அண்ணா பல்கலைகழகம் 506 பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்ச்சி விகித பட்டியலை வெளியிட்டது . இதனை பார்த்த நமக்கு பெரும் அதிர்ச்சி . விழுப்புரத்தில் உள்ள ஒரு கல்லூரியில் 140 பேர் எழுதிய தேர்வில் ஒருவர் கூட தேர்ச்சி பெறவில்லை .5 கல்லூரிகள் ஒற்றை இலக்கத்தில் தான் தேர்ச்சி பெற்று உள்ளது . சென்னையில் உள்ள பிரபல கல்லூரிகளிலும் தேர்ச்சி விகிதம் சொல்லி கொள்ளும் படியாக இல்லை .
இதனால் நானும் மற்றவர்களை போல அந்த கல்லூரிகளை குறை சொல்ல போவதில்லை . பொறியியல் படிப்பு என்பது வெறும் மதிபெண்ணும் தேர்ச்சி விகிதமும் அடங்கியது அல்ல . அது ஒரு ஆக்கபூர்வமான படிப்பு . அதனை நாம் 100 சதவீத ஈடுபாடு இருந்தால் தான் சாதிக்க முடியும் . இதனை பெற்றோர்களும் பொறியியல் படிப்பில் சேருவதற்கு முன் மாணவர்களும் உணர வேண்டும் . எல்லாரும் பொறியியல் படிப்பில் சேருகிறார்கள் என்று சேர்ந்து விடாதீர்கள் ,ஒரு நிமிடம் யோசித்து விட்டு சேருங்கள் .மாணவர்களே மதிபெண்ணுக்கும் பொறியியல் படிப்பிற்கும் சம்மதம் இல்லை . ஆர்வம் இருந்தால் யார் வேண்டுமானால் சாதிக்கலாம் . சிந்திப்பீர் !!செயல்படுவீர் !!
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.