ஐ.பி.எல். போட்டிகளில் புனே வாரியர்ஸ் அணிக்காக விளையாடியவர் அல்போன்ஸா தாமஸ் .இவர் தென் ஆப்ரிக்கா அணியைச் சார்ந்தவர் .
இவர் தற்போது கவுண்டி போட்டிகளில் சோமர்செட் அணிக்காக விளையாடி வருகிறார் . அல்போன்ஸா தாமஸ் ஓரே போட்டியில் 4 பந்தில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்தார் .
சோமர்செட் அணி டவுண்டான் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது . இந்த போட்டியின் மூன்றாவது நாளில் தனது ஓவரின் 5 மற்றும் 6 ஆம் பந்தில் விக்கெட் வீழ்த்தினார் . இவர் தான் வீசிய அடுத்த ஓவரின் முதல் இரண்டு பந்துகளில் இரண்டு விக்கெட் வீழ்த்தினார் . கவுண்டி போட்டிகளில் 14 வருடங்களுக்குப் பின் இந்த சாதனை நிகழ்கிறது .
முதல் தரப் போட்டிகளில் இந்த சாதனை நடைபெறுவது இது 18வது முறையாகும்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.