பாஜக பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் இருந்து அத்வானி, ஜோஷி நீக்கம்
இன்று எடுக்கப்பட்ட இந்த முடிவினால் மூத்த தலைமுறை தலைவர்களிடமிருந்து மோடியிடம் முழுமையாக கையளிக்கப்பட்டுள்ளது பாஜக. வாஜ்பேயி, அத்வானி மற்றும் முரளி மனோகர் ஜோஷி ஆகியோர் பாஜகவின் பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் இருந்து நீக்கபப்ட்டுள்ளார்கள், மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகான், பாஜக பொதுச்செயலாளர் ஜேபி நட்டா ஆகியோர் புதிதாக இந்த குழுவில் இணைக்கப்பட்டுள்ளனர்.
அத்வானி, ஜோஷி உட்பட 5 பேர் கொண்ட "வழிநடத்துனர் குழு" என்று புதிய குழு உருவாக்கப்பட்டுள்ளது, உண்மையில் இந்த குழுவிற்கு அதிகாரம் என்று எதுவுமில்லை, இதன் மூலம் வாஜ்பேயி, அத்வானி, ஜோஷி போன்ற தலைவர்கள் வளர்த்த பாஜகவிலிருந்து இந்த தலைவர்களுக்கு விடைகொடுக்கப்பட்டு மொத்தமும் மோடிக்கு கையளிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த இருவரும் பாஜக மத்திய தேர்தல் குழுவிலும் இணைக்கப்பட்டுள்ளார்கள், இந்த குழுதான் பாஜக சார்பாக யார் தேர்தலில் போட்டியிடுவது என்று முடிவு செய்யும், சென்ற ஆண்டு மோடி இந்த குழுவில் இணைக்கப்பட்டபோது மூன்றாவது முறை முதல்வராக இருக்கும் மத்திய பிரதேச முதல்வர் ஷிவ்ராஜ் சிங் செளகானை இணைக்க வேண்டும் என்றும் அத்வானி தகராறு செய்தார்.
தற்போது பாஜக பாராளுமன்ற நடவடிக்கை குழுவில் 12 பேர் உள்ளனர், இந்த குழுதான் மிகவும் அதிகாரம் மிக்க குழுவாகும். இதன் தலைவராக அமித் ஷா இருக்கிறார் மேலும் இதில் மோடி, ராஜ்நாத்சிங், அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ், வெங்கையா நாயுடு, நித்தின் கட்கார், ஆனந்த் குமார், தவார்சந்த் கெலாட், ஷிவ்ராஜ் சிங் செளகான், ஜெகத் பிரகாஷ் நட்டா மற்றும் ராம்லால் ஆகியோர் உள்ளனர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.