திமுக தலைவர் கருணாநிதி குடும்பத்தினர், ஜாபர் சேட்டுடன் பேசிய டேப்புகளை பதிவு செய்தது யார்? அதிர்ச்சி தகவல்கள், சொந்த செலவில் சூனியமா?
முன்னாள் உளவுத்துறை தலைவர் ஜாபர் சேட்டுடன் கலைஞர் டிவி எம்.டி ஷரத்குமார் ரெட்டி பேசிய பேச்சுகள் சில நாட்களுக்கு முன் சவுக்கு தளத்தில் வெளியானது. இதில் ஷரத்குமார் ரெட்டி கலைஞர் டிவிக்கு சினியுக் நிறுவனம் 200 கோடி ரூபாய் பணம் கொடுத்த போது கனிமொழியும் கலைஞர் டிவியில் இயக்குனராக இருந்தார் என்றும் மேலும் முன் தேதியிட்டு பல ஆவணங்களை திருத்தி கையெழுத்திட்டதாகவும் கூறினார், இது மட்டுமின்றி மேலும் பலர் பேசிய டேப்புகள் வெளியாகின.
ஜாபர் சேட் உளவுத்துறை தலைவராக இருந்த போது பல எதிர்கட்சி தலைவர்களின் தொலைபேசி பேச்சுகளை டேப் செய்வதாக கூறி பல அரசியல் தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர், இப்படிபட்ட உளவு பார்ப்பவருக்கே உளவு பார்த்து போன் டேப் செய்பவருடைய போனையே டேப் செய்தவர்கள் யார் என்று விசாரித்தால் டேப் கைக்கு வந்தது சவுக்கு சங்கர் அவர்களிடம் என்று பலரும் தெரிவிக்கிறார்கள், சவுக்கு சங்கர் தான் போலிஸ் கைதிலிருந்து தப்பி டில்லி சென்று இவைகளை ஆம் ஆத்மி கட்சியிடம் ஒப்படைத்தார் என்று தெரிந்தது.
டேப் செய்தவர் யார் என்று தெரியவில்லை என்று கூறினாலும், இந்த பேச்சு ரெக்கார்ட் செய்யப்பட்ட ஒரிஜினல் ஃபைல் பிரசாந்த் பூஷனிடம் உள்ளது, இந்த பைல் ஏஎம்ஆர்(AMR) என சொல்லப்படும் பைல்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன, இது நோக்கியா போனில் பேச்சுகளை பதிவு செய்தால் கிடைக்கும் ஃபைலாகும், போனை ஒட்டு கேட்டு டேப் செய்தால் அது பொதுவாக எம்பி3 போன்ற வேறு ஃபைலாக தான் சேமிக்கப்படுமே ஒழிய நோக்கியாவின் ஏஎம்ஆர்(AMR) ஃபைலாக சேமிக்கப்படுகிறதென்றால் அது பேசும் இருவரில் யாரோ ஒருவரின் போனில் சேமிக்கப்பட்ட பேச்சாக தான் இருக்கும் என்று தொழில்நுட்பம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்
இதை வைத்து பார்க்கும் போது ஜாபர்சேட்டே எதற்காகவோ தானே ரெக்கார்ட் செய்து சேகரித்து வைத்திருக்க வாய்ப்புண்டு என்றும் இது வேறு எப்படியோ வெளியாகிவிட்டிருக்கலாம் என்றும் குழப்பம் நிலவுகிறது. இதே கருத்தையே பேச்சை ரெக்கார்டிங் செய்தது யார் என்று செய்தியாளர்கள் கேட்டதற்கு வக்கீல் பிரசாந்த் பூஷணும் குறிப்பிட்டிருந்தார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.