கத்தி படம் தற்போது ஒரு பிரச்சனையில் உள்ளது. அந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமாக லைகா நிறுவனம் கொடூரன் ராஜபக்க்ஷேவுக்கு உறவினரான ஒருவரின் நிறுவனம். அப்படிபட்டவரின் தயாரிப்பை எதற்கு கத்தி படம் ஏற்றுக்கொண்டது. அதனால் கத்தி படத்தை தடை செய்ய வேண்டும் என அதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இது குறித்து மாணவர் அமைப்பிற்கும் விஜய் ரசிகர்களுக்கும் ஆங்காங்கே பேஸ்புக்கில் சண்டை நடந்து வருகிறது. அதன் உச்சக்கட்டமாக விஜய் மக்கள் இயக்கம் வெறியர்கள் என்னும் பக்கத்தில் இருந்த ஒரு பதிவு அஹிம்சைவாதியையும் கத்தியை தூக்க செய்யும். இப்போது வரை அந்த பதிவை 172 புத்தி கெட்டவர்கள் ஷேர் செய்து உள்ளார்கள். அந்த கேவலமானவன் செய்த பதிவு,
"கத்தி" படத்தினை எதிர்த்து சிலர் "நான் தமிழன்" என்ற போர்வையில் திரியும் சில தமிழ் கோமாளிகள் சொல்லும் வசனங்கள் மிக வேடிக்கையாக உள்ளது.
"தமிழ் தமிழ்" என்று கொந்தளிக்காதீர் ! தமிழ் உங்களுக்கு சோறு போட போவதில்லை ! "கத்தி" படத்தினை பார்த்தோமா இல்லையா என்று சென்று கொண்டே இருக்க வேண்டும்.
"லைகா" நிறுவனத்தை எதிர்க்கும் அளவுக்கு அவர்கள் என்ன செய்து விட்டார்கள் ?
ராஜபக்சே உன்னதமான ஒரு மனிதன். தனது நாட்டுக்காகவும், தனது இனத்துக்காகவும் போராடுகிறார். அவர் தரப்பில் நீங்கள் இருந்தாலும் அதனை தான் செய்வீர்கள்.
காந்தி ஒரு இழித்த வாயன். அவர் தான் இந்தியாவை பிரித்து கொடுத்தார் என்றால், ராஜபக்சேவும் இழித்த வாயாக இருக்க வேண்டுமா ?
ரொம்ப அழுவாதீங்க ! உங்களுக்கு வேணும்னா "கத்தி" படத்தோட இலவச டிக்கெட் தரோம். அதுவும் பத்தலைனா சாப்பாடும் தரோம். அதை அள்ளிக்கிட்டு போங்க !
ராஜபக்சே அவர்களே நீங்கள் கவலைப்படாதீர். உங்களுக்காக உயிர் கொடுக்க "விஜய் மக்கள் இயக்கம்" செயல்படுவோம். உங்களது படம் எந்த தடையும் இன்றி வெளிவரும்.
அந்த பதிவை தட்டி கேட்டு சிலர் கமென்ட் செய்து உள்ளார்கள். அதற்கு அவர்கள் பிரபாகரன், காந்தி ஆகியோர் தேச துரோகி என்றும், ராஜபக்க்ஷே சிறந்த மனிதர் என்றும் கூறியுள்ளார்கள்.
இவ்வாறு கேவலமான செயல்களில் ஈடுபடுபவர்கள் விஜய் ரசிகர்களாக இருப்பதற்கு தகுதியற்றவர்கள். விஜய் ஒரு சிறந்த மனிதர், அவரது ரசிகர்கள் என கூறி கொண்டு இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டால் அது நடிகர் விஜய்யின் பெயரை தான் கெடுக்கும். எனவே விஜய் இந்த விவகாரத்தில் உடனடியாக தலையிட்டு அதிரடி நடவடிக்கை எடுத்தால் தான், அவர் ராஜபக்க்ஷேவுக்கு எதிரானவர் என்பது தெரிய வரும்.
அந்த பேஸ்புக் பக்கத்தின் முகவரி https://www.facebook.com/vmifans
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.