முன்னாள் மத்திய அமைச்சரும், தென்மண்டல திமுக முன்னாள் செயலாளர் மு.க.அழகிரி காரைக்குடியில் காதணி விழா ஒன்றில் கலந்து கொண்டார். விழாவில் பேசிய அழகிரி, "திமுகவில் என்னை நீக்கியதற்கு இதுவரை காரணம் தெரிவிக்கவில்லை. அதற்கான கடிதம்கூட எனக்கு இதுவரை வரவில்லை. இந்தத் தேர்தலில் நமது பலத்தை நிரூபிக்க, திமுகவுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். திமுக வேட்பாளர்கள் மூன்றாவது இடத்திற்குக்கூட வரக்கூடாது.
சிவகங்கையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் கார்த்தி சிதம்பரம், எனது மகன் விபத்தில் சிக்கியபோது மூன்று முறை வந்து பார்த்தார். கார்த்தியின் தந்தை சிதம்பரம் அமைச்சராக இருந்த அதே அமைச்சரவையில் நானும் அமைச்சராக இருந்தேன். துறை ரீதியான சந்தேகங்களுக்கு அவரது வீட்டிற்கு எந்தவித முன் அனுமதி இன்றி சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதனால் கார்த்தி சிதம்பரமும் எனது நண்பர்தான். இதே தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர் எச்.ராஜா என்னிடம் நேரடியாக ஆதரவு கேட்டார். அவரும் எனது நண்பர் தான். நான் யாருக்கும் ஆதரவு தரவில்லை. எனக்கு அனைவரும் நண்பர்கள் தான். இருவரில் யாருக்கு வேண்டுமானாலும் நீங்கள் ஓட்டுப் போடுங்கள். ஆனால், திமுக தோற்கடிக்கப்பட வேண்டும்.
என்னைச் சந்திக்கும் திமுக நிர்வாகிகள் உடனடியாக நீக்கப்படுகிறார்கள். எனவே, இவர்களுக்கு நாம் யார்? என்றும், நமது பலம் என்ன? என்றும் இந்தத் தேர்தலில் நிரூபிக்க வேண்டும்"
இவ்வாறு அழகிரி பேசினார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.