தெலுங்கானா மாநிலம் ஹைதரபாத்தில் தினமும் இலவசமாக 750 எம்பி இன்டெர்னெட் தருகிறார்கள். அந்த நகரத்தில் உள்ள 17 இடங்களில் இலவச வைஃபை வசதியை இப்போது ஏற்படுத்தி உள்ளார்கள். இந்த சேவையின் வேகம் 40 எம்பிபிஎஸ் ஆக இருக்கும். இது எத்தனை நபர்கள் பயன்படுத்துகிறார்கள் என்பதை குறித்து மாறும்.
இந்த சேவையை இப்போது ஏர்டெல் நிறுவனம் அளித்து வருகிறது. இந்த சேவைக்கு பல நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இன்டெர்னெட்டின் பயன்களை எல்லா மக்களும் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக இந்த சேவையை கொண்டு வந்துள்ளதாக தெலுங்கானா அரசு கூறியுள்ளது.
இந்திய மொபைல் நம்பர் வைத்து இருக்கும் எவரும் இந்த இலவச சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். தங்களது மொபைலில் வைஃபை ஆன் செய்தால் இது வரும் . அதனை செலக்ட் செய்தால் நமது மொபைலுக்கு ஒரு பாஸ்வேர்ட் வரும் . அதனை இதில் டைப் செய்து இலவச இன்டெர்னெட் சேவையை பயன்படுத்தி கொள்ளலாம். இன்னும் 4 மாதங்களில் ஹைதரபாத் நகரம் முழுவதும் இந்த சேவை இருக்கும்.
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.