நேற்று களஞ்சியத்தின் நண்பர்கள் என்ற பெயரில் ஒரு அறிக்கை வெளியானது, அதில் இயக்குனர் களஞ்சியம் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடி வருவதாகவும், நடிகை அஞ்சலி பணம் கொடுத்து உதவினால்தான் உயிர் பிழைப்பார் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

களஞ்சியம் ஏன் அஞ்சலியிடம் பணம் கேட்க வேண்டும் என்பவர்களுக்காக ஒரு சின்ன ஃப்ளாஷ் பேக், நடிகை அஞ்சலி முதலில் இயக்குனர் களஞ்சியம் எடுத்த ஆனால் வெளிவராத அந்த படத்தில் நடிப்பதற்காக தான் திரையுலகில் ஒப்பந்தம் ஆனார், அந்த படம் வெளிவரவில்லையென்றாலும் நடிகை அஞ்சலி களஞ்சியத்தின் கஸ்டடியில் தான் இருந்துள்ளார், கற்றது தமிழ், அங்காடி தெரு, எங்கேயும் எப்போதும் ஆகிய படங்களின் வெற்றிக்கு பின் அஞ்சலி முக்கிய நாயகியாக வலம் வந்தார், அப்போதும் கூட அஞ்சலி இயக்குனர் களஞ்சியம் மற்றும் அவரின் சித்தி ஆகியோரின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார், இந்நிலையில் மீண்டும் இயக்குனர் களஞ்சியத்தின் படத்தில் நடிக்க அஞ்சலி ஒப்பந்தம் ஆனார், திடீரென ஒரு நாள் நடிகை அஞ்சலி காணாமல் போனார், சில நாட்கள் கழித்து ஆந்திராவில் பேட்டியளித்த நடிகை அஞ்சலில் இயக்குனர் களஞ்சியத்தின் மீதும் அவரது சித்தி மீதும் தனது சொத்துகளை அபகரித்துக்கொண்டு தன்னை மிரட்டுகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். இயக்குனர் களஞ்சியம் ஒரு அமைப்பு வைத்து நடத்திக்கொண்டுள்ளார்.
இவர்களின் மிரட்டலினால் நடிகை அஞ்சலி தமிழ் படங்களில் நடிக்காதது மட்டுமின்றி தமிழ்நாட்டு பக்கமே தலை வைத்து படுக்கவில்லை. இந்நிலையில் களஞ்சியம் நடிகை அஞ்சலி மீது தன் படத்தில் நடிக்க வேண்டும் என வழக்கு தொடர்ந்தார், இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகாரும் அளித்தார், இதை ஏற்காத அஞ்சலி தான் எதுவும் களஞ்சியத்துக்கு தர தேவையில்லை, என் சொத்துகளையும் பணங்களையும் தான் களஞ்சியம் வைத்துள்ளார் என்று மறுப்பு தெரிவித்தார்.

இந்நிலையில் களஞ்சியம் விபத்துக்குள்ளாகி உயிருக்கு போராடுவதாகவும், நடிகை அஞ்சலி பண உதவி செய்தால் தான் அவர் உயிர் பிழைக்க முடியும் என்று களஞ்சியத்தின் நண்பர்கள் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டார்கள், இன்றோ, களஞ்சியம் அடிபட்டு உயிருக்குப் போராடும் லட்சணத்தை புகைப்படத்துடன் அம்பலமாகியது.
களஞ்சியம் திருச்சி மருத்துவமனையில் படுத்தபடி கிடக்கும் ஒரு படம் வெளியாகியுள்ளது. அதில் கை மற்றும் தோளில் சிறு சிராய்ப்புகளுடன் காணப்படும் களஞ்சியம் , நல்ல நிலையில் காட்சி தருகிறார். அவரது உடல்நிலை குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மருத்துவர்கள், "களஞ்சியம் நன்றாகத்தான் இருக்கிறார். லேசான சிராய்ப்புகள்தான். அவரை பொது வார்டில்தான் வைத்திருக்கிறோம் என்றார்கள், உயிருக்கு போராடுகிறார் என்றெல்லாம் கதைவிட்ட அவர் நண்பர்கள் அறிக்கை பொய்யானது.
இதுகுறித்து நடிகை அஞ்சலியிடம் கேட்டபோது, "கடந்த வாரம் வரை என்னை எப்படியெல்லாம் மிரட்டிக் கொண்டிருந்தார் களஞ்சியம் என்பது அனைவருக்கும் தெரியும். இப்போதாவது அவரது உண்மை முகம் என்னவென்பது அத்தனை பேருக்கும் தெரிந்திருக்கும். அவர் பணம் எதுவும் என்னிடம் இல்லை. நான் இழந்த பணமும் சொத்தும்தான் ஏராளம். நியாயமாக நான்தான் அவர்மீது வழக்கு போட்டிருக்க வேண்டும். இப்போது நான் என்பாட்டுக்கு நடித்துக் கொண்டிருக்கிறேன். தேவையின்றி என் பெயரை யாரும் எதிலும் இழுக்க வேண்டாம்," என்றார்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.