இப்போது அனைவரிடமும் ஒரு ஆண்ட்ராய்ட் மொபைல் உள்ளது . அந்த மொபைலில் அனைவரும் வாட்ஸ்அப் என்னும் இலவச அப்ளிகேஷனை பயன்படுத்துகின்றனர் . இதன் மூலம் இலவசமாக செய்தி அனுப்ப முடியும் . வாட்ஸ் அப் வருகையால் , ஒரு சில ஆண்டுகளாக உலகை ஆண்டு வந்த எஸ்.எம்.எஸ் பெரும் அடி வாங்கியது . வாட்ஸ் அப் எந்த அளவுக்கு வளர்ந்து இருக்கிறது என்பதற்கான உதாரணம் :
முந்தி எஸ்.எம்.எஸ் இலவசமாக அனுப்ப எஸ்.எம்.எஸ் பேக் போட வேண்டும் . ஆனால் இப்போ வாட்ஸ்அப் பிற்கு மட்டும் தனியே வாட்ஸ்அப் பேக் என்று தனியே ஒன்று வந்துள்ளது . பலர் எஸ்.எம்.எஸ் என்று ஒன்று இருப்பதை மறந்து விட்டனர் .
எனவே வாட்ஸ்அப் , வி சாட் , வைபர் போன்ற அப்ளிகேஷன்களால் மொபைல் நிறுவனங்களுக்கு பலத்த அடி விழுந்துள்ளது . இப்போது அடுத்தவர்க்கு கால் செய்வதைக் கூட சிலர் நிறுத்திவிட்டனர் . எனவே இந்த இழப்பை ஈடுசெய்ய தொலைதொடர்பை கவனித்து வரும் டிராய் புதிய வழி ஒன்றை கண்டு பிடித்துள்ளது .
அதன் மூலம் வாட்ஸ்அப் , வைபர் போன்ற அப்ளிகேஷன் உருவாக்கிய நிறுவனம் மொபைல் நிறுவனங்களிடம் கனெக்டிவிட்டி சார்ஜ் ஒன்றை வழங்கிட வேண்டும் . மேலும் கிடைக்கும் வருவாயை அரசிற்கு ஒரு பங்கு அளிக்க வேண்டும் .
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.