சற்றுமுன் செய்திகள் பக்கத்தின் இன்றைய நட்சத்திர பதிவர்
சற்றுமுன் செய்திகள் பக்கம் 2 இலட்சம் லைக்குகள் பெற்றிருந்ததை அறிவித்த பதிவில் தினம் ஒரு நட்சத்திர பதிவர் பற்றிய குறிப்புகளை வெளியிடுவதாக குறிப்பிட்டிருந்தோம், முதல் நட்சத்திமாக வா.மணிகண்டன் பற்றிய குறிப்புகள் இங்கே.
வா.மணிகண்டன் நமது பக்கத்திற்கு புதியவர் அல்ல, ஏற்கனவே இவரின் லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருந்ததை நமது பக்கத்தில் வெளியிட்டிருந்தோம்.
வா.மணிகண்டன் ஒரு முறை நகருக்கு வெளியே இருக்கும் ஒரு சிறிய லாட்ஜில் இரண்டு நாட்களுக்கு அறை எடுத்து தங்கியிருந்தார், போன், டிவி என எந்த விதமான தொடர்புகளும் இல்லாமல் அவரை யாருமோ, அவர் யாரையுமோ தொடர்பு கொள்ள முடியாத அளவிற்கு தன்னை சுருக்கிக்கொண்டு சாப்பாட்டை கூட நேராக அவர் அறைக்கே வரவைத்து தனிமையில் இருந்துள்ளார்.
எழுத்தாளர்கள் பல நேரங்களில் செய்யும் செயல்களை நாம் கிறுக்கத்தனமாக மதிப்பிடுவோம், ஆனால் அது அவர்களுக்கு பெரிய அனுபவமாக அமையும், அதை எழுத்தில் வடிப்பார்கள். வா.மணிகண்டனும் அது போலத்தான், தன் அனுபவங்களை நேர்மையான எளிமையான எழுத்துக்களில் வடிக்கின்றார்.
பல ஆண்டுகளாக வலைப்பதிவில் எழுதி வருபவர், தற்போது ஃபேஸ்புக்கிலும் எழுதிவருகிறார்.
கொங்கு நாட்டில் கரட்டடிபாளையம்( கோபிச்செட்டிபாளையம் அருகில்) பிறந்து வளர்ந்த இவர் ஹைதராபாத்தில் எம்.டெக் படித்து தற்போது பெங்களூருவில் மென்பொருள் துறையில் பணி செய்கிறார்.
கண்ணாடியில் நகரும் வெயில், என்னைக் கடவுளாக்கிய தவிட்டுக்குருவி என்ற இரு கவிதை புத்தகங்கள், சைபர் சாத்தான்கள் என்ற சைபர் க்ரைம் பற்றிய புத்தகம் ஆகியவைகளை எழுதியுள்ளார்.
சென்ற புத்தக சந்தையின் போது லிண்ட்சே லோஹன் w/o மாரியப்பன் என்ற சிறுகதைகள் தொகுப்பை வெளியிட்டிருந்தார், பல பிரபலமான வளர்ந்த எழுத்தாளர்களின் புத்தகங்களை விட பரபரப்பாக விற்பனையானது இந்த புத்தகம்.
தற்போது ‘மசால் தோசை 38 ரூபாய்’ என்ற தலைப்பில் அடுத்த புத்தகத்தை வெளியிட தயாராகி வருகிறார்.
ஒரு நண்பனாக, ஆதரவாக நம் அருகில் அமர்ந்து யாரேனும் தங்கள் அனுபவங்களை எளிய மொழியில் பேச வேண்டும் என்று ஆசைப்பட்டால் வா.மணிகண்டனின் எழுத்துகளை படியுங்கள், அவரும் தினமும் தனது வலைப்பதிவிலும் ஃபேஸ்புக்கிலும் எழுதி வருகிறார். அவருடைய ஃபேஸ்புக் கணக்கில் நண்பராக / ஃபாலோயராக இணைந்து கொள்ளுங்கள்
வா.மணிகண்டன் ஃபேஸ்புக் : https://www.facebook.com/vaa.manikandan
நிசப்தம் இணையதளம் : http://www.nisaptham.com/
உங்களுக்கு பிடித்த பதிவரை நட்சத்திரமாக பதிவு செய்ய விரும்பினால் குறிப்புகளை எழுதி satrumun.net(at)gmail.com க்கு அனுப்புங்கள்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.