பாலிவுட்டின் சூப்பர் ஸ்டாரானா அமீர்கான் தற்போது நடித்து கொண்டிருக்கும் "பிகே" படத்தின் டீசர் வெளியாகியது, அமீர்கான் நிர்வாணமாக போஸ் கொடுத்திருந்தது பரபரப்பை கிளப்பியது. இதற்கு பல்வேறு தரப்பில் கடுமையான விமர்சனம் கிளம்பியது.
இந்நிலையில் அமீர்கானுக்கு ஆதரவாக நிர்வாணமாக நடிப்பது ஒரு கலை. அதை தப்பான கண்ணோட்டத்தில் பார்க்கக்கூடாது என்று நடிகர் சித்தார்த் அமீர்கானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார், மேலும், ஒரு படத்தின் போஸ்டரைப் பார்ததே அது ஆபாசமான படம் என்று சித்தரித்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.
அதோடு, இதையெல்லாம் ஆபாசம் என்று சொன்னால், ஒலிம்பிக்கில் நீச்சல் உடையில் நீந்துகிறார்கள் அதைப்பார்த்துவிட்டு சிறுவர்கள் டிரஸ்ஸை கழற்றி போட்டு விட்டு ஓடுவது இல்லையே அதனால் அமீர்கான் இந்தமாதிரி போஸ் கொடுத்திருப்பதால் சமுதாயத்துக்கு எந்த பாதிப்பும் வராது என்றும் மேலும் கலைஞர்களுக்கும், கதாசிரியர்களுக்கும் எப்போதும் கருத்து சுதந்திரம் கொடுக்க வேண்டும் அப்போதுதான் நல்ல படைப்புகள் வெளிவரும். இப்படி எடுத்ததற்கெல்லாம் தடை, வழக்கு என்று போட்டுக்கொண்டிருந்தால் நல்ல படங்கள் வருவது குறைந்து விடும் என்று சித்தார்த் கூறியுள்ளார்.
நடிகர் சித்தார்த் தனது முதல்படமான பாய்ஸ்சில் நிர்வாணமாக சாலையில் ஓடுவது போல நடித்திருப்பார்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.