பிரான்சு கேன்ஸ் திரைப்பட விழாவில் கொடி கட்டி பறக்கும் விபச்சாரம்!! டர்ட்டி பிக்சர்ஸ் வித்யாபாலன் நடுவராகிறார்.
கேன்ஸ் திரைப்பட விழா ஹாலிவுட்டின் ஆஸ்கார் விழாவுக்கு அடுத்த படியாக மிகுந்த வரவேற்பை பெற்ற உலக திரைப்பட விழா, இந்த விழாவில் தான் தமிழின் வெயில், பள்ளிக்கூடம் போன்ற படங்கள் திரையிடப்பட்டன,
இந்த 66வது கேன்ஸ் (
cannes) சர்வதேச திரைப்பட விழாவின் ஒன்பது நடுவர்களில் ஒருவராக ,The Dirty Picture படத்தில் சில்க் சுமிதா கதாபாத்திரத்தில் நடித்துக் கலக்கிய நம்மூரு நடிகை வித்யா பாலனும் கடமையாற்றப் போகிறார். அத்தோடு உலகப் பேரழகி ஐஸ்வர்யா ராய் தனது கணவர் அபிஷேக் பச்சன், அங்கிள் அமிதாப் பச்சன் ஆகியோருடனும் கலந்து கொள்ளவுள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.
இந்த விழாவுக்காக உலகின் பல நாடுகளில் இருந்தும் நடிகர், நடிகைகள், மாடல் அழகிகள், அழகி போட்டியில் பங்கேற்றவர்கள், அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், சிறப்பு விருந்தினர்கள், திரைப்பட துறையினர், கோடீஸ்வரர்கள் வருவார்கள்.விழாவை முன்னிட்டு அசத்தலான ஏற்பாடுகள், பாதுகாப்பு என பல கோடி ரூபாய் செலவிடப்படுகிறது.
இந்நிலையில் இது தொடர்பாக மாடலிங் ஏஜென்சி நடத்துபவர்கள் கூறுவதாவது வழக்கமாகவே கேன்ஸ் திரைப்பட விழாவின்போது விபசார தொழிலும் பெரிய அளவில் நடக்கும்.உலகம் முழுவதும் இருந்து பிரபல புள்ளிகள் வருவார்கள் என்பதால் பண புழக்கமும் அதிகளவில் நடக்கும்.
அரபு நாட்டை சேர்ந்த கோடீஸ்வரர்கள் சிலர் விபசாரத்துக்காகவே விழாக்களுக்கு வருவதும் உண்டு. இது கடந்த 60 ஆண்டுகளாகவே நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.கேன்ஸ் திரைப்பட விழாவுக்காகவே பிரான்ஸ், இங்கிலாந்து, வெனிசுலா, பிரேசில், மொராக்கோ, ரஷ்யா உள்பட பல நாடுகளில் இருந்து பாலியல் அழகிகள் வருவதாக பொலிசார் கூறுகின்றனர்
Post a Comment
Comments disabled, Please use Facebook comment box
Note: only a member of this blog may post a comment.