நேர், எதிர் என இருவகை மின்சாரங்களையும் ஒரே கேபிள் வயரில் கடத்தும் புதிய வயரை, கலசலிங்கம் பல்கலைக்கழக மாணவி கண்டுபிடித்து சாதித்துள்ளார். அவரது கண்டுபிடிப்புக்கு மத்திய அரசு காப்புரிமை வழங்கியுள்ளது.விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள கலசலிங்கம் பல்கலைக்கழக இன்ஜினியரிங் மாணவி ராக்கி ஷெனாய். மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இறுதியாண்டு படித்து வருகிறார். மின் உற்பத்தி பிரிவில் புதிதாக சாதிக்கவேண்டும் என்ற ஆர்வத்துடன் புராஜக்ட் செய்து வந்தார். அதன்படி, மின்சாரத்தைக் கடத்தும் நேர் (+) எதிர் (&) என்ற இரு கேபிள்களுக்கு பதிலாக ஒரே கேபிளை உருவாக்கினார்.அதில் அனைத்து மின் கம்பிகளையும் உள்ளடக்கி, ஒன்றோடு ஒன்று உராய்வு செய்யும் போது தீப்பற்றி விடாமல் தடுக்க மின்தடை கம்பி ஒன்றையும் நடுவில் உண்டாக்கினார். பின்னர், இந்த கேபிளை ஒசூரில் உள்ள அசோக் லேலண்ட் சென்று, அங்கு வெல்டிங் மூலம் முறையாக பொருத்தும் பணியை செய்து முடித்தார். இந்த புதிய கேபிள் வயர் மூலம் 25% அளவுக்கு மின் இழப்பு, செலவு குறைகிறது. பேட்டரி கேபிள்ஸ், பஸ்கள், ஜெனரேட்டர்கள் ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில் இந்த கேபிள் வடிவமைக்கப்பட்டுள்ளது.
புதிய கண்டுபிடிப்பு குறித்து மாணவி ராக்கி ஷெனாய் கூறுகையில், ‘‘இந்த கேபிள் வயரை பயன்படுத்தும் போது மின்சாரம் அதிகமாக, அதாவது 14, 15 ஆம்பியர் அதிகமாக கிடைக்கும். இவ்வாறு அதிகமாக வருவதால் எந்த ஆபத்தும் இல்லை. இது நிரூபிக்கப்பட்டுள்ளது. எனது கண்டுபிடிப்புக்கு காப்புரிமைக்காக டெல்லியில் உள்ள கன்ட்ரோலர் காப்புரிமை வணிகம் மற்றும் தொழிற்துறை அமைச்சகத்துக்கு விண்ணப்பித்தேன். அதற்கு, மத்திய காப்புரிமை கழகம் சார்பில் காப்புரிமை வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மத்திய காப்புரிமைக் கழக மலரில் வெளியாக உள்ளது‘‘ என்றார்.ஒரே வயரில் மின்சாரம் செல்லும் கேபிள் வயரை கண்டுபிடித்த மாணவி ராக்கி ஷெனாயை பல்கலைக்கழக வேந்தர் ஸ்ரீதரன், துணைவேந்தர் சரவணசங்கர், பதிவாளர் வாசுதேவன், துணை பதிவாளர் குருசாமி பாண்டியன், துறைத் தலைவர் கண்ணன் ஆகியோர் பாராட்டினர்.

Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.