், அழகிரியால்தான் ஸ்டாலினுக்கு ஆபத்து - ஜெயலலிதா கருத்து
இன்று சட்டப்பேரவையில் ஆளுநரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது நடைபெற்ற விவாதத்திற்கு பதில் அளித்து ஜெயலலிதா பேசுகையில்,மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து சில குற்றச்சாட்டுகளை எதிர்கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு சரிவர பராமரிக்கப்படுவது இல்லை, குற்றங்கள் அதிகரித்துள்ளன என்று உண்மைக்கு மாறான ஒரு தொடர் பிரச்சாரம் தி.மு.க.வினரால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று குறிப்பிட்ட அவர்
மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கப்பட்டது, சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள், முதல்வர் முன்னிலையில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டது என்று திமுக ஆட்சியில் நடந்தவைகளை குறிப்பிட்ட அவர் தா.கிருஷ்ணன் கொலைக்கு மூல காரணம் யார் என்று தெரியாதா? என்றும் கேட்டார்.
மேலும் மதுரையில் திமுகவினர் மீது திமுகவினரே அளித்த பிசிஆர் வழக்கில் போலிஸ் நடவடிக்கை எடுக்கும், ஆனால் கருணாநிதியே நடவடிக்கை எடுத்துள்ளார் என்றும்
திமுக தலைவர் கருணாநிதி சொல்லி டி.ஆர். பாலு , 27.1.2014 அன்று பிரதமருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அந்தக் கடிதத்தில், எல்.டி.டி.ஈ., மத அடிப்படைவாதிகள் மற்றும் அரசியல் விரோதிகளால் மு.க.ஸ்டாலினுக்கு ஆபத்து உள்ளது என்று குறிப்பிட்டு, Z PLUS பாதுகாப்பு கொடுக்குமாறு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது என செய்திகள் வெளி வந்துள்ளன.
இலங்கை இனப்படுகொலையில் தமிழ் ஈழ விடுதலை அமைப்பினர் மட்டுமல்லாமல், பல்லாயிரக்கணக்கான இலங்கைத் தமிழர்கள் கொல்லப்பட்டுவிட்ட நிலையில், எல்.டி.டி.ஈ. அமைப்பிடமிருந்து ஆபத்து என்பது இல்லாத ஒன்றாகும். எந்த ஒரு பெயரும் குறிப்பிடாமல், மத அடிப்படைவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இதுவும் கற்பனையான ஒன்று. கடைசியாக, பல தரப்பட்ட அரசியல் விரோதிகளிடமிருந்து அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்பட்டுள்ளது. யார் யார் அந்த அரசியல் விரோதிகள் என்பது குறிப்பிடப்படவில்லை. கடிதம் எழுதியுள்ள தருணத்தையும், கருணாநிதியின் குடும்பத்தில் நடக்கும் குழப்பத்தையும் ஒப்பிடுகையில் மு.க.அழகிரியின் மூலம் ஆபத்து என்பது மறைமுகமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது இளைய மகனுக்கு மூத்த மகனால் ஆபத்து என்றவுடன் பிரதமருக்கு வரிந்து கட்டிக் கொண்டு கடிதம் எழுதச் சொல்லும் கருணாநிதி, பத்திரிகை எரிப்புச் சம்பவம் மற்றும் தா.கிருட்டிணன் கொலை வழக்குகளில் என்ன நிலைப்பாட்டை எடுத்தார்? தனக்கு ஒரு நீதி; தன் குடும்பத்திற்கு ஒரு நீதி; மற்றவர்களுக்கு ஒரு நீதி, என்ற ரீதியில் செயல்படும் கருணாநிதியை தலைவராகக் கொண்டு செயல்படும் தி.மு.க.வினர், சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவது நகைப்புக்குரியதாக உள்ளது" என்று கூறினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.