BREAKING NEWS

Ads

உலகம்

Monday, 3 February 2014

ஆம் ஆத்மி கட்சியை உடைக்க பாஜக 20 கோடி ரூபாய் பேரம் - ஆம் ஆத்மி எம்.எல்.ஏ குற்றச்சாட்டு



ஆம் ஆத்மி கட்சியை உடைத்து கெஜ்ரிவாலின் அரசை கவிழ்க்க பாஜக பிரதமர் வேட்பாளர் மோடிக்கும், அருண் ஜெட்லிக்கும் நெருக்கமான நபர் தன்னை சந்தித்து 20 கோடி ரூபாய் பேரம் பேசியதாக ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ மதன்லால் குற்றம் சாட்டினார்.


இது குறித்து எந்த ஆதாரமும் அளிக்காத மதன் லால் தான் மோடியுடனோ அல்லது பாஜக தலைவர்களுடனோ இது குறித்து பேசவில்லை என்றும் குறிப்பிட்டார், இந்த குற்றச்சாட்டை பாஜக மறுத்துள்ளது. மேலும் இது ஒரு குப்பையான குற்றச்சாட்டு என்றும் ஆம் ஆத்மி கட்சியின் மாற்று அரசியல் என்பது பொய்யும் புனைசுருட்டையும் அடிப்படையாக கொண்டது என்றும் அருண் ஜெட்லி தனது டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார். "Rubbish claims by AAP. AAP's alternative politics includes a fundamental right to falsehood and lies,"

நரேந்திர மோடிக்கு நெருக்கமானவர்கள் என்று கூறிக்கொண்டு இரண்டு பேர் தன்னை 10 நாட்களுக்கு முன் சந்தித்ததாகவும் 9 எம்.எல்.ஏக்களுடன் ஆம் ஆத்மி கட்சியை உடைத்துக்கொண்டு வந்தால் பாஜக ஆதரவுடன் தன்னை முதல்வர் ஆக்குவதாகவும், 20 கோடி பணம் தருவதாகவும் மேலும் அருண் ஜெட்லியுடன் சந்திப்பை ஏற்பாடு செய்வதாகவும் கூறியதாக எம்.எல்.ஏ கூறினார்.


Post a Comment

Comments disabled, Please use Facebook comment box

Note: only a member of this blog may post a comment.

 
Copyright © 2014 சற்றுமுன் செய்திகள்
Powered by:Purple Rain Media