குமரி மாவட்டத்தை சேர்ந்தவர் புருஸ்வெல்ட், இவருக்கு 48 வயது ஆகிறது. இவர் ஒரு ராணுவ வீரர். இவருக்கு திருமணமாகி ஷெர்லி ஜாஸ்மின் என்று 17 வயது பெண் உள்ளது. இவரது மனைவி நோய்வாய்ப்பட்டு இறந்துவிட்டார். புரூஸ்வெல்ட் ராணுவத்தில் இருப்பதால் ஷெர்லி தனது அத்தை வீட்டில் தங்கி படித்து வந்தார். பின்னர் புரூஸ்வெல்ட் ராணுவ வேலையை விட்டுவிட்டு சொந்த ஊர் திரும்பியதும் ஐடா என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்தார். அவர்களுக்கு குழந்தை இல்லாததால், ஷெர்லி ஜாஸ்மினை தன்னுடன் அழைத்து வந்து படிக்கவைத்தார்.
அவர் பிளஸ்-1 முடித்து பிளஸ்-2 வகுப்பு செல்ல இருந்த நிலையில் ஷெர்லி ஜாஸ்மின் 29-5-2010 அன்று அவரது வீட்டில் உள்ள தண்ணீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். அவர் அணிந்திருந்த 6½ பவுன் நகைகள், ரூ.5 ஆயிரம் ஆகியவற்றை காணவில்லை. இதுதொடர்பாக புரூஸ்வெல்ட் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் பல அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளிவந்தன. ஷெர்லி சாகும் போது 4 மாதம் கர்ப்பமாக இருந்து உள்ளார். எனவே இது திருடும் போது நடந்த கொலை இல்லை என போலீஸுக்கு தோன்றியது.
அவர்கள் பார்வை புரூஸ்வெல்ட் பக்கம் திரும்பியது. அவரை விசாரித்ததில் அவர் குற்றத்தை ஒப்பு கொண்டார். அவர் தான் தனது மகளை பல முறை அனுபவித்து உள்ளார். அதனால் ஷெர்லி கர்ப்பமாகி உள்ளார். அதனை கலைப்பதற்கு முயற்சி செய்து உள்ளார். அது முடியாததால் ஷெர்லியை கொன்று விட்டு, திருடன் ஒருவன் கொலை செய்தது போல் செட்அப் செய்து விட்டார். ஷெர்லியின் வயிற்றில் இருந்த கருவுக்கு அவரது தந்தை தான் காரணம் என டி.என்.ஏ. டெஸ்டில் தெரிய வந்துள்ளது.
இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு வழங்கப்பட்டது. புரூஸ்வெல்ட்டுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், 27 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் அபராதமும் விதித்து, இந்த தண்டனைகளை ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு எழுதப்பட்டு உள்ளது.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.